Ads 468x60px

Friday, August 31, 2012

ரஜினியின் டெங்கு ராசி - Part 1


1983 நிகழ்வு : தேவர் பிலிம்ஸ் ரஜினியை வைத்து ஹிந்தி பட ரீமேக்காக தாய்வீடு என்ற படத்தை தயாரித்தது...

விளைவு : "வீடு" படத்தின் தலைப்பில் மட்டும் தான் இருந்தது.  தேவர் அவர்கள் தன் சொந்த வீட்டையே இழந்தார்.

1986 நிகழ்வு : கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் ராஜசேகரை பாதியில் இழுத்துக்கொண்டு போய் ரஜினி, மாவீரன் படத்தை தயாரித்தார்.

விளைவு :  மாவீரன் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய நடிகை ஜெயப்பிரதா, படத்தின் பெருத்த நஷ்டத்தால், சென்னையில் தன்னுடைய தியேட்டர்களை ( மிட்லண்ட & லியோ ) இழந்தார்.

1988 நிகழ்வு : மகாபலிபுரத்தை காண வந்த வெளிநாட்டவர்களை வைத்து, கூவம் ஆற்றின் கரையிலும், பல்லவாரத்தின் சந்து பொந்துகளிலும் எடுக்கப்பட்ட ரஜினியின் BLOODSTONE என்ற படத்தை ஆங்கிலப்படம் என்று நம்பி, படத்தின் விநியோகிக்கும் உரிமையை நடிகரும் இயக்குநருமான T.ராஜேந்தர் வாங்கினார்.

விளைவு :  தான் இயக்கி நடித்து சம்பாதித்த அத்தனையையும், இந்த ஒரு படத்தை வாங்கியதால் ஒரே நாளில் இழந்தார். பின்பு பத்திரிக்கையில் இப்படி பேட்டியளித்தார் "ரஜினிக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றார்கள், அவர்கள் அனைவரும் ஒரு தடவை பார்த்தாலே, இந்த படம் தப்பித்திருக்கும், ஆனால் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்பதை அவரே நிரூபித்துவிட்டார்".  

1991 நிகழ்வு :  ரஜினியின் தர்மதுரை என்ற படத்தை 100 நாள் ஓட்டிவிட்டார்கள், என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள் அவரின் ரசிகர்கள்.

விளைவு :  அது படத்தின் இயக்குநர் ராஜசேகருக்கே பொறுக்காமல் தானோ ஏனோ, அந்த 100 வது நாள் அன்றே  மாரடைப்பால் இறந்து விட்டார்.

1991 நிகழ்வு : ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற படத்தின் விநியோகிக்கும் உரிமையை தயாரிப்பாளர் வீராசாமி என்றவர் வாங்கினார். ஆனால் அது அந்த தயாரிப்பாளர் "வீட்டுக்கு ஒரு எமன்" ஆனது.

விளைவு : இந்த படம் முதல் காட்சியிலேயே WASHOUT ஆனதால் தயாரிப்பாளர் வீராசாமி மாரடைப்பால் இறந்தார். (இதை படித்தவுடன் ரஜினி ரசிகர்கள் இப்படி தான் முனங்குவார்கள், "ஆளவந்தான் படத்தால் தாணு கூட தான் நஷ்டமானார்".  இது தான் அவர்களுக்கான பதில் "அப்படி நஷ்டமடைந்திருந்தால் தாணுவால் இன்றும் எப்படி முன்னனி நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்க முடிகிறது? ".)

1992 நிகழ்வு மன்னன் திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை பண்டரிபாய், ரஜினிக்கு தாயாக, பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவராக, வலுக்கட்டாயமாக நடிக்க வைக்கப்பட்டார்.

விளைவு : பண்டரிபாய் அந்த படத்தில் நடித்ததற்கு பின், நிஜ வாழ்க்கையிலும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு இறந்தார்.

2002 நிகழ்வு : ரஜினி, தன்னுடைய குரு என்று சச்சிதானந்த மகராஜ் என்ற சாமியாரை, அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்து, ஆகஸ்ட் 14 அன்று சென்னை சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சியாக "பாபா" படத்தை திரையிட்டார்.

விளைவு : படத்தின் ஆரம்பத்தில் ரஜினி "ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருருரு" என்று வாயை திறந்து ஓபனிங் பாட்டு பாடும் போது, அந்த சாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது... சத்யம் தியேட்டரிலேயே உயிர் பிரிந்தது...  

2004  நிகழ்வு : தன் பாபா படத்தை பாமக ராமதாஸ் தான் UTTER FLOP ஆக்கினார் என்று நினைத்துக்கொண்டு, 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ்  தொ(ல்)லைகாட்சிகள் வாயிலாக கூவோ கூவு என்று கூவினார்.

விளைவு :  ஆனால் பாமக தான் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஒரு வேளை, ரஜினிக்கு ஆயிரக்கணக்கில் கூட ரசிகர்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு ஓட்டு போட தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு ஓட்டு போடும் வயதில்லையா?

2007 நிகழ்வு :  எப்ரல் 9 அன்று, "சிவாஜி" பட வேலைகள் முடிந்தவுடன் ECR-ல் படக்குழுவினருக்கு விருந்து கொடுக்கப்பட்டது.

விளைவு :  சிவாஜி படத்தின் ஒலியமைப்பாளர் சச்சிதானந்தம், நீச்சல் தொட்டிக்குள் மர்மமான முறையில் பிணமானார். பின் மப்பு ஓவராகியதால் தொட்டிக்குள் விழுந்து இறந்தார் என்று கேஸ் முடிக்கப்பட்டது.

