Ads 468x60px

Tuesday, November 27, 2012

கமல் ரசிகர்கள் Vs மற்ற ரசிகர்கள்

உலகில் எந்த நடிகர்களின் ரசிகர்களுக்கும் இல்லாத சிறப்பு கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு உண்டு. தென்னிந்திய சினிமாவின் பல நடிகர்களுக்கு  ஒரு படம் ஓடி விட்டாலே அரசியல் ஆசை வந்துவிடும். எம்ஜிஆர், என்டிஆர் தவிர அரசியல் ஆசையில் வீழ்ந்தவர்களே அதிகம்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர் ஒருவர் அவர்களின் ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டியே காலத்தை ஓட்டிவிட்டார், இவரின் ரசிகர்களுக்கு இப்போது வயது 50க்கும் மேல் ஆகிவிட்டது, அவர்களுக்கு அந்த நடிகரின் பேனர்களுக்கு பால் ஊற்ற தெரியும்,  பீடி குடிக்க தெரியும். அவர்களால் அவர்களின் குடும்பங்களுக்கே உபயோகம் இல்லாத போது நாட்டிற்கு என்ன உபயோகம் ஆகிவிடும்.

கமலின் படங்கள் எப்படி தனித்துவம் வாய்ந்ததோ, அதே போல அவரின் ரசிகர்களையும் மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல அல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக மாற்றியுள்ளார். எம்ஜியார், கமலை அரசியலுக்கு 1986லே அழைத்தாலும், அதை மறுத்து, தன் ரசிகர்ளுக்கும் அந்த ஆசை இல்லாமல் பார்த்துகொண்டார். கமல் ரசிகர்கள் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல, அவர்களால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒருவகையில் உபயோகமாக இருக்கும் படி இன்றும் வழி நடத்துகிறார் கமல்ஹாசன்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான், விருதுநகர் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, நவம்பர் 25 அன்று, சிவகாசி அண்ணா காலனியில், உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த தினம் நற்பணி விழாவாக கொண்டாடப்பட்டது.

நற்பணி விழாவை, விருதுநகர் மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் A.S.நாகராஜன், சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்திருந்தார். சிவகாசி செயல்வீரர் சசிபாலன் அவருக்கு உறுதுணையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பம்பரமாக சுழன்று விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்தார்.

நற்பணி விழாவை, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் R.தங்கவேலு தலைமை தாங்கினார்.



நற்பணி விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பின்வருமாறு....

1. அன்னை சாரதா ஆசிரம 100+ குழந்தைகளுக்கு காலை உணவு
2. இரத்த தான முகாம் ( 150+ கமல் ரசிகர்கள்  )
3. மரக்கன்றுகள் (58) நடுதல்
4. கமல் ரசிகர்களின் சிலம்பாட்டம்

5. சிவகாசி மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்


6. CSI பள்ளி மன வளர்ச்சி குன்றிய 350+ குழந்தைகளுக்கு மதிய உணவு
7. முதியவர்களுக்கு இலவச வேட்டி/சேலை
8. சிறுவர்/சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள்









நற்பணி விழாவில், தேனி மாவட்ட பொறுப்பாளர் வைகை ஜெயக்குமார், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சந்துரு, தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் தர்மசரவணன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் அழகர், குமரி மாவட்ட பொறுப்பாளர் சசி,  மதுரையின் பரமக்குடியாரின் பயமறியா பாசக்காரப்பயலுக தலைவர் கொம்பமுத்துவும் அவருடைய குழுவும், சென்னையின் பாரடைஸ் யூனிட்  சேகர் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.




Monday, November 19, 2012

ரஜினியின் டெங்கு ராசி - Part 2

ரஜினியின் டெங்கு ராசி - Part 1 கிளிக் செய்க



1995 நிகழ்வு : 

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாரின் முதல் பட ( முறை மாப்பிள்ளை ) பூஜையில்  ரஜினி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

விளைவு : 
 
இன்றும் அவர் ஒரு ஹிட் படத்திற்காக தவித்துக் கொண்டிருக்கிறார். பெயரை அருண் விஜய் என்று மாற்றியும் விட்டார்.

