Ads 468x60px

Wednesday, September 19, 2012

அடுத்த கமல் யார்?

"அடுத்த கமல் யார்?" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , ("அடுத்த MGR யார்? அடுத்த சிவாஜி யார்?")  எப்படி விடையானர் என்று முதலில் பார்ப்போம்.

கமல் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய போதே, அடுத்த ஜெமினிகணேசன் யார்? என்ற கேள்வி எழ விடாமலேயே, மன்மத லீலை, ஏக் துஜே கே லியே, மூன்றாம் பிறை என்று காதல் இளவரசனாக ஜொலித்தார்.

1977-ல், 16 வயதினிலே படத்தில் சப்பானியாக நடித்து, ராஜ பார்வையில் பார்வையில்லாதவராக மாறி, எல்லாம் இன்பமயங்களில் 11 விதமான தோற்றங்களில் தோன்றி, கடல் மீன்களில் 60 வயது முதியவராக தன் 25 வயதிலேயே நடித்து, மூன்றாம் பிறையில் சிறந்த நடிகனாக தேசிய விருது வாங்கி, சிப்பிக்குள் முத்துவில் யதார்த்த நடிப்புக்கு இலக்கணம் அமைத்து, புன்னகை மன்னனில் சார்லி சாப்ளினாகி, நாயகன் படத்தில் ஒரே ரோலில் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான நடிப்பை வெளிப்படுத்தி, நடிப்பின் உச்சத்தை தொட்டு, சிவாஜிகணேசன் வாயாலேயே "என்னையே மிஞ்சிட்டடா" என்று சொல்லவைத்து, "அடுத்த சிவாஜி யார்?" என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன்.



சினிமா வரலாற்றில் ஒரு பெரிய ஹீரோ முழு நீள காமெடிப் படத்தில் நடிப்பது மிக அரிது, அதுவும் அடுத்தடுத்து நடிப்பது அரிதிலும் அரிது. அந்த சாதனையையும் உடைத்தெறிந்து, டைமிங் காமெடியிலும் நான் தான் கிங் என்று நிரூபித்திருக்கிறார் கமல். "மைக்கேல் மதன் காமராஜன்" படத்தின் DVD இல்லாத வீடுகள் இல்லை என்பதும், இன்றும் சன் டிவி, உலகநாயகனின் பஞ்சதந்திரம் & வசூல்ராஜா படங்களை மாதம் ஒரு முறையாவது ஒளிபரப்புவதுமே இதற்கு சான்று.

அடுத்த MGR யார்? என்ற கேள்வி கொஞ்சம் சிக்கலானது. சினிமாவிலா அல்லது அரசியலிலா? என்று அந்த கேள்வியை இரண்டாக்கும் அளவுக்கு அவர் இரண்டிலும் சாதித்திருக்கிறார்.

1986-ல் கமல் தன் ரசிகர்மன்ற மாநாட்டை MGR தலைமையில் நடத்திய போது, திரண்ட இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து, எம்ஜியாரே கமலை பார்த்து "அரசியலுக்கு வருகிறாயா?" என்று கேட்டார். ஆனால் எம்ஜியாரிடமே தன் மறுப்பை தெரிவித்து, இன்றும் அரசியலில் ஈடுபடாத அரசனாக, கலையுலகை மட்டும் ஆட்சிபுரிகிறார் கமல்.


சினிமாவை பொறுத்தவரை, எம்ஜிஆர் ஜனரஞ்கமான படங்களிலேயே நடித்தாலும் அவர் கேமராவுக்கு பின் இருக்கும் அனைத்து சினிமா தொழில்நுட்பங்களும் அறிந்தவர். கமலும் குரு, சவால், கல்யாண் ராமன், சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, காக்கி சட்டை, அபூர்வ சகோதரர்கள் என்று ACTION மற்றும் கமர்சியல் படங்களிலும் தன் தனி முத்திரையை பதித்து, எம்ஜியாரை போல அனைத்து சினிமா தொழில்நுட்பங்களும் கற்றுத்தேர்ந்தவர் தான். புதிய தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு முதலில் அறிமுகப்படுத்துவதும் கமலே.

கமலின் சினிமா ஞானத்தை "ஹேராம் ஆய்வுகள்" மூலம், பதிவர் "உலகசினிமா ரசிகன்" பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஹேராமை பற்றி மிக அற்புதமாக விவரித்துள்ளார்.
லிங்க் இதோ :
1.http://worldcinemafan.blogspot.com/2012/09/hey-ram-2000-023.html
2.http://worldcinemafan.blogspot.com/2012/09/hey-ram-2000-021.html
3.http://worldcinemafan.blogspot.com/2012/09/hey-ram-2000-017.html

இது புரியாமல், சில மீடியாக்கள் ரஜினியை, எம்ஜியார் இடத்தில் வைத்து குறிப்பிடுவதுண்டு. எம்ஜியாரை போன்று இவர் சினிமா தொழில்நுட்பங்களை அறிந்தவரா? எம்ஜியார் தான் நடிக்கும் படங்களில் கூட மதுவைவோ புகையையோ தொடாதவர், ஆனால் ரஜினியோ ராம்தாஸின் மிரட்டலுக்கு பின் தான் மது, புகையை சினிமாவில் விட்டவர். எம்ஜியார், இல்லாதவர்கள் எந்தக் கட்சியானாலும், இல்லை என்று கூறாமல் உதவியவர், ரஜினியோ தன் ரசிகர்களை கூட தன் மகளின் திருமணத்துக்கு அழைக்காமல், தனியாக பிரியாணி போடுகிறேன் என்று 2 வருடங்களாக ஏமாற்றுபவர், தான் கூறும் கருத்துக்களில் கூட தெளிவில்லாதவர், அன்று ஜெ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பற்றமுடியாது என்றார், பின் ஜெ தான் தைரிய லட்சுமி என்றார், 2011 தேர்தலில் மு.க தோற்றுவிடுவார் என்றவுடன் மீடியாக்கள் முன்னிலையில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டவர் தான் ரஜினி.


ஆளவந்தான் நந்துவைப் பற்றி கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டால் "கடவுள் பாதி, மிருகம பாதி" என்பார். அது போல கமலைப் பற்றி
நடிகர் செந்தாமரையிடம் கேட்டால் இப்படி தான் குறிப்பிடுவார், "கமல் - மூன்று சிவாஜி, ஆறு எம்ஜியாருக்கு சமம்" என்று.

அதையும் தாண்டி  எம்ஜியார் (ACTION, சினிமா தொழில்நுட்பஞானம்), சிவாஜிகணேசன் (சீரியஸ் நடிப்பு), நாகேஷ் (டைமிங் காமெடி) ஜெமினிகணேசன் (காதல் உணர்வுமிக்க நடிப்பு) ஆகிய தன் முந்தையகால LEGENDS அனைவரின் கலவையாய் மட்டுமல்லாது, தனது பாணியாக யதார்த்த நடிப்பு என்ற பிரிவையும் திரையில் உருவாக்கி ஜொலித்து, பாடலாசிரியராக, பாடகராக, மேக்கப்மேனாக, கதை திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக வெற்றி பெற்று, இன்று "விஸ்வரூபம்" மூலம் ஹாலிவுட்காரர்களையும் தமிழ் சினிமா பக்கம் திருப்பிவிட்டு,  தனக்கு கொடுக்கப்பட்ட உலகநாயகன்  பட்டம் சரியானதே என்று நிரூபித்துவிட்டார் கமல்.