2008 நிகழ்வு :  ரஜினி படங்களின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தெரியாமல், "குசேலன்" குழிக்குள் அனுப்புவான் என்று புரியாமல் , படத்தின் விநியோகிக்கும் உரிமையை 60 கோடிக்கு வாங்கியது "பிரமிடு சாய்மீரா"  என்ற நிறுவனம்.

விளைவு : "பிரமிடு சாய்மீரா"  என்ற நிறுவனத்தையே  குழிக்குள் போட்டு மூடியது "குசேலன்".

2014 நிகழ்வு :  லிங்காவை எந்த பழைய விநியோகிஸ்தர்களும் வாங்க முன் வராத நிலையில், தொழிலுக்கு புதிதாக வந்தவர்கள், மீடியாவில் வெளிவரும் ரஜினி படத்தின் வசூல் செய்திகள் ( காசு கொடுத்து போடப்படும் விளம்பரம் என புரியாமல் ) உண்மை என நம்பி, அதிக விலைக்கு வாங்கினர்.

விளைவு : ரஜினி பிறந்த நாளில் வெளியிட்ட ராசி, ரஜினி படத்தையே காவு வாங்கியது. வழக்கம் போல் கமுக்கமாக நஷ்டத்தை கொடுத்து கணக்கை முடிக்கும் ரஜினி, இந்த படத்திற்கு மட்டும் ஏன் செய்யவில்லை? கோச்சடையான் நஷ்டத்திற்கு  சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் இந்த லிங்கா என்பதாலா?

உலக சினிமா வரலாற்றில் நடைபெறாத வகையில் இந்த படத்தை வாங்கியவர்கள், நஷ்ட ஈட்டினை பெற சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்படியும் நஷ்ட ஈடு கிடைக்காததால், 14-பிப்ரவரி-2015 அன்று ரஜினி வீட்டு முன்பிருந்து "மெகா பிச்சை" எடுக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்று அறிவித்திருக்கின்றனர்.


இதையெல்லாம் படித்தபிறகு, மாப்பிள்ளை படத்தில் ரஜினி பாடும் "என்னோட ராசி நல்ல ராசி...." என்ற பாடல், உங்கள் காதுகளில் ஒலித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது...

Sunday, August 26, 2012

கமல்: சென்னை திரையரங்க சாதனைகள்

சென்னையில் மட்டுமே, கிபி 2000 க்கு முன்பு, தமிழ்ப்படங்கள் 6 திரையரங்குகள் வரை திரையிடப்படும். அந்த திரையரங்குகளின் பெயர்கள், பின்வரும் ஏரியாக்களின் வரிசையிலேயே நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும்,

1.அண்ணாசாலை
2.பூந்தமல்லிசாலை/புரசைவாக்கம்
3.அசோக்நகர்/வடபழனி
4.வடசென்னை
5.ECR

அன்றைய அண்ணாசாலையின் முக்கிய திரையரங்குகள் ஆனந்த் காம்ப்ளக்ஸ், தேவி காம்ளக்ஸ், சத்யம் காம்ப்ளக்ஸ், அலங்கார், காஸினோ, சபையர் காம்ப்ளக்ஸ், மிட்லண்ட் காம்ப்ளக்ஸ், உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஆல்பட் காம்ப்ளக்ஸ், கெயிட்டி, சாந்தி திரையரங்குகள் தான்.

பூந்தமல்லிசாலை/புரசைவாக்கத்தின் முக்கிய திரையரங்குகள் சங்கம் காம்ளக்ளஸ், அபிராமி காம்ளக்ஸ், ஈகா திரையரங்குகள் தான்.

அசோக்நகர்/வடபழனியின் முக்கிய திரையரங்குகள் உதயம் காம்ளக்ளஸ், AVM ராஜேஸ்வரி, காசி, கமலா திரையரங்குகள் தான்.

வடசென்னையின் முக்கிய திரையரங்குகள் மகாராணி, அகஸ்தியா, பிருந்தா, கிரெளன், பாரத் திரையரங்குகள் தான்.

ECR-ல் அன்று இருந்ததோ ஒரே முக்கிய திரை தான், அதுவும் டிரைவ் இன் தியேட்டர் பிரார்த்தனா தான்.

சென்னையின் அனைத்து ஏரியாவிலும், அனைத்து திரையரங்கிலும், திரையரங்கு காம்ளக்ஸாக இருந்தால் அந்த காம்ளக்ஸின் ஒவ்வாரு தியேட்டரிலும், ரெகுலர் காட்சிகளாக (4 or 3 Shows ) 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படங்களை கொடுத்தது உலகநாயகன் கமல்ஹாசர் ஒருவரே.

ரஜினிக்கு எத்தனை தியேட்டரில் இப்படி ஓடியிருக்கிறது என்று தேடிப்பார்த்தால், பேபி ஆல்பட்/பால அபிராமி/கமலா/உதயம் மட்டுமே மிஞ்சுகிறது. ரஜினியின் சூப்பர்ஹிட் படங்கள் என்று கூறப்படும் பாட்ஷா, படையப்பா கூட பகல்காட்சியில் தான் வெள்ளி விழா கண்டது என்பது மறைக்கப்பட்ட உண்மை.

