Ads 468x60px

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, November 3, 2014

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன்

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் முதல் கலைஞன் நம் உலகநாயகன் கமல்ஹாசன். தின இதழ் நாளிதழில் வெளியான அவரின் பேட்டி:

"தமிழக மீனவர்கள் தூக்கிலிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது... எல்லை தாண்டி வந்ததற்காக அவர்கள் தூக்கிலிடப்பட இருந்தால் அதை விட கொடிய குற்றத்தை செய்தவர்கள் அங்கே இருக்கிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?"

Kamal Haasan is the first actor who supports Tamil Fishermen. He told in his recent interview to "Thina Idhazh" Tamil Daily that : "Capital punishment to Tamil fishermen is unacceptable, if they are punished only for the border crossing, what kind of punishment can be given for them who did carnage there?"

Wednesday, July 2, 2014

காவிரிமைந்தனுக்கு வைகைமைந்தன் சண்டியர்கரனின் பதில்கள்

http://vimarisanam.wordpress.com -ல் காவிரிமைந்தன் என்பவர் பல கேள்விகளை கமல்ஹாசனிடம் கேட்கிறார். இவர் வகுப்பறையில் வாத்தியாரிடம் கேள்விகள் கேட்டிருக்க மாட்டார், வலையில் யாரிடமும் தைரியமாக கேட்கலாம் என்று கமல்ஹாசனிடம் நிறைய கேட்டிருக்கிறார்.

உங்களுக்கு பதில் சொல்ல கமல்ஹாசன் தேவையில்லை...நானே போதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.



காவிரிமைந்தனின் கேள்வி:


சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை……..
நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை.
இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்
தான் சொல்கிறேன். ’’ என்று பேசினார்…..
(முதல் வார்த்தையைச் சொல்லி விட்டு, எப்படிப் புரிந்து
கொள்ளப்படுமோ என்று பயந்து போய், “இந்த அரசை மட்டும்
சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து
அரசாங்கத்தையும் தான் சொல்கிறேன்” என்கிறார்.
இந்தியாவில் இருப்பது 15 அரசாங்கம் அல்ல -
29 மாநில அரசுகள், யூனியன் ஆட்சிப் பிரதேசங்கள்,
மற்றும் மத்திய அரசு என்பது கமலுக்குத் தெரியாதா என்ன ?
சொன்ன பிறகு ஏற்பட்ட பதட்டம் – 15 அரசு என்று சொல்கிறார்…)

எனது பதில் :

கமல்ஹாசன் குறிப்பிடுவது 15 மாநிலங்களை அல்ல.. 29 மாநிலங்களை ஆளும் 15 கட்சிகளை. விவரம் அறிய கிளிக் செய்க
 http://www.mapsofindia.com/maps/india/states-political-parties.html

காவிரிமைந்தனின் கேள்வி:

சினிமாத் துறைக்கு இதைவிட அதிகமாக அரசாங்கம்
என்ன செய்ய வேண்டும்….? ஏன் -எதற்காக செய்ய வேண்டும் ..?
 
எனது பதில் :   

கமல்ஹாசன் அரசாங்கங்களிடமிருந்து சினிமாவிற்கு கேட்பது லட்சங்களை அல்ல. முறையாக சென்சார் செய்யப்பட்ட பிறகும் ரிலீஸ் நேரத்தில் கட்டப் பஞ்சாயத்துகாரர்கள் செய்யும் சென்சாராரிடம் இருந்து சினிமாவை காக்க சொல்கிறார்.திருட்டு வீடியோ, திருட்டு CD ஆகி இன்று திருட்டு DVD ஆகி விட்டது, அந்த திருட்டு தொழிலை முற்றிலும் முடக்க  நடவடிக்கை எடுக்க கேட்கிறார்.

காவிரிமைந்தனின் கேள்வி:

மற்ற துறைகளை விட சினிமாத்துறை எந்த விதத்தில் சிறந்தது ?
எந்த விதத்தில் அது விசேஷ உதவிக்கு தகுதியான்து ?

எனது பதில் :

யாராகினும் தான் சார்ந்த துறைக்கு தான் அரசாங்கத்திடம் உதவி கோருவார்கள், சினிமாவிற்காக கேட்காமல் வாகன துறைக்காகவா கேட்க சொல்கிறீர்கள்?