இது புரியாமல், நடிகர் அஜீத் குமாரை, சிட்டிசன் படத்தில் பல்வேறு கெட்டப்புக்களில் நடிக்கிறார் என்றவுடன், மீடியாக்கள் அவரை "அடுத்த கமல்" என்று வர்ணித்தன. ஆனால் படம் வந்தவுடன், "பள்ளி குழந்தைகளின் மாறுவேடப் போட்டி போல உள்ளது" என்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி, "அடுத்த கமல் என்பது எளிதானதல்ல" என்பதை அவரே புரிந்து, போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

பின் விக்ரம் என்று ஒரு நடிகர் வந்தார், ரெண்டு மூனு ஹிட் கொடுத்தவுடன், தன்னைத் தானே "அடுத்த கமல்" என்று நினைத்து கொண்டிருந்தவரிடம் நிருபர் ஒரு கேள்வி கேட்டார், " கமல் காமெடி படங்களிலும் தன் வெற்றி முத்திரையை பதித்தவர், ஆனால் நீங்கள் இன்னும் காமெடி படம் பண்ணலையே?". உடனே நானும் நடிப்பேன் என்று "மஜா" என்று ஒரு படத்தை வெளியிட்டார், அன்று சரிந்த விக்ரமின் மார்க்கெட், இன்றும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

விஜய் அவார்ட்ஸில்(2009) என்று கமலின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாரோ அன்றிலிருந்து சூர்யாவின் சினிமா மார்க்கெட் (அயன், சிங்கம்), விஜய் அஜீத்தையும் தாண்டி உச்சத்திலிருக்கிறது. அதற்காக இவரோ இவரது ரசிகர்களோ இவர் தான் அடுத்த கமல் என்று நினைத்து கொண்டிருந்தால், மீண்டும் இப்பதிவை முதலில் இருந்து படிக்கவும்.

மேலும், கமல் 1989-ல் தன் ரசிகர் மன்றங்களை களைத்து விட்டு, மக்களுக்கு உதவி புரியும் "நற்பணி இயக்கங்களாக" மாற்றினார். இது சினிமா வரலாற்றிலே யாருமே செய்யத் துணியாதது. அன்று இரத்த தானம் செய்வதே அரிதான செயல். இன்று உடல் உறுப்பு தானங்களே அதிகமாக தமிழகத்தில் நடைபெறுகிறது என்றால் அதற்கு கமல் செய்த விழிப்புணர்வு மட்டுமின்றி அவரே செய்த "உடல் தானத்திற்க்கும்" மிக முக்கிய பங்குண்டு.

அடுத்த கமல்ஹாசனாக வேண்டுமானால்,

திரைக்கதை
வசனம்
இயக்கம்

நடிப்பு ( யதார்த்தம், டைமிங் காமெடி, சீரியஸ், காதல்)
நடனம்
ACTION
பாடகர்

பாடல் ஆசிரியர்

என்று சினிமாவின் ஒவ்வொரு துறையிலும், பாக்ஸ் ஆபிஸிலும், பல தலைமுறைகள் கடந்து சாதிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு, அதைப் பார்த்து பயப்படாமல் அதை சினிமாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் தொலைநோக்கு பார்வை வேண்டும்   ( சின்னதிரையின் வளர்ச்சியை கண்டு பயப்படாமல், ஆரம்பத்திலிருந்தே அதை ஆதரித்தவர் கமல் ஒருவரே). அதுமட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி என்று மற்ற மொழிகளில் நேரடியாக நடித்து வெற்றியும் பெற வேண்டும். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் குறைந்தபட்சமாவது முதலீடு செய்ய வேண்டும்.

கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார், தான் ஓடிக்கொண்டிருப்பது சினிமாவுக்கான மராத்தான் ஓட்டம் என்று. அந்தந்த கால பாப்புலர் ஹீரோயின், காமெடியன்கள், மியூசிக் டைரக்டர் & டைரக்டர்களை வைத்து காலத்தை ஓட்டுபவர்களால் இந்த மராத்தான் ஓட்டத்திற்கு தகுதியே பெறமுடியாது, பின் எங்கே அடுத்த கமல் ஆவது?

விஞ்ஞானத்தின் மூலம் கருவிலிருந்தே அப்படி ஒரு கலைஞனை உருவாக்கினாலும், அவரும் அடுத்த கமல்ஹாசனாக சாத்தியமில்லை.....

61 comments:

  1. Super duper.. very nice write up. Thalaivarai nadippil evanavadhu 10% pannattum apram michadhellam try pannattum.. adhutha Kamal..hahahahahahahahahahahhahahah

    ReplyDelete
  2. Katturai migavum arumai thala..,. Aanal enna thani manidha thakkuthal vendame... Rajini ulla thakkuthalai thavirthu padithaal anaithum arumaiye

    ReplyDelete
  3. சார் என்ன சார் இது? இதுலாம் ஓவரா தெரியலையா உங்களுக்கு. கமலால் சமூகச் சீர்திருத்தவாதியாக நடிக்க முடியும். சமுதாய கோபத்தை பதிவு செய்ய முடியும். புதிய டெக்னிக்குகளை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வர முடியும். நல்ல கதைகளைச் சொல்ல முடியும். நல்ல படத்தை இயக்க முடியும். அவ்வளவுதான். அதுக்காக சிவாஜிக்கிட்டலாம் கம்பேர் பன்றீங்களே!

    சிவாஜியப் போல அன்புள்ள ஒரு அப்பாவா நடிக்க சொல்லுங்க பாப்போம். நல்ல அண்ணனா நடிக்க சொல்லுங்க பார்ப்போம். கம்பீரமான போலீஸா நடிக்க சொல்லுங்க பாப்போம் (அதில நீங்க சொல்ற விக்ரம் கூட ஜெயிச்சிருக்காரு சார். கமல் போலீசா நடிக்கிறேன்னு காமடி பண்ணிருப்பார், இல்லனா மூக்கால அழுதுருப்பார் அவ்வளவுதான். கம்பீரம்லா வராது)

    சிவாஜி "நீ என்ன தாண்டிட்டடா தம்பி"னு சொன்னார்னா அது அவரோட பெருந்தன்மை. அத இவரு ரொம்ப சீரியசா எடுத்துக்குட்டார்னா இவர் சிவாஜி மிஞ்சிட்டதா அர்த்தமா?

    சிவாஜி எத்தனை விதமா அழுதுகாட்டியிருக்கிறார் தெரியுமா? இவருக்கு ஆ... ஆ... விட்டா தெரியாது. அதுவும் படத்துக்குப்படம் வேற வேற பாத்திரத்தில நடிக்கும்போதும் ஒரே மாதிரியா அந்தந்த பாத்திரங்கள் அழும். இதுதான் யதார்த்தமான நடிப்பா? ஒவ்வொரு பாத்திரத்திலும் கமல்தான் தெரிகிறாரே தவிர அந்தப் பாத்திரம் தெரிவதில்லை. ஆனால் அங்குதான் சிவாஜி வேறுபட்டிருக்கிறார். அந்தப பாத்திரங்கள்தான் நமக்குத் தெரியுமே தவிர சிவாஜி தெரியமாட்டார். சிவாஜி எத்தனை வில்லத்தனம் பண்ணியிருக்கார்தெரியுமா? இவர் காமிக்ஸ் வில்லன் ரோல்தான் (ஆளவந்தான்) பண்ணுவார். குற்றமுள்ள நெஞ்சின் முகப்பதிவுகளை இவர் சினிமாக்களில் பதிந்து காட்டியிருக்கிறாரா? சிவாஜி எத்தனைவிதமா நடந்து காட்டியிருக்கார் தெரியுமா? இவர் (கமல்) எத்தனை விதமா நடந்து காட்டியிருக்கார்?

