Ads 468x60px

Friday, December 19, 2014

லிங்கா பல்பில் சிக்கிய விட்டில் பூச்சி விநியோகிஸ்தர்கள்



மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்" (நன்றி : குமுதம் 2012)

இவ்வளவு பட்ட பின் தியேட்டர்காரர்கள்,  2014 ல் வந்து மகா தோல்வி அடைந்த இரண்டு ரஜினி படங்களுக்கும் "மினிமம் கேரன்டி" எனப்படும் MG முறையில் திரையிடாதாததால் இன்று தப்பித்து விட்டார்கள்.

ஆனால் மாட்டிக் கொண்டு முழிப்பது விநியோகிஸ்தர்களே!!! அவர்களின் துயரத்தை எழுத்துக்களில் சொல்ல முடியாது.

நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்:





Thursday, December 18, 2014

1 கோடி சம்பளம் பெற்ற முதல் இந்திய நடிகர்

உலகநாயகன் கமல்ஹாசனே 1 கோடி சம்பளம் பெற்ற முதல் இந்திய நடிகர் (1989 ல் வெற்றிவிழா படத்திற்கு!!!).

Kamal Haasan became the first Indian actor to get Rs 1 crore as his payment for a single film in 1989 for the film Vetri Vizha

Credit : https://twitter.com/Videocond2h (published on 16 Dec 2014)



Wednesday, December 17, 2014

விஸ்வரூபம் vs லிங்கா @ சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ்

சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில், உலகநாயகனின் விஸ்வரூபம் 
தொடர்ந்து 3 வாரங்கள் 4 தியேட்டர்களில்
பரபரப்பாக ஹவுஸ்புல் காட்சிகளுடன்,
சனி & ஞாயிறு சிறப்புக் காட்சிகளுடன் ஓடியது.

சத்யம் (4 காட்சிகள்) 
6-டிகிரீஸ் (4 காட்சிகள்)
சாந்தம் (4 காட்சிகள்)
ஸ்டுடியோ-5  (4 காட்சிகள்)


3 வாரங்களுக்குப் பின்னே விஸ்வரூபத்திற்கு இங்கே தியேட்டர்கள் குறைக்கப்பட்டது.

ஆனால், புலியை பார்த்து பூனை சூடு போட்டதை போல, விஸ்வரூபத்தை பார்த்து லிங்காவையும் சத்யம் காம்ப்ளக்ஸில் 4 தியேட்டர்களில் போட்டர்கள். ஆனால் மக்களின் வரவேற்ப்பு இல்லாததால் இரண்டாவது வாரத்திலேயே சத்யம் (4 காட்சிகள்) & 6-டிகிரீஸ் (1 காட்சி) என சுருக்கி விட்டார்கள்.


Kamal Haasan's Vishwaroopam was screened in 4 theaters of Chennai's SATHYAM complex. Also it ran for 3 weeks in all 4 theaters with Housefull shows and special morning shows in Weekend.

Sathyam ( 4 shows )
6-Degrees ( 4 shows )
Santham ( 4 shows )
Studio-5 ( 4 shows )

After 3 weeks only, Vishwaroopam shows reduced in  Chennai's SATHYAM complex.

But rajinkanth's lingaa followed Vishwaroopam and screened in 4 theaters of Chennai's SATHYAM complex. But due to VERY POOR response, it is reduced to Sathyam (4 shows) and 6-degrees(1 show).

Tuesday, December 16, 2014

இந்தியன் Vs முத்து ( 100 நாட்கள் சாதனைகள் )

ரஜினி ரசிகர்கள் கூறும் சாதனைகளுக்கு முறையான ஆதாரம் இருக்காது. அவர்களே வெளியிட்ட "முத்து சாதனை" நோட்டீஸில் 30 தியேட்டர்களில் அப்படம் 100 நாட்கள் ஓடியிருக்கிறது என்கிறார்கள். ஆனால் 4 ஊர்களில் இரண்டு தியேட்டர்களில் ஓடிய நாட்களை கூட்டி போட்டிருக்கிறார்கள். அப்படியானால் முத்து 26 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கிறது அவர்கள் நோட்டீஸ் படி ( அதுவும் விசாரணைக்கு உட்பட்டது ).

முத்து படத்திற்கு பின் 7 மாத இடைவெளியில் வெளியான உலகநாயகனின் இந்தியன்,

தமிழில் 48 தியேட்டர்கள்
தெலுங்கில் 30 தியேட்டர்கள்
ஹிந்தியில் 20+ தியேட்டர்கள்


என ஆக மொத்தம், இந்தியா முழுவதும் 98+ தியேட்டர்களில் 100+ நாட்கள் ஓடியிருக்கிறது.

எந்தவொரு சாதனை என்றாலும் கமல்ஹாசனே யாருக்கும் முன்னோடி!!!
அதை மீண்டும் இந்தியனில் நிரூபித்து காட்டியிருக்கிறார் உலக நாயகன்.



As per rajini fans' bit notice, they are claiming that muthu (1995) ran 100 days in 30 theaters. But in 4 towns, they have added the days of two theaters, so those theaters have to be excluded. Finally it ran 100 days in 26 theaters ( that also has to be verified).

But Ulaga Nayagan's INDIAN, released after 7 months gap, has created unbeatable record of 100+ days in 98+ theaters of India.

100+ days in 48 theaters with Tamil Print,
100+ days in 30 theaters with Telugu Print (Bharatheeyudu),
100+ days in 20+ theaters with Hindi Print (Hindustani).

Monday, December 15, 2014

இந்தியா முழுவதும் 4 முறை வெள்ளிவிழா

இந்தியா முழுவதும்  4 முறை
வெள்ளிவிழா கண்டவர் நம் உலகநாயகன் மட்டுமே!!!


1. Marocharitra (தெலுங்கு )
- Ek Duje Ke Liye (ஹிந்தி ரீமேக்)

2. அபூர்வ சகோதரர்கள் 
- Vichithra Sodarulu (தெலுங்கு டப்பிங்) 
- Appu Raja (ஹிந்தி டப்பிங்) 

3. இந்தியன் 

- Bharatheeyudu  (தெலுங்கு டப்பிங்) 
- Hindustani (ஹிந்தி டப்பிங்) 

4. அவ்வை சண்முகி

- Bhamane Satyabhamane  (தெலுங்கு டப்பிங்) 
- Chachi 420 (ஹிந்தி ரீமேக்) 



Tuesday, December 9, 2014

இந்தியன் Vs முத்து வசூல்


மீடியாக்கள் புகழ்வதை போல ரஜினியின் படங்களின் வசூல் இருப்பதில்லை என்ற உண்மை  "தமிழ்நாடு என்டர்டெய்ன்மென்ட்" என்ற விநியோகிஸ்தர்களின் தனிப்பட்ட மாத இதழில் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது....

கமல்ஹாசன் படங்கள் வசூல் சாதனைபுரியும் போதெல்லாம், ரஜினி ரசிகர்கள் இப்படி சொல்லி தங்களை தேற்றிக்கொள்வார்கள், "A சென்டரில் தான் கமல் படங்கள் ஓடும்... B,C சென்டர்களில் ஓடாது என்று."

ஆனால் உண்மை கசக்கும் என்பதை போல வேறு மாதிரியிருக்கிறது.கீழே உள்ள விவரங்களை பார்த்தால், இந்த மீடியாக்கள் எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது புரியும்.

உலகநாயகனின் இந்தியன் பொள்ளாச்சி சாந்தி தியேட்டரில் செய்த வசூல் 13.42 லட்சம், ஆனால் ரஜினியின் முத்து, அதே பொள்ளாச்சியில் நல்லப்பா தியேட்டரில் 9.73 லட்சமே வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமா....

இந்தியன் பொள்ளாச்சியில் 107 நாட்கள் ஓடியுள்ளது, ஆனால் முத்து 84  நாட்களே ஓடியுள்ளது.

உலகநாயகன் "இந்தியன்" போன்று தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தால், ரஜினி தன் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்ள வேண்டியது தான்.

Box office report from Distributors' Tamilnadu Entertainment Magazine says that,

Kamal Haasan's Indian has collected 13.42 L and ran 107 days in Pollachi, but Media supporting rajini's muthu has collected only 9.73 L and ran 84 days.

It clearly shows that, Kamal Haasan is the leader in all centers.

If Kamal Haasan has started to act films like "INDIAN", there would be no future for rajini.


