Ads 468x60px

Tuesday, April 15, 2014

டயலாக் தான் ரஜினி.... ACTION கமல் தான்!!!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பதை இந்த கட்டுரையை படிப்பவர்கள் அனைவரும் முடிவில் ஏற்றுக் கொள்வீர்கள்.

                                                                                                               நன்றி : தினமணி

பாட்ஷா படத்தில் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னா மாதிரி என்று டயலாக் விடுவார். அந்த டயலாக்கின் அர்த்தம், ஒரு விஷயத்தை பற்றி ஒரு தடவை சொல்ற கருத்தை தான் எப்பவும் சொல்வேன் என்று அர்த்தம், அடுத்த நாள் மாற்றி சொல்வேன் என்று அர்த்தம் அல்ல.1996-ல் ஜெ. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பற்ற முடியாது என்றார், பின் அடுத்த ஜெ. ஆட்சியில் அவரையே தைரிய லட்சுமி என்றார், இன்று மேடையிலேயே புரட்சி தலைவி, அம்மா என்று கட்சிகாரர்களை போல பம்முகிறார்.

ஒக்கேனக்கல் பிரச்சினையில் முதலில் "அடிப்பேன் உதேப்பேன்" என்று சீன் போட்டார், பின்பு குசேலனை பெங்களூரில் ரிலீஸ் செய்ய, நான் அப்படி சொல்லவில்லை என்று மன்னிப்பு வேற கேட்டார்.

மாறாக, கமல் 80 களிலேயே எம்ஜியாரால் அரசியலுக்கு அழைக்கப்பட்டார். அன்று அவரிடம் "அரசியலுக்கு வர விருப்பமில்லை" என்று தன் கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், இன்றும் அதே கருத்தில் நிலையாய் இருக்கிறார். 

"சிவாஜி" என்ற படத்தில் சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று, ரஜினி இப்படத்திற்கு முன் வெளிவந்த அர்ஜூனின் பட டயலாக்கை பேசியிருப்பார்.

ரஜினியின் படங்கள் அந்தந்த கால பாப்புலர் ஹீரோயின், டைரக்டர், மியூசிக் டைரக்டர், காமெடியன்கள் இல்லாமல் வெளிவந்தது கிடையாது. இதுக்கு பேர் தான் சிங்கிளா வருவதா? அப்படியே பாப்புலர்கள் கூட்டமாக வந்தாலும் தியேட்டர்காரர்களும் விநியோகிஸ்தர்களும் ரஜினி படத்தில் போட்ட பணத்தில் பாதியை கூட திரும்ப எடுப்பதில்லை.

கமல் படங்களிலோ பாப்புலர் காமெடியன்கள் அல்லது பாப்புலர் ஹீரோயின் அல்லது பாப்புலர் டைரக்டர் அல்லது பாப்புலர் மியூசிக் டைரக்டர் என்று யாரேனும் ஒருவரை வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் அத்தனை பாப்புலர்களையும் ஒட்டு மொத்தமாக பார்ப்பது அரிதிலும் அரிது.

தசாவதாரத்தில் பத்து வேடங்களில் நடித்தது மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தென்னிந்தியா அறியாத ஹிம்மேஷை இசையமைப்பாளராக்கி, பாப்புலர் காமெடியன்கள் இல்லாமல், தொழில்நுட்ப அறிவு கமல் அளவில் 1% கூட இல்லாதவரை இயக்க வைத்து, அப்படத்தை தென்னிந்தியாவின் உச்ச வெற்றியாக இன்றும் இருக்க வைத்த கமல்ஹாசனை "ONE MAN ARMY" என்று கூறுவது கூட குறைந்த பட்ச பாராட்டு தான்... விஸ்வரூபத்தில் இன்னும் பல படிகள் மேலே சென்று, தானே இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தான் மட்டுமே உலக சினிமாவின் ஒன் மேன் ஆர்மி என்று நிரூபித்து விட்டார்.

படையப்பா படத்தில் என் வழி தன் வழி என்று கூறுவார் ரஜினி. தன்னுடைய சொந்த பள்ளியிலே ஒரு ஏழை மாணவனுக்காவது இலவச கல்வி கொடுத்திருக்கிறாரா? அவரின் ரசிகர்களுக்கு தன் மகள் கல்யாணத்திற்கு பிரியாணி பொடுவேன் என்று சொல்லி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது (இவரே பிரியாணி அரிசியை உருவாக்குகிறார் போல). இது தான் அவருடைய தனி வழி போல?

கமல் தனக்கு எத்தனை இடர்கள் வந்தாலும் நேர்மையான வழியில் தான் எதிர்கொள்வார். கருப்பு பணம் சேர்க்க மாட்டார். விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடிப்பார் அதுவும் சம்பளம் பெறாமல். அண்மையில் கூட 2014 பாரளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் இலவசமாக நடித்துள்ளார். அப்படின்னா கமல் வழி தானே தனி வழி!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் சுத்தமா இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பது புரிந்திருக்குமே...