    ReplyDelete
  4. 16 வயதினிலே யாருக்கு பேரு? ரஜினிக்கா? கமலுக்கா?

    மூன்று முடிச்சு யாருக்கு பேரு? ரஜினிக்கா? கமலுக்கா?

    நினைத்தாலே இனிக்கும் யாருக்கு பேரு? ரஜினிக்கா? கமலுக்கா?

    நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்திருக்கீங்களா? அந்தப் படத்தில கமலுக்குப் பேரா? ரஜினிக்கு பேரா? ரஜினிக்கு அதில சின்ன காமெடியன் ரோல்தான்.

    தில்லுமுல்லு படம் பாத்துருக்கீங்களா? படம் முழுக்க ரஜினி விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பார். கடைசி சீன்ல வந்து கமல் சிரிக்க வைக்கிறேன்ற பேருல என்ன பண்ணியிருப்பார். தைரியமா நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க.

    காமெடில பெரிய சக்சஸ் ஆனார்னா அதுக்கு முழுக்க முழுக்க கிரேசி மோகன்தான் காரணம்.

    கமல் நல்ல டெக்னிஷியன்னு சொல்லுங்க, நல்ல நிர்வாகினு சொல்லுங்க, நல்ல கதையத் தேர்ந்தெடுக்கிறவர்னு சொல்லுங்க (மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு, உன்னைப் போல் ஒருவன் {A Wednesday பாருங்க. அதில் நசுருதீன் ஷாவின் நடிப்பைப் பாருங்க}லாம் ஒத்துக்க மாட்டோம் தலைவரே). நல்ல இயக்குனர்னு சொல்லுங்க ஒத்துக்குறோம். அதவிட்டுட்டு கமல் சிவாஜியையே மிஞ்சிட்டாரு, எம்.ஜி.ஆரயே மிஞ்சிட்டாருனு தனிமனித துதிபாடல் எதுக்குங்க?

    சரி! கமல் எம்.ஜி.ஆரைத்தான் எந்த விதத்துல மிஞ்சிட்டாருன்றீங்க. எம்.ஜி.ஆருக்கு சி சென்டர்களில் இருந்த செல்வாக்கு கமலுக்கு இருக்கிறதா? எம்.ஜி.ஆரோட மாசயெல்லாம் ரஜினி சாப்பிட்டு எவ்வளவோ நாளாச்சு. கமல் சாப்பிட்டுட்டாரா? என்ன அவருக்கு மார்கெட்டிங் டெக்னாலஜி தெரிகிறது. தெனாலிலான் படமாங்க. ஆனா அத அவர் மார்கெட் பண்ண விதம்தான் ஹைலைட். இப்படித்தான் இவர் தமிழ் சினிமாவுக்கு வழிகாட்டியிருக்கிறாரே தவிர. நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ரஜினிக்கு சீரியசா நடிக்க தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? முள்ளும் மலரும் பாருங்க, ஆறிலிருந்து அறுபதுவரை பாருங்க.
    காமடி பண்ணத்தெரியாது நினைக்கிறீங்களா? அவரோடு பல படங்கள் காமடி பேஸ்தான். தம்பிக்கு எந்த ஊரு பாருங்க. தில்லு முல்லு பாருங்க. கம்பீரமா நடிக்க தெரியாதுனு சொல்றீங்களா? அலெக்ஸ் பாண்டியனை நினைச்சுப்பாருங்க. அண்ணாமலை படத்தக்கூட பாருங்க சார். காமடி மட்டும் இல்ல. எல்லா ஆக்சனும் அதிலேயே செஞ்சு காட்டியிருப்பார்.

    கமலும் ரஜினியும் பிரிஞ்சு நடிச்சதுல யாருக்கு தெரியுமா லாபம்? அதுதான் கமலோட டெக்னிக். கமலும் ரஜினியும் சேர்ந்தே நடிச்சிருந்தா கமல் எப்பவோ காணாம போயிருப்பார். இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சதுல அதிகம் பேரு சம்பாதிச்சவரு ரஜினிதான். அத மனசுல வச்சுப் பாருங்க.

    என்ன ரஜினி சிவாஜிக்கலாம், எம்ஜிஆர் மாதிரியோ அல்லது கமல் மாதிரியோ பப்ளிக்கா மக்கள் முன்னாடி நடிச்சு ஏமாத்த தெரியாது. அவ்வளவுதான்.

    நடிகனுக்கு நடிப்புதான் முக்கியம். அதவிட்டுட்டு அதில கொஞ்சம், இதில கொஞ்சனா எப்படி? எதிலையும் முழுமை கிடைக்காது. விக்ரம் சூரியாலாம் எதிர்காலத்துல கமல் சாரையெல்லாம் மிஞ்சி போயிடுவாங்க. இவர தமிழ் உலகம் ஞாபகம் வச்சுக்கணும்னா அது அவரோடு டெக்னிக்ஸ்தான்.

    டெக்னிக்ஸ் மற்றும் கதைத்தேர்வத் தவிர கமலால ரஜினி கிட்டையே இன்னும் வர முடியல. இவரு சிவாஜி நடிப்பையே தாண்டிருவாரா? போங்க சார் நீங்க. ரசிகனா இருக்கலாம் அதுக்காக இந்த அளவுக்கா?

    கமலைப் பத்தின இன்னொரு விமர்சனத்துக்கு கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள்.

    கமல்ஹாசன் கவிதை | விமர்சனம் = http://adf.ly/2185746/http://cinema.arasan.info/2012/09/Kamal-poem-critisism.html

    இந்த மறுமொழியும் என் வலைப்பூவில் பதிவாக இருக்கும். மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என் வலைப்பூவுக்கு வந்தும் மாற்றுக்கருத்தைப் பதியலாம். இது என் அன்பு அழைப்பு.

    இது என் வலைப்பூ முகவரிகள்
    http://www.arasan.info | http://graphics.arasan.info | http://cinema.arasan.info

    ReplyDelete
  5. ஐயா அருள் செல்வ பேஏஏஏஏர் அரசா, ஒரே கேள்விக்கு பதில் சொல்லவும். இந்தியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்குவது ரஜினிதான் என சொல்லப்பட்டது. அப்பவே அப்படின்னா இப்பவும் ரஜினியின் சம்பளம் ஜாக்கிக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கவேண்டும்.

    எங்கே, ஜாக்கிசானுக்கு அடுத்த சம்பளம் என்றால் படமும் ஜாக்கி சானுக்கு அடுத்த பெரிய வசூல் ஆகத்தானே இருக்கவேண்டும்?!? எங்கே ஒரு படம், ஆசியாவில் பெரிய நடிகரான ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக கலெக்ஷன் ஆன ஒரே ஒரு ரஜினி படம் எது என சொல்லுங்கள் பார்ப்போம்?!? நான் கேட்பது இந்த ஒரே ஒரு கேள்வி தான். இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்! மற்றபடி நீங்கள் போஸ்ட் செய்த முழு நீள காமெடி பற்றி நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை!!!

    ReplyDelete
  6. Arul Selva Per arasan said...சகிலா கூட ...A முதல் Z வரை அனைத்து சென்டரிலும் பேர் வாங்கினார் அதற்காக சகிலவை வீட்டிக்கு கூப்பிட்டு போவிகளா அரசனாரே ........................ரஜினி எல்லாம் கமலோடு ஒப்பிட வேண்டாம் .....சம காலத்தில் பேருடன் இருக்கும் இயக்குனர்...கதாநாயகி தோலை காட்டி தன்னை வளர்த்துவருபவர் .....சிவாஜி இணை கமல் இல்லை என்று சொன்னால் ஒத்து கொள்ளலாம் .....ஆனால் ரஜினியை கமலை விட மேல் என்று சொன்னால் நீங்கள் இன்னும் விசிலடிச்சான் குன்ஜாகத்தான் உள்ளீர்கள் ......

