Ads 468x60px

Friday, December 28, 2012

எந்திரனுக்கு டாப் 10 ல் இடம் உண்டா?

எந்திரன் படத்தின் உண்மையான லாபம் 37 கோடி தான்.

இந்த லாப கணக்கு ரஜினி ரசிகர்களை போல ரஜினிக்கு ஒரு கணக்கு, மற்ற நடிகர்களுக்கு ஒரு கணக்கு என்று போடப்பட்டதல்ல...

எந்திரன் படத்தை முதலில் தயாரித்த நிறுவனம் அப்ஸ்கான்டு ஆன பிறகு, ரஜினியும் ஷங்கரும் கலாநிதி மாறனை அவரது ஆபிஸூக்கு சென்று அவரை தயாரிக்கும்ப்டி கேட்டனர். அவர் உடனே சரி என்று ஒப்புகொள்ளாமல், நாலைந்து  நாள் கழித்து வாங்க என்று அனுப்பி, பின் தயாரித்தார். அப்படி தயாரித்த சன் டிவியின் காலாண்டு ரிப்போர்ட் தான் இந்த கணக்கை கூறுகிறது.

"The company earned revenues of Rs 179 crore, including Rs 15 crore expected towards satellite rights which has not been included in the revenues in this quarter. The company has spend Rs 132 crore crore on the production," it said.

http://articles.economictimes.indiatimes.com/2011-01-28/news/28425591_1_interim-dividend-satellite-rights-enthiran
-------------------------------------------------------------------------------------
வருமானம் 179 கோடி ( 15 கோடி டி.வி. உரிமையை சேர்த்து )
செலவு 132 கோடி
---------------------------------------------------
லாபம் 47 கோடி
---------------------------------------------------

படம் ரிலீஸூக்கு முன் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சன் நெட்வொர்க் சேனல்கள் அனைத்திலும் டிரெய்லர் போட்டார்கள், அந்த செலவை கணக்கில் சேர்த்தார்களா என்று தெரியவில்லை.

இவர்கள் தயாரித்த படத்தை இவர்களே 15 கோடிக்கு வாங்கியதாக கணக்கில் காட்டியிருக்கிறார்கள். மார்க்கெட் மதிப்பு 5 கோடிதான் இருக்கும்.
எனவே டிவி உரிமையின் அதிக மதிப்பு 10 கோடியை கழித்தால், படத்தின் உண்மையான லாபம் 37 கோடி தான்.


மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்" - குமுதம் (21.3.2012)
ஆனால் ஒரு ரஜினி பதிவர் லேட்டஸ்டாக துப்பாக்கி வசூல் பற்றி கூறுகிறார், துப்பாக்கி 3 வது இடத்திலையாம், எந்திரன், சிவாஜிக்கு அடுத்தாம்.

இந்த சன் டிவி காலாண்டு ரிப்போர்ட் & மேலே உள்ள கட்டுரை படி பார்த்தால், எந்திரனும் சிவாஜியும் டாப் 10 னிலே வராதே, அப்புறம் எங்கே முதல் இரண்டு இடத்திற்கு வருவது.

உண்மை இப்படி இருக்கும் போது, ரஜினி ரசிகர்களின் பதிவுலக கூத்தை
(1. எந்திரன் 2.சிவாஜி ) பார்த்தால்,  "டேய் உங்களுக்கு பொங்கலே கிடையாதே, எப்படி டா போகி கொண்டாடுறீங்க...", என்று விவேக் ஒரு படத்தில் சொல்வது மாதிரி இருக்கு.

இந்தியாவில், படத்தை திரையிடும் திரையரங்குகள் விநியோகிஸ்தர்களையும், விநியோகிஸ்தர்கள் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது, அந்த ரஜினி பதிவருக்கு மட்டும், எல்லா தியேட்டர்காரங்களும் தினசரி கலெக்சனை ஈமெயில் அனுப்புறாங்களோ???விஸ்வரூபத்தின் DTH ப்ரீமியர் தமிழில் மட்டுமே 50 கோடி (வெள்ளை) வருமானம்... இதுவே எந்திரனின் மொத்த லாபத்தை விட அதிகம்...

DTH புதுமை மாதிரி, படத்தின் வசூல் நிலவரங்களையும் இந்தியாவிலேயே முதல் முறையாக, விஸ்வரூபத்திற்கு, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்.

இப்படி செய்தால் தான் பொய்யர்களின் முகத்திரயை மக்களே கிழிப்பார்கள்.


Wednesday, December 26, 2012

மாஸ் = கமல்

இந்த பதிவின் தலைப்பு பரபரப்புக்காக இல்லை.. . உண்மையை இவ்வுலகம் தெரிந்து கொள்ள தான்...


முதலில் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்,இது கமல்ஹாசன் விஸ்வரூபம் புரோமோஷனுக்கு உத்திரபிரதேஷம் லக்னோவிற்கு சென்ற போது எடுக்கப்பட்டது.

இந்த கூட்டம் கமல்ஹாசனை கண்டவுடன் தங்களை மீறி அதி மகிழ்ச்சியில் அவர்கள் போடும் சத்தம் தான், கமலுக்கு இன்றும் வட இந்தியாவில் இருக்கும் மாஸ்-க்கு ஒரு சேம்பிள்...

