Ads 468x60px

Thursday, October 25, 2012

கர்நாடகத்தில் காஸ்ட்லி கமல் கட்-அவுட்

தமிழ் சினிமாவில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் ஒரு நடிகர், தனது ஒவ்வொரு படமும் ரிலீஸூக்கு தயாராகும் போது அவரது ரசிகர்களை "அரசியல் ஆசை" காட்டி உசுப்பி விடுவார், மும்பையில் படம் ரிலீஸ் ஆக வேண்டுமானால், அந்த மாநில அரசியல்வாதியை தன் கடவுள் என்பார், காவேரி பிரச்சனையில் கர்நாடக அரசியல்வாதிகளை உதைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தனது படத்தை ரிலீஸ் செய்ய தடை போட்ட போது, தெலுங்கு டிவி வழியாக மன்னிப்பு கேட்பார், இவரின் உண்மை முகம் தெரிந்தும், இவர் கொடுக்கும் "கவருக்கு" மயங்கி, இவரின் படங்கள் எல்லாம் ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலும் 175 நாட்கள் ஓடுகிறது என்று புளுகும் பல மீடியாக்கள்...

அப்படிப்பட்ட மீடியாக்களுக்கு, சாதனை கலைஞன் கமல்ஹாசன் செய்யும் சாதனைகளை மறைப்பதே எளிது என்றால், அவரது ரசிகர்கள் செய்யும் புதிய பட ஆரம்ப நாள் கொண்டாட்டத்தை மறைப்பது எவ்வளவு எளிது?

எந்த நடிகருக்கும் கிடைக்காத ரசிகர்கள் கமலுக்கு உண்டு என்பதை கமலின் பெங்களூர் ரசிகர்கள் செய்யும் கொண்டாட்டத்தை பார்த்தால் புரியும். அவர்கள் செய்யும் நற்பணிகளும் பிரம்மாண்டவைகள் தான், அதைப் பற்றி மற்றொரு பதிவில் பின்பு காண்போம்.

அப்படி என்ன தான் பெங்களூர் கமல் ரசிகர்கள் செய்து விட்டார்கள்? 40 அடி கமல் கட் அவுட்டுக்கு தலையிலிருந்து கால் வரை ஒரிஜினல் பூ மாலைகளால் அலங்காரம் செய்வார்கள். இதற்கு 2001-லேயே 2.5 லட்சம் செலவு செய்துள்ளார்கள் "ஆளவந்தான்" கட் அவுட்டுக்கு.

பெங்களூர் கமல் ரசிகர்கள் பூ மாலைகளால் அலங்கரித்த சில கமல் கட் அவுட்கள் கீழே...

ஆளவந்தான்

அன்பே சிவம்

விருமாண்டி


வசூல்ராஜா MBBS


மன்மதன் அம்பு


விஸ்வரூப கமல் கட்-அவுட்டின் பூ மாலைகளுக்கு மட்டும் பெங்களூர் கமல் பக்தர்களின் பட்ஜெட் ரூ 15 லட்சத்தை தாண்டுகிறதாம்.

Friday, October 19, 2012

விஸ்வரூபம் முழுப்பாடல்துப்பாக்கி எங்கள் தோளிலே
துர்ப்பாக்கியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள்
தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எம்மைத்
தேர்ந்தெடுத்துக்கொண்டது

எங்களின் கையில்
ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில்
எங்கள் உடல் உள்ளது

ஊரைக்காக்கும் போருக்கு
ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று
சத்தியம் செய்கின்றோம்

ஒட்டக முதுகின் மேல்
ஒரு சமவெளி கிடையாது

டாலர் உலகத்தில்
சமதர்மம் கிடையாது

ஓகோ நீதி காணாமல்
ஓகோ போர்கள் ஓயாது

பூமியைத் தாங்க – புஜ
வீரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க – நுரை
ஈரல் கேட்கிறோம்

எஃகுத் தசைகளால் – ஓர்
இதயம் கேட்கிறோம்
இருநூறாண்டு
இளமை கேட்கிறோம்

துப்பாக்கி எம் தலையணையாய்த்
தூங்கித் திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தைத்
தூக்கித் திரிகின்றோம்

ஒட்டக முதுகின் மேல்
ஒரு சமவெளி கிடையாது

டாலர் உலகத்தில்
சமதர்மம் கிடையாது

ஓகோ நீதி காணாமல்
ஓகோ போர்கள் ஓயாது

நன்றி - வைரமுத்து TwitLonger

Monday, October 15, 2012

ரி-ரிலீஸ் சாதனைகள் - கமலும் எம்ஜியாரும்

பழைய படங்களை மறுவெளியீடு (RE-RELEASE)  செய்வது என்பது அன்றைய காலகட்டத்தில் இருந்தே நடந்து வருவது தான். சில நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படம் ரி-ரிலீஸ் ஆகலாம், அதில் ஒரு படம் கூட (கர்ணன்) ஒரு வாரம் ஓடலாம், ஆனால் மறு வெளியீடுகளில் தொடர்ந்து சாதனை (ஓரிரு வாரங்கள் தாண்டி)  படைத்து கொண்டிருப்பது எம்ஜியார், கமல்ஹாசனின் படங்கள் மட்டும் தான்.