    ReplyDelete
  7. cant stop laughing by some posts about RAJINI here... about rajini's comedy sense and acting skills getting compared with kamalhaasan...

    just say ur stories to rajin - he will surely give a slap to you... even arguing with some points on rajinis acting skill vs kamal's is a sin to kamal's sheer brilliance....


    pls forward ur comments to rajini sir or kBalachander sir, u ll surely get a slap from them...

    ReplyDelete
  8. @Arul Selvar

    thoongurvana ezhuppalam, aana thoongura madhri nadikiravana ezhuppa mudiyadhu...

    but u look so genuine in ur posts, but sadly u belong to the group of "sethu ponavana ezhuppave mudiyadhu..." :D :D :d

    ReplyDelete
  9. Karan, hats off saga!

    Mr. Arul Selvar,

    koncahm vaaiyaum athaaiyum moodikittu poreeya ?

    this is not the place for you kind of mental fans

    ReplyDelete
  10. சண்டியர் அண்ணா அற்புதமான பதிவு. கமலுக்கு அப்புறம் எந்த நடிகனும் கிடையாது. கமலுக்கு முன்னும் சரி கமலுக்கு பின்னும் சரி கமலோட போட்டி போட்டு யாராலும் வெல்ல முடியாது.

    ReplyDelete
  11. //எம்.ஜி.ஆரோட மாசயெல்லாம் ரஜினி சாப்பிட்டு எவ்வளவோ நாளாச்சு


    கேப்புல கெடா வெட்டுரதுனா அது இதுதான் பாஸ் ... ரஜினி MGR அவர்களின் கால் தூசிக்குகூட ஆகமாட்டார் என்பதை ராமதாசு பத்து வருடத்துக்கு முன்னே நிரூபித்து விட்டார் ... கருனாநிதியவே எதிர்த்து ஜெயித்தவர் அவர் , ராமடாசுவிடமே மண்டியிட்டவர் இவர் .. இவர் அவரை மிஞ்சி விட்டாரா .. போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு ...

    ரஜினி செய்வதெல்லாம் நகைசுவை என்றால் விஜய்கூட அதை அவரை விட இன்னும் நன்றாக செய்கிறார் ...
    மூன்று முகம் அலெக்ஸ் பாத்திரம் கம்பீரமான பாத்திரமா? அபூர்வ சகோதரர்கள் பார்த்ததில்லையா நீங்கள் ... கொஞ்சமே கொஞ்ச நேரம் policeஆக வந்தாலும்கமல் பின்னியிருப்பாரே ..

    அப்பறம் சூரியா (காலகொடுமைடா சாமி) விக்ரம் எல்லாம் பின்னாளில் கமலை கூட மிஞ்சிவிடுவார்கள் என்றால் , ரஜினியை அவர் மருமகன் தனுஷ் கூட மிகவும் எளிதாக மிஞ்சிவிடகூடும்...

    ReplyDelete
  12. Arul selva..

    முதலில் சிவாஜியை பற்றிய கேள்விகளுக்கு...

    அவரின் நடிப்பை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்றிருந்தேன்...ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறவேண்டும் என்பதால் வேறு வழியில்லை...

    கமல் வருவதற்கு முன், சிவாஜி நடிப்பது தான் நடிப்பு என்றிருந்தது...ஆனால் கமலின் யதார்த்த நடிப்பை பார்த்த பின் தான், தமிழ் மக்களே சிவாஜியின் நடிப்பை "ஓவர் ஆக்டிங்" என்று சாட ஆரம்பித்தனர்...

    சுருக்கமாக சொன்னால் "5 ரூபாக்கு நடிக்கச் சொன்னால் 500 ரூபாக்கு நடிப்பார் சிவாஜி"...

    சிவாஜி போலீஸாக நடித்தது எல்லாம் "ஒட்டு மீசை & தோப்பா முடி" வைத்து தானே ( ஒரு படத்தில் வடிவேலு கூட அப்படி தான் போலீஸாக நடித்தார்..)
    கமல் தான் முதன்முதலில் ஒரிஜினல் முறுக்கு மீசையுடன் "ஒரு கைதியின் டைரி" படத்தில் நடித்தார்... அந்த படத்தில் போலீஸ் கமல் தன் தாயை கொன்றவர்களை பற்றி தெரிந்தவுடன், பழிவாங்க துடிப்பார்...அதை கேட்டு, அப்பா கமல் அழுவாரே ஓர் அழுகை எவ்வளவு யதார்த்தம்...அதை பார்த்தில்லையா?

    அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமல், தன் தாயே தன்னை குள்ளன் என்றவுடன், எப்படிப் பட்ட விரக்தியில் அழுவார்...அதை பார்த்தில்லையா?

    சிவாஜி தன் வாழ்நாளிலேயே "ஒவர் ஆக்டிங்" செய்யாமல் நடித்த படம் இரண்டே இரண்டு தான்...
    1. முதல் மரியாதை
    2. தேவர் மகன்

    ReplyDelete
  13. Arul Selva
    இப்ப ரஜினி பற்றிய கேள்விகளுக்கு...

    தில்லு முல்லு என்ற படம் தான் ரஜினி நடித்த முழுநீளக் காமெடிப்படம்...
    அந்த படத்தில் கூட "தேங்காய் சீனிவாசன்" தான் கலக்கியிருப்பார்....
    ஆனால் அதுவும் ஹிட் கிடையாது..ஆவரேஜ் படம் தான்...அதனால் அவர் அடுத்து எந்த முழுநீளக் காமெடிப்படத்திலும் நடிக்க வில்லை...

    ரஜினி நடிப்பை பற்றிய கேள்வி வரும்போதெல்லாம், அவரின் "ஆறிலிருந்து அறுபதுவரை" படத்தை தான் சொல்கிறீர்கள்.... அந்த படத்தில் சாய்வு சேரில் டயலாக் எதுவும் பேசாமல் மூஞ்சை உம்ம்ம் என்று வைத்திருப்பாரே அது தான் நீங்கள் கூறும் நடிப்பா???

    நடிப்பு என்றால் முகத்தை குளோசப்பில் காட்டும் போது கண் கூட நடிக்கனும்... முதலில் ரஜினியை எந்த படத்திலாவது 2 நொடிகள் தொடர்ந்து குளோசப்பில் காண்பித்திருப்பார்களா?

    ReplyDelete
  14. "இன்று எம்ஜிஆர் இருந்திருந்தால், ரஜினியை தான் தமிழ்நாட்டின் "பவர்ஸ்டார்" ஆக்கியிருப்பார்"

    ReplyDelete
  15. Arul Selva
    அடுத்து எம்ஜியார் & கமல் பற்றிய கேள்விகளுக்கு...


    எம்ஜியாரின் மாஸ் உண்மையானது... ரஜினியின் மாஸ் ஊடகங்கள் உண்டாக்கியது.. போலியானது...

