Ads 468x60px

Wednesday, September 23, 2015

ரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்? - ஓர் அலசல்

 இந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல்!!!

 லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட.

பழைய விநியோகிஸ்தர்கள் எல்லாம் சும்மா இருக்கும் போது, மீடியாவில் சொல்லப்பட்ட ரஜினி பட வசூல் கட்டுக்கதைகளை நம்பி சம்பாதிக்கலாம் என்று  லிங்காவை வாங்கினார் சிங்காரவேலன் . ஆனால் இதுவும் ஒரு வகையான் ஈமு கோழி மோசடி தான் என்பதை படம் ரிலீஸ் ஆன பின், முதல் காட்சி கூட ஹவுஸ்புல் ஆகாத போது உணர்ந்தார்.

சிங்காரவேலனை மற்ற விநியோகிஸ்தர்கள் கண்டிப்பாக பாரட்ட வேண்டும். ஏனென்றால், தான் அடைந்த மாபெரும் நஷ்டத்தை கண்டு கலங்காமல், இனி வேறோருவர் இது போன்று நஷ்டத்தை அடையக்கூடாது என்று தைரியமாக மீடியாக்கள் மூலமாக ரஜினி பட வசூல் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கினார்.

ரஜினி தான் இந்த உலகத்திலேயே வள்ளல் என்று ரஜினி ரசிகர்கள் சொல்வது உண்மையானால், லிங்காவின் மாபெரும் நஷ்டத்தை, விநியோகிஸ்தர்கள் கேட்கும் முன்னே கொடுத்திருக்க வேண்டும். அவரோ விநியோகிஸ்தர்கள் உண்ணாவிரதம், பிச்சை போராட்டங்கள் என நடத்தி பல மாதங்கள் கழித்து 12 கோடி ( 35 கோடி நஷ்டத்திற்கு ) தருவதாக கூறி போரட்டத்தை கைவிடும் படி கெஞ்சினார்.

விநியோகிஸ்தர்கள் அதை ஏற்று போராட்டங்களை கைவிட்டாலும், அந்த 12 கோடி கூட முழுமையாக விநியோகிஸ்தர்களிடம் வந்து சேர வில்லை. 6 கோடி தான் சேர்ந்திருக்கிறது. மீதி 6 கோடி எங்கே என்பதை ரஜினியே இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி படங்களின் தோல்வி தயாரிப்பு நிறுவனங்களை / விநியோகிஸ்தர்களை இல்லாமல் ஆக்கி விடும் (உதாரணங்கள் : "தாய்வீடு" தேவர் பிலிம்ஸ், "மாவீரனை" வெளியிட்ட நடிகை ஜெயப்பிரதா, "BLOODSTONE"-ஐ வெளியிட்ட T.ராஜேந்தர், "நாட்டுக்கு ஒரு நல்லவன்" வீராசாமி, "குசேலனை" வெளியிட்ட பிரமிடு சாய்மீரா ), அதுமட்டுமா அந்த பட இயக்குநர்களை வீட்டுக்கே அனுப்பி விடும்   (உதாரணங்கள் : "பாபா" சுரேஷ் கிருஷ்ணா, "குசேலன்"  P வாசு, "லிங்கா" KS ரவிக்குமார்).

ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு தூக்கி எறியப்பட்ட லிங்காவை, சென்னை ஆல்பட் தியேட்டரில் 3 மாதம் கழித்து 1 காட்சி திரையிட்டு 100 வது நாள் கொண்டாடி, ரஜினி தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டார்.

ரஜினி ரசிகர்களும் அவரை மேலும் அசிங்கப்படுத்தினர், லிங்காவிற்கு 100 வது நாள் ஷீல்டை ஆல்பட் தியேட்டரில்  வைத்து!!!

மக்கள் அனைவருக்கும் தெரிந்த மகா தோல்வி லிங்காவுக்கே 100 நாள் ஷீல்டு ரஜினி ரசிகர்கள் தியேட்டரில் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த கால அட்டர் பிளாப்களை எப்படியெல்லாம் மறைத்திருப்பார்கள். தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள ரஜினி படத்தின் பல ஷீல்டுகள், அடுத்த தலைமுறையிடம் ரஜினி படங்களின் தோல்வியை மறைக்க வைக்கப்பட்டவையே என்பது இதிலிருந்து உங்களுக்கு புரிகிறதா?

இவர்களின் நிலைமை இப்படியிருக்க, கமல் ரசிகர்கள் பக்குவப்பட வேண்டும் என்று கட்டுரை எழுதினால், ரஜினி ரசிகர்களுக்கு பைத்தியம் இந்த ஜென்மத்தில் தெளியப் போவதில்லை என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.


Monday, September 14, 2015

உலகநாயகனின் கோயம்புத்தூர் சாதனைகள்

கோயம்புத்தூரில் உலகநாயகனின் 3 படங்கள் 175 நாட்களுக்கு மேல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்கம்நாட்கள்
சகலகலா வல்லவன் (1982)தானம்175+ நாட்கள்
மகாநதி (1994)KG காம்ப்ளக்ஸ்183 நாட்கள்
அவ்வை சண்முகி (1996)KG காம்ப்ளக்ஸ்180 நாட்கள்
& அர்ச்சனா80+ நாட்கள்


கோயம்புத்தூரில் உலகநாயகனின் வேற்று மொழி படங்களும் டப்பிங் படங்களும் கூட 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது. அது மட்டுமா, உலகநாயகனின் மரோசரித்ரா மட்டுமே இங்கே 450 நாட்கள் வரை ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்கம்நாட்கள்
மரோசரித்ரா (1978) தெலுங்குராயல்450 நாட்கள்
ஏக் துஜே கே லியே (1981) ஹிந்திராயல்100+ நாட்கள்
சலங்கை ஓலி (1983) தெலுங்கு டப்பிங்KG காம்ப்ளக்ஸ்105 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (1986) தெலுங்கு டப்பிங்அப்சரா100+ நாட்கள்
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா (1986) தெலுங்கு டப்பிங்ர்ச்சனா42+ நாட்கள்
சாணக்யன் (1989) மலையாளம்அர்ச்சனா49 நாட்கள்
இந்திரன் சந்திரன் (1989) தெலுங்கு டப்பிங்அர்ச்சனா49 நாட்கள்