Friday, April 11, 2014

கமல்ஹாசனின் ஓட்டு யாருக்கு?

இந்த கேள்வி, "மய்யம்" 1989 டிசம்பர் மாத இதழில் உலகநாயகனிடம் கேட்கப்பட்டுள்ளது.

கேள்வி : சார், உங்கள் ஓட்டு யாருக்கு?

உலகநாயகன் : இருப்பதில் தேவலாம் என்பவருக்கு...

மற்ற கேள்வி பதில்களுக்கு கீழேயுள்ள படங்களை கிளிக் செய்க..


Tuesday, April 8, 2014

வெற்றிவிழா ரி-ரிலீஸ் மதுரையில்

எம்ஜியாரின் பலபடங்களுக்கும் சிவாஜியின் சிலபடங்களுக்கும் இருக்கும் ரிரிலீஸ் மவுசு, கமல்ஹாசனின் எல்லாப் படங்களுக்கும் உண்டு என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் மதுரை கமல் ரசிகர்கள்.

மதுரை சென்ட்ரல் தியேட்டர் வெற்றிவிழா ரி-ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு மதுரை கொம்பமுத்து, சென்னை கமல்வாதிகளை அழைத்திருந்தார்.


 
சென்னையிலிருந்து பாரடைஸ்யூனிட் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த 8 கமல் பக்தர்கள் 5-எப்ரல் சனிக்கிழமை இரவு ஆம்னி காரில் கிளம்பினோம்.


இந்த திருவிழாவை ஏற்பாடு செய்திருந்த "கமல் அன்பன்" கொம்பமுத்து அவர்களுக்கு முதலில் சென்னை கமல்வாதிகள் சார்பாக என் நன்றிகள்.

கமல்ஹாசனின் வெற்றிவிழா முதல் வெளியீடு செய்த சாதனைகள் முதலில் உங்கள் பார்வைக்கு...ரிரிலீஸ் வெற்றிவிழாவிற்கு மதுரை கமல் பக்தர்கள் பல பேனர்கள் மற்றும்
25 க்கும்  மேற்பட்ட போஸ்டர்கள் என மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கிலியை உண்டாக்கியுள்ளனர்.

ஏற்பாடு செய்திருந்த "பேண்டு வாத்தியங்கள்" தேர்தல் நேரத்தினால் கேன்சல் செய்யப்பட்டது எங்கள் செவிகளுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியை தடுத்துவிடுமே என்று தவித்த எங்களுக்கு, மதுரை கமல் பக்தர்களின் "ஆழ்வார்பேட்டை ஆண்டவா....கடவுளே எங்கள் கமலே...தெய்வமே..." போன்ற அர்ச்சனை வாசகங்களை தெளிவாக செவிகள் குளிர கேட்டு மகிழ வழி செய்தது.

முதலில் மதுரை சென்ட்ரல் தியேட்டரின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசர் பேனருக்கு பூமாலைகள் பல சூடப்பட்டது.


அடுத்து கமல்ஹாசருக்கு பல குடங்களில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.அடுத்து கமல்ஹாசருக்கு மஞ்சள் அபிபிஷேகம் செய்யப்பட்டது.அடுத்து கமல்ஹாசருக்கு சூடம்காட்டி தேங்காய்கள் உடைக்கப்பட்டது.


இந்த பூஜைகளின் போது ஏற்பட்ட சாலை நெருக்கடிகளை ஒழுங்கு செய்ய போலீசார்கள் குவிக்கப்பட்டனர், அவர்களுக்கு மதுரை & சென்னை கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவையெல்லாம் தியேட்டருக்கு வெளியே செய்யப்பட்ட கொண்டாட்டங்கள். இவையனைத்தையும் படம் பிடித்து கொண்டிருந்ததால், உலகநாயகனின் அறிமுக காட்சி கொண்டாட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. அது கொஞசம் வருத்தமே எனக்கு.

"மாறுகோ மாறுகோ" பாடலில் தலைவரின் ஆட்டத்தின் போது, மதுரை கமல் பக்தர்கள் வெளிப்படுத்திய பரவசத்தை கீழிருக்கும் வீடியோவில் பாருங்கள். 100க்கும் மேற்பட்ட கமல் பக்தர்களின் ஒரே சீரான விசில் சத்தங்களின் வலிமையை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்இந்த திருவிழாவை ஏற்பாடு செய்த மதுரை "பரமக்குடியாரின் பயமறியா பாசக்கார பயலுக" கொம்பமுத்து குழுவினர் இங்கே...

இந்த திருவிழாவிற்கு சென்னையிலிருந்து சென்ற சென்னை கமல்வாதிகள் மதுரை கமல் பக்தர்களுடன் இங்கே...


திருவிழாவை சிறப்பித்த அனைத்து கமல் பக்தர்களும் இங்கே...


பூமாலைகள், பால் & மஞ்சள் அபிஷேகங்கள் இங்கே...