    எம்ஜியாரையே தூக்கி சாப்பிட்டவர் ரஜினி என்றால் ஒரு படம் கூட ப்ளாப் ஆகியிருக்கக் கூடாது...ஆனால் ரஜினிக்கு முதல் நாளில் WASHOUT ஆன படங்களின் சதவிகிதம் 42%

    http://www.sandiyarkaran.com/2012/08/RajniWASHOUT.html

    ரஜினியின் படம் ஒன்று கூட ரெகுலர் காட்சிகளின் வெள்ளிவிழா கண்டதில்லை.. ஆனால் கமலுக்கு எவ்வளவு வெள்ளிவிழாக்கள்
    http://www.sandiyarkaran.com/2012/08/SilverJubileeTamilFilms-KamalVsRajini.html

    16 வயதினிலே படம் மட்டுமே நீங்கள் குறிப்பிட்டதில் மிகப்பெரிய ஹிட்... அதில் ரஜினி தான் உங்களுக்கு தெரிந்தார் என்றால், அந்த படத்தில் கமல் நடித்ததையே மறந்து விட்டு, "சப்பானி" கேரக்டரை ரசித்திருக்கிறீர்கள்...அது தான் "கமல்ஹாசரின்" வெற்றி...

    ReplyDelete
  16. 1.சிவாஜியை பற்றி இங்கே ஓவர் அக்டிங் என்று சொல்லப்பட்டது.அதற்க்கான காரணத்தை ஆராய விரும்புகிறேன்.சிவாஜி நாடக மேடையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்.மேடையில் கடைசி வரிசையில் இருப்பவருக்கும் நடிப்பு தெரிய வேண்டும் என்று நாடக நடிகர்கள் எல்லோரும் அதிகம் நடிப்பார்கள்.இது இயற்கையாய் அவர்களுக்கு வரும் ஒன்று.சிவாஜி அப்படி நடித்து வெற்றி பெற்றதால் அதை தொடர்ந்தார்.
    2. கமலும் வணிக படங்களில் 1987 வரை தொடர்ந்து நடித்து வெற்றி பெற்று வந்துள்ளார்.ரஜினிக்கு சமமான போட்டியாளரை இருந்துள்ளார்.இதை யாரவது மறுத்தால் அவர்கள் சினிமா அறியாதவராய் தான் இருப்பார்கள்.நாயகன் படம் வெற்றி பெற்றதும் கமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்தார்..அவர் அப்படி முடிவெடுக்காமல் தொடர்ந்து ரஜினி நடிப்பது போல் வணிக படங்களில் நடித்திருந்தால் ரஜினிதான் எப்போதோ காணமல் போய் இருப்பார். .சரி என்னதான் கமலை ரஜினி முந்திவிட்டதாக சொல்ல பட்டாலும் கமலை பார்த்து சில விஷயங்கள் செய்துபார்க்க தொடங்கினார்.கமல் தேவர் மகன் ஹிட் ஆனதும்,கமல் கதை,திரைகதை,வசனம், பின்னல் இருந்து படத்தை இயக்குவது போன்ற வேலைகள் மூலம் பேர் பெற்றார்.ரஜினிக்கும் அப்படியொரு ஆசை வந்தது. வள்ளி என்ற படம் மூலம் அதை செய்து பார்த்தார்.தனக்கு அதெல்லாம் வராது என்று விட்டு விட்டார்.
    விக்ரம் ,சூர்யா போன்ற நடிகர்கள் உடல் தோற்றம் ,நடிப்பு போன்ற கமலின் சில விஷயங்களை மட்டும் செய்துவிட்டு அடித்த கமல் நாம்தான் என்று நினைத்தால் தவறு.கமலின் தனித்திறமை கதை அறிவு,இசை அறிவு,தொழில் நுட்ப அறிவு,இன்னும் பிற பல.இந்தியாவில் அவர் போல் திறமைகள் பெற்ற ஒருவரை காட்ட சொல்லுங்கள் கரன் பாப்போம்.

    ReplyDelete
  17. வெளி உலகிலும் நடிப்பது ரஜினி தான் .இதை பல உதாரணங்கள் சொல்லலாம்.சீன போடுவது,தான் மட்டுமே விழாவின் சிறப்பாக இருக்க நினைப்பது .இன்னும் பல.ரஜினியை பற்றி எழுத எவ்வளவோ இருக்கு.ஆனால் படிப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.ரஜினி எம்.கி.ஆர் ஆட்கள் மூலம் (நடிகை லதா விஷயத்தில் ) உதை பட்டு மெண்டல் என மருத்துவமனையில் சேர்க்க பட்டதை நன் என் பதிவில் எழுதியதையே பலர் நம்ப வில்லை.

    --

    ReplyDelete
  18. scenecreator
    //(நடிகை லதா விஷயத்தில் )//

    அதில் பாதிப்படைந்து "ராகவேந்திரரை" கும்பிட்டதால் தான், அவர் தெளிவடைந்தாக இன்றும் நம்புகிறார்.... அந்த "லதா" கிடைக்காததால், "லதா" என்ற பெயரில் இன்னொருவரை மணந்தார்.... அதன் பின்பு "அமலா" என்றொரு நடிகையுடன் இவர் போட்ட ஆட்டம் மீடியா தயவுடன் மறைக்கப்பட்ட உண்மை... சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் நயன்தாரா...ஒரே நாளில் சிம்புவிடமிருந்து பிரித்தார் இவர்...காரணம் அவர் மகள் என்று ஊருக்கே தெரியும்....

    இப்படி அவரை பற்றிய பல உண்மைகளை மீடியா மறைத்துள்ளதால் அது பற்றி தெரியவரும் போது அவர்களுக்கு நம்ப கஷ்டமா தான் இருக்கும்

    ReplyDelete
  19. சண்டியர்களிடம் ஏதாவது பேச முடியுமா? நான் மறுமொழி கொடுக்கும்போதே இதை எண்ணியிருக்க வேண்டும்.

    ReplyDelete
  20. "16 வயதினிலே யாருக்கு பேரு" ரஜனிக்கா? உங்க காமெடிக்கு அளவே இல்லையா Arul Selva Per அரசன்? எதையும் கதைக்கும் போது அர்த்தமுடன் கதைக்கவும். நீங்கள் ரஜனியுடைய சொம்பாக இருக்கலாம். அதற்காக இப்படி அர்த்தமற்று கதைப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது,

    ReplyDelete
  21. ரஜினியின் முகத்திரையை கிழிக்கும் ஒருவர்

    http://www.youtube.com/watch?v=jYl5fX4CEnY&feature=player_embedded

    ReplyDelete
  22. படித்ததில் பிடித்தது: (நன்றி - தமிழ் சுஜாதா)
    ரஜினி என்றால் பெண்களை உயர்வாக மதிப்பவர்’ என்ற கருத்து இருக்கிறதே, அவர் பெண்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராயத் தோன்றியது.
    ’பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்கறதை அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்கிறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது.’
    இந்த வசனத்தை ஏதோ ஒரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்குச் சொல்லியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ‘பொம்பள’ என்று பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறார். பொம்பளை – அரசியல்வாதி என்ன விதமான ஒப்பீடு என்றே தெரியவில்லை. நினைக்கிறதை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. முதலில் சொன்ன வரியை, அடுத்த வரியிலேயே காலி செய்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது போலிருக்கிறது!

    ReplyDelete
  23. @Arul Selva Per Arasan,

    argue panna mudialainu kalandukittu odureengale sir.. perusaa, analysis panni kilicha maathiri poi-yaa post panna vendiyathu ..

    @Sandiyar,

    nethi adi-nnu solluvaangale.. athu ithu thaan.. usually fans madly follow their hero.. this shows how good a fan you are in understanding the hero.. Pagutharivaalarai, pagutharinthaar Sandiyar !!

    ReplyDelete
  24. படித்ததில் பிடித்தது: (நன்றி - தமிழ் சுஜாதா)

    ரஜனியின் சில பொன்மொழிகள்
    ‘பொம்பளைங்க வீட்டு நிலமையை புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை.’
    ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.’