கோயம்புத்தூரில் உலகநாயகனின் 24 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்கம்நாட்கள்
மன்மத லீலை (1976)சென்ட்ரல்100 நாட்கள்
16 வயதினிலே (1977)ராஜா100 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது (1978)ராயல்100 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள் (1978)கர்னாடிக்115 நாட்கள்
குரு (1980)இருதயா100+ நாட்கள்
வறுமையின் நிறம் சிவப்பு (1980)ராஜா100 நாட்கள்
மூன்றாம் பிறை (1982)தானம்112 நாட்கள்
சிம்லா ஸ்பெஷல் (1982)தானம்100 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதே (1983)தானம்105+ நாட்கள்
ஒரு கைதியின் டைரி (1985)தானம்101 நாட்கள்
விக்ரம் (1986)அப்சரா100 நாட்கள்
புன்னகை மன்னன் (1986)KG காம்ப்ளக்ஸ்105 நாட்கள்
நாயகன் (1987)அர்ச்சனா100+ நாட்கள்
அபூர்வ சகோதரர்கள் (1989)அர்ச்சனா
காம்ப்ளக்ஸ்
151 நாட்கள்
வெற்றிவிழா (1989)ராயல்118 நாட்கள்
மைக்கேல் மதன காமராஜன் (1990)KG காம்ப்ளக்ஸ்107 நாட்கள்
 குணா (1991)KG காம்ப்ளக்ஸ்100+ நாட்கள்
& ர்ச்சனா70+ நாட்கள்
தேவர் மகன் (1992)ராயல்110+ நாட்கள்
& அர்ச்சனா90+ நாட்கள்
இந்தியன் (1996)அர்ச்சனா129 நாட்கள்
& ராகம்112 நாட்கள்
தெனாலி (2000)அர்ச்சனா105 நாட்கள்
& கங்கா காம்ப்ளக்ஸ்100 நாட்கள்


கோயம்புத்தூரில் உலகநாயகனின் 16 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 75 நாட்களுக்கு மேல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
களத்தூர் கண்ணம்மா (1960)கர்னாடிக்75+ நாட்கள்
வாழ்வே மாயம்(1982)அப்சரா75+ நாட்கள்
சட்டம் (1983)KG காம்ப்ளக்ஸ்75+ நாட்கள்
காக்கி சட்டை (1985)KG காம்ப்ளக்ஸ்78 நாட்கள்
சத்யா (1988)அர்ச்சனா77 நாட்கள்
சூரசம்ஹாரம் (1988)கங்கா75+ நாட்கள்
நம்மவர் (1994)பல்லவி75+ நாட்கள்
& காவேரி42 நாட்கள்
சதிலீலாவதி (1995)ராயல்90+ நாட்கள்
& தர்ச்சனா90+ நாட்கள்
குருதிப்புனல் (1995)KG காம்ப்ளக்ஸ்88 நாட்கள்
& யமுனா88 நாட்கள்
பம்மல் K சம்பந்தம்(2002)காவேரி75+ நாட்கள்
& ராகம்75+ நாட்கள்
பஞ்ச தந்திரம் (2002)கங்கா75+ நாட்கள்
விருமாண்டி (2004)KG காம்ப்ளக்ஸ்75+ நாட்கள்
& காவேரி56 நாட்கள்
வசூல் ராஜா MBBS (2004) 75+ நாட்கள்
வேட்டையாடு விளையாடு(2006)KG காம்ப்ளக்ஸ்75+ நாட்கள்
தசாவதாரம் (2008)ர்ச்சனா77+ நாட்கள்
விஸ்வரூபம் (2013)தி சினிமா75+ நாட்கள்



வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனைகளை நினைத்து கூட பார்க்க முடியாது.

தகவல்கள் :
கோவை தங்கவேலு, போஸ்ட் ஆபீஸ் மணி, பெங்களூர் ராமு 



 

Tuesday, September 8, 2015

உலகநாயகனின் சேலம் சாதனைகள்

சேலத்தில் உலகநாயகனின் படம் மட்டுமே 200 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்கம்நாட்கள்
சகலகலா வல்லவன் (1982)ஓரியண்டல்204 நாட்கள்

சேலம் கைலாஷ் திரையரங்கில் உலகநாயகனின் 3 படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு 300+ நாட்கள் ஓடி சாதனை புரிந்திருக்கின்றன.

திரைப்படம்காலம்நாட்கள்
அபூர்வ சகோதரர்கள்14-ஏப்ரல்-1989 முதல்
8-செப்-1989 வரை
148 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்)9-செப்-1989 முதல்
27-அக்-1989 வரை
49 நாட்கள்
வெற்றிவிழா 28-அக்-1989 முதல்
9-பிப்-1990 வரை
104 நாட்கள்

சேலத்தில் உலகநாயகனின் வேற்று மொழி படங்களும் டப்பிங் படங்களும் கூட 100 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்கம்நாட்கள்
மரோசரித்ரா (1978) தெலுங்குசாந்தி105 நாட்கள்
ஏக் துஜே கே லியே (1981) ஹிந்தி  
சலங்கை ஓலி (1983) தெலுங்கு டப்பிங்அலங்கார்77 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (1986) தெலுங்கு டப்பிங்  
சாணக்யன் (1989) மலையாளம்கைலாஷ்49 நாட்கள்

சேலத்தில் உலகநாயகனின் 14 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்கம்நாட்கள்
16 வயதினிலே (1977)சங்கீத்100 நாட்கள்
கல்யாண ராமன் (1979)ஜெயா100+ நாட்கள்
குரு (1980)சாந்தி100+ நாட்கள்
மூன்றாம் பிறை (1982)சங்கம்100 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதே (1983)சாந்தம்100+ நாட்கள்
புன்னகை மன்னன் (1986)சாந்தம்100+ நாட்கள்
நாயகன் (1987)சாந்தம்100+ நாட்கள்
அபூர்வ சகோதரர்கள் (1989)கைலாஷ்148 நாட்கள்
வெற்றிவிழா (1989)கைலாஷ்104 நாட்கள்
தேவர் மகன் (1992)கைலாஷ்116 நாட்கள்
அவ்வைசண்முகி (1996)சப்னா100+ நாட்கள்
இந்தியன் (1996)சப்னா120 நாட்கள்
தெனாலி (2000)கைலாஷ்100+ நாட்கள்


சேலத்தில் உலகநாயகனின் 9 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 75 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
சட்டம் (1983)கீதாலயா75+ நாட்கள்
ஒரு கைதியின் டைரி (1985)சந்தோஷ்84 நாட்கள்
காக்கி சட்டை (1985)சாந்தம்75+ நாட்கள்
சிங்காரவேலன் (1992)சங்கம்77 நாட்கள்
சதிலீலாவதி (1995)கைலாஷ்75+ நாட்கள்
வசூல் ராஜா MBBS (2004)ARRS75+ நாட்கள்
வேட்டையாடு விளையாடு(2006)கைலாஷ்75+ நாட்கள்
தசாவதாரம் (2008)Adlab K.S.75+ நாட்கள்
கீர்த்தனா75+ நாட்கள்
ரமணா75+ நாட்கள்


வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனைகளை நினைத்து கூட பார்க்க முடியாது.


தகவல்கள் :
போஸ்ட் ஆபீஸ் மணி, பெங்களூர் ராமு & சேலம் ஜேம்ஸ் விக்ரம்



 

Monday, September 7, 2015

உலகநாயகனின் சாணக்யன்

உலகநாயகன் ஒருவரே இந்தியாவின் ஒவ்வொரு மொழிகளிலும் நேரடியாக பல பெரிய வெற்றிகளை கண்டவர்!!!

அது மட்டுமல்ல, உலகநாயகனின் பல படங்கள் டப்பிங் செய்யாமலே தமிழ்நாட்டில் 100+ நாட்கள் சர்வ சாதாரணமாக ஓடும்!!!