இதற்காக கமல்,

1. மன்னிப்பு நடிகரை போல வட இந்தியா மீடியாவில் தன்னை பற்றியும் தன் படங்களை பற்றியும் தானே புகழ்ந்து கொண்டதில்லை...

2. உண்மையிலே அதிக சம்பளம் வாங்கியும்,  நான் தான் ஜாக்கி சானுக்கு அடுத்து என்று மீடியா மூலம் பரப்ப வில்லை...

3. சென்னைக்கு பிழைக்க வந்த நேபாளிகளை தன் வீட்டுக்கு அழைத்து, போட்டோ எடுத்து, தனக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உண்டு என்று பொய் சொல்லவில்லை...

கமல் செய்ததெல்லாம்,

1. மற்ற நடிகர்களை விட சிறப்பாக நடித்தது

2. சினிமாவில் புதிய முயற்சிகள் செய்ததது

3.வெற்றி தொல்விகளை பார்க்காமல் வித்தியாசமான படங்களை கொடுத்தது தான்.

எனவே தான் கமல் ஹிந்தியில் நேரடியாக நடித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியும், அவர் மீதுள்ள கிரேஸ் இன்றும் அப்படியே இருக்கிறது.

அப்படியே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை மெய்மறந்து தரிசித்த இளைஞர்கள் + இளைஞிகள் கூட்டத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்.


Friday, December 14, 2012

ரஜினி ரசிகர்களை ஏன் சந்தித்தார்?

தன் பிறந்த நாளுக்கு முன்பே இமயமலை அல்லது பெங்களூருக்கு டெலிவரி ஆகிவிடும் ரஜினி இந்த வருடம் சென்னையிலேயே இருந்தார்.

இதுவே அதிசயம் என்றால், தன் ரசிகர்களை வீட்டுக்கு வெளியே வேறு வந்து வந்து பார்த்திருக்கிறார்.

அதற்கும் மேலே, இவரது ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் வந்து மேடையேறி பேசியிருக்கிறார்.

இவையெல்லாம் 2011 வரை நடக்கவில்லை, ஏன் என்று கேட்டால் வெளியூர்களிலிருந்து இவரை காணவரும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பார்.இந்த வருடம் மட்டும் நடந்ததற்கான காரணம் என்ன?

1. ஒருவேளை ரஜினிக்கு அவர் ஜோசியர் 2012 லிருந்து விபத்துக்கள் நடக்காது என்றிருப்பாரோ?


2. சிவாஜி 3D படத்தை அவரின் ரசிகர்களாவது பார்க்க வேண்டும் என்பதற்காகவா?

3. ஐந்து வருடங்களாக, சுல்தான் தி வாரியரை ராணாவாக்கி, ராணாவை கோச்சடையானாக்கி, தன் மகளால் கடனாளியாவுமாகி தத்தளிப்பதால், தப்பி தவறி படம் வெளியானால் ரசிகர்களாவது அந்த படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா?

4. மதுரை, கோவை & சென்னையிலே ஒரே நாளில் ஒவ்வாரு இடத்திலும் 10000க்கும் மேற்ப்பட்ட ரசிகர்களை கமல் கூட்டியாதாலா?

5. கமல் தன் விஸ்வரூபத்தை DTH-ல் ஒரு காட்சி வெளியிட போகிறேன் என்றவுடன், ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று இலவசமாக அவருக்கும் விஸ்வரூபத்துக்கும் கிடைத்த விளம்பரத்தாலா?

Monday, December 10, 2012

விஸ்வரூபம் Vs அரைவேக்காடுகள்

கமல்ஹாசன் இதுவரை தன் படங்களில் தான் புதுமைகளை புகுத்திக் கொண்டிருந்தார், விஸ்வரூபத்தின் மூலமாக வியாபாரத்திலும் புதுமைகளை படைத்து கொண்டிருக்கிறார்.

1. படத்தின் ப்ரீமியர் ஷோ பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவில் ஒரு தடவை DTH-ல் ஒளிபரப்பு

2. படத்தை விநியோகிஸ்தர்களிடமோ அல்லது திரையரங்குக்கு MG அடிப்படையில் கொடுக்காமல், திரையரங்கில் வாடகை கொடுத்து திரையிடுதல் ( லாபமோ நஷ்டமோ கமலுக்கு மட்டுமே )சென்ற வாரம் கமல்ஹாசனை சந்தித்த போது நான் அவரிடம் கூறியது :- உங்களின் தசாவதாரம் தான் தென்னிந்தியாவின் உச்சம் வசூலிலும் லாபத்திலும், ஆனால் அவை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க பட வில்லை. ஆனால் இந்த விஸ்வரூபம், நமது "ராஜ்கமல்" படம், இதன் வசூல் விபரங்கள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுமா? அதற்கு கமல்ஹாசன் கூறியது
"கண்டிப்பாக வெளிப்படையாக கூறுவேன், நான் "வெள்ளை"யில் தான் வியாபாரம் செய்கிறேன், யாருக்கும் பயப்பட தேவையில்லை"
 என்று!!!