காவிரிமைந்தனின் கேள்வி:

 இன்றைக்கும் கூட, நவீன வசதிகள் எதுவும் இல்லாத
குக்கிராமங்களில், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு,
இரவு பகல் எப்போதாக இருந்தாலும் சளைக்காமல், அலுக்காமல்
பிரசவம் பார்க்கிறாரே ஒரு மருத்துவச்சி -அவரை விட,
- ரணம் புழுத்து நெளியும் இறுதிகட்ட நோயாளிகளுக்கு,
கேன்சர் ஆஸ்பத்திரியில், முகம் சுளிக்காமல், புண்ணைத் துடைத்து,
பணி புரிகிறாரே – அந்த செவிலியரை விட,
- கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரும் – கண் மூடாமல்,
துப்பாக்கியைக் கையில் பிடித்துக்கொண்டே காஷ்மீர் எல்லையில்
பணியில் ஈடுபட்டிருக்கிறாரே – அந்த ராணுவ வீரரை விட -
உங்களைப் போன்ற சினிமா நடிகர்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன
சேவை செய்து கிழித்து விட்டீர்கள் – ஸ்பெஷலாக கவனிக்க …?


எனது பதில் :

கஷ்டப்பட்டு மிகப்பெரிய வீர வசனம் எழுதிருக்கீங்க...ஆனா கேள்வியை தான் சரியா புரிஞ்சிக்காம எழுதிருக்கீங்க...அவர் சினிமா நடிகர்களுக்கு கேட்க வில்லை....சினிமா துறைக்கு தான் கேட்கிறார்.


காவிரிமைந்தனின் கேள்வி:

பெரும்பாலான சினிமாக்கள் சமூகத்தின் நலனில் சிறிதும்
அக்கரையின்றி தான் எடுக்கப்படுகின்றன…. 2 மணி நேர படத்தில்,
ஒன்றரை மணி நேரம் ஹீரோவும், அவனது நண்பர் கூட்டமும்

சாராயக்கடையில் கூத்தடிப்பதாகத் தான் இன்றைய தினம்

படங்கள் வருகின்றன. நாலு சண்டை, அரைகுறை ஆடைகளோடு

கூச்சலுடன் கன்னா பின்னாவென்று இரண்டு குத்துப்பாட்டு,

சாராயக்கடை அசிங்கங்கள் – இவற்றை கலை என்று சொல்லி

அவர்கள் காசு சம்பாதிக்க – அரசு உதவி வேறு வேண்டுமா …?


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில்
பிழைப்பு நடத்தும் நீங்கள் என்றைக்காவது தமிழ்த் திரைப்படங்களின்
இத்தகைய போக்கை கண்டித்திருக்கிறீர்களா ?
அரசைக் குறைகூறத் தெரிந்த உங்களுக்கு இன்றைய
திரைப்படங்களின் அவலமான போக்கை கண்டிக்க ஏன்
தோன்றவில்லை ? 


எனது பதில் :

கமல்ஹாசனும் இதை தான் கேட்கிறார் மக்களை. கெட்ட சினிமாக்களை புறக்கணியுங்கள் என்று. அப்பொழுது தான் நல்ல சினிமாக்கள் மட்டுமே உருவாகும் என்று.

காவிரிமைந்தனின் கேள்வி:
 
இன்று நீங்கள் கலந்து கொண்டிருக்கும் விழாவில்,
படத்தின் பெயர் என்ன …? (வாலிப ராஜா…..!)
அந்தப்படம் சமூகத்திற்கு தரப்போகும் செய்தி என்ன ….?
செய்யப்போகும் சேவை என்ன ….?
என்ன…? என்ன….?

எனது பதில் :
 
இளைய தலைமுறைய ஊக்குவிக்கத் தான் நான் அங்கு வந்திருக்கிறேன் என்று மேடையில் கூறினாரே கவனிக்க வில்லையா?

காவிரிமைந்தனின் கேள்வி:

உங்கள் படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் -
பாப்கார்ன் என்ன விலைக்கு விற்கப்படுகிறது தெரியுமா …?

கோக்…? மற்ற குளிர்பானங்கள் …? காப்பி/தேநீர் ….?

ஏன் வெறும் தண்ணீர் பாட்டில் என்ன விலை தெரியுமா …?


எனது பதில் :

திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்கவேண்டிய நியாமான கேள்வி. நீங்க கூட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே... வெற்றி பெற்றால் தமிழக சினிமா ரசிகர்கள் எல்லாரும் உங்களை கொண்டாடுவார்கள்.


