Ads 468x60px

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, August 6, 2015

உலகநாயகனின் மதுரை சாதனைகள்

உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை...
பல மொழிகளில்...
பல சாதனைகள் புரிந்த உலகநாயகன்
மதுரையை மட்டும் விட்டு வைப்பாரா?


மதுரையில் மட்டும் உலகநாயகனின் 39 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது. வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனையை நினைத்து கூட பார்க்க முடியாது.
மதுரையில் உலகநாயகனின் 11 படங்கள் 150 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

மதுரையில் உலகநாயகனின் 8 படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

மதுரையில் உலகநாயகனின் 4 படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.


திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
களத்தூர் கண்ணம்மா (1960)சிந்தாமணி75+ நாட்கள்
மன்மத லீலை (1976)சினிப்ரியா100 நாட்கள்
16 வயதினிலே (1977)மினிப்ரியா266 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது (1978)சினிப்ரியா100 நாட்கள்
சட்டம் என் கையில் (1978)சென்ட்ரல்100 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள் (1978)சக்தி183 நாட்கள்
கல்யாண ராமன் (1979)கல்பனா107 நாட்கள்
குரு (1980)குரு113 நாட்கள்
Ek Duje Ke Liye(1981)அபிராமி100 நாட்கள்
சவால் (1981)நியூசினிமா100 நாட்கள்
டிக் டிக் டிக் (1981)சுகப்ரியா126 நாட்கள் (இத்திரையரங்கின் முதல் 100 நாட்கள் படம்)
வாழ்வே மாயம் (1982)நியூசினிமா175+ நாட்கள்
மூன்றாம் பிறை (1982)சிந்தாமணி100 நாட்கள்
சிம்லா ஸ்பெஷல் (1982)சுகப்ரியா105 நாட்கள்
சகலகலா வல்லவன் (1982)சென்ட்ரல்202 நாட்கள்
சட்டம் (1983)சினிப்ரியா112 நாட்கள்
சலங்கை ஒலி (1983) - டப்பிங்மது100 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதே (1983) சுகப்ரியா263 நாட்கள்
ஒரு கைதியின் டைரி (1984)மினிப்ரியா100+ நாட்கள்
காக்கி சட்டை (1985)சென்ட்ரல்154 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (1986) - டப்பிங்நடனா காம்ப்ளக்ஸ்106 நாட்கள்
விக்ரம்(1986)நடனா காம்ப்ளக்ஸ்105 நாட்கள்
புன்னகை மன்னன் (1986)அபிராமி150 நாட்கள்
நாயகன் (1987)மினிப்ரியா225 நாட்கள்
சத்யா (1988)அமிர்தம்102 நாட்கள்
உன்னால் முடியும் தம்பி (1988)நடனா காம்ப்ளக்ஸ்105 நாட்கள்
அபூர்வ சகோதரர்கள் (1989)அபிராமி175 நாட்கள்
சோலமலை105 நாட்கள்
வெற்றிவிழா (1989)சுந்தரம்125 நாட்கள்
மைக்கேல் மதன் காமராஜன் (1990)அபிராமி
காம்ப்ளக்ஸ்
100 நாட்கள்
குணா (1991)அபிராமி100 நாட்கள்
மதி70 நாட்கள்
தேவர் மகன் (1992)மீனாட்சி
காம்ப்ளக்ஸ்
180 நாட்கள்
சுகப்ரியா116 நாட்கள்
மினிப்ரியா80 நாட்கள்
மகாநதி (1994)நடனா காம்ப்ளக்ஸ்100 நாட்கள்
சதிலீலாவதி (1995)ஹாஜீரா103 நாட்கள்
குருதிப்புனல் (1995)அம்பிகா100 நாட்கள்
மதி75+ நாட்கள்
இந்தியன் (1996)மதி155 நாட்கள்
சுந்தரம்135 நாட்கள்
அவ்வைசண்முகி (1996)அண்ணாமலை (கல்பனா)140 நாட்கள்
அம்பிகா100 நாட்கள்
தெனாலி (2000)அண்ணாமலை (கல்பனா)100+ நாட்கள்
அம்பிகா100+ நாட்கள்
மதி100+ நாட்கள்
தசாவதாரம் (2008)சக்தி100+ நாட்கள்
நடனா காம்ப்ளக்ஸ்75+ நாட்கள்
ஜெயம் 75+ நாட்கள்
தமிழ் ஜெயா75+ நாட்கள்