DTH-ஐ எதிர்க்கும் சில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், உண்மையில் அதற்காக எதிர்க்கவில்லை என்றே தோன்றுகிறது, அவர்களுக்கு தெரியும் கமல்ஹாசன் படத்திற்கு மட்டுமே ஹைகிளாஸ் ஆடியன்ஸ் அதிகமாக வருவார்கள், அவர்களிடம் தான் முதல் வாரத்தில் 300ரூபாய் 500 ரூபாய் என்று வசூலிக்க முடியும், கணக்கில் காட்டாமல். ஆனால் கமலோ, விஸ்வரூபத்தை தியேட்டருக்கு வாடகை (கமல் என்றால் வெள்ளையில் தான் வாங்குவார்) கொடுத்து தான் திரையிட போகிறார். அப்படி செய்தால் வரும் வருமானம் அனைத்தும் கமலுக்கே செல்லும், இவர்களால் ஓப்பனிங் கொள்ளை அடிக்க முடியாது, இதனை போய் மக்களிடம் சொல்ல முடியுமா அல்லது முதல்வரிடம் சொல்ல முடியுமா? அதனால் தான் DTH-ஐ எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள்.

அடுத்து பாவம் ரஜினி ரசிகர்கள், ரஜினியோ 5 வருடத்திற்கு முன் ஆரம்பித்த சுல்தான் தி வாரியர் படத்தை முடிக்க முடியாமல், கேஎஸ் ரவிக்குமார் மூலமாக கமல் ஐடியாக்களை திருடி, ராணா என்று பாழடைந்த வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தார்கள், முதல் நாளிலேயே ஷூட்டிங் நிறுத்தப் பட்டது, ஒன்றரை வருட ஆஸ்பத்திரி வாழ்க்கைக்கு பின், இப்போது கோச்சடையான் என்று காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது வரை 100 கோடி வசூல் 200 கோடி வசூல் என்று வாய்க்கு வந்ததை கூறிக்கொண்டிருந்தார்கள், சாட்சிகளின்றி. நம் தலைவரோ படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பே DTH-க்கு 50 கோடிக்கு விற்றுவிட்டார். இது தான் கடந்த ஒரு வாரமாக இந்தியா முழுவதும் பேச்சு, செலவில்லாமல் படத்திற்கு விளம்பரம் வேறு.  விஸ்வரூபம் மொத்தமாக கண்டிப்பாக வெள்ளையிலே 500 கோடியை தாண்டும ( 2008-ல் தசாவதாரம் வசூலித்தது 250 கோடிக்கும் மேல் ).

எனவே பதிவுலகில் இருக்கும் சிறுபான்மை ரஜினி ரசிகர்கள், விஸ்வரூப வியாபாரம் மற்றும் அதற்கு கிடைத்த இலவச விளம்பரங்கள் (ரஜினியும் அவரது ரசிகர்களும் காசு கொடுத்து தான் செய்ய முடியும்)  மீதான வயிற்றெரிச்சல்களால் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் ஏதேனும் விஸ்வரூபத்திற்கு எதிராக ஏதேனும் பதிவிட்டால், அவர்களின் கமெண்ட் பக்கத்தில் சென்று கொஞ்சம் ஆறுதலாக பேசவும்....


Sunday, December 9, 2012

DTH - கமல்ஹாசன் விளக்கம்


DTH ஒரு புதிய பரிணாமம்:


இவ்விளக்கத்தை கமல்ஹாசன் குரலில் கேட்க

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம்,  புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.


இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா? 


DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

-கமல்ஹாசன்

Saturday, December 8, 2012

விஸ்வரூபம் ஆடியோ - ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு

புதுமைகளின் தலைவன் கமல்ஹாசன் இம்முறை விஸ்வரூபம் ஆடியோவை  தமிழகத்தின் மூன்று மாநகரங்கள் மதுரை, கோவை மற்றும் சென்னையில், தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக வெளியிட்டார்.

மூன்று ஊர்களில் நடத்த முடியாது, அப்படியே நடத்தினாலும் கூட்டம் கூடாது என்று "மன்னிப்பு காந்த்" ரசிகர் இணையத்தில் கூவிக்கொண்டிருந்தனர். விழாவை நடத்திக் காட்டி கமல்ஹாசனும், விழா மைதானத்தை நிரப்பி கமல் ரசிகர்களும், "மன்னிப்பு காந்து ரசிகர்களை புகைய விட்டு விட்டார்கள்.

மதுரை மற்றும் கோவையில் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் விழா மைதானத்திற்கு வந்திறங்கினார். சென்னையில் ஹெலிகாப்டருக்கு தடை இருப்பதால் சென்னை கமல் ரசிகர்களுக்கு அந்த காட்சியை நேரடியாக காண முடியவில்லை, எனவே விழாவை நடத்தி ஜெயா டிவி, மதுரையில் தலைவர் ஹெலிகாப்டரில்  இறங்கியதை காட்டி புண்ணியம் தேடிக்கொண்டது.