பிற நடிகர்களின் ரசிகர்களை கூட பிரம்மிக்கவும் ஏங்கவும் வைக்கும் கமல்ஹாசரின் சென்னை திரையரங்கு சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

திரையரங்கம்திரைப்படம்சாதனை
சத்யம்தூங்காதே தம்பி தூங்காதே

 (எம்ஜிஆரின் இதயகனிக்கு பின் இத்திரையரங்கில் ஓடிய 100 நாட்கள் படம்)
105 நாட்கள் (4 காட்சிகள்)
இந்தியன்

 (இத்திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாய் அதிகப்பட்ச சாதனை இன்று வரை)
126 நாட்கள் (4 காட்சிகள்)
சாந்தம்இந்தியன் (Shifted From சத்யம்)175 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி112 நாட்கள் (4 காட்சிகள்)
சுபம் மூன்றாம் பிறை329 நாட்கள் (4 காட்சிகள்)
பேசும்படம் (Shifted From சத்யம்)83 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி (Shifted From சாந்தம்)175 நாட்கள் (பகல் காட்சி)
ஆனந்த்ஒரு கைதியின் டைரி100 நாட்கள் (4 காட்சிகள்)
நாயகன்174 நாட்கள் (4 காட்சிகள்)
புன்னகை மன்னன்105 நாட்கள் (4 காட்சிகள்)
மகாநதி85 நாட்கள் (4 காட்சிகள்)
லிட்டில் ஆனந்த்நாயகன் (Shifted From ஆனந்த்)195 நாட்கள் (4 காட்சிகள்)
மகாநதி (Shifted From ஆனந்த்)175 நாட்கள் (4 காட்சிகள்)
அலங்கார்

(இது தான் சென்னையின் அப்போதைய பெரிய திரையரங்கம்)
கல்யாணராமன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
ராம் லட்சுமண்100 நாட்கள் (3 காட்சிகள்)
ஏக் துஜே கே லியே (ஹிந்தி)105 நாட்கள் (3 காட்சிகள்)
சகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட இரண்டாவது படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
சபையர்மரோசரித்ரா (தெலுங்கு)595 நாட்கள் (பகல் காட்சி)
எமரால்ட் மீண்டும் கோகிலா

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
189 நாட்கள் (4 காட்சிகள்)
கோகிலா (கன்னடம்)175 நாட்கள் (பகல் காட்சி)
காஸினோ வாழ்வே மாயம்

(இத்திரையரங்கில் MGR's எங்க வீட்டு பிள்ளையின் 175 நாட்கள் ரெகுலர் காட்சிகள் சாதனையை முறியடித்தது)


186 நாட்கள் (4 காட்சிகள்)
தேவிபாரடைஸ்சட்டம் என் கையில்100 நாட்கள் (3 காட்சிகள்)
சிவப்பு ரோஜாக்கள்

(MGR's உலகம் சுற்றும் வாலிபனுக்கு பின், ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில்  வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
குரு109 நாட்கள் (3 காட்சிகள்)
சட்டம்84 நாட்கள் (3 காட்சிகள்)
காக்கிசட்டை126 நாட்கள் (4 காட்சிகள்)
சத்யா80 நாட்கள் (3 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள்

(இத்திரையரங்கில்  MGR's உலகம் சுற்றும் வாலிபனின் 201 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை 234 ஆகவும் 182 நாட்கள்  சாதனையையும் முறியடித்தது)
197 நாட்கள் (பகல் காட்சி)
148 நாட்கள் (3 காட்சிகள்)
சாணக்யன் (மலையாளம்) 90 நாட்கள் (பகல் காட்சி)
49 நாட்கள் (3 காட்சிகள்)
குணா 108 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்75 நாட்கள் (4 காட்சிகள்)
அவ்வை சண்முகி 100 நாட்கள் (4 காட்சிகள்)
தேவிபாலாசத்மா (ஹிந்தி)119 நாட்கள் (4 காட்சிகள்)
பாசவலை (தெலுங்கு டப்பிங்)108 நாட்கள் (4 காட்சிகள்)
தேவிகலாசதிலீலாவதி125+ நாட்கள் (4 காட்சிகள்)
தேவிதேவர்மகன் 107 நாட்கள் (4 காட்சிகள்)
குருதிப்புனல்105 நாட்கள் (4 காட்சிகள்)
ஹேராம்70 நாட்கள் (4 காட்சிகள்)
மிட்லண்ட்16 வயதினிலே

(இத்திரையரங்கின் முதல் வெள்ளிவிழா படம்)
175 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது175 நாட்கள்
ராஜபார்வை100 நாட்கள்
லியோஇரு நிலவுகள் ( தெலுங்கு டப்பிங் )100 நாட்கள்
கோகிலா (கன்னடம்)42 நாட்கள
சித்ராசலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள் (3 காட்சிகள்)
கெயிட்டிசாகர் (ஹிந்தி)