2007 நிகழ்வு :

நடிகை நயன்தாரா ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தம் ஆனார்.

விளைவு :

சிம்பு - நயன்தாரா காதல் ஜோடி பிரிந்தது. ஏன் என்று விளக்கமாக அன்று குமுதம் ஒரு கட்டுரை கூட வெளியிட்டது.
 
 2011 நிகழ்வு :

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மக்களை தட்டி எழுப்பி கொண்டிருந்தார். சென்னையில் அவர்கள் குழு உண்ணாவிரதம் இருக்க ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் தேர்வு செய்யப்பட்டது.

விளைவு :

அந்த மண்டபத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு பிறகு தான் அன்னா ஹாசாரே குழுவின் முக்கிய நிர்வாகிகளின் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. பின் ஹசாரே அரசியல் கட்சி தொடங்குவேன் என்று கூறிவிட்டு பின் தொடங்கமாட்டேன் என்று ரஜினி மாதிரி பல்டி அடித்தார். ரஜினியின் மண்டபத்தை பயன்படுத்தியற்கே இந்த நிலைமையா?

பல வருடங்களாக தொடர்பவை 1 :

ரஜினி எந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்டாலும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆகும். எ.கா. அஜீத் நடித்த அசல்.



பல வருடங்களாக தொடர்பவை 2 :


பட பூஜை மட்டுமல்ல, ஆடியோ ரிலீஸில் அவர் கலந்து கொண்டாலும் விபரீதமாக தான் முடியும். ரஜினியின் பிறந்த நாளில் (2005)  பாக்யராஜ் தன் மகள் அறிமுகமான பாரிஜாதம் படத்தின் ஆடியோ ரஜினி தலைமையில் வெளியிட்டார். படமும் ஓடவில்லை, பாக்யராஜ் பொண்ணும் ஜொலிக்க வில்லை, அந்த பெண் தற்கொலைக்கும் முயன்றாள்.  



எனவே பெரும்பாலும் அவரை திரையுலகத்தினர் தவிர்க்கவே விரும்புவார்கள். சமீபத்தில் கூட நடிகர் பிரபு தன் மகன் அறிமுகமாகும் கும்கி படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ரஜினி வரவில்லை என்று நிம்மதியாக தான் இருந்தார், ஆனால் வரமாட்டேன் என்று கூறி விட்டு விழா தொடங்கும் முன்னே வந்து பிரபுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். ஆடியோ ரிலீஸ் ஆகி பல மாதங்கள் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை அவரின் ராசியால்...

பல வருடங்களாக தொடர்பவை 3 :

ரஜினி நடித்த பழைய படங்களின் பெயரை புதிய படங்களுக்கு உபயோகித்தால் அந்த படமும் அட்டர் ப்ளாப் ஆகும், எ.கா. மாப்பிள்ளை, குரு சிஷ்யன், படிக்காதவன், முரட்டுகாளை. தப்பித்தது தனுஷ் நடித்த பொல்லாதவன் மட்டுமே, அதற்கு காரணமும் உண்டு, அப்படத்தில் கமல் பாடிய "எங்கேயும் எப்போதும்" பாடலை ரீமேக் பண்ணியிருப்பார்கள்.


இதையெல்லாம் மறுப்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்சன்ஸ், அப்படத்தை மிகப் பெரிய வெற்றி என்று கூறிக்கொண்டு, தங்கள் "மினி சாந்தி" திரையரங்கை ஏன் ரஜினியை வைத்து திறப்பு விழா நடத்தவில்லை ? 

மினி சாந்தி திரையரங்கை திறந்து வைத்தது யார் என்பதை காண இங்கே கிளிக் செய்க



Saturday, November 17, 2012

சின்னத்திரை - கமல் vs ரஜினி

தூர்தர்ஷன் மட்டும் தான் டிவி என்று இருந்த காலகட்டத்தை, லோக்கல் கேபிள் டிவிக்களும் சேட்டிலைட் டிவிக்களும் உடைத்து முன்னே சென்று கொண்டிருந்த 90 களில் தான் தமிழ் சினிமாவும் தேக்கம் காண ஆரம்பித்தது. தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்து போனது. திருட்டு வீடியோ கேசட், கேபிள் டிவியில் உரிமை பெறாமல் புதிய படங்களை ஒளிபரப்புவதும் நியாமான காரணங்களாயிருந்ததால், தமிழக அரசு கடுமையான சட்டங்களினால் அவற்றை தடுத்தது.