Wednesday, December 3, 2014

சாகர சங்கமம் (சலங்கை ஒலி) வசூல் ரிப்போர்ட்

ஆந்திராவில் 7 தியேட்டர்களிலும்,
கர்நாடகாவில் 4 தியேட்டர்களிலும்
வெள்ளி விழா கொண்டாடிய
உலகநாயகனின் சாகர சங்கமம் (சலங்கை ஒலி)
வசூல் சாதனை ரிப்போர்ட்.

The collection report of Ulaga Nayagan's Sagara Sangamam (Salangai Oli) which celebrated Silver Jubilee in 7 Theaters of Andhra and 4 Theaters of Karnataka.


Tuesday, December 2, 2014

இந்தியனின் கோவை மாவட்ட வசூல் எவ்வளவு?

உலகநாயகனின் இந்தியன் 
கோவை மாவட்டத்தில் (கோவை, ஈரோடு, திருப்பூர் & பொள்ளாச்சி மட்டும்) செய்த வசூல் சாதனை நிலவரம்...


ரூ 1,42,63,159.15 (1996ல்)

இதுவே உலகநாயகனின் தெனாலி(2000) வரை, கோவை மாவட்டத்தில் தமிழ் படங்களின் உச்ச சாதனை.

Ulaga Nayagan's INDIAN has collected Rs 1,42,63,159.15 from the theaters of Coimbatore District (Coimbatore, Erode, Tiruppur & Pollachi) in 1996. It was the highest till Ulaga Nayagan's Thenali (2000) in Coimbatore District .
 
City TheaterDaysCollection
CoimbatoreRagam109 Days   45,93,358.00
CoimbatoreArchana121Days   33,38,151.55
ErodeDevi Abirami100 Days   11,58,134.50
ErodeAanur98 Days   13,09,869.40
TiruppurDiamondTill 90 Days   13,64,412.50
TiruppurSrinivasaTill 79 Days   11,57,052.50
PollachiShanthi107 Days   13,42,180.70

TOTAL1,42,63,159.15


Monday, December 1, 2014

Mercedes-ன் உலகநாயகன் கார்

உலகநாயகனின் உருவங்களால் உருவாக்கப்பட்ட
மலேசிய கமல்ஹாசர் ரசிகரின் (https://www.facebook.com/indransagaran.arnasalam
Mercedes-Benz கார் 



Sunday, November 30, 2014

இந்தியனின் சென்னை வசூல் எவ்வளவு?

உலகநாயகனின் இந்தியன் 
சென்னையில் வெளியான 4 தியேட்டர்களின்
மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரூ 2,05,87,417.59 (1996ல்)

இதுவே உலகநாயகனின் தெனாலி(2000) வரை தமிழ் படங்களின் உச்ச சாதனை.

இந்த வசூல் 1996ல் வெளியாகிய மற்ற இரண்டு வெற்றிப்படங்களான "பூவே உனக்காக (Rs 57,33,817) , காதல்கோட்டை (Rs 62,49,265) " படங்களை விட கிட்டத்தட்ட 4 மடங்கு என்பது, உலகநாயகன் மட்டுமே "மெகா வசூல் சக்கரவர்த்தி" என்பதை மீடியாக்களுக்கு  எளிதாக புரிய வைக்கிறது.


INDIAN Theaters DaysCollection
Sathyam126 Days   82,43,700.00
Santham
( Shifted from Sathyam )
36 Days
(Noon not included)
     5,12,983.85
Sangam157 Days
(Noon not included)
   49,99,533.44
Udhayam105 Days   42,99,239.30
Maharani119 Days   25,82,051.00
TOTAL2,05,87,417.59

Ulaga Nayagan's INDIAN has collected Rs 2,05,87,417.59 from 4 theaters of Chennai in 1996. It was the highest till Ulaga Nayagan's Thenali (2000).

INDIAN's collection is 4 times the collection of other 2 hits of Tamil cinema
"Poove Unakkaga (Rs 57,33,817), Kadhal Kottai (Rs 62,49,265)" in1996. If the MEDIA research films' collections well, they will quote  
Kamal Haasan only as "Box-Office Emperor".



Saturday, November 29, 2014

1982ல் வேட்டி சட்டையில் தேசிய விருது பெறும் நம் உலகநாயகன்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது 1982ல்
"மூன்றாம் பிறைக்காக"
தமிழ் அடையாளத்துடன் வேட்டி சட்டையில் பெறும்
நம் உலகநாயகன்!!!

Ulaga Nayagan receiving National Award for Best Actor for the film "Moondram Pirai" during 1982.


Thursday, November 27, 2014

பேசும் படம் (27- நவம்பர்) தினம்

பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கவே யோசித்து கொண்டிருந்த இந்திய திரையுலகத்திற்கு, வசனமே இல்லாமல் படம் எடுத்து, பொன்விழாவே காண முடியும் என்று 1987-ல் நிரூபித்து காட்டியவர் நம் உலகநாயகன்!!!

27-நவம்பர்-1987  அன்று வெளியான 
உலகநாயகனின்  
புஷ்பக விமானா (கன்னடம்) / பேசும் படம் (தமிழ்) என்ற பேசாத  படத்திற்கு

இன்று 27 வது ஆண்டு விழா!!!


Wednesday, November 26, 2014

4 மொழிகளில் வெள்ளி விழா நாயகன் யார்?

தமிழில் 20,

தெலுங்கில் 9,

ஹிந்தியில் 7,

கன்னடத்தில் 3 என்று

நான்கு மொழிகளில்

மொத்தம் 39 வெள்ளி விழாக்கள் கொண்டாடியவர்

உலகிலேயே நம் உலகநாயகன் ஒருவரே!!!


*ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட் செய்யவும்.

Tuesday, November 25, 2014

உலகநாயகனின் 3 படங்கள் தொடர்ந்து 300+ நாட்கள் சேலத்தில்

சேலம் கைலாஷ் தியேட்டரில்

உலகநாயகனின் 3 படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு
300+ நாட்கள் ஓடிய சாதனை

இன்று சென்னை பால அபிராமி தியேட்டரில் கூட
மற்ற நடிகர்களால் செய்ய இயலாததது.


திரைப்படம் கைலாஷ் தியேட்டர்நாட்கள்
அபூர்வ சகோதரர்கள்14-Apr-1989 to 8-Sep-1989148 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்)9-Sep-1989 to 27-Oct-198949 நாட்கள்
வெற்றி விழா28-Oct-1989 to 9-Feb-1990104 நாட்கள்



Thursday, November 20, 2014

இயக்குநர் ருத்ரய்யா பற்றி கமல்ஹாசன் (தி ஹிந்து)

இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தில் நடித்ததோடு, அப்படம் உருவாக உறுதுணையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், 'அவள் அப்படித்தான்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். 

 
"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். 

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார். 

நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே. 

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும். 

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'. 

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது. 

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது ஆனால் அப்படி ஆகவில்லை. 

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது. 

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார். 

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. 

'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை. 

வணிகரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திந்ருதாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை. 

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம். 

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. 

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார். 

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.

"விக்ரம்" படத்தின் முதல் காட்சி வசூல் "யூனிசெப்"க்கு

தமிழ் நாட்டில் சம்பாதித்து தமிழக மக்களுக்கே உதவ மறுக்கும் கோந்து நடிகருக்கு மத்தியில்,

1986-லேயே ஆப்பிரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு, "யூனிசெப்" என்று அழைக்கப்படும் "ஐக்கிய நாட்டு சபையின் குழந்தைகள் நல நிதிக்கு,

உலகநாயகன் நம்மவர் கமல்ஹாசன் தன் "விக்ரம்" படத்தின் முதல் காட்சி வசூலை வழங்கி உதவி செய்திருப்பது,

மனிதநேயம் என்றால் என்ன என்பதை இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கிறது!!!!

Kamal Haasan has contributed towards UNICEF (United Nations Children's Fund) from his film "VIKRAM's" FIRST SHOW Collection in 1986 itself. 

This cause explains us "what is Humanity?" because the one who earns from Tamil Nadu is not even helping the Tamilians, then how we can expect him to help African Children?



Wednesday, November 19, 2014

100 நாட்கள் தினமும் 5 காட்சிகள் ஓடிய படம்

100 நாட்கள் தினமும் 5 காட்சிகள் ஓடி சாதனை புரிந்த ஒரே படம் உலகநாயகனின் சுவாதிமுத்யம் (தெலுங்கு)!!!

திருப்பதி : வேல்ராம் தியேட்டர்

வசூல் : 8.7 லட்சம் (1986 ல்)


Only film which ran 5 shows daily for 100 days is 
Universal Hero's SWATHI MUTHYAM (Telugu)!!!