ஹிந்தி : ஏக் து ஜே கே லியே ( 140+ நாட்கள் )
தெலுங்கு : மரோசரித்ரா ( 600+ நாட்கள் )
கன்னடம் : கோகிலா ( 175+ நாட்கள் )


மலையாளத்தில், சாணக்யன் 90+ நாட்கள் சென்னையிலும், 7 வாரங்கள் தமிழகத்தில் பல நகரங்களிலும் ஓடி சாதனை புரிந்த படம்!!!

அபூர்வ சகோதரர்கள் இந்தியா முழுவதும் வசூல் சுனாமியை ஏற்படுத்தி கொண்டிருந்த போதும், சத்தமில்லாமல் வந்து சாதனை படைத்தவன் இந்த மலையாள சாணக்யன்!!!

 

Wednesday, August 19, 2015

ஒரே இயக்குநர் இயக்கி ஒரே சமயத்தில் வெளியான "கமல் vs ரஜினி" படங்கள்

உலகநாயகனின் குரு தமிழகத்தில் 100 நாட்களுக்கு மேலும் இலங்கையில் 365 நாட்களுக்கு மேலும் ஹவுஸ்புல்லாக ஓடிய அதிரடி ஆக்ஷன் படம்!!!!

குரு வெளிவந்த 1980 ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு முன், ரஜினியின் மற்றுமொரு மிகப்பெரிய தோல்விப்படம் காளி வெளியானது.

இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் IV சசி!!!

இதே போல் 1982 ஆகஸ்ட் 14ல் SP முத்துராமன் இயக்கி உலகநாயகனின் சகலகலா வல்லவனும், ரஜினி நடித்த எங்கேயோ கேட்ட குரலும் வெளியானது.

சகலகலா வல்லவனின் சாதனைகளை பட்டியலிட ஒரு கட்டுரை பத்தாது.


 

Thursday, August 6, 2015

உலகநாயகனின் மதுரை சாதனைகள்

உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை...
பல மொழிகளில்...
பல சாதனைகள் புரிந்த உலகநாயகன்
மதுரையை மட்டும் விட்டு வைப்பாரா?


மதுரையில் மட்டும் உலகநாயகனின் 39 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது. வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனையை நினைத்து கூட பார்க்க முடியாது.
மதுரையில் உலகநாயகனின் 11 படங்கள் 150 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

மதுரையில் உலகநாயகனின் 8 படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

மதுரையில் உலகநாயகனின் 4 படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.


திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
களத்தூர் கண்ணம்மா (1960)சிந்தாமணி75+ நாட்கள்
மன்மத லீலை (1976)சினிப்ரியா100 நாட்கள்
16 வயதினிலே (1977)மினிப்ரியா266 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது (1978)சினிப்ரியா100 நாட்கள்
சட்டம் என் கையில் (1978)சென்ட்ரல்100 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள் (1978)சக்தி183 நாட்கள்
கல்யாண ராமன் (1979)கல்பனா107 நாட்கள்
குரு (1980)குரு113 நாட்கள்
Ek Duje Ke Liye(1981)அபிராமி100 நாட்கள்
சவால் (1981)நியூசினிமா100 நாட்கள்
டிக் டிக் டிக் (1981)சுகப்ரியா126 நாட்கள் (இத்திரையரங்கின் முதல் 100 நாட்கள் படம்)
வாழ்வே மாயம் (1982)நியூசினிமா175+ நாட்கள்
மூன்றாம் பிறை (1982)சிந்தாமணி100 நாட்கள்
சிம்லா ஸ்பெஷல் (1982)சுகப்ரியா105 நாட்கள்
சகலகலா வல்லவன் (1982)சென்ட்ரல்202 நாட்கள்
சட்டம் (1983)சினிப்ரியா112 நாட்கள்
சலங்கை ஒலி (1983) - டப்பிங்மது100 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதே (1983) சுகப்ரியா263 நாட்கள்
ஒரு கைதியின் டைரி (1984)மினிப்ரியா100+ நாட்கள்
காக்கி சட்டை (1985)சென்ட்ரல்154 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (1986) - டப்பிங்நடனா காம்ப்ளக்ஸ்106 நாட்கள்
விக்ரம்(1986)நடனா காம்ப்ளக்ஸ்105 நாட்கள்
புன்னகை மன்னன் (1986)அபிராமி150 நாட்கள்
நாயகன் (1987)மினிப்ரியா225 நாட்கள்
சத்யா (1988)அமிர்தம்102 நாட்கள்
உன்னால் முடியும் தம்பி (1988)நடனா காம்ப்ளக்ஸ்105 நாட்கள்
அபூர்வ சகோதரர்கள் (1989)அபிராமி175 நாட்கள்
சோலமலை105 நாட்கள்
வெற்றிவிழா (1989)சுந்தரம்125 நாட்கள்
மைக்கேல் மதன் காமராஜன் (1990)அபிராமி
காம்ப்ளக்ஸ்
100 நாட்கள்
குணா (1991)அபிராமி100 நாட்கள்
மதி70 நாட்கள்
தேவர் மகன் (1992)மீனாட்சி
காம்ப்ளக்ஸ்
180 நாட்கள்
சுகப்ரியா116 நாட்கள்
மினிப்ரியா80 நாட்கள்
மகாநதி (1994)நடனா காம்ப்ளக்ஸ்100 நாட்கள்
சதிலீலாவதி (1995)ஹாஜீரா103 நாட்கள்
குருதிப்புனல் (1995)அம்பிகா100 நாட்கள்
மதி75+ நாட்கள்
இந்தியன் (1996)மதி155 நாட்கள்
சுந்தரம்135 நாட்கள்
அவ்வைசண்முகி (1996)அண்ணாமலை (கல்பனா)140 நாட்கள்
அம்பிகா100 நாட்கள்
தெனாலி (2000)அண்ணாமலை (கல்பனா)100+ நாட்கள்
அம்பிகா100+ நாட்கள்
மதி100+ நாட்கள்
தசாவதாரம் (2008)சக்தி100+ நாட்கள்
நடனா காம்ப்ளக்ஸ்75+ நாட்கள்
ஜெயம் 75+ நாட்கள்
தமிழ் ஜெயா75+ நாட்கள்

 

Saturday, May 9, 2015

இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்

தமிழில் 48 தியேட்டர்களிலும்,
தெலுங்கில் 30 தியேட்டர்களிலும்,
20+ தியேட்டர்களிலும்
100 நாட்களை கொண்டாடிய முதலும் கடைசியுமான
அனைத்திந்திய வெள்ளி விழாப் படம்
உலகநாயகனின் இந்தியன்!!!


அதுமட்டுமா?

கோயம்புத்தூரில் 2 பெரிய தியேட்டர்களில் ( அர்ச்சனா, ராகம் ) 100 நாட்களை கொண்டாடிய முதல் தமிழ் படம்!

ஈரோட்டில் 2 பெரிய தியேட்டர்களில் ( ஆனூர், தேவி அபிராமி ) 100 நாட்களை கொண்டாடிய முதல் தமிழ் படம்!