    ‘பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்.’
    கோழையாகச் செய்யும் எந்தச் செயலும் இங்கு ‘பொட்டை’ என்ற அடைமொழியில் கேவலப்படுத்தப்படுகிறது. பெண்களை அடிக்கிறவனைக் கண்டிக்கும் தொனியில், பெண்களையே கேவலப்படுத்தி ‘பொட்டை’யாக்கி விடுகிறார்.

    ‘பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.’
    ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.’
    மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல பஞ்ச் போலவே தோன்றும். ஆனால் இந்த வசனத்தை, தன் தம்பியால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் பேசுகிறார். சிறையில் இருக்கும் அவர் தம்பியைக் காப்பாற்றும் விதத்தில்…
    கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வைக்கும் அபூர்வ நீதியை சினிமா இன்னமும் பாதுகாக்கவே செய்கிறது.

    பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.’ - அஹா ஆஹா என்ன அற்புதமான வரிகள்

    ‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.’
    அப்படி என்றால் பொம்பளை அதிகமா ஆசைப்படலாம், ஆண்கள் அதிகமாகக் கோபப்படலாமா?

    ReplyDelete
  25. ரஜினி ஒரு காரியக்காரர், தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். எந்திரன் இந்தி பதிப்பு மும்பையில் ஒடவேண்டும் என்பதற்காக தமிழர்களை ஓடஓட விரட்டிய பால்தாக்ரேயை ”என் கடவுள்” போன்றவர் என்பார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பார். அதே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தைரியலட்சுமி என்பார்.ரஜினி போன்ற சினிமா வியாபாரிகளிடம் இருந்து நியாயமான பதில்களை எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete
  26. Sandiyar Karan Really you are great..... intha arulselva mathiri aalha irukura varaikum rajni mathiri mental (kariyakara mental) vanthute than irupange.... neengalam ramadoss pathu bayanthu oduna chinna payalha neengalam yen pesuringa... ipavum madurai vanthu parunga thoranai na kamal fans than .... kamal than.... neenga Thoranaiya oru padam nadichinga nu solunga papom ........... thoranai gura per lam comedy panrathuku than layuku....

    ReplyDelete
  27. ரஜினிக்கு mgr தான் சரி. மரத்தில் கட்டி விட்டு செருப்பால் அடிக்க

    ReplyDelete
  28. ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.

    அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும்.

    நன்றி - வினவு

    ReplyDelete
  29. படித்ததில் பிடித்தது

    Rajini is a person who changes his opinions or behaviour to please other people and earn more money. I have copied and modified some interesting comments made by some one here.
    1.Fighting with mother in law
    2.Fighting with father in law
    3.Fighting with wife
    4.Fighting with a girl who has one side love on this junk star.
    5.Fighting with friend
    6.In a single song, he ll become crorepathi from milk man.
    7.No different story in his movies.
    8.Needs ARRehman,shankar,vadivelu,vivek,teenage heroine.
    9.This junk grandfather needs teenage heroine to dance with.
    10.He gave one lakh as tsunami fund to TN govt. What a lumpsum amount. Later kamal gave 15lakhs. So this fellow raised the amount to 11Lakhs.
    11.He scolded kannadigas in the hoggenekal issue and told i ll not apologize. Now just because disgusting kuselan, he apologized. Does it mean he acted on the stage in TN Film association’s press meet?
    12.He is a pacca politician. He didnt do anything for tamilians and tamil cinema. He didnt achieve anything in cinema.
    The only achievement that he has done is cheating the whole tamil nadu people. Still some guys are saying “he is great”. I am not sure what rajini has done for these guys.
    Guys Please accept the truth. He is a junk selfish moron. He is a pacca selfish guy. Apart from salary, he ll take the distribution rights to get more money. What a worst strategy he is following just to make money.He has not done anything for tamilians. Money minded fellow.

    நன்றி - சுந்தர்

    ReplyDelete
  30. இந்த முட்டாள் ரஜினியின் பஞ்ச் டயலாக் என்னவென்றால் சிங்கம் சிங்கிளாக வரும் பன்றிதான் கூட்டமாக வரும். அந்த முட்டாளுக்கு தெரியாது சிங்கம் எப்போதும் கூட்டமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் மூன்று தொடக்கம் 30 வரையான சிங்கங்கள் இருக்கும். சிங்கம் எப்போதும் சிங்கிளாக இருக்காது.
    ஆனால் பன்றி கூட்டமாகவும் இருக்கும் சில வேளைகளில் தனியாகவும் உணவு தேடி போகும். அது சூழ்நிலையை பொருத்து

    ReplyDelete
  31. கமல்ஹாசனுக்கு நிகராக இனியொருவர் வருவது கடினம்.
    கமல்ஹாசனுக்கு நிகர் கமல்ஹாசன்தான்.

    ReplyDelete
  32. super..Sandiyar karan kalakitinga..

    ReplyDelete
  33. நன்றி Ethicalist E!!!

    ரஜினி பற்றிய மேலும் பல உண்மைகளை பகிர்ந்துகொண்டதற்கு...

    அப்படியே தொகுத்தால் புதிய பதிவே போட்டுவிடலாம்!!!

    ReplyDelete
  34. //Arul Selva Per arasan said...

    http://www.eegarai.net/t50798-topic //

    பாத்தீங்களா 1996 இல் வந்த இந்தியன் இதில் இடம் பெற்றுள்ளது ஆனால் 195 இல் வந்த பாட்சா இல்லை. பாட்சா வசூலை இந்தியன் முந்தியது என்பதுதான் நிஜம். பின்னர் 1999 இல் வெறும் 3 வருடம் கழித்து படையப்பா வந்தும் கேவலம் 5 கோடி தான் அதிகம் வசூல் செய்ய முடிந்தது படையப்பாவால்!

    ReplyDelete
  35. Super article sandiyare....@Arul Selva Per arasan, Sir MGRa massla rajini minjitarunu neenga solrathu ungaluke comedya theriyala... Maduraila Ramdossku karuppu kodi katunna 10 fansa(ithan massa) thoorathi thoorathi adichanga ramdoss katchi karanuga, ithanaikum ramdoss katchiyoda perukooda maduraila neraya pethuku theriyathu...adivangunavungala rajini pakka kooda illa , rasigan adi vangunallum parava illanuttu ramdoss kuda samathanama poitaru. Ithu thaan avaru rasigarkaluku thara mariyadhai...

    ReplyDelete
  36. Arul Selva perarasan என்னதான் தப்பா பேசிட்டாருனு இப்படி எல்லாரும் அவர வருத்தெடுக்கிறீங்கனு தெரியல.

    கமலோட பர்சனல் வாழ்க்கையப் பத்தி Arul selva எதுவும் சொல்லலையே. நீங்க ஏன் ரஜினி பர்சனல் வாழ்க்கையை விமர்சிக்கணும். எனக்குப் புரியல.

    Arul selva கமென்டில் கேட்டிருந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.

    கமல், அன்புள்ள ஒரு அப்பாவா நடிச்சிருக்காரா? நல்ல அண்ணனா நடிச்சிருக்காரா? கம்பீரமான போலீஸா நடிச்சிருக்காரா? (கைதியின் டைரில மீசைய மட்டும் முறுக்கிவிட்டுட்டா கம்பீரம்னு ஏத்துக்கணுமா?)

    அபூர்வ சகோதரர்கள் படத்துல கொஞ்சமே கொஞ்ச நேரம் போலீசாக வந்தாலும் கமல் பின்னியிருக்காருன்னா சொல்றீங்க?