(இத்திரையரங்கின் ஒரே 100 நாட்கள் படம்)
105 நாட்கள் (4 காட்சிகள்)
வெலிங்டன்நீயா100 நாட்கள் (4 காட்சிகள்)
சவால்115 நாட்கள் (4 காட்சிகள்)
ஆல்பட்மைக்கேல் மதன் காமராஜன்100 நாட்கள் (4 காட்சிகள்)
பேபி ஆல்பட்மைக்கேல் மதன் காமராஜன் (Shifted From ஆல்பட்)175 நாட்கள் (4 காட்சிகள்)
உட்லண்ட்ஸ் சிம்பொனிசூரசம்ஹாரம்101 நாட்கள் (4 காட்சிகள்)
சாந்திவெற்றிவிழா100 நாட்கள் (3 காட்சிகள்)
சங்கம்இந்தியன்175 நாட்கள் (பகல் காட்சி)
135 நாட்கள் (4 காட்சிகள்)
ரூபம்சூரசம்ஹாரம்101 நாட்கள் (4 காட்சிகள்)
அபிராமிஅபூர்வ சகோதரர்கள்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே படம்)
148 நாட்கள் (4 காட்சிகள்)
சாணக்யன் (மலையாளம்) 75 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்65 நாட்கள் (3 காட்சிகள்)
மகாநதி50 நாட்கள் (3 காட்சிகள்)
குருதிப்புனல்75 நாட்கள் (4 காட்சிகள்)
அவ்வை சண்முகி 91 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி92 நாட்கள் (4 காட்சிகள்)
அன்னை அபிராமிசகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில்  வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
175 நாட்கள் (4 காட்சிகள்)
தேவர்மகன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில்  வெள்ளிவிழா கண்ட இரண்டாவது படம்)
175 நாட்கள் (4 காட்சிகள்)
சதிலீலாவதி125+ நாட்கள் (3 காட்சிகள்)
அவ்வை சண்முகி (Shifted From அபிராமி)126 நாட்கள் (4 காட்சிகள்)
காக்கிசட்டை126 நாட்கள் (4 காட்சிகள்)
சட்டம்104 நாட்கள் (4 காட்சிகள்)
சக்தி அபிராமி தூங்காதே தம்பி தூங்காதே

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
188 நாட்கள் (4 காட்சிகள்)
நாயகன் (140 வரை நாட்கள் 4 காட்சிகள்)175 நாட்கள் (பகல் காட்சி)
குருதிப்புனல் (Shifted From அபிராமி)100 நாட்கள் (பகல் காட்சி)
அவ்வை சண்முகி (Shifted From அன்னை அபிராமி)175 நாட்கள் (பகல் காட்சி)
பால அபிராமி ராம் லட்சுமண்

(இந்த திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாக 100 நாட்கள் ஒடிய ஒரே படம். இங்கு தான் ரஜினியின் பட்ங்கள் 100 நாட்கள்/175 நாட்கள் பகல் காட்சியாக தேய்க்கபடும். அங்கேயே ரெகுலர் காட்சிகளாக 100 நாட்கள் ஹிட் கொடுத்தவர் கமல்ஹாசர் மட்டுமே)
104 நாட்கள் (4 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள்
(Shifted From அபிராமி)
232 நாட்கள் (4 காட்சிகள்)
சத்யா (Shifted From அபிராமி)85 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன் (Shifted From அபிராமி)100 நாட்கள் (பகல் காட்சி)
ஹேராம் (Shifted From அபிராமி)80 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி (Shifted From அபிராமி )175 நாட்கள் (பகல் காட்சி)
ஈகாமூன்றாம் பிறை218 நாட்கள் (பகல் காட்சி)
சலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள் (பகல் காட்சி) 90 நாட்கள் ( 4 காட்சிகள்)
புன்னகை மன்னன்100 நாட்கள் ( 4 காட்சிகள்)
அனுஈகாவறுமையின் நிறம் சிவப்பு

(இத்திரையரங்கின் முதல் 100 நாட்கள் படம்)
119 நாட்கள் (4 காட்சிகள்)
புன்னகை மன்னன் (Shifted From ஈகா)175 நாட்கள் ( 4 காட்சிகள்)
இந்திரன் சந்திரன் (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள்
ராக்ஸிவாழ்வே மாயம்

(இத்திரையரங்கின் ஒரே 20 வாரப் படம்)
142 நாட்கள் (4 காட்சிகள்)
கிருஷ்ணாசலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள் (பகல் காட்சி) 81 நாட்கள் ( 4 காட்சிகள்)
காக்கிசட்டை100 நாட்கள் (4 காட்சிகள்)
உமாகல்யாணராமன்126 நாட்கள் (4 காட்சிகள்)
மேகலாசவால்115 நாட்கள் (4 காட்சிகள்)
உதயம்காக்கிசட்டை

(இத்திரையரங்கின் முதல் 100 நாட்கள் படம்)
100 நாட்கள் (3 காட்சிகள்)
நாயகன்107 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்65 நாட்கள் (3 காட்சிகள்)
தேவர்மகன் 100 நாட்கள் (3 காட்சிகள்)
இந்தியன்100 நாட்கள் (3 காட்சிகள்)
அவ்வை சண்முகி 100 நாட்கள் (3 காட்சிகள்)
தெனாலி100 நாட்கள் (பகல் காட்சி)
90 நாட்கள் (4 காட்சிகள்)
சூரியன்சத்யா80 நாட்கள் (3 காட்சிகள்)
காசி அபூர்வ சகோதரர்கள்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
197 நாட்கள் (4 காட்சிகள்)
கமலாவாழ்வே மாயம்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
சவால்105 நாட்கள் (3 காட்சிகள்)
AVM ராஜேஸ்வரிசகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
175 நாட்கள் (4 காட்சிகள்)
சதிலீலாவதி100 நாட்கள் (4 காட்சிகள்)
குருதிப்புனல்100 நாட்கள் (4 காட்சிகள்)
ஹேராம்66 நாட்கள் (4 காட்சிகள்)
மகாராணி வாழ்வே மாயம்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
200 நாட்கள் (3 காட்சிகள்)
சகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட இரண்டாவது படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
மூன்றாம் பிறை211 நாட்கள் (பகல் காட்சி)
மகாநதி50 நாட்கள் (3 காட்சிகள்)
இந்தியன்127 நாட்கள் (3 காட்சிகள்)
தெனாலி75 நாட்கள் (4 காட்சிகள்)
சவால்105 நாட்கள் (3 காட்சிகள்)
அகஸ்தியா சட்டம்100 நாட்கள் (3 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள்