காவிரிமைந்தனின் கேள்வி:

உங்கள் புதிய திரைப்படத்தை வெளியிடும் முன்னர் ஒவ்வொரு
முறையும் எதாவது பிரச்சினையையும் பரபரப்பையும் கிளப்பி இலவச
ஆதாயம்-விளம்பரம் பெறும் நீங்கள் விஸ்வரூபம் – 2ஆம் பகுதியை
முடித்து 7 மாதங்களாகியும் இன்னும் வெளியிடாமல்

வைத்திருப்பதன் காரணமென்ன …?

“தகுந்த சூழ்நிலை”
இன்னும் உருவாகவில்லையா அல்லது
உருவாக்க திட்டம் இன்னும் தயாராகவில்லையா ….?


எனது பதில் :

தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கமல்ஹாசனை சீண்டினால் நமக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று மற்றவர்கள் கமல்ஹாசனிடம் பிரச்சினை செய்கிறார்கள்.

காவிரிமைந்தனின் கேள்வி:

இவ்வளவு அனுபவமும், திரைப்படத்துறையில்
விஷய ஞானமும் உள்ள நீங்கள் – ஆண்டுக்கு இரண்டு,
நல்ல தரமான, குறைந்த பட்ஜெட் படங்களை

எடுத்து வெளியிட்டால் என்ன ? எது தடுக்கிறது ?

ஏன் – உங்கள் எல்லா படங்களிலுமே நீங்கள் தான் நாயகனாக
நடிக்க வேண்டுமா..?


எனது பதில் :

தரத்தினை எதிர்பார்த்தால் விலை அதிகம் தான் கொடுக்க வேண்டும். இருப்பினும் உன்னை போல் ஒருவன் சின்ன பட்ஜெட் ரீமேக் செய்தார். அடுத்து "திரிஷ்யம்" ரீமேக் செய்கிறார். சின்ன பட்ஜெட் என்றாலும் பெரிய பட்ஜெட் என்றாலும் கமல்ஹாசனால் மட்டுமே அதை ஹிட்டாக்க  முடியும். இன்றும் 30 வயது தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன் ஹீரோவாக நடிப்பதில் அவ்வளவு வயிற்றெரிச்சலா?


காவிரிமைந்தனின் கேள்வி:

வெளியில், பொது நிகழ்ச்சிகளில் இளையராஜாவை இவ்வளவு
சிலாகித்துப் பேசும் நீங்கள் – உங்கள் படங்களில் அவரைப்

பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் …? உங்கள் படத்தின் “தரத்”திற்கு

அவர் பொருத்தமற்றவர் என்பதாலா ….?


எனது பதில் :

ரஜினி போன்ற நன்றி மறந்தவர்கள் இளையராஜாவின் நிழலில் இருந்து ஒதுங்கிய பிறகும், கமல்ஹாசன் மட்டுமே 2005 மும்பை எக்ஸ்பிரஸ் வரை தன் படங்களில் இசையமைக்க வைத்தார். சென்ற வருடம் கூட இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சிக்கு சென்று மேடையேறி பாடி விட்டு வந்தவர் உலகநாயகன் என்பதை வேண்டுமென்றே மறந்து விட்டீர்கள்.

காவிரிமைந்தனின் கேள்வி:

அண்மையில் நீங்கள் ஒரு விளம்பரத்தில் சொல்லி
இருந்தீர்கள். “நான் உரிய நேரத்தில், ஒழுங்காக வரி கட்டுகிறேன்.
மக்கள் அனைவரும் ஒழுங்காக வருமான வரி கட்ட
வேண்டும். நான் ஒரு பைசா கூட வரி பாக்கி வைக்கவில்லை
என்பதில் பெருமை கொள்கிறேன்”.
ரொம்ப சந்தோஷம். ஆனால் இதே போல் கொஞ்சம்
வெளிப்படையாக கடந்த ஆண்டு உங்களுக்கு வந்த வருமானம்
எவ்வளவு….? கட்டிய வருமான வரி எவ்வளவு ?
ஒரு படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் ..? -
போன்ற விவரங்களையும் சொல்ல முடியுமா ….?
நாங்கள் எல்லாம் சொல்கிறோமே எங்கள் வருமானத்தை
வெளிப்படையாக…! நீங்கள் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள் ..?