அப்படியும் பல படங்கள் மண்ணை கவ்விக் கொண்டு தான் இருந்தன. நடிகர் சங்கம் தன் அறிவுக் கண்ணை திறந்து ஒன்றை கண்டுபிடித்தது, அது என்னவென்றால், நடிகர் நடிகைகள் சேட்டிலைட் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதால் தான் படங்கள் ஓடவில்லை என்று. அதுமட்டுமல்லாமல் பேட்டிகளுக்கு தடையும் விதித்தது.

புதிய தொழில்நுட்பங்களின் நண்பன் கமல்ஹாசன், அந்த தடையை வன்மையாக கண்டித்ததும் மட்டுமல்லாமல், தடையை மீறி சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்தார். ஆனால் ரஜினியோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார், உழைப்பாளி படத்தின் போது ஓவராய் பேசி விநியோகிஸ்தர்களிடம் மாட்டிக் கொண்டது போல் நடிகர் சங்கத்திடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க. கமல் மட்டும் தான் தவறுகளை நிஜத்தில் கண்டிப்பவரும் எதிர்த்து போராடுபவரும் கூட.

பின் சின்னத்திரையை சினிமாவிற்கு எப்படி பயன்படுத்துவது என்று வழியும் காட்டினார். இப்போது திரைப்படத்தின் உரிமையை விநியோகிஸ்தர்கள் வாங்கும் முன் சேட்டிலைட் சேனல்கள் ஒளிபரப்பும் உரிமையை வாங்கி விடுகின்றன. தயாரிப்பாளர்களும் இதில் ஒரு கனிசமான தொகையை அள்ளி விடுகிறார்கள்.

தமிழில் கமல்ஹாசனின் "தசாவதாரம்" தான் இன்று வரை அதிக விலைக்கு (5 கோடியே 10 லட்சம்) சேட்டிலைட் சேனலால் வாங்கப்பட்ட படம். எந்திரன் படத்தை தயாரித்த சன் டிவியே அந்த படத்தை 15 கோடிக்கு வாங்கினாலும், ஏன் கணக்கில் கொள்ள முடியாது என்றால், உதாரணத்திற்கு நீங்கள் இரண்டு கம்பெனிகள் வைத்திருக்கிறீர்கள், உங்களுடைய ஒரு கம்பெனியில் தயாரித்த பொருளை, உங்களுடைய இன்னொரு கம்பெனியின் மூலம் வாங்குகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு லாபமா? இரட்டை செலவு தான் அது.... தயாரிப்பு செலவு மற்றும் அதை நீங்களே வாங்கிய செலவு.

கலைஞர் டிவி தசாவதாரத்தை முதலில் ஒளிபரப்பிய போது படம் 6 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 11.10 மணிக்கு முடிவடைந்தது, 30 நிமிட செய்திகள் மற்றும் படத்தின் நீளமான 190 நிமிடங்களை கழித்தால், விளம்பரங்கள் மட்டும் ஏறக்குறைய 90 நிமிடங்கள் ஒளிபரப்ப பட்டுள்ளன.

10 நொடிகளுக்கு 2 லட்சம் என்றால், 90 நிமிடங்களுக்கு 10 கோடியே 80 லட்சம் சம்பாதித்துள்ளது. முதல் தடவை ஒளிபரப்பியதிலே இரண்டு மடங்கு லாபம் கொடுத்துள்ளது கமலின் தசாவதாரம். கலைஞர் டிவி இது வரை தசாவதாரத்தை 7 முறைகளுக்கு மேல் ஒளிபரப்பியுள்ளது.

2012 ஆயுதபூஜைக்கும் தசாவதாரம் ஒளிபரப்பப் பட்டது, 8 மெயின் ஸ்பான்சர்களுடன் ( Jos Alukkas, Gold Winner, Preethi, Coramental Cement, Dress Parade, Bharathi Cement, Cardia Olive Oil and Ramraj ). 25 நிமிடம் படத்துடன் ஒவ்வொரு ப்ரேக்கிலும் சராசரியாக 14+ விளம்பரங்களும் போடப்பட்டன, மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி 30 நிமிட செய்திகளுடன், கிட்டத்தட்ட 9 மணிக்கு முடிந்தது.