    நம்ம கமலோட பிளஸ் எல்லாத்தையும் ஏத்துக்கிறேன். ஆனால் மைனச ஒருத்தர் சொல்றாருனா அதை ஆரோக்கியமா விவாதிக்க வேண்டாமா? கோபமெல்லாம் வேண்டாங்க? நடிப்புத்தானே. நம்ம ரசிகர்கள்தானே. பக்தர்கள் இல்லையே.

    ReplyDelete
  37. மக்கள் மனம்...
    //அன்புள்ள ஒரு அப்பாவா நடிச்சிருக்காரா//

    சிப்பிக்குள் முத்து - அப்பாவி அப்பா
    மகாநதி - மிடில்கிளாஸ் அப்பா
    அவ்வைசண்முகி - தன் குழந்தைக்காக பெண்வேடம் கூட போட்ட அப்பா

    //நல்ல அண்ணனா நடிச்சிருக்காரா//
    சத்யா - இரட்டை சகோதரிகளின் அண்ணன் ( இப்படத்தில் வரும் அண்ணன் தங்கை பாசக்காட்சிகளை, "பாட்சா" படத்திலும் யூஸ் பண்ணியிருப்பார் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா )
    சகலாகலா வல்லவன் - தங்கைக்காக தானே முக்கால் வாசி படமும்
    தூங்காதே தம்பி தூங்காதே - இரட்டை வேடம், ஆனால் தன் தம்பியை போதையின் பிடியில் இருந்து காப்பாற்ற ஆள் மாறாட்டம் செய்யும் அண்ணன்

    //கைதியின் டைரில மீசைய மட்டும் முறுக்கிவிட்டுட்டா கம்பீரம்னு ஏத்துக்கணுமா?)//

    போலீஸ்னா உடம்பு பிட்-ஆ இருக்கணும் ( சிவாஜி மாதிரி தொப்பையை கோட் போட்டு மறைக்காமல்) - அதுவும் தலைவர் கரெக்டா பண்ணியிருப்பார்....

    காக்கிசட்டை, சூரசம்ஹாரம், வெற்றிவிழா, குருதிப்புனல், வேட்டையாடு விளையாடு என்று பலதரப்பட்ட போலீஸாகவும் நிரூபித்திருக்கார்...

    வேட்டையாடு விளையாடு படத்தின் 100 நாள் விழாவில் கலந்துகொண்ட போலீஸ் உயர் அதிகாரியே (ஒரிஜினல்), போலீஸ்னா வே.வி. படத்தில் நடித்த கமல் மாதிரி தான் இருக்கனும் என்று வேறு சர்டிபிகேட் கொடுத்திருக்கார்....

    இதுக்கும் மேல் எதிர்பார்த்தால்...

    மீசையும் பிட் பாடியும் இல்லாத சிவாஜி அப்படி என்ன தான் கம்பீரத்தை காட்டினார் என்று கொஞ்சம் விளக்கவும்....

    ReplyDelete
  38. Enga Kamal make up podurathu kamalaa theriyama irukurathuku but rajini make up podurthu rajiniyaa theryirathukku

    ReplyDelete
  39. இல்லை போலிசின் அடையாளமே தொப்பை தானே. அதை சிம்பாலிக்காக காட்டத்தான் சிவாஜி தொப்பையுடன் நடித்தார்.

    ReplyDelete
  40. கிழட்டு தாத்தா சின்ன பொண்ணுடன் ஜோடி போட்டு நடிக்கணும்னா மேக்கப் போட்டுதானே ஆகணும்

    ReplyDelete
  41. ஒரு உண்மையான போலிசின் கம்பீரத்தை காட்டிய படம் வேட்டையாடு விளையாடு. இதற்கு கெளதமுக்கும் நன்றி சொல்ல வேண்டும்

    ReplyDelete
  42. கண்ணை உருட்டி உருட்டி நடிப்பதும், உறுக்கி உறுமி கதைப்பதும் தான் கம்பீரம் என்று சில கிணற்று தவளைகள் நினைக்கின்றன.

    ReplyDelete
  43. மர்லன் பிராண்டோ நடித்த காட்சி
    http://www.youtube.com/watch?v=7X9C55TkUP8&feature=ரேலடேத்
    இதே காட்சியில் நம்ம திலகம் நடித்திருந்தால்(அதை நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது)

    ReplyDelete
  44. எப்பா அதிசயமா ஒருத்தர் சப்போர்ட் பண்ணியிருக்காரே. தர்மம் இன்னும் சாகவில்லை போல் இருக்கிறது. ஆண்டவா! அந்த ஒருத்தருக்காக இன்னொரு ரிப்ளை கொடுக்கலாம்னு இருக்கேன். காப்பாத்துப்பா!

    @ சண்டியர் கரன். நீங்க சொன்னதுஎல்லாம் பாசமான அப்பாவும், அன்பான அண்ணனுமாக எனக்குத் தெரிந்ததில்லை. நான் அந்தப் படங்களிலே கண்டது எல்லாம் (அவ்வை சண்முகியைத் தவிர்த்து. அவ்வை சண்முகியில் நான் பார்த்ததெல்லாம் மனைவியில் பின்னால் சுத்தும் ஒரு கணவனையும். மாமனாரின் சாதி வெறியைக் கண்டிக்கும் ஒரு பெண்ணாகவும்தான் பார்த்தேன். அங்கே அன்பான அப்பா என் கண்களுக்குத் தெரியவில்லை.) சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் கமலேயன்றி குடும்ப பாசத்திற்குள் சிக்குண்டு கிடக்கும் சாதாரண இந்தியப் பிரஜையை அல்ல.

    கமல் எப்பவுமே மேதாவியா நடிப்பார் இல்லனா மனநலம் பாதித்தவரா நடிப்பார். அதுக்கு ஈடுகொடுக்க சமூக நீதி கதைகளே அவருக்கு செட் ஆகும். கண்டிப்பாக குடும்ப உறவுகளுக்கு பலம் கொடுக்கும் எந்த கேரக்டரும் அவரால் சிவாஜி அளவுக்கெல்லாம் செய்ய முடியாது என்பதை ஆணித் தரமான நம்புகிறேன்.

    A Wednesday படம் பார்த்துவிட்டு உன்னைப் போல் ஒருவன் பாருங்கள் அதில் தெரியும் உங்களுக்கு (தெரியுமா?) வித்தியாசம். நசுருதீன் ஷாவின் நடிப்பைப் பார்த்தால் சாதாரணமாக இருக்கும். அதுதான் படத்திற்குத் தேவையும் கூட. ஆனால் உன்னைப் போல் ஒருவனில் அதிமேதாவியாகத்தான் நடித்திருப்பார் கமல். ஒரு அப்பாவி இந்தியப் பிரஜையாக நடிக்கவில்லை. அந்தப் படத்தில் கமல்தான் தெரிந்தாரேயன்றி அந்த அப்பாவி பாத்திரம் கண் முன் தெரியவில்லை.

    குறிப்பு: நானும் கமல் ரசிகன்தான். ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் கிடையாது. அவர் எது செய்தாலும் சரி என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நான் இன்னும் முதிரவில்லை.

    ReplyDelete
  45. வேட்டையாடு விளையாடு, சமூகத்தைச் சீரழிக்கும் படம் என்றே நான் கருதுகிறேன். நான் அறிந்தவரை ஒரு ஹோமோ கேரக்டருக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்த படம் இதுவாகத்தான் இருக்கும். அதில் கமல் நடித்ததற்காக நான் மிகவும் வருந்தினேன். கௌதம் மேனன் மீது எனக்குக் கோபம்தான் வந்தது. அதன் பிறகு "நடுநிசி நாய்கள்" என்று ஒரு படம் எடுத்தார் பாருங்கள் கௌதம் வாசுதேவ் மேனன். அதுதான் சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் காட்டிய படங்களிலேயே உச்சம்.