எனது பதில் :

பொருளாதாரம் படித்தவர் கேட்ட கேள்விகளிலேயே உச்சத்திலிருக்கும் மட்டமான கேள்வி இது தான். ஒருவர் இந்தியாவில் தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை வருமான வரி அலுவலகத்தில் குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்குரிய வரியை செலுத்தினால் போதும். வருபவர் போறவருக்கெல்லாம் சொல்ல வெண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படி கமல்ஹாசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருக்கிறார் என்ற ஆதாரம் உங்களிடம் இருந்தால், வருமான வரி அலுவலகத்தில் புகார் அளித்தால் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

காவிரிமைந்தனின் கேள்வி:

ஆமாம் – இரவு பகலாக கண்விழித்து பணிபுரியும்
மருத்துவர்களை விட, விஞ்ஞானிகளை விட, ராணுவ வீரர்களை
விட, ஸ்விட்சர்லாந்திலும், நியூசிலாந்திலும், இள வயது
ஹீரோயின்களை கட்டிப்பிடுத்துக் கொண்டு டூயட் பாடும் உங்கள்
உழைப்பு எந்த விதத்தில் உயர்ந்தது ?
எந்த விதத்தில் கடுமையானது …?

எனது பதில் : 

தங்களுக்கு கல்யாணம் (50 வயதுக்கு மேல் ஆகியும்) ஆகவில்லை என்றால், பெற்றோரிடம் தங்கள் நிலைமையை எடுத்து கூறி கல்யாணம் செய்து வைக்க சொல்லவும். ஒருவேளை கல்யாணம ஆகியிருந்தால் உங்களுக்கு வந்திருக்கும் இந்த வியாதிக்கு நித்தியிடம் மருந்திருக்கிறாதா என்று விசாரிக்கவும். 

காவிரிமைந்தனின் கேள்வி:

இத்தனை ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களிடமிருந்து
இவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்களே … உங்களுக்கு
இத்தனை பணத்தையும், புகழையும் கொடுத்த இந்த மக்களுக்கு
நீங்கள் திரும்பக் கொடுத்திருப்பது என்ன …..?

எனது பதில் :  

அதான் ஒழுங்கா வரி கட்டுகிறார்ல... மக்களுக்கு தேவையானதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும். இருப்பினும், அவர் "பெற்றால் தான் பிள்ளையா" என்று எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான டிரஸ்ட் நடத்தி வருகிறார், தன் ரசிகர்களை இரத்த தானம், உறுப்பு தானம், உடல் தானம் செய்ய வைத்தது மட்டுமின்றி, முன்னுதாரணமாக முதலில் அவரே செய்திருக்கிறார், பல விழிப்புணர்வு விளம்பரங்களில் இலவசமாக நடித்துள்ளார்.

Sunday, June 1, 2014

இந்தியா முழுவதும் ஹிட்டான படங்கள்!!!

இந்தியா முழுவதும் ஹிட்டான படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் ஒரு சில நடிகர்களுக்கு அது ஒன்று மட்டுமே இருக்கும். ஆனால் உலகநாயகனுக்கு மட்டுமே எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த எண்ணிக்கைகுரிய தகுதி என்னவென்றால், அந்தப்படம் எடுக்கப்பட்ட மொழியிலேயோ அல்லது டப்பிங் செய்யப்பட்டோ ஹிட் ஆகியிருக்க வேண்டும். ( எனவே தான் "அவ்வை சண்முகி" யை இந்தியா முழுவதும் ஹிட்டான படங்களில் சேர்க்க வில்லை, அது "CHACHI 420" என ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தான் ஹிட் ஆனது. )

1. Ek Duje Ke Liye
2.பேசும் படம்
3.அபூர்வ சகோதரர்கள்
4.இந்தியன்
5.விஸ்வரூபம்


தென்னிந்தியா முழுவதும் ஹிட்டான படங்கள் கூட, கமல்ஹாசனுக்கு மட்டுமே அதிக எண்ணிக்கையில் உள்ளது.

1.தசாவதாரம்
2.குருதிப்புனல்
3.அவ்வை சண்முகி
4.தேவர்மகன்
5.நாயகன்
6.சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து)
7.சாகர சங்கமம் (சலங்கை ஒலி)
8.மரோசரித்ரா (தெலுங்கு)



இந்த பட்டியலில் ஏதேனும் விடுபட்டிருந்தால், கமென்ட் போடவும்.