அள்ளி தருவதில் தசாவதாரம், கலைஞர் டிவிக்கு அட்சயப் பாத்திரம் என்றால் மிகையாகாது.

யோசித்து பார்த்தீர்கள் என்றால், சின்னத்திரையில் கூட ரஜினி படம் சாதாரண நாட்களில் ஒளிபரப்ப மாட்டார்கள், பண்டிகை தினத்தில் மட்டும் தான், அதுவும் பல மாத கால இடைவெளியில் ( எப்படி ரஜினி 3 வருடத்திற்கு ஒரு முறை நடிப்பது போல) தான் ஒளிபரப்புவார்கள். ஏனென்றால் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பினால் தான் பார்வையாளர்கள் வேறுவழியின்றி ரஜினி படத்தை பார்த்து தொலைப்பார்கள், இதிலும் எவ்வளவு பெரிய மோசடி?

ஆனால் கமலின் படங்களோ (குறிப்பாக நாயகன், வசூல்ராஜா MBBS, பஞ்ச தந்திரம், அன்பே சிவம், குணா, ஆளவந்தான், தேவர் மகன், தெனாலி, அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ), சின்னத்திரைகளில் சாதாரண நாட்களில் கூட அதிகமான் ஸ்பான்சர்களுடன் அடிக்கடி ஒளிபரப்ப படுகிறது. எத்தனை தடவை போட்டாலும் அத்தனை தடவையும் கமல் படங்களை பார்வையாளர்கள் பார்ப்பதால் தான் டிவிக்களும் ஒளிபரப்புகிறார்கள், ஸ்பான்சர்களும் குவிகிறார்கள்.

ரஜினியின் படங்களை பெரிய திரையில் தான் ரீ-ரிலீஸ் செய்யப் விநியோகிஸ்தர்கள் தயாரில்லை என்றால், சின்னத்திரையில் கூட அடிக்கடி ஒளிபரப்ப ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை..

Friday, November 9, 2012

"உயர்ந்த" நாயகன் Vs "தாழ்ந்த" மனிதன்

கமல்ஹாசன் "ஹிந்து"-வில் "நாயகன்" பற்றிய உண்மையை வெளியிட்ட கட்டுரையையும், பதிலளிக்கிறேன் என்று முக்தா வெளியிட்ட வயிற்றெரிச்சலையும் பற்றி பதிவு போட்டு, கிடைத்த "கேப்"-பில் மனிதன் என்ற படத்தை எல்லாரும் 24 வருடத்திற்கு முன்பே மறந்து விட்ட நிலையில், அப்படத்தை "வெற்றி" என்று டெங்குவை விட கொடிய கருத்தை பரப்பும் பதிவருக்கும், அதை நம்புவர்களுக்கும் மற்றும் முக்தாவுக்குமான பதில் இது.

முக்தா கூறியது போல் கதையை மாற்றி விட்டார்கள் என்றால் படத்தை ஆரம்ப கட்டத்திலேயே "ட்ராப்" செய்திருக்க வேண்டியது தானே அவர் ?

சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுக்க பிரச்சினை செய்த போது கமல் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் என்பவர் லாபம் சம்பாதிக்க மட்டும் தானா? கமலே தன் கட்டுரையில் ஒரு கட்டத்தில் தானே சோர்ந்து விட்டதாக கூறியிருக்கிறார், இந்த வேலையையாவது அவர் செய்யட்டும் என்று தான் விட்டிருப்பார்.

படத்தை எடுத்தவுடன் "GV" க்கு விற்றும் விட்டார் (நெகட்டிவ் உரிமை உட்பட). அந்த நேரத்தில் வந்த வரைக்கும் லாபம் என்று தானே விற்றிருக்கிறார். நாயகன் மிகப் பெரிய வெற்றியடையும் என்று புரியாமல் தானே விற்றார். அதை தானே கமலும் "OLD SCHOOL" என்று சொன்னார்.