உலகம் சுற்றும் வாலிபன்

அன்பே வா

அடிமைப்பெண்

எங்க வீட்டு பிள்ளை

ஆயிரத்தில் ஒருவன்

வேட்டையாடு விளையாடு

தேவர் மகன்

இந்தியன்

அவ்வை சண்முகி

நாயகன்

காக்கி சட்டை

தூங்காதே தம்பி தூங்காதே

சகலகலா வல்லவன்
          புன்னகை மன்னன்
சலங்கை ஒலி

ஏக் துஜே கே லியே

வாழ்வே மாயம்

சிகப்பு ரோஜாக்கள்

குரு

சவால்
போன்ற ரி-ரிலீஸ் படங்களின் போஸ்டர்களை சென்னையில் வடசென்னையிலும், தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் அதிகமாக பார்க்கலாம்.எந்த கருத்தையும் ஆராய்ந்து, அதன் பின் ஏற்று கொள்பவர்கள் நீங்கள் என்றால் ரஜினியை உங்களால் ஸ்டாராகவே ஏற்று கொள்ள முடியாது. மீடியா கூறுவது போல் அவர் பெரிய ஸ்டார் என்றால், கமல், எம்ஜியார் படங்களை போன்று ரஜினி படமும் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் செய்ய வேண்டுமே. அவர் படங்களின் முதல் வெளியீடுகளே விநியோகிஸ்தர்கள்/தியேட்டர் உரிமையாளர்களை புலம்ப விடுகிறது, பின் எப்படி ரஜினியின் பழைய படங்கள் வசூல் செய்யும் என்று நம்பி அவர்கள் ரி-ரிலீஸ் செய்வார்கள்?

ஆனால் கமல்ஹாசனின் படங்களோ ரி-ரிலீஸிலும் கல்லா கட்டுகின்றன்.
கமல்ஹாசனின் இச்சாதனைகளும் மீடியாக்களால் மறைக்கப்பட்ட ஒன்று தான். அச்சாதனைகள் இனி உங்கள் பார்வைக்கு....

15 ஜூன் 2007 அன்று, சென்னை அகஸ்தியா தியேட்டரில் மறுவெளியீட்டில் திரையிடப்பட்ட வேட்டையாடு விளையாடு ஹவுஸ்புல்!!!  ஆனால் எதிரே மகாராணி தியேட்டரில் ரஜினியின் நியூ ரிலீஸ் சிவாஜி திணறிக் கொண்டிருந்தது...
முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஹவுஸ்புல் - 6 மணியளவில்


திரையரங்கம் ஹவுஸ்புல் - காட்சி தொடங்கும் முன்


கமல் பக்தர்களின் பால் அபிஷேகம்கமல்ஹாசர் என்ட்ரி - பக்தர்கள் ஆரவாரம்


உலகநாயகனின் பல படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட போது 100 நாட்களை கூட கொண்டாடியிருக்கிறது, சிகப்பு ரோஜாக்கள், புன்னகை மன்னன், காக்கி சட்டை என....

இது மட்டுமல்ல, 1997ல் கமலின் டப்பிங் படம் சிப்பிக்குள் முத்து திருப்பூரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் வார வசூல் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல், படமும் நான்கு வாரங்கள் ஓடியது.1992ல் கமலின் டப்பிங் படம் சலங்கை ஒலி சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. திரையிட்ட ஊர்களில் எல்லாம் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது.1993ல் கமலின் அபூர்வ சகோதரர்கள் சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. சுபம் (சத்யம் காம்ப்ளக்ஸ்) தியேட்டரில் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது.1991ல் கமலின் வறுமையின் நிறம் சிவப்பு கோவை யமுனா தியேட்டரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது. (கீழே உள்ள விளம்பரத்தில் விநியோகிஸ்தர்களால் கமலுக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை கவனிக்கவும்...)


பெங்களூர் பல்லவியில் 1986-ல் சிகப்பு ரோஜாக்கள் 35 நாட்கள் ஓடியுள்ளது.