விஸ்வரூபம் ஆடியோ வெளியீட்டிற்கு, சென்னை ராயபேட்டை YMCA-ல், ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவு எண் 10094) மற்றும் பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து வைத்த பேனர்கள் இங்கே...
விழா மைதானத்திற்கு வெளியே கமல் பகதர்கள் நடத்திய பூஜைகள்....அரசியல் கட்சி மாநாட்டுக்கு நிகராக, 500க்கும் மேற்ப்பட்ட போலீஸார்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பில் ஈடுபட்டு, விழாவை அமைதியான முறையில் நடத்தி கொடுத்த தமிழக போலிஸாருக்கு இப்பதிவின் மூலமாக, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

விழா தொடங்க சிறிது கால தாமதம் ஆனதால், "ரேடியோ" சங்கர் என்ற கமல் பக்தர்,


கமல்ஹாசனை பற்றி இப்படி கத்திக் கொண்டும்,


"தலைவா... உன்னை நினைக்காத நாள் என் நினைவு நாள்"
இப்படி  பாடிக் கொண்டும்,

"மண்ணானால் நான் பரமக்குடியின் மண்ணாவேன்....
சொல்லானால் நான் கமல் என்னும் சொல்லாவேன்..... 
செருப்பானால் நான் கமல் காலில் செருப்பாவேன்..."

அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

உலகநாயகன் விழா மேடைக்கு வந்த போது ஆர்பரித்த கமல் ரசிகர்ளின் வீடியோ இங்கே...


உலகநாயகன் விழா முடிந்து சென்ற போது அவர் காரை சூழ்ந்த கமல் ரசிகர்ளின் வீடியோ இங்கே...

 விழாவின் ஹைலைட்டுகள்.....

மேடையில் கமலிடம்  ஜெயராம் கேட்ட கேள்வி இது தான், " சார், நீங்க ஹாலிவுட்டு போகப் போறீங்க, அங்க போய் எந்த நடிகையை முத்தமிட ஆசைபடுகிறீர்கள்". தலைவரின் பதில் இது தான், " ஏங்க நான் என்ன கிஸ் கொடுக்கவா ஹாலிவுட்டுக்கு போகிறேன்? எச்ச பண்றதுகாக யாராவது ஹாலிவுட்டுக்கு  போவாங்களா?". கமல் நம்ம மீடியாக்காரர்களின் அறிவாளித்தனத்தை தோலுறிக்க, ஜெயராமை அவரே இப்படி கேட்க சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன், இப்படியாவது அவனுங்க திருந்தினா சரி தான்....

 கே.எஸ்.ரவிக்குமார் மேடையில் ஆழ்வார்பேட்டை ஆண்டவா, வருஷத்திற்கு ஒரு படம் நடித்து தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் ( கோச்சடையான் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து விட்டது போல....)

A.R.முருகதாஸூம் தன் பங்குக்கு வாய்ப்பை இப்படி கேட்டார். கமல் சாரிடம் பேசிக்கொண்டிருந்த போது சிவாஜி என்ற சிங்கத்திற்கு ஒரு கட்டத்தில் தயிர் சாதம் மட்டுமே கொடுத்தார்கள், தனக்கும் அப்படி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான், எனக்கான சமையலை நானே தயார் செய்து கொள்கிறேன் என்றார். ஆனால் நான் ரிடையர் ஆவதற்கு முன்னால், உங்களுக்கான சமையலை நான் தயாரிப்பேன் என்று கமல்ஹாசனிடம் மீண்டும் வாய்ப்பு கேட்டார்.

டைரக்டர் வசந்த், மியூசிக் அக்டாமியின் சேர்ந்த ஒருவர் அவரிடம் கமல் எதையுமே விட்டு வைக்கா மாட்டாரா என்று கேட்டாராம்.  என்னவென்றால், விஸ்வரூபத்தில் கமல் "கொன்னக்கோல்"  பாடியிருக்கிறாராம். எந்த பாட்டு என்று உங்களுக்கு தெரிகிறதா?

Tuesday, November 27, 2012

கமல் ரசிகர்கள் Vs மற்ற ரசிகர்கள்

உலகில் எந்த நடிகர்களின் ரசிகர்களுக்கும் இல்லாத சிறப்பு கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு உண்டு. தென்னிந்திய சினிமாவின் பல நடிகர்களுக்கு  ஒரு படம் ஓடி விட்டாலே அரசியல் ஆசை வந்துவிடும். எம்ஜிஆர், என்டிஆர் தவிர அரசியல் ஆசையில் வீழ்ந்தவர்களே அதிகம்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர் ஒருவர் அவர்களின் ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டியே காலத்தை ஓட்டிவிட்டார், இவரின் ரசிகர்களுக்கு இப்போது வயது 50க்கும் மேல் ஆகிவிட்டது, அவர்களுக்கு அந்த நடிகரின் பேனர்களுக்கு பால் ஊற்ற தெரியும்,  பீடி குடிக்க தெரியும். அவர்களால் அவர்களின் குடும்பங்களுக்கே உபயோகம் இல்லாத போது நாட்டிற்கு என்ன உபயோகம் ஆகிவிடும்.