நாயகனை காட்பாதருடன் ஒப்பிட்டு தமிழ் கலைஞர்களின் ஒப்பற்ற படைப்பை சிறுமை படுத்த முயற்சிக்கும் கூட்டத்திற்கு "விஸ்பரூப" பதிலடியை ஏற்கனவே உலக சினிமா ரசிகன் கொடுத்துவிட்டார், அதை படிக்க இங்கே க்ளிக் செய்க.

அடுத்து கிடைத்த கேப்பில் ஒரு பதிவர் நாயகனை விட மனிதன் வெற்றிபடம் என்றும், முக்தா தயாரித்து ரஜினி நடித்த தோல்வி படங்களான பொல்லாதவனும் சிவப்பு சூரியனும் ஓரளவுக்கு வெற்றிபடங்கள் என்று புளுகி ரஜினி ரசிகன் என்பதை நிருபித்து விட்டார்.

ரஜினிக்கு ரெகுலர் காட்சிகளில் ஒரு வெள்ளிவிழா படம் கூட கிடையாது, சில படங்கள் பகல்காட்சியில் ஓடினாலும் பல படங்கள் பகல்காட்சியில் தியேட்டரில் வாடகை கொடுத்து தேய்க்கப்பட்டவை. உண்மையில் மனிதன் ஓடியிருந்தால் எத்தனை தியேட்டரில் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்கள் ஓடியுள்ளது?

நாயகன் மொத்தமாக 11 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல்  ஓடியுள்ளது,
சென்னையில் திரையிட்ட 4 தியேட்டரிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களுக்கு மேலும்,  ஆனந்த காம்ளக்ஸில் ரெகுலர் காட்சிகளில் 175 நாட்களுக்கு மேலும் ஓடியுள்ளது.



நாயகன் பெங்களூர் பல்லவியில் 3 காட்சிகளாக 50 நாட்களும், பகல் காட்சியில் 225 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.



பல தடைகளை தாண்டி புதிய பாணியில் எடுக்கப்பட்ட நாயகன் பாக்ஸ் ஆபிஸிலும் மனிதனை துரத்தி துரத்தி அடித்து வீழ்த்தியதற்கு இதற்கு மேல் சான்றுகள் தேவையில்லை.

Tuesday, November 6, 2012

கமல்ஹாசனே தொடக்கம்

7-நவம்பர் 2012 இன்று பிறந்த நாள் காணும் அரசியலில் ஈடுபடாத அரசன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர், பரமக்குடி பரமாத்மா எங்கள் கமல்ஹாசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் 13 தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் "நாயகன்".

சென்னையில் அதிக திரையரங்கங்களில் வெளியான முதல் திரைப்படம், கமல்ஹாசனின் "வேட்டையாடு விளையாடு" - 16 தியேட்டர்கள்.

சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் (10 திரையரங்குகளிலும் ) வரை திரையிடப்பட்டது.

திரையுலகில் முதலில் கண் தானம் செய்தவர் கமல்ஹாசன்.



திரையுலகில் முதலில் உடல் தானம் (2002) செய்தவர் நற்பணி நாயகன் கமல்ஹாசன்.


தமிழ்நாட்டில் முதலில் 100 நாள் ஓடிய மலையாளப் படம், கமல்ஹாசனின் ராசலீலா. சென்னை எலிபென்ஸ்டனில் 112 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய கன்னடப் படம், கமல்ஹாசனின் கோகிலா. சென்னை எமரால்டில் 175 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. சென்னை சபையரில் 600 நாட்களும், கோவை ராயலில் 450 நாட்களும் ஓடியது.

தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய (ரெகுலர் காட்சிகள்) ஹிந்திப் படம், கமல்ஹாசனின் ஏக் துஜே கே லியே. சென்னை அலங்காரில் 175 நாட்கள் ஓடியது.

ஒரே ஆண்டில்(1982) நான்கு முறை 200 நாட்களுக்கு மேல் ஓடியது உலகிலேயே கமல்ஹாசனின் படங்கள் தான்.
சனம் தேரி கசம்
மூன்றாம் பிறை
வாழ்வே மாயம்
சகலகலா வல்லவன்

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்.
பல்லவி ( 175 நாட்கள் )
நட்ராஜ்( 112 நாட்கள் )
லட்சுமி( 112 நாட்கள் )
கல்பனா( 110 நாட்கள் )
சாந்தி( 105 நாட்கள் )

தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படம், தமிழில் கமல்ஹாசன் நடித்து தயாரித்த "விக்ரம்" (1986) படமே.