Tuesday, April 15, 2014

டயலாக் தான் ரஜினி.... ACTION கமல் தான்!!!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பதை இந்த கட்டுரையை படிப்பவர்கள் அனைவரும் முடிவில் ஏற்றுக் கொள்வீர்கள்.

                                                                                                               நன்றி : தினமணி

பாட்ஷா படத்தில் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னா மாதிரி என்று டயலாக் விடுவார். அந்த டயலாக்கின் அர்த்தம், ஒரு விஷயத்தை பற்றி ஒரு தடவை சொல்ற கருத்தை தான் எப்பவும் சொல்வேன் என்று அர்த்தம், அடுத்த நாள் மாற்றி சொல்வேன் என்று அர்த்தம் அல்ல.1996-ல் ஜெ. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பற்ற முடியாது என்றார், பின் அடுத்த ஜெ. ஆட்சியில் அவரையே தைரிய லட்சுமி என்றார், இன்று மேடையிலேயே புரட்சி தலைவி, அம்மா என்று கட்சிகாரர்களை போல பம்முகிறார்.

ஒக்கேனக்கல் பிரச்சினையில் முதலில் "அடிப்பேன் உதேப்பேன்" என்று சீன் போட்டார், பின்பு குசேலனை பெங்களூரில் ரிலீஸ் செய்ய, நான் அப்படி சொல்லவில்லை என்று மன்னிப்பு வேற கேட்டார்.

மாறாக, கமல் 80 களிலேயே எம்ஜியாரால் அரசியலுக்கு அழைக்கப்பட்டார். அன்று அவரிடம் "அரசியலுக்கு வர விருப்பமில்லை" என்று தன் கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், இன்றும் அதே கருத்தில் நிலையாய் இருக்கிறார். 

"சிவாஜி" என்ற படத்தில் சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று, ரஜினி இப்படத்திற்கு முன் வெளிவந்த அர்ஜூனின் பட டயலாக்கை பேசியிருப்பார்.

ரஜினியின் படங்கள் அந்தந்த கால பாப்புலர் ஹீரோயின், டைரக்டர், மியூசிக் டைரக்டர், காமெடியன்கள் இல்லாமல் வெளிவந்தது கிடையாது. இதுக்கு பேர் தான் சிங்கிளா வருவதா? அப்படியே பாப்புலர்கள் கூட்டமாக வந்தாலும் தியேட்டர்காரர்களும் விநியோகிஸ்தர்களும் ரஜினி படத்தில் போட்ட பணத்தில் பாதியை கூட திரும்ப எடுப்பதில்லை.

கமல் படங்களிலோ பாப்புலர் காமெடியன்கள் அல்லது பாப்புலர் ஹீரோயின் அல்லது பாப்புலர் டைரக்டர் அல்லது பாப்புலர் மியூசிக் டைரக்டர் என்று யாரேனும் ஒருவரை வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் அத்தனை பாப்புலர்களையும் ஒட்டு மொத்தமாக பார்ப்பது அரிதிலும் அரிது.

தசாவதாரத்தில் பத்து வேடங்களில் நடித்தது மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தென்னிந்தியா அறியாத ஹிம்மேஷை இசையமைப்பாளராக்கி, பாப்புலர் காமெடியன்கள் இல்லாமல், தொழில்நுட்ப அறிவு கமல் அளவில் 1% கூட இல்லாதவரை இயக்க வைத்து, அப்படத்தை தென்னிந்தியாவின் உச்ச வெற்றியாக இன்றும் இருக்க வைத்த கமல்ஹாசனை "ONE MAN ARMY" என்று கூறுவது கூட குறைந்த பட்ச பாராட்டு தான்... விஸ்வரூபத்தில் இன்னும் பல படிகள் மேலே சென்று, தானே இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தான் மட்டுமே உலக சினிமாவின் ஒன் மேன் ஆர்மி என்று நிரூபித்து விட்டார்.

படையப்பா படத்தில் என் வழி தன் வழி என்று கூறுவார் ரஜினி. தன்னுடைய சொந்த பள்ளியிலே ஒரு ஏழை மாணவனுக்காவது இலவச கல்வி கொடுத்திருக்கிறாரா? அவரின் ரசிகர்களுக்கு தன் மகள் கல்யாணத்திற்கு பிரியாணி பொடுவேன் என்று சொல்லி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது (இவரே பிரியாணி அரிசியை உருவாக்குகிறார் போல). இது தான் அவருடைய தனி வழி போல?