Tirupati : Velram Theater

Collection : 8.7 L ( in 1986 )


Tuesday, November 18, 2014

கமல்ஹாசன் நடத்திய மாநாடு

சினிமாவில் தான் இவர் உத்தம வில்லன்!
நிஜத்தில்...
இவர் மட்டுமே உத்தம தலைவன் & உத்தம இளைஞன்!!!


உலகிலேயே தன் ரசிகர்களுக்கு என மாநாடு நடத்தி சாதனை புரிந்தவர் உலகநாயகன் மட்டுமே!

முதல் மாநாடு 1987-ல் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடத்தி காட்டியதுடன் அன்று மாநாட்டில் சொன்னது போல இன்றும் "அரசியலில்" ஈடுபடாமல்  இருந்து வருகிறார் கமல்ஹாசன்.

அன்று தன் பின் வந்தவர்கள் யாரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சோடை போகாதவாறு அவர்களுக்கு நற்பணி பாதையை காட்டி நல்வழி படுத்திய பெருமை கமல்ஹாசனேயே சாரும். ஆனால் அன்று தமிழன் பின்னே வராதவர்கள், இன்றும், அந்த நடிகரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் முன், அவர் நடத்தும் அரசியல் விளாயாட்டில் சிக்கி, தங்கள் குடும்பங்களை கூட கவனிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதனால் தான் இன்று பாரத பிரதமர், "தூய்மை இந்தியா" திட்டத்திற்கு, தென்னிந்தியாவில், சினிமா உலகில் இருந்து, கமல்ஹாசனை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளார்.

The first actor in the world who conducted exclusive conference for his fans is Universal Hero KAMAL HAASAN only. It was conducted at Coimbatore in 1987.

Kamal HaasaR told in the conference that "he will not come to politics", and he still is following that.

Also he transformed his followers by not only celebrating his films but also doing the welfare to public and made them useful to the society. But those who followed another actor that time, still longing him to enter politics and not even taking care of their own family.

Hence our Prime Minister selected our "KAMAL HAASAN"  from South India as the nominee of "CLEAN INDIA" campaign!!!



Monday, November 17, 2014

வெற்றிவேல் IPS-ஆல் மண்ணை கவ்விய மாப்பிள்ளை

மாமியாரிடம் வீரத்தை காண்பித்த மாப்பிள்ளையால்,
1989 தீபாவளி ரேஸில்,
வெற்றிவேல் IPS அவர்களிடம்,
வசூலில் தோல்வி அடைந்து மண்ணை கவ்வ மட்டுமே முடிந்தது..

வெற்றி விழா 5 வார நிகர வசூல் : ரூ 3+ கோடி

வெற்றி விழா தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் வெற்றி நடை போட்டதன் ஆதாரம் மண்ணை கவ்விய மாப்பிள்ளைகளுக்காக!!!!

1989 Tamil Cinema Collection Record

Ulaga Nayagan's Vetri Vizha : 3+ Crores Nett  in 5 weeks


Vetri Vizha is SUPER HIT both in Tamil & Telugu!!!


Friday, November 14, 2014

தாணுவின் "ஆளவந்தான் நஷ்டம்" என்ற நாடகம்

ரஜினி ரசிகர்கள் கூட அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த உலகநாயகனின் ஆளவந்தான் வெளியான நாள் இன்று ( 14 நவம்பர் 2001).


படத்தின் பப்ளிசிட்டிக்காக சினிமாக்காரர்கள் என்னென்னோமோ பண்ணுவார்கள். கமல்ஹாசன் இந்த ஸ்டில்லை மட்டுமே வெளியிட்டார்.


ரஜினி படத்தை ரிலீஸ் செய்த பிறகு விநியோகிஸ்தர்கள்/தியேட்டர் உரிமையாளர்கள்  புலம்புவதை போல ஆளவந்தானிற்கு இவர்கள் யாரும் புலம்பவில்லை, எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு அனைது ஊர்களிலும் ஒரு வாரங்களுக்கு மேலாக தினமும் 5 காட்சிகளுக்கு மேல் ஓட்டினார்கள்.

நான் மதுரை மதி தியேட்டரில் ஆளவந்தானை மூன்றாம் நாள் காலை 8 மணி காட்சியில் தான் பார்த்தேன். முதல் இரண்டு தினங்கள் தியேட்டர் சென்றும் என்னால் டிக்கெட் வாங்க முடியவில்லை.

உலகநாயகன் ஆளவந்தானை 1000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்ய சொல்லியும்  தாணு கேட்கவில்லை. ஒழுங்காக கேட்டிருந்தால் இன்னும் பெரிய ஓப்பனிங் படத்திற்கு கிடைத்திருக்கும்.

ஆனால், தாணு ஆளவந்தானால் தனக்கு நஷ்டம் என்று 2002ல் புலம்பிவிட்டு 2012ல் ஆளவந்தான்  ஹிந்தி மட்டுமே தான் எதிர்பார்த்ததை விட குறைவான விலைக்கு விற்றது என்றார். ஆனால் ரஜினி ரசிகர்கள் 2002ல் தாணு கூறியதை மட்டும் எடுத்து கொள்வார்கள். அதே பேட்டியில் தனக்கு நஷ்டம் என்றவுடன் தன் சம்பள பாக்கியை விட்டு கொடுத்துள்ளார் உலகநாயகன் என்றும் கூறியிருக்கிறார் தாணு.

ஆளவந்தான் ஹிந்தி வியாபாரம் பற்றி கூறிய தாணு, ஆளவந்தானை தென்னிந்தியாவில் எவ்வளவுக்கு வியாபாரம் செய்தார் எவ்வளவு நஷ்டம் அடைந்தார் என்று ஏன் கூறவில்லை... ஏனெனில் தென்னிந்தியாவில் நல்ல விலைக்கே விற்றார்.  

கமல்ஹாசனுக்கு சம்பள பாக்கியை கொடுக்கக் கூடாது என்பதற்காக 2002ல் நஷ்டம் என்ற நாடகம் ஆடியிருக்கிறார் இவர் என்பது கீழே  உள்ள வீடியோவை பார்த்தால் புரியும்.





Thursday, November 13, 2014

1988ல் தமிழ் சினிமாவின் வசூல் சாதனை

1988ல் தமிழ் சினிமாவின் வசூல் சாதனை

சென்னை மாநகரத்தின் 10 நாள் வசூல் சாதனை : 7+ லட்சம்
கோவை மாநகரத்தின் 10 நாள் வசூல் சாதனை : 3.4+ லட்சம்
திருச்சி மாநகரத்தின் 10 நாள் வசூல் சாதனை : 2.5+ லட்சம்


இது உலகநாயகனின் "சூரசம்ஹாரம்" செய்த வசூல் சாதனை!!!!


முதன் முதலில் கோவையில் 3 தியேட்டர்களில் வெளியான படமும்  உலகநாயகனின் "சூரசம்ஹாரம்" தான்.

உலகநாயகன் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை (நாளையும்) நிஜமான வசூல் சாதனை படைத்திருக்கிறார் என்பதை மீடியாக்களுக்கு இந்த பக்கத்தில் ஆதாரத்துடன் புரியவைப்போம் இனி!!!!

பேப்பர் விளம்பரம் உதவி : பெங்களூரூ ராமு

Tamil Cinema's 1988 Collection Record

Chennai City 10 days : 7+ L
Coimbatore City 10 days : 3.4+ L
Trichy City 10 days : 2.5+ L

It is done by Ulaga Nayagan's SOORASAMHARAM film!!!



Also SOORASAMHARAM is the first film in released in 3 theaters of Coimbatore.

From older days to till date, Kamal Haasan is the only INDIAN actor creating GENUINE BOX-OFFICE Records!!! Our aim is to make the MEDIA to understand this FACT with PROOFs.

Paper Ad Credit : Bangalore Ramu

கமல் 60 சிறப்பு நேர்காணல் - தி ஹிந்து

‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… 


 
உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன? 
 
எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான். 

தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே... 
 