1986-ல் தன் ரசிகர்களுக்கு மாநாடு நடத்திய முதல் நடிகர் கமல்ஹாசனே.


1988-லில் முதல் முறையாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்து அதனை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசனே.

தமிழ் நாட்டில் 100 நாட்கள் ஓடிய முதல் டப்பிங் படம், கமல்ஹாசனின்  இரு நிலவுகள், அதை தொடர்ந்து சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்திரன் சந்திரன், பாசவலை என்று தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட கமலின் அனைத்து படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.

தமிழில் நாயகன் படத்தில் முதல்முறையாக முடியை ஜெல் மூலம் வழித்து நடித்தார். பின் வந்த படங்களில் அதுவே ஸ்டென்டர்டு ஆனது, ஊரின் தலைவராக ஹீரோ இருந்தால் ( சின்ன கவுண்டர், நாட்டாமை... ).



இந்தியாவில் முதல் முறையாக டால்பி சவுண்டில் எடுக்கப் பட்ட முதல் படம், கமல்ஹாசனின் குருதிப்புனல் (1995).

இந்தியாவில் தொடர்ந்து 1000 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய முதல் படம் கமல்ஹாசனின்  "சகலாகலா வல்லவன்".

Sunday, November 4, 2012

கமல் பிறந்த தின நற்பணி ( 58 மரக்கன்றுகள் + உணவு )

உலக நாயகனின் 58 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு தலைமையில், ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ( பதிவு எண் 10094) சார்பில், குரோம்பேட்டை பால ஆசிரமம், அதன் குழுமத்தில் உள்ள ஆவடி மற்றும் மடிப்பாக்கம் ஆசிரமத்திலும் நவம்பர் 4, ஞாயிறு அன்று ஆசிரம குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.








மேலும் உலக நாயகனின் 58 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 58 மரக்கன்றுகள் குரோம்பேட்டையில் தங்கவேலு தலைமையில் நடப்பட்டது.

மரக்கன்றுகள் நடப்பட்டதன் காரணம் என்னவென்றால், வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக மரங்கள் வளர்க்கப்படுவதில்லை, மரங்கள் குறைவதால் மழை சரியாக பெய்வதில்லை, மழை பெய்வது பாதிக்கபடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது, கடைசியில் விலைவாசி உயர்ந்து விடுகிறது.  எனவே மரங்கள் வளர்த்தால் மழை பெய்யும், மழை பெய்தால் விவசாயம் சிறக்கும், விவசாயம் சிறப்பாக நடந்தால் விளைச்சல் அதிகரிக்கும் விலைவாசியும் குறையும்.




இந்த விழா சிறப்பாக நடக்க களத்தில் ஆர்வத்துடன் பணிபுரிந்த, தயாளன் (தென் சென்னை பொருளாளர்), தமீம், ராஜ்குமார், ஓம், சேகர், மாமூத் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
 



- சண்டியர் கரன்

Thursday, November 1, 2012

கமல் பக்தர்களின் நற்பணி விழா - 2012

உலக நற்பணி தினத்தை ( நவம்பர் 7 ) முன்னிட்டு ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ( பதிவு எண் 10094 ) மற்றும் பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் நற்பணி விழா...

1. 58 மரக்கன்றுகள் நடுதல் ( உலகநாயகனின் 58வது பிறந்த நாளை முன்னிட்டு)


2. மூன்று ஆசிரமங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு

3. இரத்த தானம்    

இடம் : பால ஆசிரமம், 2, இரண்டாவது தெரு, பெரியார் நகர், ஜமீன்ராயபேட், குரோம்பேட், சென்னை - 44 ( பாண்டு மெக்கானிக் கடை அருகில்)

 நாள் : நவம்பர் - 4, ஞாயிறு

 நேரம் : காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12 வரை

அனைவரையும் வருக..வருக!!! என வரவேற்கிறேன்...