ராஜபாளையம், கம்பம், கோவில்பட்டி என பல ஊர்களின் முதல் 100 நாட்கள் படம்!

கோவில்பட்டியில் இன்று வரை அதிக நாட்கள் (131 நாட்கள் ) ஓடிய படம்!

ஆந்திராவில் 30 தியேட்டர்களில் 100 நாட்களை கொண்டாடிய ஒரே டப்பிங் படம்!

டிரைவ் இன் தியேட்டரில் 100 நாட்கள் கொண்டாடிய முதல் படம் ( சென்னை பிரார்த்தனா)!

வெளிநாடுகளில் ( லண்டன், சிங்கப்பூர், மலேசியா, கனடா ) 75+ நாட்களை கொண்டாடிய முதல் தமிழ் படம்!

உலகநாயகனின் இந்தியன்!!!

அந்த இந்தியனுக்கு இன்று (மே 9) 19 வது ஆண்டு விழா!!!

Tuesday, April 14, 2015

அபூர்வ சகோதரர்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்


உலகநாயகன் குள்ளமாக நடித்து, தியேட்டர்களில் வசூல் வெள்ளம் புரண்டு ஓட வைத்த படம் அபூர்வ சகோதரர்கள்.

அதுமட்டுமா? உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள், அதற்கு ஒரு மாதத்திற்கு முன் வெளிவந்த ரஜினியின் ராஜாதி ராஜாவை, மூன்று வாரம் கழித்து வெளிவந்த ரஜினியின் சிவாவை, மூன்று மாதம் கழித்து வெளிவந்த ரஜினியின் ராஜா சின்ன ரோஜாவை எப்படி வீழ்த்தியது என்பதை நாம் அறிவோம்.மீண்டும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும் :
http://www.sandiyarkaran.com/2014/08/Kamal1FilmVs3rajinifilms.html

அபூர்வ சகோதரர்கள், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனை சரித்திரங்கள் இதோ....
  • அதிக பார்வையாளர்கள் பார்த்த படம் என்று சிவாஜி நடித்த திரிசூலம் செய்த சாதனையை முறியடித்தது.
  • எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை சென்னை தேவிபாரடைஸில் 197 நாட்கள் ஓடி முறியடித்தது.
  • தமிழ், தெலுங்கு(டப்பிங்), ஹிந்தி(டப்பிங்) என்று மூன்று மொழிகளிலும் வெள்ளி விழாவை தாண்டி ஓடிய முதல் தமிழ் படம்.
  • சென்னையில் மட்டும் முதல்  78 நாட்களில் தொடர்ந்து 1000+ ஹவுஸ்புல் காட்சிகள் சாதனை படைத்த ஒரே படம்.
  • சென்னை காசி தியேட்டரில் 197 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்
  • சென்னை அபிராமி தியேட்டரில் 148 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்
  • பெங்களூரில் 5 தியேட்டர்களில் (பல்லவி, நட்ராஜ், கல்பனா, லட்சுமி,  சாந்தி) 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்.
  • சகலகலாவல்லவனுக்கு பின் 4 மாநகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூரு) வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் படம்.
  • கேரளாவில் 100 நாட்களையும், கர்நாடகாவில் 200 நாட்களையும் கொண்டாடிய முதல் தமிழ் படம்.
  • 10 தியேட்டர்களில் 20 வாரங்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் ரெகுலர் காட்சிகளில் ஓடிய ஒரே தமிழ் படம்.
    1. சென்னை - தேவி பாரடைஸ்
    2. சென்னை - அபிராமி
    3. சென்னை - அகஸ்தியா
    4. சென்னை - காசி
    5. பெங்களூரு - பல்லவி
    6. மதுரை - அபிராமி
    7. கோவை - அர்ச்சனா
    8. திருச்சி - மாரீஸ் ராக்
    9. சேலம் - கைலாஷ்
    10. நாகர்கோவில் - மினி சக்கரவர்த்தி




Monday, April 13, 2015

சிம்லா ஸ்பெஷல் சாதனைகள்

நாடக நடிகர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் வெளிவந்த உலகநாயகனின் சிம்லா ஸ்பெஷல் அன்று (14-Apr-1982) தன்னுடன் மோதிய ரஜினியின் திருட்டு ரங்காவை செவிட்டில் அடித்து வீழ்த்தியது!!!


Thursday, April 2, 2015

உலகநாயகனின் விக்ரம் சாதனைகள்

உலகநாயகனின் விக்ரம் படத்திற்கு ஒரு கோடி செலவில் தயாரன முதல் தென்னிந்திய சினிமா என்ற பெருமையும் உண்டு, மீடியாவால் தோல்வி என்று முத்திரை குத்தப்பட்ட சிறுமையும் உண்டு.

ஆனால் விக்ரம் படமோ, 16 தியேட்டர்களில் (கேரளா உட்பட) 50 நாட்களை கொண்டாடிய திரைப்படம், அதுமட்டுல்ல 10 தியேட்டர்களில் 75 நாட்களையும், கோயம்புத்தூரில் 100 நாட்களையும் கொண்டாடிய திரைப்படம்!!!

இவ்வளவு சாதனை செய்தும், மீடியா ஏன் விக்ரம் படத்தை ஹிட் என ஏற்று கொள்ள வில்லை? ஏனென்றால் அதே வருடம் ரஜினி தயாரித்த மாவீரன் படு தோல்வி அடைந்ததால், கமல் தயாரித்த விக்ரம் படத்திற்கும் தோல்வி முத்திரை குத்தி விட்டனர்.

விக்ரமும் மாவீரனும் சென்னையில் சத்யம், சங்கம், காசி என அதே 3 தியேட்டர்களில் வெளியாயிருக்கிறது. விக்ரம் சத்யம், சங்கம், காசி என அந்த 3 தியேட்டர்களிலும் 50 நாட்களை தாண்டி ஓடியது, ஆனால் மாவீரன் சத்யம் தியேட்டரில் மட்டும் 50 நாள் தேய்க்கப்பட்டது.

திரையுலகில் கமல்ஹாசன் ஒருவரே, தன் தோல்வி படங்களையும் சரி வெற்றி படங்களையும் சரி, என்றும் ஓட்டியது கிடையாது.  அப்படி ஓட்டியிருந்தால் அவர் தன் சங்கர்லாலை 100 நாட்களுக்கும் மேல், அபூர்வ சகோதரர்களை 1000 நாட்களுக்கும் மேல் ஓட்டியிருப்பார்.

எனவே விக்ரம் படத்தின் உண்மையான சாதனைகள், அப்படத்தின் வெற்றியை இன்றைய தலைமுறையினருக்கும் புரியவைக்கும்!!!


Sunday, March 29, 2015

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் - முதல் தமிழ் படம்

உலகநாயகனின் அபூர்வ சகோதரர்களே, பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்!!!

தியேட்டர்களிலிருந்து 10 நாட்களில் தூக்கப்பட்டு, 100 வது நாள் விழா கொண்டாட, படம் வெளிவந்து 100 வது நாளில் ஒரு காட்சி திரையிட்டு, விழா கொண்டாடி மக்களை ஏமாற்றும் கூட்டத்தை பார்க்கும் போது....