கமலின் படங்கள் எப்படி தனித்துவம் வாய்ந்ததோ, அதே போல அவரின் ரசிகர்களையும் மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல அல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக மாற்றியுள்ளார். எம்ஜியார், கமலை அரசியலுக்கு 1986லே அழைத்தாலும், அதை மறுத்து, தன் ரசிகர்ளுக்கும் அந்த ஆசை இல்லாமல் பார்த்துகொண்டார். கமல் ரசிகர்கள் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல, அவர்களால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒருவகையில் உபயோகமாக இருக்கும் படி இன்றும் வழி நடத்துகிறார் கமல்ஹாசன்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான், விருதுநகர் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, நவம்பர் 25 அன்று, சிவகாசி அண்ணா காலனியில், உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த தினம் நற்பணி விழாவாக கொண்டாடப்பட்டது.

நற்பணி விழாவை, விருதுநகர் மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் A.S.நாகராஜன், சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்திருந்தார். சிவகாசி செயல்வீரர் சசிபாலன் அவருக்கு உறுதுணையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பம்பரமாக சுழன்று விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்தார்.

நற்பணி விழாவை, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் R.தங்கவேலு தலைமை தாங்கினார்.நற்பணி விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பின்வருமாறு....

1. அன்னை சாரதா ஆசிரம 100+ குழந்தைகளுக்கு காலை உணவு
2. இரத்த தான முகாம் ( 150+ கமல் ரசிகர்கள்  )
3. மரக்கன்றுகள் (58) நடுதல்
4. கமல் ரசிகர்களின் சிலம்பாட்டம்

5. சிவகாசி மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்


6. CSI பள்ளி மன வளர்ச்சி குன்றிய 350+ குழந்தைகளுக்கு மதிய உணவு
7. முதியவர்களுக்கு இலவச வேட்டி/சேலை
8. சிறுவர்/சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

நற்பணி விழாவில், தேனி மாவட்ட பொறுப்பாளர் வைகை ஜெயக்குமார், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சந்துரு, தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் தர்மசரவணன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் அழகர், குமரி மாவட்ட பொறுப்பாளர் சசி,  மதுரையின் பரமக்குடியாரின் பயமறியா பாசக்காரப்பயலுக தலைவர் கொம்பமுத்துவும் அவருடைய குழுவும், சென்னையின் பாரடைஸ் யூனிட்  சேகர் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Monday, November 19, 2012

ரஜினியின் டெங்கு ராசி - Part 2

ரஜினியின் டெங்கு ராசி - Part 1 கிளிக் செய்க1995 நிகழ்வு : 

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாரின் முதல் பட ( முறை மாப்பிள்ளை ) பூஜையில்  ரஜினி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

விளைவு : 
 
இன்றும் அவர் ஒரு ஹிட் படத்திற்காக தவித்துக் கொண்டிருக்கிறார். பெயரை அருண் விஜய் என்று மாற்றியும் விட்டார்.

2007 நிகழ்வு :

நடிகை நயன்தாரா ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தம் ஆனார்.

விளைவு :

சிம்பு - நயன்தாரா காதல் ஜோடி பிரிந்தது. ஏன் என்று விளக்கமாக அன்று குமுதம் ஒரு கட்டுரை கூட வெளியிட்டது.
 
 2011 நிகழ்வு :

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மக்களை தட்டி எழுப்பி கொண்டிருந்தார். சென்னையில் அவர்கள் குழு உண்ணாவிரதம் இருக்க ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் தேர்வு செய்யப்பட்டது.

விளைவு :

அந்த மண்டபத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு பிறகு தான் அன்னா ஹாசாரே குழுவின் முக்கிய நிர்வாகிகளின் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. பின் ஹசாரே அரசியல் கட்சி தொடங்குவேன் என்று கூறிவிட்டு பின் தொடங்கமாட்டேன் என்று ரஜினி மாதிரி பல்டி அடித்தார். ரஜினியின் மண்டபத்தை பயன்படுத்தியற்கே இந்த நிலைமையா?

பல வருடங்களாக தொடர்பவை 1 :

ரஜினி எந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்டாலும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆகும். எ.கா. அஜீத் நடித்த அசல்.பல வருடங்களாக தொடர்பவை 2 :


பட பூஜை மட்டுமல்ல, ஆடியோ ரிலீஸில் அவர் கலந்து கொண்டாலும் விபரீதமாக தான் முடியும். ரஜினியின் பிறந்த நாளில் (2005)  பாக்யராஜ் தன் மகள் அறிமுகமான பாரிஜாதம் படத்தின் ஆடியோ ரஜினி தலைமையில் வெளியிட்டார். படமும் ஓடவில்லை, பாக்யராஜ் பொண்ணும் ஜொலிக்க வில்லை, அந்த பெண் தற்கொலைக்கும் முயன்றாள்.  எனவே பெரும்பாலும் அவரை திரையுலகத்தினர் தவிர்க்கவே விரும்புவார்கள். சமீபத்தில் கூட நடிகர் பிரபு தன் மகன் அறிமுகமாகும் கும்கி படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ரஜினி வரவில்லை என்று நிம்மதியாக தான் இருந்தார், ஆனால் வரமாட்டேன் என்று கூறி விட்டு விழா தொடங்கும் முன்னே வந்து பிரபுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். ஆடியோ ரிலீஸ் ஆகி பல மாதங்கள் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை அவரின் ராசியால்...