2012 இந்த அக்டோபர் மாதம் தூத்துகுடி சத்யா தியேட்டரில் கமலின் இந்தியன், அவ்வை சண்முகி ரிலீஸ் செய்யப்பட்டது
ரி-ரிலீஸ் என்றாலே கமலும் எம்ஜியாருமே போட்டியில் இருக்கிறார்கள் அன்றும்... இன்றும்... என்றும்!!!

Saturday, October 13, 2012

"விஸ்வரூபம்" பாடல்கள் - உலக நற்பணி தினத்தில்

உலக சினிமா ஜாம்பவான்களை தமிழ் சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் "விஸ்வரூபம்" உண்மையான பிரம்மாண்ட திரைப்படத்தின் தமிழ் பாடல்கள் நவம்பர்-7 உலக நற்பணி தினத்தில், தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் கமல்ஹாசனால் நேரடியாக வெளியிடப்படுகிறது.


ஒன் மேன் ஷோ என்பார்களே அது கமல்ஹாசனின் விஸ்வரூபம் மட்டுமே.


நியூ அப்டேட் :

"விஸ்பரூபம்" பாடல்கள் வெளியீடு  ,

காலையில் மதுரை
மதியம் கோவை
மாலையில் சென்னை (நேரு ஸ்டேடியம்)

ஒவ்வொரு ஊரிலும் உலக நாயகன் "எனக்குள் ஒருவன்" படத்தில் வருவது போல் ஹெலிகாப்டரில் சென்று, ரசிகர்களை சந்தித்து "விஸ்பரூபம்" பாடல்களை வெளியிடுகிறார்.

தன் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்காமல் ஓடி ஒளிபவர்களுக்கு மத்தியில், சென்னை, கோவை, மதுரை என்று 3 மாநகரங்களில் ரசிகர்களை தன் பிறந்த நாளில் சந்திக்கும் கமல்ஹாசன், மற்ற நடிகர்களுக்கு தன் ரசிகர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் முன்மாதிரியே.

Wednesday, October 3, 2012

அதிக திரையரங்குகள்... விரைவான வசூல்... வழிகாட்டிய கமல்!!!

சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழ்ப்படம், தமிழ்நாட்டில் ஒரே ஊரில் மூன்று திரையரங்குகளுக்கு மேல் வெளியிடவேண்டுமானால் அது சென்னையில் மட்டுமே சாத்தியமாயிருந்தது.

பெரிய ஹீரோக்கள் படம் என்றால் சென்னையில் நான்கிலிருந்து ஆறு திரையரங்குகளிலும், மதுரை, கோவை, சேலம் போன்ற அடுத்தகட்ட மாநகரங்களில் இரண்டிலிருந்து மூன்று திரையரங்குகளிலும், திண்டுக்கல் போன்ற சில பெரிய நகரங்களில் முதல் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் இரண்டு திரையரங்குகளிலும், தஞ்சாவூர், விருதுநகர் போன்ற இதர நகரங்களில் ஒரு திரையரங்கிலும் திரையிடப்படும்.

தாராபுரம், சிவகங்கை போன்ற பல நகரங்களில் தமிழ்ப்படங்கள் நேரடியாக முதல் நாளிலேயே வெளிவராது. சுற்றுவட்டார நகரங்களில் ஓடிய பிறகு இங்கே திரையிடப்படும். உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற சிறிய ஊர்களிலெல்லாம் ஒரு புதிய படம், மற்ற நகரங்களிலெல்லாம் ஓடி தேய்ந்து, 4 அல்லது 5 மாதங்கள் கழித்து தான் திரையிடப்படும்.

இப்படியிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகம் இன்று எப்படிப்பட்ட இமாலய மாற்றத்தை அடைந்துள்ளது தெரியுமா? உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற சிறிய ஊர்களிலெல்லாம் படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதற்கெல்லாம் வழிகாட்டியவர் கமல்ஹாசன்!!!

கமல்ஹாசன் 2001-லேயே இவ்வாறு கூறினார், "புதிய படங்களை அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்து, சினிமா டிக்கெட் என்பது திரையங்கில் மட்டுமல்லாது, சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்".

அவர் கூறிய படி செய்தால் தான், யாரேனும் இன்று இந்த படம் பார்க்கவேண்டும் என்று நினைத்தால், அன்றே பார்க்க முடியும். இல்லையேல் எந்த காட்சிக்கு டிக்கெட் இருக்குதோ அந்த காட்சியை தான் பார்க்க முடியும்.

எப்படி இந்த எண்ணம் கமல்ஹாசனுக்கு மட்டும் தோன்றியது? , ஏனெனில் கமல்ஹாசனின் படங்கள் மட்டும் தான் " திரையரங்குகளில் தொடர் ஹவுஸ்புல் சாதனைகளை" தொடர்ந்து செய்திருக்கிறது.