கமல் தனக்கு எத்தனை இடர்கள் வந்தாலும் நேர்மையான வழியில் தான் எதிர்கொள்வார். கருப்பு பணம் சேர்க்க மாட்டார். விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடிப்பார் அதுவும் சம்பளம் பெறாமல். அண்மையில் கூட 2014 பாரளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் இலவசமாக நடித்துள்ளார். அப்படின்னா கமல் வழி தானே தனி வழி!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் சுத்தமா இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பது புரிந்திருக்குமே...

Thursday, March 20, 2014

சமூக அக்கறையுள்ள நாயகன் கமல்ஹாசன்

இந்தியாவில், சமூக அக்கறையுள்ள கலைஞர்களில் முதன்மையானவர் என்றும் கமல்ஹாசன் மட்டுமே, என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நம் உலகநாயகன்.

ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போது கைகளினால் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று 2004 லோக்சபா தேர்தலிலும், மீடியாக்கள் ஓட்டு போடும்போது ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்று தெரிந்தும் 2011 தமிழக சட்டசபை தேர்தலிலும் ஓட்டு போட்ட நடிகரால் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த அவப்பெயர், இந்த 2014 லோக்சபா தேர்தலில், உலகநாயகன் கமல்ஹாசனால் துடைக்கப்பட்டது.

பணத்திற்கு வாக்களிக்காதீர்கள்...சுயமரியாதையை விற்காதீர்கள்...சிந்தித்து வாக்களியுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக, இலவசமாக, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து தனது சமூக அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.



இந்த வீடியோ தமிழக தேர்தல் ஆணையத்தால் 18-மார்ச்-2014 அன்று வெளியிடப்பட்டது. அதன் புகைப்படம் கீழே.

Thursday, February 27, 2014

விகடன் மேடை (2011) - கமல்ஹாசன்


ஆனந்த விகடனில் 2011 ஆம் ஆண்டு "விகடன் மேடை" எனும் பக்கத்தில் உலகநாயகனுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு இது.



பொன்விழி, அன்னூர்
 ''பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?'' 
 
''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்டுக்களின் மூலம்.

பெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்!''

மலைஅரசன், அருகந்தம்பூண்டி : 
 ''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..?'' 

 ''மனசாட்சி!''

இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை-91.
 ''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்?'' 

''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.
இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக!''

பி.விஜயலட்சுமி, வேலூர்.
 ''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..?''
 
 ''சமரசம்!''

சுகந்தி, சிவகங்கை.
 ''சமீபத்தில் பாதித்த புத்தகம்?'' 

 ''பல!
அதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்!''

ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 '' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''

 ''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''


கே.அன்பு, சென்னை91.
 '' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?'' 

 ''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''


மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.
 '' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?'' 

 ''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''

என்.ரத்னகுமார், தஞ்சாவூர்.
 ''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' 

 ''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''

பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.
 ''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா?'' 

 ''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!''

ச.வினோத், சென்னை84
 ''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா? உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?'' 

 ''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்!''


சா.கணேஷ், வேலூர்.
 ''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்க மானவர் யார்?'' 

 ''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''

கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.
 ''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா?'' 

 ''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட!''


அ.யாழினி பர்வதம், சென்னை-78.
 ''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?'' 

 ''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்.
 '' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?'' 

 ''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''

ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு.
 ''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?'' 

 ''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.
 ''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?'' 

 ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!
வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''

வி.பவானி, திருவாரூர்.
 '' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?'' 

 ''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''

கிருத்திகா அரசு, தஞ்சாவூர்.
 ''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?'' 

 ''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''


ஆர்.சுஜாதா, சென்னை.
  ''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' 

''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''

சா.பிரேமா, செங்கல்பட்டு.
 ''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?'' 

 ''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''


க.ராஜன், தஞ்சாவூர்.
''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி?'' 

''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்!''

ஆ.சசிக்குமார்,  உடுமலைப்பேட்டை.
 ''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்?''

'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்  உண்டோ?’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்!''

ராஜலக்ஷ்மி பாலாஜி, சென்னை-33.
''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்?'' 

''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே!''

Wednesday, June 12, 2013

மருதநாயகம் - ஸ்பெஷல் புகைப்படங்கள்

வாழ்க ஜனநாயகம்...
வருக மருதநாயகம்!!!