பல வருடங்களாக தொடர்பவை 3 :

ரஜினி நடித்த பழைய படங்களின் பெயரை புதிய படங்களுக்கு உபயோகித்தால் அந்த படமும் அட்டர் ப்ளாப் ஆகும், எ.கா. மாப்பிள்ளை, குரு சிஷ்யன், படிக்காதவன், முரட்டுகாளை. தப்பித்தது தனுஷ் நடித்த பொல்லாதவன் மட்டுமே, அதற்கு காரணமும் உண்டு, அப்படத்தில் கமல் பாடிய "எங்கேயும் எப்போதும்" பாடலை ரீமேக் பண்ணியிருப்பார்கள்.


இதையெல்லாம் மறுப்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்சன்ஸ், அப்படத்தை மிகப் பெரிய வெற்றி என்று கூறிக்கொண்டு, தங்கள் "மினி சாந்தி" திரையரங்கை ஏன் ரஜினியை வைத்து திறப்பு விழா நடத்தவில்லை ? 

மினி சாந்தி திரையரங்கை திறந்து வைத்தது யார் என்பதை காண இங்கே கிளிக் செய்கSaturday, November 17, 2012

சின்னத்திரை - கமல் vs ரஜினி

தூர்தர்ஷன் மட்டும் தான் டிவி என்று இருந்த காலகட்டத்தை, லோக்கல் கேபிள் டிவிக்களும் சேட்டிலைட் டிவிக்களும் உடைத்து முன்னே சென்று கொண்டிருந்த 90 களில் தான் தமிழ் சினிமாவும் தேக்கம் காண ஆரம்பித்தது. தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்து போனது. திருட்டு வீடியோ கேசட், கேபிள் டிவியில் உரிமை பெறாமல் புதிய படங்களை ஒளிபரப்புவதும் நியாமான காரணங்களாயிருந்ததால், தமிழக அரசு கடுமையான சட்டங்களினால் அவற்றை தடுத்தது.

அப்படியும் பல படங்கள் மண்ணை கவ்விக் கொண்டு தான் இருந்தன. நடிகர் சங்கம் தன் அறிவுக் கண்ணை திறந்து ஒன்றை கண்டுபிடித்தது, அது என்னவென்றால், நடிகர் நடிகைகள் சேட்டிலைட் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதால் தான் படங்கள் ஓடவில்லை என்று. அதுமட்டுமல்லாமல் பேட்டிகளுக்கு தடையும் விதித்தது.

புதிய தொழில்நுட்பங்களின் நண்பன் கமல்ஹாசன், அந்த தடையை வன்மையாக கண்டித்ததும் மட்டுமல்லாமல், தடையை மீறி சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்தார். ஆனால் ரஜினியோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார், உழைப்பாளி படத்தின் போது ஓவராய் பேசி விநியோகிஸ்தர்களிடம் மாட்டிக் கொண்டது போல் நடிகர் சங்கத்திடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க. கமல் மட்டும் தான் தவறுகளை நிஜத்தில் கண்டிப்பவரும் எதிர்த்து போராடுபவரும் கூட.

பின் சின்னத்திரையை சினிமாவிற்கு எப்படி பயன்படுத்துவது என்று வழியும் காட்டினார். இப்போது திரைப்படத்தின் உரிமையை விநியோகிஸ்தர்கள் வாங்கும் முன் சேட்டிலைட் சேனல்கள் ஒளிபரப்பும் உரிமையை வாங்கி விடுகின்றன. தயாரிப்பாளர்களும் இதில் ஒரு கனிசமான தொகையை அள்ளி விடுகிறார்கள்.

தமிழில் கமல்ஹாசனின் "தசாவதாரம்" தான் இன்று வரை அதிக விலைக்கு (5 கோடியே 10 லட்சம்) சேட்டிலைட் சேனலால் வாங்கப்பட்ட படம். எந்திரன் படத்தை தயாரித்த சன் டிவியே அந்த படத்தை 15 கோடிக்கு வாங்கினாலும், ஏன் கணக்கில் கொள்ள முடியாது என்றால், உதாரணத்திற்கு நீங்கள் இரண்டு கம்பெனிகள் வைத்திருக்கிறீர்கள், உங்களுடைய ஒரு கம்பெனியில் தயாரித்த பொருளை, உங்களுடைய இன்னொரு கம்பெனியின் மூலம் வாங்குகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு லாபமா? இரட்டை செலவு தான் அது.... தயாரிப்பு செலவு மற்றும் அதை நீங்களே வாங்கிய செலவு.

கலைஞர் டிவி தசாவதாரத்தை முதலில் ஒளிபரப்பிய போது படம் 6 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 11.10 மணிக்கு முடிவடைந்தது, 30 நிமிட செய்திகள் மற்றும் படத்தின் நீளமான 190 நிமிடங்களை கழித்தால், விளம்பரங்கள் மட்டும் ஏறக்குறைய 90 நிமிடங்கள் ஒளிபரப்ப பட்டுள்ளன.

10 நொடிகளுக்கு 2 லட்சம் என்றால், 90 நிமிடங்களுக்கு 10 கோடியே 80 லட்சம் சம்பாதித்துள்ளது. முதல் தடவை ஒளிபரப்பியதிலே இரண்டு மடங்கு லாபம் கொடுத்துள்ளது கமலின் தசாவதாரம். கலைஞர் டிவி இது வரை தசாவதாரத்தை 7 முறைகளுக்கு மேல் ஒளிபரப்பியுள்ளது.