 

Tuesday, April 15, 2014

டயலாக் தான் ரஜினி.... ACTION கமல் தான்!!!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பதை இந்த கட்டுரையை படிப்பவர்கள் அனைவரும் முடிவில் ஏற்றுக் கொள்வீர்கள்.

                                                                                                               நன்றி : தினமணி

பாட்ஷா படத்தில் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னா மாதிரி என்று டயலாக் விடுவார். அந்த டயலாக்கின் அர்த்தம், ஒரு விஷயத்தை பற்றி ஒரு தடவை சொல்ற கருத்தை தான் எப்பவும் சொல்வேன் என்று அர்த்தம், அடுத்த நாள் மாற்றி சொல்வேன் என்று அர்த்தம் அல்ல.1996-ல் ஜெ. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பற்ற முடியாது என்றார், பின் அடுத்த ஜெ. ஆட்சியில் அவரையே தைரிய லட்சுமி என்றார், இன்று மேடையிலேயே புரட்சி தலைவி, அம்மா என்று கட்சிகாரர்களை போல பம்முகிறார்.

ஒக்கேனக்கல் பிரச்சினையில் முதலில் "அடிப்பேன் உதேப்பேன்" என்று சீன் போட்டார், பின்பு குசேலனை பெங்களூரில் ரிலீஸ் செய்ய, நான் அப்படி சொல்லவில்லை என்று மன்னிப்பு வேற கேட்டார்.

மாறாக, கமல் 80 களிலேயே எம்ஜியாரால் அரசியலுக்கு அழைக்கப்பட்டார். அன்று அவரிடம் "அரசியலுக்கு வர விருப்பமில்லை" என்று தன் கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், இன்றும் அதே கருத்தில் நிலையாய் இருக்கிறார். 

"சிவாஜி" என்ற படத்தில் சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று, ரஜினி இப்படத்திற்கு முன் வெளிவந்த அர்ஜூனின் பட டயலாக்கை பேசியிருப்பார்.

ரஜினியின் படங்கள் அந்தந்த கால பாப்புலர் ஹீரோயின், டைரக்டர், மியூசிக் டைரக்டர், காமெடியன்கள் இல்லாமல் வெளிவந்தது கிடையாது. இதுக்கு பேர் தான் சிங்கிளா வருவதா? அப்படியே பாப்புலர்கள் கூட்டமாக வந்தாலும் தியேட்டர்காரர்களும் விநியோகிஸ்தர்களும் ரஜினி படத்தில் போட்ட பணத்தில் பாதியை கூட திரும்ப எடுப்பதில்லை.

கமல் படங்களிலோ பாப்புலர் காமெடியன்கள் அல்லது பாப்புலர் ஹீரோயின் அல்லது பாப்புலர் டைரக்டர் அல்லது பாப்புலர் மியூசிக் டைரக்டர் என்று யாரேனும் ஒருவரை வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் அத்தனை பாப்புலர்களையும் ஒட்டு மொத்தமாக பார்ப்பது அரிதிலும் அரிது.