தொழில்நுட்பத்தை வளர விடமால், நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். முற்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு மகாராஜா வந்து மக்களின் விசுவாசத்தை சோதிப்பதற்காக கோயிலுக்கு வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய அண்டா செய்தாராம். மக்களிடம் 'எல்லோர் வீட்டில் இருந்து பால் கொண்டு வந்து நிரப்பி விடுங்கள்' என்றாராம். அண்டா என்பது கோபுர அளவிற்கு பெரியது. அப்போது ஒரு சிலர் 'இவ்வளவு பெரிய அண்டாவில் பால் ஊற்றி நிரப்ப வேண்டும் என்றால் கட்டுப்படி ஆகாது' என்று நினைத்தார்கள். இத்தனை பேர் பால் ஊற்றினார்கள் என்பது இரண்டு பேர் தண்ணீர் ஊற்றினால் தெரியாது என்று நினைத்திருக்கிறார்கள். எல்லாருமே பால் ஊற்றி இருக்கிறார்கள், ஆனால், எல்லாமே நீர்ந்து போய்விட்டது. ஏனென்றால், அதில் தண்ணீர்தான் மேம்பட்டு தெரியுதே தவிர பால் தெரியவில்லை. அதேதான் தற்போது தமிழ் சினிமாவில் நடக்கிறது. 

நேர்மை இருந்தால் மட்டுமே எந்த வியாபாரமும் ஜெயிக்கும். எல்லாருமே காயைப் பழுக்க வைக்க மருந்து அடிச்சே பண்ணிட்டு இருக்க முடியாது. நிஜமாவே ஒரு பழம் இருக்கணும். அந்த பழம் தானே, இந்தப் பழம் என்று கவுண்டமணி - செந்தில் காமெடி எல்லாம் இந்த விஷயத்தில் பண்ண முடியாது. கண்டிப்பாக நேர்மை வந்தாக வேண்டும். வரும். எல்லாருமே கருப்பு பணத்தில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறவர்கள்... வந்து பிற்பாடு வீடு வாங்கும்போது கஷ்டப்படுவார்கள். தன்னை ஒரு பணக்காரனாகக் காட்ட வேண்டும் என்ற நிலை வரும்போது பெரிய சூழ்ச்சி எல்லாம் பண்ண வேண்டியது வரும். அதேபோல் எல்லோரும் உண்பதற்கு இங்கே உணவு உண்டு. அதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தி திரையுலகில் எப்படி 400 கோடி, 300 கோடி என்று பேச முடிகிறது? நேர்மை வந்ததுதான் காரணம். இங்கேயும் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

ஒரு முக்கியப் படைப்புக்கு 'எதிர்ப்பு, போராட்டம்' முதலான சூழலுக்கு வித்திட்டது, 'சண்டியர்'. அப்போது ஓர் கலைஞனாக உங்கள் தரப்புக்கு ஏற்பட்ட கோபம் தணிய எவ்வளவு நாளானது? ? 
 
என்ன கோபம். நான் திட்டுவதற்குப் பதிலா... அவங்களே அவங்கள திட்டிக்கிட்ட மாதிரி இல்ல. கெட்டதோ, நல்லதோ வார்த்தைகள் தேவையில்லை. அவங்களுக்கே தெரிஞ்சு போச்சு. என்னை எதிர்த்தவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதில் என்ன வீரம் இருக்கிறது?
சண்டியர் என்பது சாதிப்பெயர் அல்ல. விருமாண்டி என்பதுதான் சாதிப்பெயர். அதைக்கொண்டு வந்து வைக்க வைத்தார்கள். சண்டியர் என்பது எந்தச் சாதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ரவுடித்தனம் பண்ணுபவர்கள் எல்லாருமே சண்டியர்தான். இந்தப் பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னவரை வேண்டுமானால்கூட அப்படிச் சொல்லலாம். அவர்களுக்கான பதிலைக் காலம் சொல்லிவிட்டது. 

ஆனால், ஒரு படைப்பின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசியல் தலையீடு அதிகரித்தபடி இருக்கிறதே... 
 
கடந்த 50 வருடங்களாக அரசியல்வாதிகள்தான் இதை பண்ணிகிட்டு இருக்காங்க. அமெரிக்காவில் இருக்கிற சுதந்திரம் கண்டிப்பா இங்கு கிடையாது. நாவலாசிரியர் ஜெய மோகனுக்கு இருக்கும் சுதந்திரம், ஒரு திரைக்கதையாளனாக ஜெயமோகனுக்குக் கிடையாது. சென்சார் போர்டு ஒண்ணு வைச்சு பரவாயில்லை, கொஞ்சம் வெட்டி எடுத்துக்கோங்க என்று சொன்னாலும், அதையும் தாண்டி ஒரு கூட்டம் உட்கார்ந்துகொண்டிருக்கிறது.
‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்ததிற்கு என் மீது வழக்கு போட்டாங்க. டாக்டர்கள் அனைவரும் எங்களை வசூல்ராஜா என்று சொல்கிறார் என்றார்கள். ஃப்ரீயா பண்ற டாக்டர் எத்தனை பேர் இருக்கிறார்கள். இப்போ சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இப்போ நிறைய நிஜ வசூல்ராஜாக்கள் இருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறார்கள் இவர்கள்! 

சரி, அரசியல் தலையீடுகளைக் காட்டிலும், இணையத்தில் மலிந்துவரும் விமர்சனங்கள் மீதுதான் தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு ஒருவித அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து இருக்கிறது என்பதை கவனித்தீர்களா? 
 
இணையத்தில் விமர்சனம் பண்ணக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படித் தடுக்க முடியும்? என் கலைக்கு விமர்சனம் இருக்கக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு படம் நல்லாயில்லை என்று சொல்லும் உரிமையை நீங்கள் எப்படித் தடுக்கலாம். கமல் ஹாசனுக்கு நடிப்பே வரலைங்க, அவர் எல்லாம் வீட்டில் போய் நடிக்காமல் உட்காரலாம் என்று சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அந்த உரிமை உனக்கில்லை என்று சொல்லும் திறமை என்னுடையதாக இருக்கிறது. அதுதானே ஒரு நடிகனுடைய வெற்றி. ஆள் வெச்சு அடிக்கவா முடியும். 

‘ராஜபார்வை’, ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’ முதலான படங்கள் வெளியானபோது பெரிதாக கவனிக்கப்படாமல், காலம் கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
 
அது மாறி மாறி நடக்கும். ‘கை கொடுத்த தெய்வம்’ என்று ஒரு படம், அது வந்து ‘பாசமலர்’ அளவுக்குப் போகவில்லை. ‘கான் வித் த விண்ட் ’ என்னும் படம் இன்று எல்லோரும் பேசும் படம். முதல் சுற்றில் அது ஒரு தோல்விப் படம். 'சந்திரலேகா' கணக்குப் பார்த்தார்கள் என்றால் கம்மியான லாபம்தான் ஈட்டி இருக்கும். காலப்போக்கில் அது அடித்த அடிக்கு யாருமே பக்கத்தில் நிற்க முடியாது. அதே மாதிரி நிறைய படங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப வருமானம் ஈட்டும் வழிகள் அனைத்தையும் நாம் அடைத்துவிட்டோம். அதனால் சில உண்மைகள் நமக்குப் புரிவதில்லை. 

'குருதிப் புனல்', 'அன்பே சிவம் போன்ற' படங்களை மீண்டும் திரையில் பார்க்க விரும்புவதாக ட்விட்டரில் ரசிகர்கள் அவ்வப்போது சொல்லி வருவதைப் பார்த்திருக்கிறேன். ரீ-ரிலீஸ் சாத்தியமா?
 
அது என்னுடையது இல்லையே. தயாரிப்பாளர்களே அந்தப் படத்தை நம்பவில்லை. தயாரிப்பாளர் நம்ப வேண்டும், தயாரிக்கும் போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். குதிரை ஒட்டத் தெரியாதவன் எப்படி மேலே ஏறி உட்கார்ந்தால் உடனே கீழே தள்ளி விட்டுவிடும். அதே மாதிரி தான் ரசிகர்களும். தயாரிப்பாளர்களின் பதற்றம் எல்லாம் ரசிகர்களுக்கும் பரவிவிட்டது. 'இது நல்லா இருக்காது போலிருக்கே.. தயாரிப்பாளரே இப்படி பயப்படுறாரு' என்று வேறு பக்கம் திரும்பி பார்த்து விட்டார்கள். அப்புறம் தெரிந்து சிலர் தேடி வருகிறார்கள். எனக்கு சிவாஜி சார் சொல்லித்தான் தெரியும், 'உத்தம புத்திரன்' வெற்றி படம் இல்லை என்று. என்னால் நம்பவே முடியவில்லை. நானே 10 தடவை பார்த்த படம் இது. எனக்கு தெரிந்து நான்கைந்து முறை பார்த்தவர்களும் இருக்கிறார்கள். 