2012 ஆயுதபூஜைக்கும் தசாவதாரம் ஒளிபரப்பப் பட்டது, 8 மெயின் ஸ்பான்சர்களுடன் ( Jos Alukkas, Gold Winner, Preethi, Coramental Cement, Dress Parade, Bharathi Cement, Cardia Olive Oil and Ramraj ). 25 நிமிடம் படத்துடன் ஒவ்வொரு ப்ரேக்கிலும் சராசரியாக 14+ விளம்பரங்களும் போடப்பட்டன, மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி 30 நிமிட செய்திகளுடன், கிட்டத்தட்ட 9 மணிக்கு முடிந்தது.அள்ளி தருவதில் தசாவதாரம், கலைஞர் டிவிக்கு அட்சயப் பாத்திரம் என்றால் மிகையாகாது.

யோசித்து பார்த்தீர்கள் என்றால், சின்னத்திரையில் கூட ரஜினி படம் சாதாரண நாட்களில் ஒளிபரப்ப மாட்டார்கள், பண்டிகை தினத்தில் மட்டும் தான், அதுவும் பல மாத கால இடைவெளியில் ( எப்படி ரஜினி 3 வருடத்திற்கு ஒரு முறை நடிப்பது போல) தான் ஒளிபரப்புவார்கள். ஏனென்றால் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பினால் தான் பார்வையாளர்கள் வேறுவழியின்றி ரஜினி படத்தை பார்த்து தொலைப்பார்கள், இதிலும் எவ்வளவு பெரிய மோசடி?

ஆனால் கமலின் படங்களோ (குறிப்பாக நாயகன், வசூல்ராஜா MBBS, பஞ்ச தந்திரம், அன்பே சிவம், குணா, ஆளவந்தான், தேவர் மகன், தெனாலி, அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ), சின்னத்திரைகளில் சாதாரண நாட்களில் கூட அதிகமான் ஸ்பான்சர்களுடன் அடிக்கடி ஒளிபரப்ப படுகிறது. எத்தனை தடவை போட்டாலும் அத்தனை தடவையும் கமல் படங்களை பார்வையாளர்கள் பார்ப்பதால் தான் டிவிக்களும் ஒளிபரப்புகிறார்கள், ஸ்பான்சர்களும் குவிகிறார்கள்.

ரஜினியின் படங்களை பெரிய திரையில் தான் ரீ-ரிலீஸ் செய்யப் விநியோகிஸ்தர்கள் தயாரில்லை என்றால், சின்னத்திரையில் கூட அடிக்கடி ஒளிபரப்ப ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை..

Friday, November 9, 2012

"உயர்ந்த" நாயகன் Vs "தாழ்ந்த" மனிதன்

கமல்ஹாசன் "ஹிந்து"-வில் "நாயகன்" பற்றிய உண்மையை வெளியிட்ட கட்டுரையையும், பதிலளிக்கிறேன் என்று முக்தா வெளியிட்ட வயிற்றெரிச்சலையும் பற்றி பதிவு போட்டு, கிடைத்த "கேப்"-பில் மனிதன் என்ற படத்தை எல்லாரும் 24 வருடத்திற்கு முன்பே மறந்து விட்ட நிலையில், அப்படத்தை "வெற்றி" என்று டெங்குவை விட கொடிய கருத்தை பரப்பும் பதிவருக்கும், அதை நம்புவர்களுக்கும் மற்றும் முக்தாவுக்குமான பதில் இது.

முக்தா கூறியது போல் கதையை மாற்றி விட்டார்கள் என்றால் படத்தை ஆரம்ப கட்டத்திலேயே "ட்ராப்" செய்திருக்க வேண்டியது தானே அவர் ?

சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுக்க பிரச்சினை செய்த போது கமல் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் என்பவர் லாபம் சம்பாதிக்க மட்டும் தானா? கமலே தன் கட்டுரையில் ஒரு கட்டத்தில் தானே சோர்ந்து விட்டதாக கூறியிருக்கிறார், இந்த வேலையையாவது அவர் செய்யட்டும் என்று தான் விட்டிருப்பார்.

படத்தை எடுத்தவுடன் "GV" க்கு விற்றும் விட்டார் (நெகட்டிவ் உரிமை உட்பட). அந்த நேரத்தில் வந்த வரைக்கும் லாபம் என்று தானே விற்றிருக்கிறார். நாயகன் மிகப் பெரிய வெற்றியடையும் என்று புரியாமல் தானே விற்றார். அதை தானே கமலும் "OLD SCHOOL" என்று சொன்னார்.

நாயகனை காட்பாதருடன் ஒப்பிட்டு தமிழ் கலைஞர்களின் ஒப்பற்ற படைப்பை சிறுமை படுத்த முயற்சிக்கும் கூட்டத்திற்கு "விஸ்பரூப" பதிலடியை ஏற்கனவே உலக சினிமா ரசிகன் கொடுத்துவிட்டார், அதை படிக்க இங்கே க்ளிக் செய்க.