தசாவதாரத்தில் பத்து வேடங்களில் நடித்தது மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தென்னிந்தியா அறியாத ஹிம்மேஷை இசையமைப்பாளராக்கி, பாப்புலர் காமெடியன்கள் இல்லாமல், தொழில்நுட்ப அறிவு கமல் அளவில் 1% கூட இல்லாதவரை இயக்க வைத்து, அப்படத்தை தென்னிந்தியாவின் உச்ச வெற்றியாக இன்றும் இருக்க வைத்த கமல்ஹாசனை "ONE MAN ARMY" என்று கூறுவது கூட குறைந்த பட்ச பாராட்டு தான்... விஸ்வரூபத்தில் இன்னும் பல படிகள் மேலே சென்று, தானே இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தான் மட்டுமே உலக சினிமாவின் ஒன் மேன் ஆர்மி என்று நிரூபித்து விட்டார்.

படையப்பா படத்தில் என் வழி தன் வழி என்று கூறுவார் ரஜினி. தன்னுடைய சொந்த பள்ளியிலே ஒரு ஏழை மாணவனுக்காவது இலவச கல்வி கொடுத்திருக்கிறாரா? அவரின் ரசிகர்களுக்கு தன் மகள் கல்யாணத்திற்கு பிரியாணி பொடுவேன் என்று சொல்லி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது (இவரே பிரியாணி அரிசியை உருவாக்குகிறார் போல). இது தான் அவருடைய தனி வழி போல?

கமல் தனக்கு எத்தனை இடர்கள் வந்தாலும் நேர்மையான வழியில் தான் எதிர்கொள்வார். கருப்பு பணம் சேர்க்க மாட்டார். விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடிப்பார் அதுவும் சம்பளம் பெறாமல். அண்மையில் கூட 2014 பாரளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் இலவசமாக நடித்துள்ளார். அப்படின்னா கமல் வழி தானே தனி வழி!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் சுத்தமா இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பது புரிந்திருக்குமே...

Thursday, December 26, 2013

தெனாலி - விநியோகிஸ்தர்களுக்கு கோடிகளை அள்ளி தந்த முதல் தமிழ் படம்

விநியோகிஸ்தர்களுக்கு மாவட்ட அளவில் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று தந்த முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் தெனாலி என்பதற்கு இவைகளே சான்றுகள்.






மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சொல்லலாம், அவர் படமும் இத்தனை கோடி அத்தனை கோடி என்று...

ஆதாரங்கள்  கேட்டால் 1இந்யா, பிகைன்ட்கட்டை அல்லது விக்கிபீடியாவை தான் கொடுப்பார்கள், ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகிஸ்தர்களோ, தியேட்டர் உரிமையாளர்களோ சொல்லியிருக்க மாட்டார்கள்.

கமல்ஹாசனின் இந்தியன் புரிந்த வசூல் சாதனைகளை காண இங்கே கிளிக் செய்க

Monday, April 8, 2013

கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்கு செல்வார் : சுஜாதா(1999)

உலகநாயகன் கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்கு செல்வார் என்றும், நடிகனாகவா டைரக்டரகாவா என்று தான் அவர் தீர்மானிக்க வேண்டும் என்று சுஜாதா அவர்கள் 1999 அன்றே கணித்திருக்கிறார், தனது "ஹேராம்" விமர்சனத்தில்...



        நன்றி : சகலகலாவல்லவர் விஜய்

Wednesday, March 27, 2013

மகாநதி - விகடன் விமர்சனம்

மகாநதி - கமல்ஹாசன் பல பரிணாமங்களில் ஜொலித்த படங்களில் முதன்மையானது.

இருந்தாலும் நான் பார்க்க விரும்பாத உலகநாயகனின் படம் இது, அதையும் மீறி பார்த்தால், பல நாட்கள் சோகத்தை இறக்கி வைக்க விடாமல் திணற வைக்கும் படம் (பாடம்) என்பதால்.





நன்றி : சகலகலாவல்லவர் விஜய்

Thursday, March 7, 2013

விஸ்வரூபத்தில் பெண்களின் விஸ்வரூபம்

தாய்மொழி, தாய்நாடு, "மாதா,பிதா,குரு,தெய்வம்" என்று பெண்களுக்கு, வார்த்தைகளில் முதலிடம் கொடுத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நேற்று வரை அவர்கள் ஆண்களுக்கு அடுத்த இடமே.