"என்ன.. சும்மா உத்தம புத்திரன் பத்தியே பேசிட்டு இருக்க. அது வெற்றி படம் எல்லாம் ஒண்ணும் கிடையாது. தெரியுமா?" என்று சிவாஜி சாரே என்னிடம் சொல்வார். நான் அவர்கிட்டயே சண்டை போட்டு இருக்கேன். "படம் பார்த்தப்போ உனக்கு நாலு வயசு இருக்கும். நான் அந்தப் படம் போகலயேனு கவலைப்பட்டிருக்கேன். ஒடுச்சுனு சொல்றால... வசூலைக் கொண்டுவந்து காட்டு. நம்புறேன்" அப்படினு சொல்லியிருக்கார் சிவாஜி சார். அது தோல்விப் படம் கிடையாது. ரி-ரீலீஸ் ஆகி படம் வெற்றியாகி இருக்கிறது. 

நான் என்னுடைய படத்தை பண்ணலாம். மற்றவர்கள் படத்தை நான் எப்படிப் போய் சொல்ல முடியும். ரி-ரீலீஸ் பண்ண வேண்டும். திரையரங்கிற்கு மறுபடியும் பழைய படங்கள் வருவது ஒரு வாடிக்கையாக வேண்டும். அதை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

கமல் ஹாசன் என்றாலே ஜீனியஸ் என்ற பிம்பம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் உண்டு. உன்னைப் போல் ஒருவனில் உங்களை ஒரு சாமானியாக ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்ற ஒரு வாதமும் உண்டு. அப்படி இருக்க, த்ரிஷ்யம் படத்தின் அடிப்படை அம்சமே ஓர் எளிய மனிதனின் அசாதாரண முயற்சி என்பதுதான். மலையாளம் ஆடியன்ஸ் மோகன்லாலை ஜார்ஜுகுட்டியாகத்தான் பார்த்தார்கள்... ஆனால், பாபநாசத்தில் கமல்ஹாசனை கமல்ஹாசனாகவே பார்க்க நேர்ந்தால்..?
 
நான் இதை மறுக்கிறேன். அந்தப் படத்தில் நான் மோகன்லாலாகத்தான் பார்த்தேன். ‘த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால்தான் தெரிகிறார். இதைவிட மோகன்லால் சிறப்பாக நடித்த படங்களை நான் காட்ட முடியும். இந்த மாதிரி பேசுபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் படமாகப் ‘பாபநாசம்' அமையும். 

நடித்தால் நடிக்கிறார் என்கிறீர்கள், ஓவராக மேக்கப் போட்டால் மேக்கப் என்கிறீர்கள். நான் செய்ததைப் பாருங்கள். நல்லா இருந்தால் நல்லாயிருக்குன்னு சொல்லுங்க, நல்லாயில்லை என்றால் பிடிக்கலன்னு சொல்லுங்க. தவறுகள் இருந்தால் ஒத்துக் கொள்ளலாம், இந்த மாதிரியான அவதூறுகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ‘தேவர் மகன்' படத்தில்கூட கமல் தெரிவான். ஆனால் ‘மகாநதி'யில் அவன் கிருஷ்ணா. ‘தசாவதாரம்' பல்ராம் நாயுடு வேடத்தில் கமல் ஹாசன் எங்கு தெரிகிறான்?
இந்தத் தொழிலில் ரசிகர்களை விட எனக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியும். பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்களை ரசித்துவிட்டு, இப்படிப் பாடியிருக்கலாம் என்று சொல்லத் தெரியாது. இன்றைக்குத் தொண்டை கட்டியிருக்கிறதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். இது கர்வம் அல்ல. எனது ஆளுமையால் வரும் தன்னம்பிக்கை. 

ம்... 'துரோகால்' சஸ்பென்ஸ் படம். அதை ரீமேக்கும்போது 'குருதிப் புனல்' சஸ்பென்ஸுடன் ஆக்‌ஷன் வகையறாவாக மாற்றப்பட்டது. 'வசூல்ராஜா'வில் மைக்கேல் மதன காமராஜனில் இருந்த வசன விளையாட்டு மிகுந்திருந்தது. அந்த வகையில், 'பாபநாச'த்தில் தமிழுக்காக என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது? 
 
கதையை மாற்றவில்லை. ரொம்ப வித்தியாசமாக வந்திருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். நான் நம்பக் கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையென்றால் டேக் 2 கேட்டிருப்பார். 

இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவுக்கான ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் ஒரேயொரு தமிழ்ப் படம்தான் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி விழாக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது "தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா, கன்டென்ட்-டில் வீக்கா இருக்கு" என்றார். தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த நிலை? 
 
தலை குனிகிறேன். இன்னும் கோபத்தில் தலை நிமிர்ந்து அடுத்தப் படத்தில் நல்லா எடுக்கலாம். இதுக்கு மறுத்துப் பேசி, தமிழுக்கு இடம் கொடுங்கள் என்று பேசாதீர்கள். அது விலாசம். தகுதிக்கு இடம் கேளுங்கள். அது தப்பு என்றால் என்னவென்று பாருங்கள். நீ இந்த படிப்பு படிக்கல, அதனால் உனக்கு இந்த வேலை கிடைக்காது என்றால், அந்த வேலையை படித்து விடலாமே. இன்றைக்கே வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது நடக்காது. எனக்கே அந்தக் கருத்து உண்டு. நாம ஏதோ பெருசா சாதித்து விட்டோம் என்று பத்து படம் பார்த்து விட்டு எடுத்தால், நாமும் அதற்கு நிகராகி விடுவோமா? சிவாஜி மாதிரி நடித்துவிட்டால், அவரை விஞ்சிவிட்டதாக அர்த்தமா? யாரை மாதிரி பார்த்து நடித்தாலும், அது மிமிக்ரிதானே. 'கிஸ்தி, திரை, வட்டி' என்று நாங்கள் பேசியது எல்லாம் மிமிக்ரிதானே. நாகேஷ் மாதிரி செய்பவர்கள் எல்லாரும் நாகேஷ் ஆகிவிட முடியாது. அவர்கள் நாகேஷின் விசிறிகள்.
அந்த மாதிரிதான் நம்ம எடுக்கும் படங்கள் வந்து, வெள்ளைக்காரன் படத்தைப் பார்த்து காப்பியடிச்சு எடுத்தா அதற்கு நிகராகி விடாது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும், புதுமைப்பித்தனும் இப்போது இருக்கிற நிறைய நல்ல எழுத்தாளர்கள் மாதிரி, சினிமாவிலும் வர வேண்டும். ஜெயகாந்தன் எங்கிருந்து எடுத்தார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி ஊற்று. சுடச்சுட எப்போதும் வந்துகொண்டே இருக்கும். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அப்படி வர வேண்டும் சினிமாவில். வரும் என்று நம்புகிறேன். வராததற்கு வியாபாரம் பெரிதாக கலந்துவிட்டது. வியாபாரிகளும் பின்னாடி நின்றுகொண்டு பேனாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு வெற்றியின் ரகசியம் தெரியாது. எனக்கு எந்த அளவுக்குத் தெரியாதோ, அதேதான் அவங்களுக்கும். சினிமா காட்டப்படும் தளங்கள் மாறிக்கொண்டே வருகிறது. அந்தத் தளங்களில் எல்லாம் சுதந்திரம் வேண்டும். தனியாருக்குப் போய் சேர வேண்டிய பணங்கள் போய்ச் சேர வேண்டும். அபகரித்தல் என்பது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்தினால் எல்லாருக்கும் பணம் வரும். வேலி கட்டினால்கூட ஒத்துக்கொள்வேன். விஷத்தை போட்டால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

அப்படி என்றால், கதை - திரைக்கதையிலும் தமிழ் சினிமா வலு பெறுவதற்கு, இலக்கியத்தின் பங்களிப்பு அவசியமாகிறது என்பது உணரப்பட வேண்டுமா? தமிழ் சினிமா - இலக்கியம் இடையிலான் பாலத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது சரிதானா?
 
இதை நான் சொல்லி 40 வருஷமாச்சு. பாலம் கட்டுறோம், பாலம் கட்டுறோம் என்று முயற்சியும் பண்ணினோம். பாலகுமாரன் எல்லாம் அப்படி வந்தவர்தான். சுஜாதா எல்லாம் அந்த பாலத்தில் நடந்து வந்தவர்தான். முதலில் வாசித்தல் வேண்டும். திரைக்கதை என்பது தனித்துறை என்றாலும்கூட, அதை எடுப்பது ஒரே இடத்தில் இருக்க வேண்டும். புதுசா ஏதாவது ஒண்ணு காற்றில் பிடிக்கலாம் என்றால் அதற்கும் இருக்கிறது. அது ஒரு யுக்தி. அத்தனை பேருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் இருக்கிற நீர்ச்சுணை நோக்கி போவதில் தப்புக் கிடையாது. போறதில்லை இங்க. இங்கே யாரு வேண்டுமானாலும், சினிமா எடுக்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சினிமா என்பது இப்போது குற்றம் மாதிரி ஆகிவிட்டது. குற்றம் செய்வதற்கு பெரிய திறமை எல்லாம் வேண்டியதில்லை, தைரியம் மட்டும் இருந்தால் போதும். அப்படி ஆகிவிட்டதே என்ற கோபம் இருக்கிறது. 