என்ற உலகசினிமா ரசிகர்களின் வாசகத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த புகைப்பட கலைஞர் முத்துகுமாருக்கும், குங்குமம் இதழிற்கும் கமல் பக்தர்களின் நன்றி.
 






Wednesday, March 27, 2013

மகாநதி - விகடன் விமர்சனம்

மகாநதி - கமல்ஹாசன் பல பரிணாமங்களில் ஜொலித்த படங்களில் முதன்மையானது.

இருந்தாலும் நான் பார்க்க விரும்பாத உலகநாயகனின் படம் இது, அதையும் மீறி பார்த்தால், பல நாட்கள் சோகத்தை இறக்கி வைக்க விடாமல் திணற வைக்கும் படம் (பாடம்) என்பதால்.





நன்றி : சகலகலாவல்லவர் விஜய்

Thursday, March 7, 2013

விஸ்வரூபத்தில் பெண்களின் விஸ்வரூபம்

தாய்மொழி, தாய்நாடு, "மாதா,பிதா,குரு,தெய்வம்" என்று பெண்களுக்கு, வார்த்தைகளில் முதலிடம் கொடுத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நேற்று வரை அவர்கள் ஆண்களுக்கு அடுத்த இடமே.

குறிப்பாக ரஜினி படங்களில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமே. அவர் படங்களில் தான், உயரத்துடிக்கும் பெண்களின் காலை வாரிவிடும் வசனங்கள் அதிகமாக இருக்கும். மேலும் அவர் படங்களில் கதாநாயகியை பாடல்களுக்கு வந்து ஆடி விட்டுப்போகும் பொம்மையாக தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

மாறாக, கமல்ஹாசன் மட்டுமே தன் படங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார், அவர்களுக்காக தனி படமே எடுத்துள்ளார்.

மகாநதி படத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த படுவதை, மகளிர் மட்டும் படத்தில் அலுவலகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை
துணிந்து காட்டியுள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு படங்களில்  பெண்களும் தைரியமாக இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.



இதையெல்லாம் தாண்டி, இன்று விஸ்வரூபத்தில் கதாநாயகனை விட கதாநாயகியால் தான் நியூயார்க் நகரமே காப்பாற்ற படுவதாக காட்டி, தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கதாநாயகிகளை முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

விஸ்வரூபத்தில் வரும் மூன்று முக்கிய இந்திய பெண் கேரக்டர்களும் நன்கு படித்தவர்கள்,


1. நிருபமா (Nuclear Oncologist)

2. அஷ்மிதா (RAW Agent)

3. ஷரினா வாகப் (Psychiatrist)

இது ஆப்கானிஸ்தான் பெண்களை விட இந்திய பெண்கள் எவ்வளவு வேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதன் விஸ்வரூப குறியீடு தானே.

அன்று பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்களை கமல்ஹாசன் தன் விஸ்வரூபத்தில் படைத்துள்ளது பெண்களுக்கு "மகளிர் தினம் 2013" பரிசு என்றால் மிகையாகாது.


Friday, February 15, 2013

விஸ்வரூபம் vs எந்திரன் in IMDB

வசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.



அதற்கு முன் டிரெய்லர் போல, IMDB ரேட்டிங்கில் விஸ்வரூபம், எந்திரனை வீழ்த்தியதை பார்ப்போம்.

ஒரு ரஜினி ரசிக பதிவர் கூறுகிறார், எந்திரன் வெளிநாடுகளில் மிகப்பெரிய ஹிட் என்று. ஆனால், உலகம முழுவதும் வெளியாகும் சினிமாக்கள் பற்றிய டேட்டாபேஸ் இணையதளம் IMDB-ல் 12000க்கும் குறைவானவர்களே இந்த படத்திற்கு ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.

(அறிவு) குறைவானவர்களே ஓட்டு  போட்டும், ரேட்டிங் 6.8/10 மட்டுமே வாங்கியிருக்கிறது.

எந்திரன் : http://www.imdb.com/title/tt1305797/


ரஜினி இதுவரை தேர்தல்களில் கூட சரியாக ஓட்டு போட்டதில்லை, ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, யாருக்கு போட்டார் என்பதை கையால் காட்டினார், போன தேர்தலில் மீடியாக்காரர்களின் கேமராக்கள் சூழ ஓட்டு போட்டார். இவரே இப்படி இருக்க, இவர் ரசிகர்கள், அதுவும் இணையதளத்தில் சரியாக ஓட்டு போட்டு விடுவார்களா?