(இத்திரையரங்கில்  MGR's உலகம் சுற்றும் வாலிபனின் ஹவுஸ்புல் காட்சிகளை 201 ஆக முறியடித்தது)
140 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்65 நாட்கள் (3 காட்சிகள்)
தேவர்மகன் 100 நாட்கள் (3 காட்சிகள்)
சதிலீலாவதி50 நாட்கள் (3 காட்சிகள்)
குருதிப்புனல்65 நாட்கள் (4 காட்சிகள்)
அவ்வை சண்முகி 100 நாட்கள் (3 காட்சிகள்)
பிருந்தாதேவர்மகன்114 நாட்கள் (பகல் காட்சி)
சிங்காரவேலன்65 நாட்கள் (பகல் காட்சி)
தெனாலி100 நாட்கள் (பகல் காட்சி)
81 நாட்கள் (4 காட்சிகள்)
கிரெளன்நாயகன்100 நாட்கள் (4 காட்சிகள்)
16 வயதினிலே100 நாட்கள் (4 காட்சிகள்)
பாரத்16 வயதினிலே105 நாட்கள் (4 காட்சிகள்)
ராம் லட்சுமண்90 நாட்கள் (4 காட்சிகள்)
பிரார்த்தனா (டிரைவ் இன்)தேவர்மகன் 61 நாட்கள் (Evening, Night Show)
இந்தியன்

(டிரைவ் இன் தியேட்டரில் முதல் 100 நாட்கள் படம்)
109 நாட்கள் (Evening, Night Show)
அவ்வை சண்முகி

(டிரைவ் இன் தியேட்டரில் இரண்டாவது 100 நாட்கள் படம்)
101 நாட்கள் (Evening,Night Show)
தெனாலி77 நாட்கள் (Evening,Night Show)
கிருஷ்ணவேணிமரோசரித்ரா (தெலுங்கு)

(இத்திரையரங்கின் ஒரே வெள்ளிவிழா படம்)
175 நாட்கள் (பகல் காட்சி)
தமிழ்நாடுமரோசரித்ரா (தெலுங்கு)129 நாட்கள் (பகல் காட்சி)
லிபர்டிமூன்றாம் பிறை105 நாட்கள் (4 காட்சிகள்)
குரோம்பேட்டை - வெற்றிகல்யாணராமன்112 நாட்கள் (4 காட்சிகள்)
தாம்பரம் - வித்யாஇந்தியன்100 நாட்கள் (4 காட்சிகள்)






சென்னையில், கமல்ஹாசரின் சகலகலா வல்லவன் மட்டுமே அதிகபட்சமாக 4 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது.

1.அலங்கார் (3 காட்சிகள்), ,
2.அன்னை அபிராமி (4 காட்சிகள்),
3.AVM ராஜேஸ்வரி(4 காட்சிகள்),
4.மகாராணி (3 காட்சிகள்)

இதற்கு அடுத்து சென்னையில், கமல்ஹாசரின் வாழ்வே மாயம் மட்டுமே அதிகபட்சமாக 3 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது.

1.காஸினோ (4 காட்சிகள்),
2.கமலா (4 காட்சிகள்),
3.மகாராணி (3 காட்சிகள்)

ட்ரைவ்-இன் தியேட்டரில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவதென்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் இரண்டு முறை அந்த சாதனைகளை செய்தது கமல்ஹாசர் மட்டுமே

1.இந்தியன்

2.அவ்வைசண்முகி


மேலும், சென்னையில் கமல்ஹாசருக்கு மட்டுமேதமிழ் டப்பிங் மற்றும் பிற மொழி படங்களும் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சியாக ஓடியுள்ளது...


மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள்
ஏக் துஜே கே லியே (ஹிந்தி) -105 நாட்கள்
சத்மா (ஹிந்தி) - 119 நாட்கள்
சாகர் (ஹிந்தி) - 105 நாட்கள்

கோகிலா (கன்னடம்) - 175 நாட்கள்

ராஸலீலா (மலையாளம்) - 100 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்) - 100 நாட்கள்

இரு நிலவுகள் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சலங்கை ஒலி (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
இந்திரன் சந்திரன் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
பாசவலை (தமிழ் டப்பிங்) - 108 நாட்கள்



உலகநாயகன் கமல்ஹாசரின் சென்னை திரையரங்கு சாதனைகளை பார்த்தால்,


கமல்ஹாசர் யாரென்று தெரிகிறாதா... ?
அவர் சாதனைகளின் விஸ்வரூபம் என்று புரிகிறதா...!!!



Tuesday, August 14, 2012

ரஜினியின் WASHOUT சாதனைகள்

ரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரிப்பாளரும் / விநியோகிஸ்தரும் / திரையரங்கு உரிமையாளரும் இதுவரை அப்படி கூறியது கிடையாது.

அப்படி இருந்திருந்தால், ரஜினியும் ஷங்கரும், கலாநிதிமாறனிடம் சென்று நீங்கள் தான் இனி எந்திரன் படத்தை தயாரிக்கவேண்டும் என்று கூறியபோது, அவரும் உடனே ஒத்து கொண்டிருக்கவேண்டுமே... ஆனால் அவர் தனக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதாக ரஜினியே தன் வாயால் இப்படத்தின் ஆடியோ ரிலீஸின் போது உளறி விட்டார்.