'கிராமத்தில் இருந்து வந்தான்யா பாரதிராஜானு ஒருத்தன். அவனைப் பார்த்து எல்லாரும் வந்துவிட்டார்கள்' என்று பழைய தொழில்நுட்ப கலைஞர்கள் சொல்லுவார்கள். ஏன் பாராதிராஜாவை சொல்லுகிறீர்கள். அவர் அப்படியெல்லாம் வரவில்லை. அவரை அப்படி பேசுபவர்கள் பார்க்கும் போது கோபம் வரும். இவர்கள் எல்லாம் பாரதிராஜாவை பாராட்டமலே இருக்கலாம். அவர் வந்து பட்ட கஷ்டங்கள் எவ்வளவு?. இளையராஜாவிற்கு பின்னால் எவ்வளவு கல்வி, கடின உழைப்பு இருக்கிறது தெரியுமா இவர்களுக்கு. நான் பார்த்து வியக்கிற உழைப்பாளி இளையராஜா. அந்த உழைப்பு இல்லாமல் வருபவர்கள் விழாவிட்டாலும், விழுந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். அதில் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அறுவடை பண்ணுவது போல் நடித்தால் என்னவாகும் அறுவடையே நடக்காது. அப்புறம், எங்களுடன் வந்து பங்கிற்கு மட்டும் நிற்பார்கள். 

ஒரு முக்கியப் படைப்புக்கு 'படத்தின் வெற்றி என்பது மூன்று வாரங்களாகச் சுருங்கிவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
 
2, 3 வாரங்கள் படங்கள் ஓடுவது போதும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பு 13 பிரின்ட் ரிலீஸ் பண்ணினார் எஸ்.எஸ். வாசன். அதைப் பார்த்தே என்ன முரட்டுத்தனமா பண்றாரே என்று சொன்னவர்கள் இருக்காங்க. தியாகராஜ பாகவதர் காலத்தில் 3 பிரின்ட்தான் போடுவார்கள். பிய்ந்துவிட்டது என்றால், அதைச் சரி செய்வார்கள். புதிதாகப் போட மாட்டார்கள். அதை அதிகரித்தவர்தான் வாசன். நான் 40 பிரின்ட்டாக இருக்கும்போதே, 100 பிரின்ட் தாண்டப் போகிறதுன்னு சொல்லிட்டிருந்தேன். இன்றைக்கு 3000 பிரின்ட்டைத் தொட்டிருக்கிறது. ஆகையால் இரண்டு வாரம் போதுமானது. 

உள்ளூர் ரசிகர்களுக்கு உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளின் கூடியிருக்கும் பொறுப்புகள் எத்தகையது?
 
முதலில் பார்க்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதாக கருதுகிறேன். ரசிகர்கள் பார்க்கிற அத்தனை படத்தையும் பார்க்க வேண்டும். இவர்கள் தன் சினிமாவை மட்டுமே பார்க்கிறார்கள். உறவுக்குள், உறவுக்குள் கல்யாணம் பண்ணிக் கொண்டே இருந்தால் உருவங்கள் ஒரே மாதிரி இருக்குமே தவிர, வியாதிகள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் சாதி திருமணம் போன்றவை எல்லாம் நடப்பதாக நினைக்கிறேன். ஒரு வித்தியாசமான சிந்தனைக்காக அல்ல. காதல் தான் இந்த சாதியை எல்லாம் ஒழிக்கும் என்று நினைத்தேன். இப்போ அதையும் கெடுக்கிறார்கள். 

கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் பேசுறோம். ஆனால் சாதி ஒழிப்பைப் பற்றி யாருமே பேச மாட்டிக்கிறோம். சாதி ஒழிப்பு ரொம்ப மெதுவா நடக்குது. சாதி இல்லையடி பாப்பா என்று பாட்டு பாடிய பாப்பாவிற்கு எல்லாம் கொள்ளு பேத்தி பிறந்தாச்சு. இன்னும் சாதிக்கலவரம் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏதோ தமிழர்களை மட்டும் சாடுவதாக நினைக்க வேண்டாம். நகரத்தில் இருப்பவர்கள் என்னிடம் என்னங்க சாதி என்று இன்னமும் பேசி கொண்டே இருக்கிறீர்கள் என்று? சரவண பவனில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு சாதி எங்கிருந்து தெரியும். கொஞ்சம் தள்ளிப்போனால் தட்டில் சாப்பாடு கொடுக்க மாட்டுக்கிறார்கள். அந்த அநியாயத்தை பத்திரிக்கைகள் கூட சுட்டுக் காட்டுவதில்லை. என்ன அக்கிரமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். சாதி மாறவில்லை என்பது தான் நிஜம். சொல்லுவதற்கே பயமாக இருக்கிறது. இப்போது உற்றுக் கவனித்தீர்கள் என்றால், 'தேவர் மகன்' கதையை எப்படி எழுதியிருக்க வேண்டும். சாதிக் கலவரம் என்றால் ரெண்டு சாதி காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், நான் காட்டவே இல்லை. நான் சொல்ல நினைத்தது அது தான். ஏன் வம்பு என்று நான் சொல்லவே இல்லை.

Wednesday, November 12, 2014

'உலக நாயகன்' கட்சிக்கு மாறிய ரசிகனின் கடிதம்

'சாகர சங்கமம்' 'சலங்கை ஒலி'யாக தமிழில் வெளியானபோது, அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிடுவேன். காலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று ராத்திரியிலே திரையரங்கின் வாசலிலேயே நிறைய பேர் உறங்குவது உண்டு. 'சலங்கை ஒலி'ன்னா அப்படி ஒரு படம். அந்தக் காலத்துல சினிமான்னா அப்படி ஒரு க்ரேஸ்.



கமல் படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி இப்படி எதுல வந்தாலும் மெட்ராஸ்'ல பயங்கர ஓபனிங். 'பதினாறு வயதினிலே' படம் பார்க்க போனப்போ சைக்கிள்லேந்து கீழ விழுந்து அப்படியே தியேட்டர்க்கு போய் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் பார்த்தேன் முட்டி, கை காலுல அடிபட்டு ரத்தமுன்னு. அது எதுவுமே எனக்கு அப்போ பெருசா தெரியல.. படம் பார்த்ததுக்கு அப்புறமாவும் அந்த நெனப்பு தான். வலி தெரியல.
'ராஜ பார்வை' படம் பார்த்துட்டு ஒரு ரசிகன் கமலுக்கு ரத்தத்துல லெட்டர் எழுதினான் தெரியுமா? எண்பதுல இந்திய சினிமா இண்டஸ்ஸ்ட்ரி எதுல திரும்பி பார்த்தாலும் அது முழுக்க கமல் இருந்தாருன்னு தெரியுமா?
எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அதிகமாக கர்வ் கமலுக்குதான் இருந்துச்சு, 'காக்கிச் சட்டை' பார்த்துட்டு நிறைய பேர் ஜிம்முக்கு போக ஆரம்பிச்சாங்க. அப்போலாம் 'ஆர்கெஸ்ட்ரா ஸ்டேஜ்'ல பாடினாலே 'சனம் தேரே கசம்' பாட்டு தான், அப்பவே 'ஏக் துஜே கேலியே' பைக் ஸ்டன்ட்லாம் சூப்பரா இருக்கும் டா தெரியுமா?" 

- இப்படியே நீண்டுகொண்டே போகிறது சிறு வயதில் கமல் பற்றி அப்பா கூறிய கதைகள்.
 
சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்தில் நாம் ஒவ்வொரு நாயகரின் ரசிகராக இருக்கின்றோம். ஆனால், சினிமாவுக்கு எப்போது முழு ரசிகராக மாறுகிறோமோ அப்போது கமல் எனும் புத்தகத்தை ரசிக்காமல் எவராலும் இருக்க முடியாது.
என் சிறு வயதில் உழைப்பாளி, சின்ன தம்பி, வியட்நாம் காலனி போன்ற படங்களை ரசித்து பார்த்து வந்தேன். அப்போது சினிமா என்றால் வெறும் பொழுதுபோக்குதான். நம்மை மகிழ்விக்கும் ஓர் ஊடகம் அவ்வளவே. தொலைக்காட்சிகளில் 'நல்லவனுக்கு நல்லவன்', 'பாயும் புலி' போன்ற படங்கள் பார்த்துப் பார்த்து ஹீரோ இப்போ அடிப்பார் பார்'டா அ..டிகா அ...டிகா என்று கத்திக் கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததுண்டு. இதேபோன்ற படங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகி வருடங்கள் கடந்து 'மகாநதி' போன்ற படங்கள் பார்த்தபோது அது ஓர் ஒப்பாரியாகவே தோன்றியது.
அப்போதெல்லாம் 'நான் ரஜினி கட்சி', 'நான் கமல் கட்சி', 'நான் விஜயகாந்த் கட்சி' என்றெல்லாம் சுட்டிகளாக சண்டை போட்ட காலம் அது. அந்தக் காலத்தில்தான் 'மகாநதி' பார்த்து, கமல் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக நான் தாவினேன். 

'மகளிர் மட்டும்' படம் வெளியாகியபோது 'மகாநதி'யும் வெளியாகியதே.., அப்போ கமல் என்ன முட்டாளா? என்று வியந்ததும் உண்டு. உண்மையில் கூறினால் கமல் ஒரு போராளி. வழி தவறிப்போன ரசனையை மீட்க வந்த ஒரு போராளி. 

'சகலகலா வல்லவன்', 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற படங்களை மட்டுமே கமல் தொடர்ந்து அளித்திருந்தால் மற்ற நடிகருக்கும் அவருக்குமான பெரியதொரு இடைவெளி பிறந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வெறும் சண்டை, மசாலாவாகத் தான் இருந்திருக்கும். அப்போது 'குணா' பார்க்காமல் இருந்திருந்தால்? எதற்காக அழகாக இருக்கின்ற ஒரு முகத்தை ஒருவன் அலங்கோலம் செய்து கொள்ள வேண்டும் என்று அப்போது வியந்ததுண்டு. முட்டாள் கதாப்பாத்திரம் என்றாலே நகைச்சுவையாளர்கள் தான் என்று காட்டிய ஒரு காலகட்டத்தில் முட்டாள் ஒருவன் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் தைரியம் ஒருவனுக்கு எப்படிப் பிறக்கும்? என்று 'சிப்பிக்குள் முத்து' படம் பார்க்கையில் எண்ணியதுண்டு. 

தனது முதல் அரங்கேற்றத்திற்கு அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு வருகிறான். வருடங்களாய் மேற்கொண்ட தவத்திற்கு கிடைத்த வாய்ப்பு, திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு கனவு மேடை, தான் மேடையில் ஏறுவதை தன் அம்மா ஒரு முறை பார்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசை ஆசையாக வீட்டிற்கு ஓடோடி வருகிறான். வீட்டிற்கு வந்தால் அம்மா படுக்கையில் உடல் நலம் குன்றி உறங்கிக் கிடக்க, அவள் உயிர் பிரியும் நிலை. 

இக்காட்சியை வேறொரு நடிகர் நடித்திருந்தால் அம்மாவின் கரங்கள் பிடித்து வசனம் பேசுவது போலதான் காட்சி அமைந்திருக்கும். ஆனால், பாலகிருஷ்ணன் ஒரு பரதக்கலைஞன் விழிகளில் நீர் சுரக்க 'கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்.. பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்' என்ற பாடல் ஒலிக்க தன் தாய் முன் ஆடத் துவங்குகிறான். ஆட்டம் என்றாலே சினிமா சந்தோஷத்தை தானே தந்திருக்கிறது கண்களில் நீர் சூழ தன் அம்மா முன் கமல் ஆடும் அந்த ஒரே காட்சியே கமலின் ரசிகனாக என்னை மாற்றியது. இதை கமல் தவிர வேறு எந்த நடிகர் செய்திருந்தாலும் காட்சி க்ளீஷேவாய் (cliche) மாறக் கூடிய அதீத வாய்ப்பு நிறைந்திருந்தது. 

'சலங்கை ஒலி' படத்திற்கு பிறகு நான் பார்த்த ஒவ்வொரு படங்களிலும் கமல் ஈர்க்கத் தொடங்கினார். 

'ஹேராம்' படத்தில் வருகின்ற ஒரு வசனம் இது.. 'தாத்தா ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ன்னு சொல்ல மாட்டார். நான் வாழ்ந்த ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ன்னு தான் சொல்லுவார்' இந்த வசனம் கமல் இயக்கிய ஒவ்வொரு படங்களுக்கும் பொருந்தும். 

'விருமாண்டி', 'ஹே ராம்', 'விஸ்வரூபம்' இப்படங்களில் எல்லாம் தன் பார்வையில் தான் நினைத்தவற்றை நினைத்தவாறே உரைத்திருப்பார். அவர் கருத்துக்களில் நாம் முரண் கொள்வதும் உண்டு, உடன்படுவதும் உண்டு. அதுவரை எடுக்கப்படாத பல வாதங்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கும் பெருமை உலக நாயகனைச் சாரும். 

உலக அளவில் வசூல் சாதனை புரிந்ததால் மட்டும் அவர் உலக நாயகன் அல்ல. ரசிகர்களை தங்கள் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் நடிகர்களுக்கிடையே, 'என் பெயரால் உங்களுக்கு சண்டையிடும்படி வருகிறதென்றால் எனக்கு ரசிகர் மன்றம் எதுவும் வேண்டாம். எல்லாவற்றையும் முடக்குங்கள். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்' என்று ரசிகனின் நலனையும் கருதியதால் தான் அவர் உலக நாயகன். 

'தேவர் மகன்', 'நாயகன்', 'சத்யா', 'மைக்கேல் மதன காம ராஜன்', 'இந்தியன்', 'மூன்றாம் பிறை', 'மரோ சரித்திரா' போன்ற படங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ட்ரேன்ட் செட்டர். எத்தனை நபர்கள் கோடம்பாக்கம் வருவதற்கு வித்தாக அமைந்த படங்கள் இவை. 

சாப்ளின் செல்லப்பாவாக புன்னகை மன்னனிலும், வேலு நாயக்கராக நாயகனிலும், ஷண்முகி மாமியாக அவ்வை ஷண்முகியிலும் இப்படி சார்லின் சாப்ளின், மார்லன் பிராண்டோ, ராபின் வில்லியம்ஸ் போன்ற மேதைகளின் மிக முக்கிய கதாபாத்திரங்களை தன்னால் சாத்தியப்படுத்த முடியும் என்று கமல் நிரூபணம் செய்திருப்பார். ஆனால் பால கிருஷ்ணனையும், கோபால கிருஷ்ணன் (எ) சப்பாணியாகவும், அப்புவையும் வேறு எந்த கலைஞனனால் சாத்தியப் படுத்திருக்க முடியும்? 

"கமல் என்ற நடிகரை பார்த்து நான் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் கமல் என்ற பாடகனை பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்" - யேசுதாஸ் 
 
''நான் தான் பின்னணியில் பாடினேன். ஆனால் பாடல் பார்க்கையில் கமல் தொண்டை அவ்வளவு கனக்கின்றது காட்சியிலும் உண்மையாகவே அவர் பாடிக் கொண்டே இருக்கிறார்'' – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
 
''கமல் இருக்கிற ஊர்ல இவன் எப்படி ஹீரோவானான்ணு எல்லாருக்கும் சந்தேகம்'' - ரஜினிகாந்த்
 
''கமல் ஆகணும்னு நினைக்காதீங்க. அது நடக்கக் கூடியதல்ல''- மோகன்லால்
 
''இந்தியன் சினிமாவில் எத்தனையோ சகாப்தங்கள் உண்டு. ஆனால் உன்னைப் போல் ஒரு மேதை இல்லை'' - வெங்கடேஷ்
 
''கமல் மாதிரி ஒரு நடிகர் எங்களுக்கு கிடைக்கலன்னா நாங்கலாம் டான்ஸ் மாஸ்டரா வெளியில அடையாளம் தெரிஞ்சிருக்க மாட்டோம்'' - ரகுராம்
 
இப்படி நீண்டு கொண்டே பட்டியல்கள், கூடிக்கொண்டே போகும் விருதுகள், பெருகிக் கொண்டே போகும் ரசிகர்கள். 