குறிப்பாக ரஜினி படங்களில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமே. அவர் படங்களில் தான், உயரத்துடிக்கும் பெண்களின் காலை வாரிவிடும் வசனங்கள் அதிகமாக இருக்கும். மேலும் அவர் படங்களில் கதாநாயகியை பாடல்களுக்கு வந்து ஆடி விட்டுப்போகும் பொம்மையாக தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

மாறாக, கமல்ஹாசன் மட்டுமே தன் படங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார், அவர்களுக்காக தனி படமே எடுத்துள்ளார்.

மகாநதி படத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த படுவதை, மகளிர் மட்டும் படத்தில் அலுவலகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை
துணிந்து காட்டியுள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு படங்களில்  பெண்களும் தைரியமாக இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.



இதையெல்லாம் தாண்டி, இன்று விஸ்வரூபத்தில் கதாநாயகனை விட கதாநாயகியால் தான் நியூயார்க் நகரமே காப்பாற்ற படுவதாக காட்டி, தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கதாநாயகிகளை முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

விஸ்வரூபத்தில் வரும் மூன்று முக்கிய இந்திய பெண் கேரக்டர்களும் நன்கு படித்தவர்கள்,


1. நிருபமா (Nuclear Oncologist)

2. அஷ்மிதா (RAW Agent)

3. ஷரினா வாகப் (Psychiatrist)

இது ஆப்கானிஸ்தான் பெண்களை விட இந்திய பெண்கள் எவ்வளவு வேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதன் விஸ்வரூப குறியீடு தானே.

அன்று பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்களை கமல்ஹாசன் தன் விஸ்வரூபத்தில் படைத்துள்ளது பெண்களுக்கு "மகளிர் தினம் 2013" பரிசு என்றால் மிகையாகாது.


Friday, February 15, 2013

விஸ்வரூபம் vs எந்திரன் in IMDB

வசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.



அதற்கு முன் டிரெய்லர் போல, IMDB ரேட்டிங்கில் விஸ்வரூபம், எந்திரனை வீழ்த்தியதை பார்ப்போம்.

ஒரு ரஜினி ரசிக பதிவர் கூறுகிறார், எந்திரன் வெளிநாடுகளில் மிகப்பெரிய ஹிட் என்று. ஆனால், உலகம முழுவதும் வெளியாகும் சினிமாக்கள் பற்றிய டேட்டாபேஸ் இணையதளம் IMDB-ல் 12000க்கும் குறைவானவர்களே இந்த படத்திற்கு ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.

(அறிவு) குறைவானவர்களே ஓட்டு  போட்டும், ரேட்டிங் 6.8/10 மட்டுமே வாங்கியிருக்கிறது.

எந்திரன் : http://www.imdb.com/title/tt1305797/


ரஜினி இதுவரை தேர்தல்களில் கூட சரியாக ஓட்டு போட்டதில்லை, ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, யாருக்கு போட்டார் என்பதை கையால் காட்டினார், போன தேர்தலில் மீடியாக்காரர்களின் கேமராக்கள் சூழ ஓட்டு போட்டார். இவரே இப்படி இருக்க, இவர் ரசிகர்கள், அதுவும் இணையதளத்தில் சரியாக ஓட்டு போட்டு விடுவார்களா?

ஆனால் உலகநாயகனின் விஸ்வரூபத்திற்கு, இதுவரை 22500க்கும் மேற்பட்டவர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள், அதுவும் 9.5/10

விஸ்வரூபம் : http://www.imdb.com/title/tt2199711/



மேலும்  2013-ல் உலகம் முழுவதிலும் வெளியான படங்களில், இன்றைய
(15 பிப்) நிலவரப்படி, ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது "விஸ்வரூபம்".