இவரின் சமீபத்திய படங்களை திரையிட்டு கையை சுட்டுக்கொண்ட மதுரை திரையரங்கு உரிமையாளர்களின் வேதனைகளை குமுதம் (21.3.2012) வெளியிட்டுள்ளது...



மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்"

ரஜினிக்கு 1998-க்கு முன் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் சுத்தமாக மார்கெட் கிடையாது, வடக்கில் இன்று வரைக்கும் கிடையாது. ஏனென்றால் இவருக்கு வடக்கில் ஸ்டார் வேல்யூ இருந்திருந்தால், இவர் கெஸ்ட் ரோல் செய்தற்காக, ஷாருக்கானின் ரா-ஒன் படம் போட்ட பணத்தையாவது திரும்ப எடுத்திருக்க வேண்டும், ஆனால் ஆவரேஜாகவாவது ஓட வேண்டிய படம், மகா தோல்வியடைந்தது.

தெலுங்கில் ரஜினிக்கு மார்க்கெட் இருந்திருந்தால், நாட்டுக்கு ஒரு நல்லவனின் தெலுங்கு பதிப்பில் ரஜினியை ஹீரோவாக போடாமல், நாகார்ஜீனை ஏன் ஹீரோவாக்கினர்? மன்னன் தெலுங்கு டப்பிங் ஏன் விஜயசாந்தியை முன்னிறுத்தி "QUEEN" என்று பெயரிடப்பட்டது?

ஹிந்தியில்(1981) கமல்ஹாசன் தொடக்கத்திலிருந்து (Ek Duje Ke Liye, Sanam Teri Kasam, Sagar, Appu Raja, Hindustani ) ஹீரோவாகவே கலக்கியபோது, தானும் கலக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு, கடைசியில் காமெடியனாகவும் / துணை நடிகனாகவும் தான் நடித்தார் ரஜினி.

இவர் உண்மையிலேயே சூப்பர்ஸ்டாரக இருந்திருந்தால், இவருடைய படங்கள், தமிழிலாவது ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே WASHOUT ஆகியிருக்கக் கூடாது. 

அப்படி தமிழில் மட்டும், முதல் நாளிலேயே WASHOUT / UTTER FLOP ஆன ரஜினியின் மகா காவியங்கள்


1. சங்கர் சலீம் சைமன் (1978)
2. சதுரங்கம் (1978)
3. வணக்கத்துக்குரிய காதலியே (1978)
4. இறைவன் கொடுத்த வரம் (1978)
5. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
6. குப்பத்து ராஜா (1979)
7. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
8. ராம் ராபர்ட் ரஹீம் (1980)
9. நான் போட்ட சவால் (1980)
10. காளி (1980)

11. எல்லாம் உன் கைராசி (1980)
12. கழுகு (1981)
13. கர்ஜனை (1981)
14. ரங்கா (1982)
15. எங்கேயோ கேட்ட குரல் (1982)
16. பாயும் புலி (1983)
17. துடிக்கும் கரங்கள் (1983)
18. தாய் வீடு (1983)
19. சிவப்பு சூரியன் (1983)
20. நான் மகான் அல்ல (1984)

21. கை கொடுக்கும் கை (1984)
22. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
23. ராகவேந்திரா (1985)
24. நான் அடிமை இல்லை (1986)
25. விடுதலை (1986)
26. மாவீரன் (1986)
27. தர்மத்தின் தலைவன் (1988)
28. கொடிபறக்குது (1988)
29. சிவா (1989)
30. அதிசயபிறவி (1990)

31. நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)
32. பாண்டியன் (1992)
33. பாபா (2002)
34. குசேலன் (2008) - ( ரிலீஸூக்கு முன் ஹீரோவாக விளம்பரம் செய்து, மண்ணை கவ்விய பின் தானே, ஹீரோ இல்லை என்று, வழக்கம் போல் பல்டி அடித்தார்கள்)
35. கோச்சடையான் (2014)
36. லிங்கா (2014)
37. காலா (2018)

 
ரஜினி ஹீரோவாக
தமிழில் நடித்த படங்கள்
WASHOUT ஆனவை
1980 வரை1711
1990 வரை4219
2000 வரை122
2010 வரை52
2019 வரை63
மொத்தம்8237


ரஜினி ஹீரோவாக தமிழில் நடித்த படங்களில் WASHOUT சாதனைகளின் சதவிகிதம் மட்டும் 45%

இந்த படங்களில் எதாவது ஒன்று குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை திரையிட்ட அனைத்து திரையரங்குளிலும் ரெகுலர் காட்சிகளாக ஓடியிருந்தால், அதை ஆதாரத்துடன் பின்னூட்டத்தில் நிரூபித்தால், அந்த படப்பெயரை இந்த WASHOUT லிஸ்டிலிருந்து எடுத்து விடுகிறேன்.

இவரின் FLOP படங்களை (ஹீரோவாக தமிழில் மட்டும்) கணக்கெடுத்தால் இன்னும் 20-லிருந்து 30 படங்கள் வரை வரும். இதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், இவரின் FLOP படங்கள், பகல் காட்சியாக மட்டும் 50 அல்லது 100 நாட்கள் வரை சென்னையில் பால அபிராமி அல்லது பேபி ஆல்பட்-ல் மட்டும் தேய்க்கப்பட்டிருக்கும்.