உலகநாயகனே...
நீ தொடாத உச்சம் உண்டோ?
சாதனைகள் மிச்சம் உண்டோ?


Tuesday, March 24, 2015

கர்நாடகாவில் 4 மொழிகளில் 200+ நாட்கள் கொண்டாடிய தமிழன்

கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில், பல முறைகள் 200+ நாட்கள் கொண்டாடிய ஒரே நாயகன் நம் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே!!!

ஆனால் ரஜினிக்கோ கர்நாடாகாவில் ஒரு வெள்ளி விழா படம் கூட இல்லை.

ஐயையோ இந்த உண்மையை சொல்லிட்டேனே....லிங்காவை சென்னையில் 100 வது நாள் மட்டும் ஒரு காட்சி திரையிட்டு "லிங்கா 100 வது நாள் விழா" கொண்டாடியது போல,  175 வது நாள் அன்று பெங்களூரில் ஒரு காட்சி திரையிட்டு, "பெங்களூரில் லிங்கா வெள்ளி விழா சாதனை" என்று கொண்டாடினாலும் கொண்டாடுவார்களே!!!



Friday, March 20, 2015

கமல் ரஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள்

கமல் ரஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள் எப்போதும் மீடியாவால் ரஜினி சார்பாகவே பார்க்கப்படும். எனவே அந்த மோதல்களை வெறும்  "குருதிப்புனல் Vs முத்து, மும்பை எக்ஸ்பிரஸ் Vs சந்திரமுகி" என முடித்து விடுவார்கள். மொத்த மோதல்களையும் அடுக்கினால், கமலிடம் மோதி ரஜினி அடைந்த பல படுதோல்விகளை பாமரனும் தெரிந்து கொள்ள நேரிடுமே.

இன்றைய சமூக வலைதள காலத்தில் பல உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கும் போது, கமல் ரஜினி படங்களின் அனைத்து மோதல்களின் உண்மை நிலவரமும் வெளிவரட்டுமே!!!

இந்த பட்டியல், இருவரும் ஹீரோவாக தமிழில் ஒரே நாள் அல்லது இரண்டு வார இடைவெளியில் வெளியாகி மோதியவை. இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட செய்யவும்.

ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ஆதாரம் இல்லாமல் இங்கே வந்து குரைக்க வேண்டாம்.


Tuesday, March 17, 2015

சத்யா மூவிஸ் ( கமல் vs ரஜினி )

சத்யா மூவிஸ் பேனரில் கமல்ஹாசன் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். உலகநாயகன் மட்டுமே அன்றிலிருந்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொண்டிருக்கிறார். வரவிருக்கும் உத்தம வில்லன் கூட இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினியோ எப்போதும் பெரிய நிறுவனங்களில் மட்டுமே நடிப்பார். ஏனென்றால் அவர்கள் தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள படங்களை 100 நாட்கள் ஓட்டுவார்கள் என்பதற்காக.

ஏவிஎம்-க்கு ஒரு சகலகலா வல்லவன் போல, சத்யா மூவிஸ்-க்கு ஒரு காக்கி சட்டை!!!

சத்யா மூவிஸ் தயாரித்த அனைத்து நடிகர்களின் படங்களிலேயே, சென்னையில் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை கடந்த படம் காக்கி சட்டை மட்டுமே!!!

சென்னை உதயம் தியேட்டரில் முதல் 100 நாட்கள் கொண்டாடிய படமும் உலகநாயகனின் காக்கி சட்டையே!!!

சென்னையில் 5 வாரங்களில் 450 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய சத்யா மூவிஸின் ஒரே படம் உலகநாயகனின் காக்கி சட்டை மட்டுமே!!!

இவ்வளவு சாதனைகள் புரிந்திருந்ததால், கமல்ஹாசனிடம் மீண்டும் பட வாய்ப்பு கேட்டது சத்யா மூவிஸ் (எம்ஜியாரின் சிபாரிசுடன்).  

அப்படி வெளிவந்த காதல் பரிசு கூட சென்னையில் 3 தியேட்டர்களிலும் (தேவி பாரடைஸ், அன்னை அபிராமி, உதயம்) 50+ நாட்கள், அகஸ்தியாவில் 7 வாரங்கள் ஓடியது மட்டுமல்லாமல், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹைதராபாத்தில் 100 நாட்கள் ஓடிய படம் ( தகவல் : பெங்களூரு ராமு )


ஆனால் சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினியின் எந்த படமும் சென்னையில் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாட்கள் ரெகுலரில் ஓடியது இல்லை. 1995ல் வந்த பாட்ஷா கூட ஆல்பட் தியேட்டரிலேயே பகல்காட்சியில் தான் 100 நாட்கள் தொட்டது. (இவர்கள் முதல்காட்சியிலேயே படுதோல்வி அடைந்த லிங்காவையே 100 வது நாளை நோக்கி தேய்க்கிறவங்க என்பதை ஞாபகம் வச்சிக்கோங்க....)

சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினியின் 6 படங்களில் 5 படங்களின் நிலைமை இது தான்....

1. உலகநாயகனின்  டிக் டிக் டிக்கிடம் மோதி தோல்வியடைந்த ராணுவ வீரன்,

2. உலகநாயகனின் சகலகலாவல்லவன் வந்து வசூல் புரட்சி படைத்துக்கொண்டிருந்த சமயத்தில் (ஒரு மாதம் கழித்து) வந்த மூன்று முகத்தின் நிலைமை நான் சொல்ல வேண்டியதில்லை,
 
3. உலகநாயகனின் தூங்காதே தம்பி தூங்காதேயிடம் மோதி தோல்வியடைந்த தங்க மகன், 

4. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாமலேயே தோல்வியடைந்த ஊர்காவலன்,

5. விஜயகாந்தின் புலன் விசாரணையிடம்  மோதி தோல்வியடைந்த பணக்காரன்,

6 வது படமான பாட்ஷா, ரஜினி ரசிகர்களின் பேராசைப்படி, சத்யா மூவிஸ்க்கு லாபத்தை அள்ளித்தந்திருந்தால் ரஜினியை வைத்து அவர்கள் ஏன் 7 வது படம் எடுக்க வில்லை????



Monday, February 23, 2015

ரஜினி படங்கள் எப்படி ஓட்டப்படும்?

தெரிந்து கொள்ளுங்கள் இனியாவது....

ரஜினியின் UTTER FLOP படங்கள் எல்லாம் 50-100 நாட்கள் வரை ஓட்டப்படும்...

ரஜினியின் FLOP படங்கள் எல்லாம் 100-175 நாட்கள் வரை ஓட்டப்படும்...

ரஜினியின் AVERAGE படங்கள் எல்லாம் 175-365 நாட்கள் வரை ஓட்டப்படும்...

ரஜினியின் HIT படங்கள் எல்லாம் 365 நாட்களுக்கு மேல் ஓட்டப்படும்...

Wednesday, February 18, 2015

மூன்றாம் பிறை சாதனைகள்

ஒரே ஊரில் 3 தியேட்டர்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம்
உலகநாயகனின் "மூன்றாம் பிறை" மட்டுமே!!!