தமிழனின் விஸ்வரூபம், தேசம் கடந்து, உலகம் முழுவதும் சாதனைகள் படைப்பது, உலகத்தமிழர்களுக்கு நிச்சயம் பெருமையே!!!! ( விஸ்வரூப சாதனைகள் தொடரும்... )

Tuesday, February 12, 2013

பாண்டிச்சேரி ரத்னா தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்

பாண்டிச்சேரி கமல் ரசிகர்கள், ரத்னா தியேட்டரில் கொண்டாடிய விஸ்வரூப திருவிழாவின் வீடியோ & புகைப்படங்கள் பதிவுலகப் பார்வைக்கு.....
















Monday, February 11, 2013

சென்னை பைலட் தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்

ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து "விஸ்வரூபம் இரண்டாவது கொண்டாட்டத்தை" சென்னை பைலட் திரையரங்கில், பிப்ரவரி 10 மாலை 5 மணியிலிருந்து கொண்டாடிய வீடியோக்களும் போட்டோக்களும் இங்கே உங்கள் பார்வைக்கு....

பால் அபிஷேகம் : 

உடைக்கப்பட்ட 100 தேங்காய்கள் :


 தலைவரின் என்ட்ரி :
பேனர்கள் :







Saturday, February 9, 2013

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் - விஸ்வரூப திருவிழா

ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து "விஸ்வரூப திருவிழாவை" சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில், பிப்ரவரி 7 காலை 9 மணியிலிருந்து கொண்டாடினார்கள்.

விஸ்வரூப திருவிழாவிற்கு நாங்கள் அடித்த 10 விதமான போஸ்டர்களை காண இங்கே கிளிக் செய்க.

தசாவதாரத திருவிழாவை விட பிரம்மாண்டமாக கொண்டாட, ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் 30 அடி உயர கட்-அவுட் உட்லண்ட்ஸ் தியேட்டரில் நிறுவப்பட்டது.
உட்லண்ட்ஸ் தியேட்டரில் வானம் கமல் கொடிகளால் மறைக்கப்பட்டது.


கமல் பக்தர்களின் நடனத்திற்காக குலாப் பேண்டும் தாண்டியாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திருவிழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனைத்து மீடியாக்களும் காலை 7 மணிக்கே தியேட்டரில் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் சாரை சாரையாக தியேட்டரில் நுழைந்து கொண்டிருந்தது. திருவிழா தொடங்கப்பட்டது ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கட்-அவுட்டுக்கு மலர்களை தூவி.
கமல் பக்தர்களுக்கு அருள் கிடைத்தது... ஆட்டம் ஆரம்பமானது...

10 அடி ரோஜாப்பூ மாலை முதலில் தலைவருக்கு சூடப்பட்டது.


அடுத்தடுத்து மற்ற மாலைகள் சூடப்பட்டன.


கட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.



திடீரென்று கல்லூரி கமல் ரசிகர்களின் சுனாமி தியேட்டரின் வலதுபுற வாயிலில் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, இடதுபுற வாயில் வழியாக வெளியேறியது. விசாரித்து பார்த்ததில் அந்த சுனாமி சிட்டியில் எல்லா தியேட்டருக்கும் சென்று இப்படி செய்கிறது என்றார்கள்.

கொண்டாட்டங்கள் முடித்து தியேட்டருக்குள் செல்லும் முன் 10000வாலா சரம் வெடிக்கப்பட்டது.

பல தடைகளை தாண்டி வெளிவந்த கலையின் விஸ்வரூபத்தை திரையில் கமல் பக்தர்கள் தரிசித்தபோது...


இந்திய சினிமாவில் இதுவரை படமாக்கப் படாத சண்டைக்காட்சியை கண்டு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்....


உட்லண்ட்ஸ் தியேட்டர் மற்றும் அதை சுற்றிலும் நாங்கள் வைத்த பேனர்கள் கீழே...