'விஸ்வரூபம்' படம் தடைப்பட்டபோது ஒரு ரசிகர் தனது வீட்டு பத்திரத்தை அனுப்பியதெல்லாம் எதனால்? கமல் தனது ரசிகர்களின் உணர்வோடு வாழ்ந்திருப்பதால் மட்டுமே. இத்தனை ரசிகர்கள் இருந்தும், பாக்ஸ் ஆபிசில் நெத்தியடி அடிப்பதற்கான சூட்சமத்தை அறிந்த போதும் தன் மனதிற்கு தோன்றியவற்றை தொடர்ந்து செய்வதால் மட்டுமே ரசிகர்களுக்கு அவர் ஒரு உலக நாயகன். ரசிகர்களால் விமர்சிக்கப்படுவதும், விமர்சகர்களால் ரசிக்கப்படுவதும் கமலுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடியவை. 

அன்புள்ள உலக நாயகனே.. நீங்கள் மென்மேலும் சாதனைபுரிய உங்களின் கடவுள்களாகிய நாங்கள் வணங்குகிறோம். 

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

Tuesday, November 11, 2014

சென்னை(சிட்டி) கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் இலவச இருதய மருத்துவ முகாம்

சென்னை(சிட்டி)-பாரடைஸ் யூனிட் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் 3வது & 4வது இலவச இருதய மருத்துவ முகாம் 9-நவம்பர்-2014 அன்று சைதாப்பேட்டையிலும் இராமபுரத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

சைதாப்பேட்டையில் கூடுதலாக "முற்போக்கு சிந்தனையாளர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ( பதிவு எண் 10155 )" என்ற கிளை இயக்கமும் புதிதாக தொடங்கப்பட்டது.

இராமபுரத்தில் கூடுதலாக இலவச பல் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

சைதாப்பேட்டையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அர்ஜி மெளலி & டீம்,

இராமபுரத்தில்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த லதா பிரசாத் & டீம் 

மற்றும் உலகநாயகனின் 60 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு முன்னேற்பாடுகள் என்று தங்களை ஈடுபடுத்தி களைப்படைந்திருந்தாலும், எனது வேண்டுகோளின் படி, விழாவிற்கு காலை 8 மணிக்கே வந்திருந்து சிறப்பித்த அனைத்து சென்னை(சிட்டி)-பாரடைஸ் யூனிட் & இண்டர்நெட் கமல் ரசிகர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

- சண்டியர் கரன்


Monday, November 10, 2014

அவ்வை சண்முகி தினம்

மேக்கப் கலையில் புதிய தொழில்நுட்பத்தை

இந்திய சினிமாவிற்கு அறிமுகபடுத்தி

ஒரே வருடத்தில் தாத்தாவாகவும் பாட்டியாகவும் மாறி

இந்திய அளவில் 2 மெகாஹிட் படங்களை கொடுத்தார் உலகநாயகன் 1996-ல்!!!

அந்த இரண்டில் அவ்வை சண்முகி வெளியான நாள் இன்று (10-Nov-1996) !!!

Kamal Haasan Introduced NEW Makeup Technology to Indian Cinema and acted as OLD MAN & OLD WOMAN in the same year 1996 and made both 2 films as ALL INDIA BLOCKBUSTERs!!! 

Avvai Shanmugi is one of those films and released today of 1996. 


Saturday, November 8, 2014

கமல்ஹாசன் தொடங்கிய "சுத்தமான பாரதம்"


நவம்பர் 7 உலக நற்பணி தினத்தை முன்னிட்டு,

உலகநாயகன் தலைமையில்,

Environmentalist Foundation of India உடன் இணைந்து

சென்னை மாதம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை

சென்னை(சிட்டி)-பாரடைஸ்யூனிட் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்  துவங்கியது!!!

இந்த நற்பணியில் உங்களை இணைத்துக் கொள்ள விரும்பினால், கமெண்ட செய்யவும். அடுத்த திட்டம் பற்றிய தகவல்  உங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கொடுக்கப்படும்.



Chennai (CITY) - Paradise Unit Kamal Haasan Welfare Movements joint together with Environmentalist Foundation of India, started the CLEAN INDIA campaign on Nov-7 (World Welfare Day), at Chennai Madambakkam Lake, with Ulaga Nayagan Kamal Haasan at the helm.

To Join this cause, Please comment here, so you will be get informed about next action plan, exclusively too.

Wednesday, November 5, 2014

தமிழ் சினிமாவின் ரசனையை மாற்றிய குணா

தமிழ் சினிமாவின் ரசனையை மாற்றிய உலகநாயகனின் குணா வெளியான நாள் இன்று (5-நவம்பர்-1991).

வித்தியாசமான படமாக இருந்தும் சென்னை, மதுரை & கோவையில் 100 நாட்கள் கொண்டாடிய படம் உலகநாயகனின் குணா!!!

அன்று குணாவுடன் போட்டிக்கு வந்த படத்தை இன்று ஞாபகம் வைத்திருப்போர் அவருடைய பழைய ரசிகர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆனால் உலகாநாயகனின் குணாவை முகப்புத்தகத்தில் இன்றைய தலைமுறையினரின் விருப்ப பட்டியலிலும் காணலாம் !!! இது அடுத்த தலைமுறைகளுக்கும் தொடரும்... 

கொடைக்கானலில் குணா குகை என்னும் சுற்றுலா தளத்தையே உருவாக்கி கொடுத்தப்படம் நம் உலகநாயகனின் குணா !!!


Tuesday, November 4, 2014

தங்க மகனை தகர மகனாக்கியது யார்?

உலகநாயகனின் "தூங்காதே தம்பி தூங்காதே"
1983 தீபாவளி போட்டிக்கு வந்த தங்க மகனை தகர மகனாக்கிய நாள்
இன்று (4-நவம்பர்-1983)!!!


Monday, November 3, 2014

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன்

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் முதல் கலைஞன் நம் உலகநாயகன் கமல்ஹாசன். தின இதழ் நாளிதழில் வெளியான அவரின் பேட்டி:

"தமிழக மீனவர்கள் தூக்கிலிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது... எல்லை தாண்டி வந்ததற்காக அவர்கள் தூக்கிலிடப்பட இருந்தால் அதை விட கொடிய குற்றத்தை செய்தவர்கள் அங்கே இருக்கிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?"

Kamal Haasan is the first actor who supports Tamil Fishermen. He told in his recent interview to "Thina Idhazh" Tamil Daily that : "Capital punishment to Tamil fishermen is unacceptable, if they are punished only for the border crossing, what kind of punishment can be given for them who did carnage there?"

Sunday, November 2, 2014

மோடியின் முன்னோடி நம்மவர்

நமது பாரத பிரதமர் மோடி "சுத்தமான இந்தியா" என்ற திட்டத்தை தொடங்குவதற்கு காரணமான

உலகநாயகனின் நம்மவர் திரைப்படம்

வெளியான நாள் இன்று ( 2-நவம்பர்-1994 )


Saturday, November 1, 2014

மாவீரனை மண்டியிட வைத்தவர்

உலகநாயகன் புன்னகை மன்னனாக வந்து, மாவீரனை தன்னிடம் மண்டியிட வைத்த நாள் இதே நாள் 1-நவம்பர்-1986 அன்று !!!


Friday, October 31, 2014

வெள்ளிவிழா ஹீரோ யார்?

தினகரன் வெள்ளிமலர் 31.10.2014 "கேள்வி பதில்கள்" பகுதியில் கேட்ட கேள்விக்கு,

உண்மையான வெள்ளிவிழா ஹீரோ உலகநாயகன் தான்,

என்று முட்டாள்களுக்கும் புரியும் படி புள்ளிவிவரங்களுடன் சொல்லியிருக்கிறார்கள் !!!  அப்ப்டியென்றால் ரஜினி ரசிகர்களுக்கும் புரியும் தானே?...

உலகநாயகன்  :

தமிழில் மட்டும் - 30+ வெள்ளிவிழா படங்கள்

மொத்தமாக 50+ வெள்ளிவிழா படங்கள்

1982 -ல் மட்டும் 5 வெள்ளிவிழா படங்கள்


Thursday, October 30, 2014

ஒரே நாளில் உலகநாயகனின் 4 படங்களா?

ஒரே நாளில்

உலகநாயகன் தன் 4 படங்களை ( தமிழ் 3, மலையாளம் 1 )

ரிலீஸ் செய்து சாதனை படைத்திருக்கிறார்!!!


1. சிகப்பு ரோஜாக்கள்
2. மனிதரில் இத்தனை நிறங்களா?
3. அவள் அப்படித்தான்
4. வயநாடன் தம்பன் ( மலையாளம் )

இதே நாள் 30-அக்டோபர்-1978 அன்று...