    "நாயகன்" "அன்பே சிவம்", "ஹேராம்" "விருமாண்டி" போன்ற அற்புதமான படங்களையெல்லாம் பாத்துட்டு "வேட்டையாடு விளையாடு" போன்ற படங்களைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. பலர் அந்தப் படத்தைப் பாராட்டும்போதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  46. "நானும் கமல் ரசிகன்தான். ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் கிடையாது" நல்ல நகைச்சுவை. நீர் ஒரு இனத்துவ சாதி வெறியர் என்பது மட்டுமே உண்மை.

    ReplyDelete
  47. "சிவாஜி அளவுக்கெல்லாம் செய்ய முடியாது என்பதை ஆணித் தரமான நம்புகிறேன்" சிவாஜி நடித்த பாசமலரை பார்த்தால் புரியும் சிவாஜியின் சீத்துவ கேடு. அந்தகாலத்தில் அவரின் ஓவர் அக்டிங் ஒப்பாரி மக்களிடம் எடுபட்டிருக்கும். ஆனால் தற்போது அவரின் நடிப்பை பார்த்தல் தலை வலிதான் வரும்.

    ReplyDelete
  48. படித்ததில் பிடித்தது

    சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதைச் சரிகட்ட சிவாஜியும் – எம்.ஜி.ஆரும் 70 – களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

    இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்.

    ReplyDelete
  49. உலக நடிகர்ளின் கால் தூசுக்கு
    கூட ஆகாமாட்டார்.செயற்கைதனமான நடிப்புக்கு சொந்தகாரர் சிவாஜிகணேசன் மட்டுமே.

    ReplyDelete
  50. அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.

    மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

    தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.

    முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.

    ReplyDelete
  51. Arul Selva

    //நீங்க சொன்னதுஎல்லாம் பாசமான அப்பாவும், அன்பான அண்ணனுமாக எனக்குத் தெரிந்ததில்லை//

    இதையெல்லாம் சிவாஜி எந்த படத்தில் செய்தார் என்று கொஞ்சம் விளக்கவும்...

    ReplyDelete
  52. @ சண்டியர் கரன் : சார்! இதக்கூட விளக்குனுமா உங்களுக்கு. நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை உங்களை.

    @Ethicalist E உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  53. Arul Selva

    நான் கேட்டது சிவாஜி பாசமான அப்பாவும், அன்பான அண்ணனுமாக நடித்த படத்தை பற்றி....

    அப்படி ஏதும் இல்லையா?

    சொன்னால் தானே ஒப்பீடு செய்ய முடியும்....

    ReplyDelete
  54. கமென்டுகள் நீண்டு கொண்டே போகிறது. நாம் இதுவரை செய்த ஒப்பீடு போதும் என்று நினைக்கிறேன். இதைக்குறித்தே நினைத்துக்கொண்டிருக்க எனக்கு சங்கடமாக இருக்கிறது. மீண்டும் மறுமொழிகளை இட என்னைத் தூண்டியது என்னை வசைபாடிய மறுமொழிகளே. அவை என்னை நேற்றிறரவு தூங்கவிடவில்லை. Ethicalist E இன வெறியர், சாதி வெறியர் என்று வேறு சொல்லிவிட்டார். இன்றிரவு தூங்குவேனோ மாட்டேனோ தெரியவில்லை. தொடர்ச்சியாக இந்த வலைப்பூவிற்கு வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். முடியாது போலிருக்கிறது. எனினும் எனக்குப் பதில் தந்த அனைத்துப் பதிவர்களுக்கு என் நன்றிகள் பல.

    Sorry to everyone if at all i had lacerated them. Bye to everyone. I will have this debate ever in my mind.

    ReplyDelete
  55. We should give clarity about 2 more stars in this article. They are Vijay (who got Doctor from a University) and Silambarasan (who said he has crossed 25 years by the time the golden jubilee celebration happened for my Role Model in the year 2009).

    ReplyDelete
  56. நான் அருள் அவர்களை இன வெறியர் என்று குறிப்பிடவில்லை. மத, ஜாதி வெறியர் என்றே குறிப்பிட்டேன். இது நான் அவருடைய வலைதளத்தை பார்வையிட்ட பின் எனக்கு தோன்றிய எண்ணம். இங்கு நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் தோன்றியது அல்ல. வெறியர் என்பது சற்று அதிகமான காரமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் அவர் தீவிரமான ஜாதி, மத அபிமானி என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. (நான் கம்யூனிஸ்ட் இல்லை. அதேவேளை முதலாளித்துவ ஆதரவாளனும் அல்ல. ) நான் குறிப்பிட்ட வெறியர் என்ற சொல் அவரை பாத்திருக்கினறது. அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். விவாதத்திற்காக எவர் மனதையும் புண்படுத்துதல் நியாயமாகாது. மீண்டும் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

    ReplyDelete
  57. விருமாண்டிகரன் அவர்களே! கமலுக்கு நிகர் கமலே. பராசக்தி மனோகரா படங்களுக்கு வசனம் எழுதி பக்கத்திலயே இருந்து ரசித்த கலைஞரே அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு ஆச்சரியத்தில் எழுதிய கடிதம் கலைத்திறனே உன் பெயர்தான் கமல்ஹாசனோ! வின்னுக்கு கலாம் ஞானி என்றால் கலைக்கு கமல் ஞானி(கலைஞானி). நடிகர்திலகம் நடித்துக்கொண்டிருக்கும் போதே இந்தியாவின் சிறந்தநடிகர் கமல்ஹாசன்(பாரத்).பெருந்தன்மை என்று பேசுபவர்கள் இதை புரிந்தாலே போதும்.மம்மூட்டி நல்ல நடிகர்தான் நாட்டியகலைஞனாக வரமுடியமா? அர்னால்டு ஆக்ஷ்ன் ஹீரோ தான் ஆனால் அவ்வை சன்முகியாக மாறவேமுடியாது.ஆக கமல் ஒரு தனித்துவம்.இது தனி மனித புகழ்ச்சி அல்ல புரிந்துணர்தல்.பகுத்தறிவாளனால் மட்டுமே கலைத்திறனை(kamal hassan)புரிய முடியும்.

    கமலுக்கு நிகர் கமல்ஹாசர் மட்டுமே!


















    ReplyDelete
  58. நூறு./. நான் சொல்லவேன் கமல் சிவாஜியையே மிஞ்சிட்டாரு,

    ReplyDelete
  59. கமல் சிறந்த நடிகர் என்பது உண்மை எல்லோருக்கும் தெரியும் ஆனால் ந‌ல்ல ம‌னிதர் என்று அதிகமாக பலபேர்க்கு தெரியாவில்லை ஏன்? ஒரு வேலை நெஜவாழ்க்கையில்லும் சிறப்பு நடித்தால்தான் அந்த பலபேர்க்கு தெரியும்மா...? கமல் சிறந்த நடிகர் என்பது உண்மை எல்லோருக்கும் தெரியும் ஆனால் ந‌ல்ல ம‌னிதர் மா.....?என்று அதிகமாக பலபேர்க்கு தெரியாவில்லை ஏன்? ஒரு வேலை நெஜவாழ்க்கையில்லும் சிறப்பு நடித்தால்தான் அந்த பலபேர்க்கு தெரியும்
    அவரை எவ்வளவு பேரு அவரை குறை சொன்னாலும் அவருடை வளர்ச்சிய யாராலும் தடுக்க முடியாது மேலும் மேலும் உயர்ந்து அவருடை ரசிகர்களையும் உயரத்திற்கு கொண்டு சொல்வார்,

    ReplyDelete