Ads 468x60px

Wednesday, September 23, 2015

ரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்? - ஓர் அலசல்

 இந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல்!!!

 லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட.

பழைய விநியோகிஸ்தர்கள் எல்லாம் சும்மா இருக்கும் போது, மீடியாவில் சொல்லப்பட்ட ரஜினி பட வசூல் கட்டுக்கதைகளை நம்பி சம்பாதிக்கலாம் என்று  லிங்காவை வாங்கினார் சிங்காரவேலன் . ஆனால் இதுவும் ஒரு வகையான் ஈமு கோழி மோசடி தான் என்பதை படம் ரிலீஸ் ஆன பின், முதல் காட்சி கூட ஹவுஸ்புல் ஆகாத போது உணர்ந்தார்.

சிங்காரவேலனை மற்ற விநியோகிஸ்தர்கள் கண்டிப்பாக பாரட்ட வேண்டும். ஏனென்றால், தான் அடைந்த மாபெரும் நஷ்டத்தை கண்டு கலங்காமல், இனி வேறோருவர் இது போன்று நஷ்டத்தை அடையக்கூடாது என்று தைரியமாக மீடியாக்கள் மூலமாக ரஜினி பட வசூல் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கினார்.

ரஜினி தான் இந்த உலகத்திலேயே வள்ளல் என்று ரஜினி ரசிகர்கள் சொல்வது உண்மையானால், லிங்காவின் மாபெரும் நஷ்டத்தை, விநியோகிஸ்தர்கள் கேட்கும் முன்னே கொடுத்திருக்க வேண்டும். அவரோ விநியோகிஸ்தர்கள் உண்ணாவிரதம், பிச்சை போராட்டங்கள் என நடத்தி பல மாதங்கள் கழித்து 12 கோடி ( 35 கோடி நஷ்டத்திற்கு ) தருவதாக கூறி போரட்டத்தை கைவிடும் படி கெஞ்சினார்.

விநியோகிஸ்தர்கள் அதை ஏற்று போராட்டங்களை கைவிட்டாலும், அந்த 12 கோடி கூட முழுமையாக விநியோகிஸ்தர்களிடம் வந்து சேர வில்லை. 6 கோடி தான் சேர்ந்திருக்கிறது. மீதி 6 கோடி எங்கே என்பதை ரஜினியே இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி படங்களின் தோல்வி தயாரிப்பு நிறுவனங்களை / விநியோகிஸ்தர்களை இல்லாமல் ஆக்கி விடும் (உதாரணங்கள் : "தாய்வீடு" தேவர் பிலிம்ஸ், "மாவீரனை" வெளியிட்ட நடிகை ஜெயப்பிரதா, "BLOODSTONE"-ஐ வெளியிட்ட T.ராஜேந்தர், "நாட்டுக்கு ஒரு நல்லவன்" வீராசாமி, "குசேலனை" வெளியிட்ட பிரமிடு சாய்மீரா ), அதுமட்டுமா அந்த பட இயக்குநர்களை வீட்டுக்கே அனுப்பி விடும்   (உதாரணங்கள் : "பாபா" சுரேஷ் கிருஷ்ணா, "குசேலன்"  P வாசு, "லிங்கா" KS ரவிக்குமார்).

ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு தூக்கி எறியப்பட்ட லிங்காவை, சென்னை ஆல்பட் தியேட்டரில் 3 மாதம் கழித்து 1 காட்சி திரையிட்டு 100 வது நாள் கொண்டாடி, ரஜினி தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டார்.

ரஜினி ரசிகர்களும் அவரை மேலும் அசிங்கப்படுத்தினர், லிங்காவிற்கு 100 வது நாள் ஷீல்டை ஆல்பட் தியேட்டரில்  வைத்து!!!

மக்கள் அனைவருக்கும் தெரிந்த மகா தோல்வி லிங்காவுக்கே 100 நாள் ஷீல்டு ரஜினி ரசிகர்கள் தியேட்டரில் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த கால அட்டர் பிளாப்களை எப்படியெல்லாம் மறைத்திருப்பார்கள். தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள ரஜினி படத்தின் பல ஷீல்டுகள், அடுத்த தலைமுறையிடம் ரஜினி படங்களின் தோல்வியை மறைக்க வைக்கப்பட்டவையே என்பது இதிலிருந்து உங்களுக்கு புரிகிறதா?

இவர்களின் நிலைமை இப்படியிருக்க, கமல் ரசிகர்கள் பக்குவப்பட வேண்டும் என்று கட்டுரை எழுதினால், ரஜினி ரசிகர்களுக்கு பைத்தியம் இந்த ஜென்மத்தில் தெளியப் போவதில்லை என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.


4 comments:

  1. இவர்களுக்கு இந்த பைத்தியம் தெளியவே தெளியாது, 25 வருஷம் தமிழ்நாட்டில் இருந்து சம்பாதித்து கொண்டு இன்னும் தமிழை சரியா உச்சரிக்க கூட முடியாத/முயலாத இவரை எல்லாம் நடிகன் என்று சொல்வதே தவறு...

    ReplyDelete
  2. Nethiadi...sandiyarey..pitham theligiradha paarpom

    ReplyDelete