இந்த WASHOUT சாதனைகளையெல்லாம் இக்காலத்து சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ள விடாமல், அவர்களை மாயையிலேயே  வைத்திருக்கும் மீடியாக்களுக்கு ரஜினி மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

இவர் ஹீரோவாக தமிழில் நடித்த படத்தில் 45%-க்கு மேல், முதல் நாளிலேயே WASHOUT ஆனதால் தான், இவரை சூப்பர் ஸ்டார் என்கிறார்களோ?




Friday, August 10, 2012

கமல்குறள் - Part 1

2009-ஆம் ஆண்டு ORKUT Universal Hero Kamal Haasan Community-ல் கமல் பக்தர்கள் ஆரம்பித்த கமல்குறள் TOPIC-லிருந்து உங்கள் பார்வைக்கு....



அகர முதல எழுத்தெல்லாம் உலக
 நாயகன் முதற்றே உலகு.

கற்க கசடற கமலை கற்றபின்
நிற்க அவர்க்குத் தக.

கமல் செய்த உடல்தானம் வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 

ஞானிகளுக்கெல்லாம் ஞானி கலைஞானி அஞ்ஞானி
கலைகளுக்கு எல்லாம் தலை.

குழலினிது யாழினிது என்பர் கமல்
குரல் கேளா தவர்.

எல்லா விருதும் தொலைவல்ல கமலுக்கு
அவர்பெயரில் ஓர்விருதே அழகு. 

கமல்ரசிகன் நீயெனில் உழைப்பதே திருப்பணி
நற்பணிக்கு உன்னை அர்ப்பணி.

கடவுள் நம்பிக்கை இல்லையாம் கமலுக்கு
ரசிகர்களுக்குண்டாம் அவர்பேர் கமல்.

கலை யெனப்படுவது யாதெனின் அதன்பொருள்
கமல் என்பர் அறிஞர்.

உலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல்
கனியிருப்ப காயகவர்ந் தற்று  

எழுதியவர்கள் : ஜீவா, அசோக், ஜெபா & சண்டியர் கரன்
(ORKUT Universal Hero Kamal Haasan Community)

Tuesday, August 7, 2012

வெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி

உலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன.  அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின் வெள்ளிவிழா (ரெகுலர் காட்சிகள்) சாதனைகளும் உண்டு.

இன்று, மெகாஹிட் படம் என்றால், அதிக திரையரங்குகளில் திரையிட்டு, முதல் வாரத்தில் காட்சிக்கு 95% பார்வையாளர்கள் பார்த்து, இரண்டாம் வாரத்தில் காட்சிக்கு 75% பார்வையாளர்களாவது பார்த்து, மூன்று வாரங்களாவது ஓட வேண்டும்.

அன்று, மெகாஹிட் படம் என்றால், ரெகுலர் காட்சிகளாக வெள்ளிவிழா கொண்டாடவேண்டும். பல தமிழ்ப்படங்கள் 175 நாட்கள் அல்லது அதற்கும் மேலே ஓடியிருக்கும், அவை ஒரே திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாகவோ (3 / 4 காட்சிகள்), அல்லது ஒரே காம்ளக்ஸில் பெரிய திரையரங்கிலிருந்து சின்ன திரையரங்குக்கு மாற்றியோ, அல்லது மெயின் திரையரங்கிலிருந்து செகண்ட் ரிலீஸ் செய்யபடும் திரையரங்குக்கு மாற்றியோ ஓடியிருக்கும்.

இந்த சாதனைகளில் முதன்மையானது 175 நாட்களோ அல்லது அதற்கும் மேலோ,  ரெகுலர் காட்சிகளாக முதல் நாள் திரையிட்ட அதே திரையரங்குகளில் ஓடுவது தான்...


இந்த சாதனையை கமல்ஹாசன் / ரஜினி படங்கள் செய்திருக்கின்றனவா?

கிபி 2000-க்கு பின் எந்த ஒரு தமிழ் படமும் 175 நாட்கள் உண்மையாக ஓடியது கிடையாது (பகல்காட்சியாக மட்டும் கூட). சினிமா என்பது முதல் பொழுதுபோக்காக இருந்த கிபி 2000-க்கு முன், ரஜினி உண்மையிலேயே ஒரு பாக்ஸ்-ஆபிஸ் ஸ்டார் என்றால், சராசரியாக அவருடைய 10 படத்தில் 1 படமாவது 175 நாட்கள் ரெகுலர் காட்சிகளாக ஓடியிருக்க வேண்டும்.

ஆனால் ரஜினியின் ஒரு படம் கூட ரெகுலர் காட்சிகளாக 175 நாட்கள் ஓடியதில்லை. இது தான் உண்மை. ஆனால் ரஜினி ரசிகர்களிடம் கேட்டால், தியேட்டர் கேன்டீன் எடுத்தவன் சம்பாதித்தான்... தியேட்டா பார்க்கிங் கான்ட்ராக்ட் எடுத்தவன் சம்பாதித்தான் என்பார்கள். ஏனென்றால், இவர்களிடம் போய் நாம் கேள்வி கேட்க போவதில்லை, ஆனால், படத்தயாரிப்பாளர்கள்/தியேட்டர் உரிமையாளர்கள் படுகின்ற (ரஜினியால் இன்றும்) நஷ்டம் அவனுக்கு புரியாது..

ஆனால் மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்படும் கமல்ஹாசனின் 175 நாட்கள் மற்றும் அதற்கும் மேலே ரெகுலர் காட்சிகளாக ஓடிய தமிழ்ப்படங்களின் சாதனைப் பட்டியல் இதோ...