அடுத்து கிடைத்த கேப்பில் ஒரு பதிவர் நாயகனை விட மனிதன் வெற்றிபடம் என்றும், முக்தா தயாரித்து ரஜினி நடித்த தோல்வி படங்களான பொல்லாதவனும் சிவப்பு சூரியனும் ஓரளவுக்கு வெற்றிபடங்கள் என்று புளுகி ரஜினி ரசிகன் என்பதை நிருபித்து விட்டார்.

ரஜினிக்கு ரெகுலர் காட்சிகளில் ஒரு வெள்ளிவிழா படம் கூட கிடையாது, சில படங்கள் பகல்காட்சியில் ஓடினாலும் பல படங்கள் பகல்காட்சியில் தியேட்டரில் வாடகை கொடுத்து தேய்க்கப்பட்டவை. உண்மையில் மனிதன் ஓடியிருந்தால் எத்தனை தியேட்டரில் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்கள் ஓடியுள்ளது?

நாயகன் மொத்தமாக 11 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல்  ஓடியுள்ளது,
சென்னையில் திரையிட்ட 4 தியேட்டரிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களுக்கு மேலும்,  ஆனந்த காம்ளக்ஸில் ரெகுலர் காட்சிகளில் 175 நாட்களுக்கு மேலும் ஓடியுள்ளது.நாயகன் பெங்களூர் பல்லவியில் 3 காட்சிகளாக 50 நாட்களும், பகல் காட்சியில் 225 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.பல தடைகளை தாண்டி புதிய பாணியில் எடுக்கப்பட்ட நாயகன் பாக்ஸ் ஆபிஸிலும் மனிதனை துரத்தி துரத்தி அடித்து வீழ்த்தியதற்கு இதற்கு மேல் சான்றுகள் தேவையில்லை.

Tuesday, November 6, 2012

கமல்ஹாசனே தொடக்கம்

7-நவம்பர் 2012 இன்று பிறந்த நாள் காணும் அரசியலில் ஈடுபடாத அரசன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர், பரமக்குடி பரமாத்மா எங்கள் கமல்ஹாசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் 13 தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் "நாயகன்".

சென்னையில் அதிக திரையரங்கங்களில் வெளியான முதல் திரைப்படம், கமல்ஹாசனின் "வேட்டையாடு விளையாடு" - 16 தியேட்டர்கள்.

சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் (10 திரையரங்குகளிலும் ) வரை திரையிடப்பட்டது.

திரையுலகில் முதலில் கண் தானம் செய்தவர் கமல்ஹாசன்.திரையுலகில் முதலில் உடல் தானம் (2002) செய்தவர் நற்பணி நாயகன் கமல்ஹாசன்.


தமிழ்நாட்டில் முதலில் 100 நாள் ஓடிய மலையாளப் படம், கமல்ஹாசனின் ராசலீலா. சென்னை எலிபென்ஸ்டனில் 112 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய கன்னடப் படம், கமல்ஹாசனின் கோகிலா. சென்னை எமரால்டில் 175 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. சென்னை சபையரில் 600 நாட்களும், கோவை ராயலில் 450 நாட்களும் ஓடியது.

தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய (ரெகுலர் காட்சிகள்) ஹிந்திப் படம், கமல்ஹாசனின் ஏக் துஜே கே லியே. சென்னை அலங்காரில் 175 நாட்கள் ஓடியது.

ஒரே ஆண்டில்(1982) நான்கு முறை 200 நாட்களுக்கு மேல் ஓடியது உலகிலேயே கமல்ஹாசனின் படங்கள் தான்.
சனம் தேரி கசம்
மூன்றாம் பிறை
வாழ்வே மாயம்
சகலகலா வல்லவன்

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்.
பல்லவி ( 175 நாட்கள் )
நட்ராஜ்( 112 நாட்கள் )
லட்சுமி( 112 நாட்கள் )
கல்பனா( 110 நாட்கள் )
சாந்தி( 105 நாட்கள் )

தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படம், தமிழில் கமல்ஹாசன் நடித்து தயாரித்த "விக்ரம்" (1986) படமே.1986-ல் தன் ரசிகர்களுக்கு மாநாடு நடத்திய முதல் நடிகர் கமல்ஹாசனே.


1988-லில் முதல் முறையாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்து அதனை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசனே.

தமிழ் நாட்டில் 100 நாட்கள் ஓடிய முதல் டப்பிங் படம், கமல்ஹாசனின்  இரு நிலவுகள், அதை தொடர்ந்து சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்திரன் சந்திரன், பாசவலை என்று தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட கமலின் அனைத்து படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.

தமிழில் நாயகன் படத்தில் முதல்முறையாக முடியை ஜெல் மூலம் வழித்து நடித்தார். பின் வந்த படங்களில் அதுவே ஸ்டென்டர்டு ஆனது, ஊரின் தலைவராக ஹீரோ இருந்தால் ( சின்ன கவுண்டர், நாட்டாமை... ).இந்தியாவில் முதல் முறையாக டால்பி சவுண்டில் எடுக்கப் பட்ட முதல் படம், கமல்ஹாசனின் குருதிப்புனல் (1995).

இந்தியாவில் தொடர்ந்து 1000 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய முதல் படம் கமல்ஹாசனின்  "சகலாகலா வல்லவன்".