ஷிப்டிங் ஆகாமல் தினசரி 4 காட்சிகளாக 329 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் உலகநாயகனின் "மூன்றாம் பிறை" மட்டுமே!!! அதுவும், சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் அந்தச் சாதனையை புரிந்திருக்கிறார் கமல்ஹாசன்!!!

மற்ற நடிகர்களோ தியேட்டருக்கு வாடகை கொடுத்து சென்னை பேபி ஆல்பட்/ பால அபிராமி/ சாய் சாந்தியில் தான் வெள்ளி விழாவே பார்த்திருப்பார்கள்.

மேலும் மூன்றாம் பிறை, சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ் சுபம் தியேட்டரில், தொடர்ந்து 624 காட்சிகள் (156 நாட்கள்) ஹவுஸ்புல் சாதனையும் புரிந்திருக்கிறது.

உலகநாயகன் முதல் முறை கதாநாயகனாக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.



Tuesday, February 17, 2015

ஹேராம் தினம் 18-பிப்ரவரி

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் மட்டும் முதலீடு செய்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே என்பதற்கு மற்றொருமொரு உதாரணம் "ஹேராம்" என்ற துணிச்சலான படைப்பு!!!

அப்படி கமல்ஹாசன் செய்யும் முதலீடு சில சமயம் விஸ்வரூபமாக அவருக்கு லாபம் கொடுப்பதுண்டு, சில சமயம் சினிமா தொழில்நுட்பகலைஞர்களுக்கு சிறந்த புத்தகமாக அமைவதுண்டு.

அப்படி ஒரு திரை-நாவலாக, இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் இருந்த அரசியலை, படைத்திருந்தார் இயக்குநர் கமல்ஹாசன்.

இன்றும் ஹேராமை டிவியிலோ டிவிடியிலோ பார்க்கும் இன்றைய தலைமுறையினர், படத்தை பார்த்து விட்டு சமூக வலை தளங்களில் சிலாகிப்பதை பார்க்கும் போது, இயக்குநர் கமல்ஹாசன் இன்னும் பல தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படுவார் என்பது மட்டும் புரிகிறது.



அன்றிலிருந்து....

நாயகன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம்

என்று தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை அடையாளம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ரசிகர்களின் ரசனையை கமல்ஹாசன் மாற்றி விட்டதால், இன்றைய காலத்தில் "வித்தியாசமாக எதுவும் இல்லாத" சினிமா வெற்றி பெறுவதில்லை!!! உதாரணம் நான் சொல்ல தேவையில்லை... அப்படிப்பட்ட படத்தை வாங்கி வெளியிடும் விநியோகிஸ்தர்கள் நஷ்டப்பட்டு "மெகா பிச்சை" எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Monday, February 16, 2015

வறுமையின் நிறம் சிவப்பு சாதனைகள்

வறுமையின் நிறம் சிவப்பின் தெலுங்கு ரீமேக் "Aakali Rajyam" ஆந்திராவில் 8 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.

வறுமையின் நிறம் சிவப்பு சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.

மற்ற ஊர்களில் இந்த படத்தின் சாதனைகள் தெரிந்தால் கமெண்ட் செய்யவும்.

விநியோகிஸ்தர்களே பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளிய ரஜினி சாதனையாளரா? அல்லது 1980களிலேயே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல பகுதிகளில் வெள்ளி விழா சாதனை நிகழ்த்திய கமல்ஹாசன் சாதனையாளரா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Thursday, February 12, 2015

"இந்திரன் சந்திரன்" சாதனைகள்

ஒரு ஹீரோவின் மற்ற மொழிப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பல முறைகள் 100+ நாட்கள் ஓடியிருக்கின்றன என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசனுடைய படங்கள் மட்டும் தான்.

உலகநாயகனின் Indrudu Chandrudu (தெலுங்கு) ஆந்திராவில் வெள்ளிவிழா கொண்டாடியது.

தமிழில் "இந்திரன் சந்திரன்" என டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்கள் ஓடியது.


Monday, February 9, 2015

பாசவலை சாதனைகள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பல முறைகள் 100+ நாட்கள், 175+ நாட்கள், 365+ நாட்கள் கொண்டாடிய இந்தியாவின் ஒரே கலைஞன் நம் உலகநாயகன் மட்டுமே!!!

Subha Sankalpam (பாசவலை)
ஆந்திராவில் 35 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேலும்,
15 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலும்,
தமிழில் பாசவலையாக டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்களும் ஓடி சாதனை படைத்துள்ளது.

Subha Sankalpam celebrated 50 days in 35 Theaters and 100 days in 15 Theaters of Andhra Pradesh!!! Also it is dubbed as Paasavalai in Tamil and celebrated 100 days in Chennai. 

ஆனால் மீடியா மட்டும் புகழும் ரஜினியின் சாதனை, சென்னை பால அபிராமி தியேட்டர் அல்லது பேபி ஆல்பட்டில் மட்டுமே இருக்கும், அதுவும் காலை 9 மணி காட்சி!!! 

இன்றும் கூட இரண்டாவது காட்சியிலேயே அவர் ரசிகர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட லிங்கா, சென்னை பேபி ஆல்பட்டில் ஒரு காட்சி கூட இல்லாமல், நாளிதழ்களில் விளம்பரமாக மட்டும் ஓட்டி கொண்டிருக்கிறார்கள்.

Friday, February 6, 2015

விஸ்வரூப தினம் (பிப்ரவரி-7)


எப்படி கமல்ஹாசனை புகழ்ந்தாலும், அதற்கும் மேல் சாதனைகளை செய்து, தன்னை புகழ்ந்தது சரியே என்று நிரூபித்து விடுவார் உலகநாயகன்!!!

விஸ்வரூபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் ஒரு வரி வரும்....

"தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா?...." என்று

விஸ்வரூபம் வெளியாகும் முன் இந்த பாடலை கேட்டவர்கள், கமல்ஹாசன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஹீரோவை புகழும் பாடலா? என்றார்கள்.

ஆனால் அவர்களே, "இந்த வரி கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு மட்டுமே பொருந்தும்" என்றார்கள்!!! விஸ்வரூபம் வெளியாவதற்கு போடப்பட்ட பல தடைகளை உலகநாயகன் தகர்த்தெறிந்த பின்...

விஸ்வரூபத்தால் உலகநாயகன் செய்த சாதனைகள் :

  1. ஹீரோவே இயக்கி தயாரித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் இந்தியப் படம்
  2. அண்டை மாநிலங்களில் வெளியாகி, ரண்டு வாரங்கள் கழித்து தமிழகத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ஒரே படம்
  3. தமிழர்கள் பல மாநிலங்கள் (கேரளா,கர்நாடகா,ஆந்திரா) சென்று பார்த்த ஒரே படம்
  4. சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் 4 தியேட்டர்களில் வெளியான முதல் படம், மேலும் அந்த 4 தியேட்டர்களிலும் 3 வாரங்கள் ஓடி, 1 தியேட்டரில் 100 நாள் கொண்டாடிய படம்
  5. இந்தியா முழுவதும் 3 மொழிகளில் மெகா ஹிட்டான கடைசிப்படம்      ( 2013ல் வெளியாகி இன்று 2015 பிப்ரவரி வரை )

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 2013ல் கொண்டாடப்பட்ட "விஸ்வரூப" திருவிழா!!!