திரைப்படம் திரையரங்குகள் - ரெகுலர் காட்சிகள்நாட்கள்
16 வயதினிலேசென்னை - மிட்லண்ட் (4 காட்சிகள்)
மதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)
175 நாட்கள்
266 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறதுசென்னை - மிட்லண்ட் (4 காட்சிகள்)175 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள்சென்னை - தேவிபாரடைஸ்
(3 காட்சிகள்)

மதுரை - சக்தி (4 காட்சிகள்)
175 நாட்கள்
நீயாஇலங்கை - யாழ்ப்பாணம் - சாந்தி (3 காட்சிகள்)275 நாட்கள்
கல்யாணராமன்சென்னை - அலங்கார் (3 காட்சிகள்)175 நாட்கள்
குருஇலங்கை -
கொழும்பு - கிங்ஸ்லி (3 காட்சிகள்)

தெஹிவளை - கொன்கோட் (4 காட்சிகள்)

வாழைச்சேனை - வெலிங்டன் (3 காட்சிகள்)
பதுளை - லிபர்டி (3 காட்சிகள்)
வவூனியா - வசந்தி (3 காட்சிகள்)
1095 நாட்கள்


365 நாட்கள்



200 நாட்கள்


மீண்டும் கோகிலாசென்னை - எமரால்ட் (4 காட்சிகள்)189 நாட்கள்
மூன்றாம் பிறைசென்னை - சுபம் (4 காட்சிகள்)

ஈகா,
மகாராணி (பகல் காட்சி)
329 நாட்கள்

218 நாட்கள்
211 நாட்கள்
வாழ்வே மாயம்சென்னை - காஸினோ (4 காட்சிகள்)
கமலா
மகாராணி (3 காட்சிகள்)

மதுரை - நியூசினிமா
186 நாட்கள்
175 நாட்கள்
200 நாட்கள்

242 நாட்கள் 
சகலகலா வல்லவன்சென்னை - அலங்கார் (3 காட்சிகள்)
அன்னை அபிராமி (4 காட்சிகள்)
AVM ராஜேஸ்வரி (4 காட்சிகள்) மகாராணி (3 காட்சிகள்)

மதுரை - சென்ட்ரல் (4 காட்சிகள்)
கோவை - தானம் (4 காட்சிகள்)
சேலம் - ஓரியன்டல் (4 காட்சிகள்)
175 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதேசென்னை - சக்தி அபிராமி (4 காட்சிகள்)
மதுரை - சுகப்பிரியா (4 காட்சிகள்)
188 நாட்கள்
253 நாட்கள்
ஒரு கைதியின் டைரிமதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)175 நாட்கள்
புன்னகை மன்னன்சென்னை - ஈகா காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175 நாட்கள்
நாயகன்சென்னை - ஆனந்த் (4 காட்சிகள்)

சென்னை - சக்தி அபிராமி (140 நாட்கள் வரை 4 காட்சிகள்)

மதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)

பெங்களூர் - பல்லவி
174 நாட்கள்

175 நாட்கள்


175 நாட்கள்

224 நாட்கள் 
அபூர்வ சகோதரர்கள்சென்னை - தேவிபாரடைஸ் (148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
அபிராமி காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
காசி (4 காட்சிகள்)

மதுரை - அபிராமி (4 காட்சிகள்)
திருச்சி - மாரீஸ் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
பெங்களூர் - பல்லவி (3 காட்சிகள்)
197 நாட்கள்

232 நாட்கள்
197 நாட்கள்

175 நாட்கள்
175 நாட்கள்

175 நாட்கள்
மைக்கேல் மதன காமராஜன்சென்னை - ஆல்பட் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175 நாட்கள்
தேவர்மகன் சென்னை - அன்னை அபிராமி (4 காட்சிகள்)
மதுரை - மீனாட்சி பாரடைஸ் (4 காட்சிகள்)
175 நாட்கள்

250 நாட்கள்
மகாநதி சென்னை - ஆனந்த் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
கோவை - ராகம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
180 நாட்கள்

190 நாட்கள்
சதிலீலாவதிசென்னை - தேவிகலா (4 காட்சிகள்)
அன்னை அபிராமி (4 காட்சிகள்)
175 நாட்கள்
இந்தியன்
சென்னை - சத்யம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
சங்கம் (135 நாட்கள் வரை 4 காட்சிகள்)
175 நாட்கள்
அவ்வை சண்முகிசென்னை - அபிராமி காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
கோவை - ராகம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
175 நாட்கள்






இதுமட்டுமல்ல, ஒரே வருடத்தில் (1982), ஐந்து வெள்ளி விழா படங்கள்  கொடுத்ததும் கமல்ஹாசர் மட்டுமே...

1. வாழ்வே மாயம்
2. மூன்றாம் பிறை
3. Sanam Teri Kasam (Hindi)
4. சகலகலா வல்லவன்
5. Yeh To Kamaal Ho Gayaa (Hindi)

இந்தப் பட்டியலை பார்த்தவுடன், உங்களுக்கே புரிந்திருக்கும் யார் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று...

சாதனைகள் பல செய்பவர்கள் விளம்பரம் செய்வதில்லை, அது கலையுலகில் கமல்ஹாசர் மட்டுமே...

தொகுப்பு : சண்டியர் கரன்   
உதவி : "பாரடைஸ்" யூனிட் சேகர், கண்ணன் (ஏர்போர்ட்),
நரசிம்மன் (திருச்சி), தயாளன், துரை,  முஜாபர்