ஆனால் உலகநாயகனின் விஸ்வரூபத்திற்கு, இதுவரை 22500க்கும் மேற்பட்டவர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள், அதுவும் 9.5/10

விஸ்வரூபம் : http://www.imdb.com/title/tt2199711/



மேலும்  2013-ல் உலகம் முழுவதிலும் வெளியான படங்களில், இன்றைய
(15 பிப்) நிலவரப்படி, ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது "விஸ்வரூபம்".

தமிழனின் விஸ்வரூபம், தேசம் கடந்து, உலகம் முழுவதும் சாதனைகள் படைப்பது, உலகத்தமிழர்களுக்கு நிச்சயம் பெருமையே!!!! ( விஸ்வரூப சாதனைகள் தொடரும்... )

Tuesday, February 12, 2013

பாண்டிச்சேரி ரத்னா தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்

பாண்டிச்சேரி கமல் ரசிகர்கள், ரத்னா தியேட்டரில் கொண்டாடிய விஸ்வரூப திருவிழாவின் வீடியோ & புகைப்படங்கள் பதிவுலகப் பார்வைக்கு.....
















Monday, February 11, 2013

சென்னை பைலட் தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்

ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து "விஸ்வரூபம் இரண்டாவது கொண்டாட்டத்தை" சென்னை பைலட் திரையரங்கில், பிப்ரவரி 10 மாலை 5 மணியிலிருந்து கொண்டாடிய வீடியோக்களும் போட்டோக்களும் இங்கே உங்கள் பார்வைக்கு....

பால் அபிஷேகம் : 

உடைக்கப்பட்ட 100 தேங்காய்கள் :


 தலைவரின் என்ட்ரி :
பேனர்கள் :







Saturday, February 9, 2013

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் - விஸ்வரூப திருவிழா

ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து "விஸ்வரூப திருவிழாவை" சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில், பிப்ரவரி 7 காலை 9 மணியிலிருந்து கொண்டாடினார்கள்.

விஸ்வரூப திருவிழாவிற்கு நாங்கள் அடித்த 10 விதமான போஸ்டர்களை காண இங்கே கிளிக் செய்க.

தசாவதாரத திருவிழாவை விட பிரம்மாண்டமாக கொண்டாட, ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் 30 அடி உயர கட்-அவுட் உட்லண்ட்ஸ் தியேட்டரில் நிறுவப்பட்டது.
உட்லண்ட்ஸ் தியேட்டரில் வானம் கமல் கொடிகளால் மறைக்கப்பட்டது.


கமல் பக்தர்களின் நடனத்திற்காக குலாப் பேண்டும் தாண்டியாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திருவிழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனைத்து மீடியாக்களும் காலை 7 மணிக்கே தியேட்டரில் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் சாரை சாரையாக தியேட்டரில் நுழைந்து கொண்டிருந்தது. திருவிழா தொடங்கப்பட்டது ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கட்-அவுட்டுக்கு மலர்களை தூவி.
கமல் பக்தர்களுக்கு அருள் கிடைத்தது... ஆட்டம் ஆரம்பமானது...

10 அடி ரோஜாப்பூ மாலை முதலில் தலைவருக்கு சூடப்பட்டது.


அடுத்தடுத்து மற்ற மாலைகள் சூடப்பட்டன.


கட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.



திடீரென்று கல்லூரி கமல் ரசிகர்களின் சுனாமி தியேட்டரின் வலதுபுற வாயிலில் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, இடதுபுற வாயில் வழியாக வெளியேறியது. விசாரித்து பார்த்ததில் அந்த சுனாமி சிட்டியில் எல்லா தியேட்டருக்கும் சென்று இப்படி செய்கிறது என்றார்கள்.

கொண்டாட்டங்கள் முடித்து தியேட்டருக்குள் செல்லும் முன் 10000வாலா சரம் வெடிக்கப்பட்டது.

பல தடைகளை தாண்டி வெளிவந்த கலையின் விஸ்வரூபத்தை திரையில் கமல் பக்தர்கள் தரிசித்தபோது...


இந்திய சினிமாவில் இதுவரை படமாக்கப் படாத சண்டைக்காட்சியை கண்டு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்....


உட்லண்ட்ஸ் தியேட்டர் மற்றும் அதை சுற்றிலும் நாங்கள் வைத்த பேனர்கள் கீழே...