உலகநாயகன் ரசிகர்களின் மற்ற சில "விஸ்வரூப" கொண்டாட்டங்கள்...

சென்னை உலகநாயகன் ரசிகர்களின் "விஸ்வரூப" பேனர்கள்...


சென்னை உலகநாயகன் ரசிகர்களின் "விஸ்வரூப" போஸ்டர்கள்...


Tuesday, February 3, 2015

சண்டியர் - துவக்க விழா

மற்ற தமிழ் படங்கள் போல் பூஜையை சென்னையிலே போடாமல், உலகநாயகன் தன் "சண்டியர்" படத்தின்  துவக்க விழாவை "மதுரை மாநகரில்" 2003-ல் நடத்தினார்!!!

அது மட்டுமல்ல, "சண்டியர்" பட துவக்க விழா அழைப்பிதழை, வித்தியாசமாக,  முதல் தகவல் அறிக்கை(FIR) மாடலில் உருவாக்கி, புதுமையை புகுத்துவதில் என்றுமே தானே முன்னோடி என்பதை அழைப்பிதழிலும் நிரூபித்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்!!!

இந்த விழாவிற்கும் என் தளத்தின் (www.SandiyarKaran.com) பெயருக்குமே மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இந்த விழாவில் தான் முதல் முறையாக என் தலைவன் கமல்ஹாசரை நேரில் பார்த்தேன்.

பின், "சண்டியர்" என்ற அடைமொழியை என் பெயருடன் இணைத்து  YAHOO GROUPS-ல் பயன் படுத்த தொடங்கினேன், அப்படியே ORKUT, BLOG, FACEBOOK, TWITTER என  என் பெயருடன் கலந்து விட்டது.

தினமலரில் "சண்டியர்" துவக்க விழா மதுரையில், என்று படித்தவுடன் காலையிலே மதுரைக்கு கிளம்பி விட்டேன், அங்கு காலை 11 மணியளவில், பெரியார் பேருந்து நிலையத்திலுருந்து விழா நடக்கும் மைதானத்திற்கு பஸ் ஏறினேன், அந்த இடத்திற்கு செல்லும் வரை எத்தனை வித விதமான "கமல் போஸ்டர்கள்"!!! இன்றிருப்பது போல கேமரா போன் என்னிடம் அன்றிருந்திருந்தால், அத்தனை போஸ்டர்களையும் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு இணைத்திருப்பேன்!!!

மாலை 4 மணியளவில் கமல் பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து மைதானத்திற்கு கார்களிலும் வேன்களிலும் வரத்தொடங்கினர். கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஐபிகளுக்கும் மேடைக்கருகில் இடம் அமைத்து வேலி போடப்பட்டிருந்தது, அதை தாண்டி ரசிகர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் முதல் வரிசையில் வேலி தாண்டி செம்மண் தரையில் இடத்தை பிடித்து விட்டேன்.

சிறிது நேரத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தன் FACEBOOK அதிகாரப்பூர்வ  பக்கத்தில் ஏதேனும் அப்டேட் செய்தால் லைக்குகள் குவிவது போல, கமல் ரசிகர்கள் குவிந்தனர்.

என் இடமும் பறிபோனது, தனியாக சென்றிருந்ததால் பின் வரிசைக்கு தள்ளப்பட்டேன். இப்போது போல அன்றிருந்திருந்தால் மாவட்ட நிர்வாகிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கலாம்.

கமல்ஹாசரை ஒரு முறை தூரத்திலிருந்து பார்த்தால் போதும் என்றிருந்த என்னை, "சண்டியர்" விழாவில் ஆரம்பித்து, உலகநாயகனின் அருகிலேயே கொண்டு நிறுத்தி விட்டது  "சண்டியர்" என்ற பெயர்!!!

மாலை 5 மணியளவில், "கொம்புல பூவ சுத்தி" என்ற பாடலில் வரும் நாட்டுப்புற பேண்டு குழு வாசிக்க ஆரம்பிக்க ஆட்டம் ஆரம்பமானது.

உலகநாயகன் எப்போது வருவார் என்று மட்டும் எதிர்நோக்கியிருந்த எனக்கு, என் ஆடைகள் செம்மண்ணால் பூசப்பட்டதை காண நேரமில்லை.

கருப்பு சட்டையுடன் பட்டு வேட்டியில் சண்டியர் கெட்டப்பில், விழா நாயகன் கமல்ஹாசர் மேடையில் தோன்றி, கைகளை கூப்பி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்ததை கண்டு மெய்சிலிர்த்து கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து முன்னே வர ஆரம்பித்து, நெரிசல் ஏற்பட்டு, கலைந்து, என் உயிர் மீண்டும் எனக்குள் வர ஆரம்பித்தது ("நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்" என்ற செய்தி படித்தால் அது எப்படி என்று தோன்றும்? ஆனால் அன்று தான் புரிந்தது). அந்த அளவுக்கு நிற்க கூட இடம் இல்லாமல் ரசிகர்களால் மைதானம் நிரம்பியிருந்தது.



திரைத்துறையில், கமல்ஹாசன் மட்டுமே, தன் ரசிகர்களை மட்டும் வைத்து,  திறந்த வெளி மைதானத்தில் பட துவக்க விழா (சண்டியர்), ஆடியோ வெளியீட்டு விழா (விஸ்வரூபம்),  மக்கள் பிரச்சினைக்கு பேரணிகள்,
ரசிகர்கள் மாநாடு ( இரண்டு முறைகள் ) என நடத்தி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Friday, January 30, 2015

லிங்கா 50 வது நாள் மோசடி

லிங்கா 50 வது நாளாம்... ஆனா அவர்கள் குறிப்பிட்டிருக்கும் எந்த தியேட்டரிலும் ஒரு காட்சி கூட கிடையாது. ஏண்டா உங்களுக்கு வெட்கமே இல்லையா?

படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள், இரண்டாவது காட்சியிலேயே படம் படுத்து விட்டது என்ற உண்மையை, மக்களிடம் ஆதாரத்துடன் தைரியமாக மீடியா முன்னே கூறிய பின்னும், எதுக்கு இன்னும் படத்தை ஓட்டுறாங்க???


அடுத்த தலைமுறையினரிடம் லிங்கா 50 நாளுக்கு மேலே சென்னையில் 3 தியேட்டர்களில் ஓடிச்சி என்று எப்படி ஏமாற்றுவது? இப்ப ஒரு விளம்பரம் கொடுத்தா தானே அதை அடுத்த தலைமுறையினரிடம் காட்ட முடியும்.


டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் காலத்திலேயே, இரண்டாவது காட்சியிலேயே படுத்த படத்தை, 50 வது நாள் வரை, தியேட்டரில் ஒரு காட்சி இல்லாமலே, வால்போஸ்டர், பேப்பர் விள்மபரம் என்று இப்படி ஏமாற்றுகிறார்களே....டெக்னாலாஜி வளராத 1980 களில் எப்படியெல்லாம் ரஜினி படத்தை ஓட்டி ஏமாற்றியிருப்பார்களோ ???

Thursday, January 29, 2015

இந்தியன் Vs முத்து - சென்னை வசூல்

சென்னையில் ரஜினியின் முத்து (1995) மொத்தமாக ரூ 1.28 கோடி வசூல் செய்திருக்கிறது.

6 மாதங்கள் கழித்து 1996 மே மாதம் வெளியாகிய, உலகநாயகனின் இந்தியன் மொத்தமாக  சென்னையில்  ரூ 2.05 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

உலகநாயகன் கமர்சியலில் இறங்கினால் இந்தியாவில் எவனும் இவருக்கு போட்டி இல்லை என்பதை பல தடவை நிரூபித்திருக்கிறார், அதில் "இந்தியன்" சாதனை ஒன்று!!!

இரண்டு படங்களும் சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் வெளியாகியிருக்கிறது,

இந்தியன் வசூல் (உதயம்) = 42.49 லட்சம் 

முத்து வசூல் (உதயம் +சூரியன்) =  31.59 லட்சம்

அதன் வித்தியாசத்தை பார்த்தாலே பாமரனுக்கும் புரியும், யார் யாருக்கு பின்னே என்று, மீடியாக்காரர்களுக்கு மட்டும் ஏன் புரிவதில்லை?


அன்றே, மீடியாக்கள் தாங்கி பிடிக்கும் ரஜினியின் படங்களை விட, உலகநாயகன் படங்கள் பல லட்சங்கள் வித்தியாசத்தில் ஒவ்வொரு ஊரிலும் முன்னே இருந்திருக்கின்றன என்றால், மக்களின் ரசனைகள் மாறிய இந்த காலகட்டத்தில், கண்டிப்பாக பல கோடிகள் வித்தியாசத்தில் உலகநாயகனே மற்றவர்களை விட முன்னே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

முத்து படத்தின் சென்னை வசூல், உலகநாயகனின் இந்தியன் வசூலை விட எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதை இவ்வுலகிற்க்கு காட்ட உதவிய ரஜினிபேன்ஸ் வெப்சைட்டிற்கு நன்றி.

Kamal Haasan's INDIAN, released 6 months after rajinikanth's muthu, has collected 75+ Lakh more than that in CHENNAI city theaters alone. INDIAN has collected 2.05 Cr, but muthu has collected 1.28 Cr only. 

When the real collection of Kamal Haasan's film is far ahead than rajinikanth's film why the media is deliberately creating hype for rajinikanth?

Wednesday, January 28, 2015

இந்தியன் Vs பாட்ஷா - கோயம்புத்தூர் வசூல்

ரஜினியின் பாட்ஷா 1995-ல் கோயம்புத்தூர்  K.G.காம்ப்ளக்ஸில் முக்கி முக்கி 368 நாட்கள் ஓட்டப்பட்டு 36..62 லட்சங்களே வசூலித்திருக்கிறது.

ஆனால் அதே K.G.காம்ப்ளக்ஸில் ராகம் தியேட்டரில், 1996-ல் வெளியான உலகநாயகனின் இந்தியன் 109 நாட்களிலேயே 45.93 லட்சங்கள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது!!!


மீடியாக்களால் மறைக்கப்பட்ட மற்றுமொரு கமல்ஹாசனின் வசூல் சாதனை இது!!! வசூலிலும் என்றும் உலகநாயகனே முதலிடம் என்பதற்கு இதுவே சாட்சி!!!

மற்ற நடிகர்களுக்கு "இந்தியனின்" வெற்றி கிடைத்திருந்தால், அந்தப் படத்தை 1000 நாட்களுக்கு மேல் ஓட்டியிருப்பார்கள், ஆனால் கமல்ஹாசனோ தன் படங்கள் 99 நாட்கள் மட்டுமே ஓடினாலும் அல்லது 500 நாட்களுக்கு மேல் ஓடினாலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார் என்பதற்கு "இந்தியனே" சாட்சி!!!

பாட்ஷாவின் கோவை வசூல் நிலவரத்தை வெளியிட்ட ரஜினிபேன்ஸ் வெப்சைட்டிற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் சார்பில் எனது நன்றிகள், ஏனென்றால் உங்களால் தான் இன்று "இந்தியனின் வசூல்" எவ்வளவு வலிமையானது என்று என்னால் இந்த மீடியாக்களுக்கு காட்ட முடிகிறது.

அப்படியே பாட்ஷாவின் சென்னை வசூல் நிலவரத்தையும் போடுங்க ரஜினி ரசிகர்களே.

Kamal Haasan's INDIAN released in 1996 has collected 45.93L within 109 days of Raagam theater (K.G.Complex), Coimbatore, but rajini's biggest hit as claimed by his fans, baasha in 1996 has collected only 36.62L from 368 days in same K.G.Complex,Coimbatore.

Tuesday, January 27, 2015

"தூங்காதே தம்பி தூங்காதே" ரி-ரிலீஸ்

உலகநாயகனின் "தூங்காதே தம்பி தூங்காதே" திரைப்படம்,
சென்னை ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரில்
( 23-ஜனவரி-2015 முதல் 29-ஜனவரி-2015வரை, மதியம் 2.30 மற்றும் மாலை 6.30 காட்சிகளாக ) திரையிடப்பட்டுள்ளது.

உலகநாயகனின் பக்தர்கள் சென்னை முழுவதிலிருந்து, 25-ஜனவரி மாலை 6.30 மணி காட்சிக்கு வந்து (குறிப்பு : இந்த காட்சி ஹவுஸ்புல் அன்று!!!), உலகநாயகனின் ரிரிலீஸ் படத்தை, உலகநாயகனின் புதிய படத்தின் முதல் நாள் முதல் காட்சி போல கொண்டாடினர்.

உலகநாயகனின் பக்தர்கள் தாங்கள் என்பதை, திரையில் உலகநாயகன் வரும் போதெல்லாம் சூடத்தை கைகளில் எரிய விட்டு ஆராதித்து நிரூபித்துக் கொண்டிருந்தனர்.


ஒரு பக்கம், மீடியாக்கள் தாங்கி பிடிக்கும் ரஜினியின் புதிய படத்தை, அவரின் ரசிகர்களே பார்க்க வரவில்லை என்ற உண்மையை லிங்கா விநியோகிஸ்தர்கள் வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கின்றனர். 

இன்னொரு பக்கம், உலகநாயகனின் ரிரிலீஸ் படத்திற்கே, இன்றும் ரசிகர்கள் திருவிழாவை கொண்டாடுவதை போல கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

வீடியோ : உலகநாயகனின் பக்தர்கள் கூட்டம்


 வீடியோ : திரையில் உலகநாயகனின் தோற்றம்


 வீடியோ : உலகநாயகனின் ஸ்டைலிஷ் நடை

  
வீடியோ : உலகநாயகனின் நடனம்