இவரின் படங்களுக்கு மட்டும் தான் அட்வான்ஸ் புக்கிங் கியூ 1978-லிருந்தே இருந்து வருகிறது. தேவி பாரடைஸ் தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய வந்த ரசிகர்களின் கியூ அன்றைய அலங்கார் தியேட்டரையும் தாண்டி( ஒரு கி.மீ தூரத்திற்கும் மேல்) இருந்தது என்பது சாதனை வரலாறு. மேலும் இந்த படம் எம்ஜியாரின் "உலகம் சுற்றும் வாலிபனின்" 70 நாள் தொடர் ஹவுஸ்புல் சாதனையையும் உடைத்தது. (ரஜினிக்கு இப்படி ஒரு சாதனை குறைந்த பட்சம் 3 நாட்களாவது இருந்தால், அது எந்த படம் என்பதை ஆதாரத்துடன் கமென்ட செய்யவும்.)

எனவே உலகநாயகன் தன் "ஆளவந்தான்" படத்திற்கு இருந்த மிகப்பெரிய எதிர்பார்பை கண்டு, 2001- ல் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம், அதிகமான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யச் சொன்னார். ரஜினி, தாணு, விஜய் போன்றவர்களுக்கெல்லாம், வசூல் வருதோ இல்லையோ, படத்தை 175 நாள் ஓட்டவேண்டும். அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் இன்றும் வாழும் தாணுவுக்கு எட்டவில்லை அன்றே உலகநாயகன் சொன்னது.

எப்பவுமே உலகநாயகனின் தொலைநோக்கு பார்வை இந்த திரையுலகத்தினருக்கு காலம் தாழ்ந்து தான் புரியும், இதற்கு "சின்னதிரை" மிகச் சிறந்த உதாரணம். சின்னதிரை பெரியதிரையை அழித்து விடும், அதற்கு நடிகர்கள் யாரும் பேட்டி கொடுக்க கூடாது என்றெல்லாம் "நடிகர் சங்கம்" கூறியது. அதற்கு கமல், இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி, முடிந்தால் சினிமாவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தடைகளை மீறி பேட்டி கொடுத்தார். இன்று இவர்கள் "சின்னதிரையை" தான் தங்கள் படங்களுக்கு முதல் விளம்பரம் மையமாகவும், படத்தின் சேட்டிலைட் உரிமையை கோடிகளில் விற்றும் பயன்படுத்துகிறார்கள்.

அது போல, அதிக திரையரங்குகளில் முதலில் கமலே தன் "வேட்டையாடு விளையாடு (2006) " படத்தை வெளியிட்டார்.   நடிப்பிலும் திரைப்படம் எடுப்பதிலும் வழிகாட்டுவது மட்டுமல்லாமல், வர்த்தகத்திலும்  திரையுலகத்திற்கு வழிகாட்டினார் கமல்.

சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் (அடையார், அம்பத்தூர், குரோம்பேட், விருகம்பாக்கம் சேர்த்து தானே இப்போது விளம்பரம் செய்கிறார்கள் ) வெளியிடப்பட்டது.

1. சத்யம்

2. ஆல்பட்

3. மெலோடி

4. அபிராமி

5. காசி

6. பாரத்

7. கோபிகிருஷ்ணா

8. ஸ்ரீபிருந்தா

9. ரோகிணி

10. மாயாஜால்

11. பிரார்த்தனா

12. ஆராதனா

13. கணபதிராம்

14. ராக்கி

15. வெற்றி

16. ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

சென்னையில் மவுண்ட ரோட்டை சுற்றிலும் 3 திரையரங்குகளில் ( சத்யம், ஆல்பட், மெலோடி ) வெளியிடப்பட்ட முதல் படமும் "வேட்டையாடு விளையாடு" தான்.
சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது.

இதற்கு பின் பல படங்கள் திரையிடப்பட்டாலும், அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் வரை திரையிடப்பட்டது. 2008-ல் மாயாஜாலில் 10 திரையரங்குகள் மட்டும் தான் இருந்தது, இப்போது மாயாஜாலில் 14 திரைகள் இருந்தும், இன்றும் இச்சாதனை முறியடிக்கப் படவில்லை. அதற்கு கமல்ஹாசனின் "விஸ்வரூபத்திற்கு" மட்டுமே தகுதியுள்ளது.சேலத்தில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.மதுரையில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.


2006-ல் கமல் காட்டிய வழியில் இன்று சின்ன பட்ஜெட் படங்கள் கூட சென்னையில் சாதாரணமாக 15 தியேட்டர்களுக்கு மேல் திரையிடுகிறார்கள். படம் வெளியாவதற்கு முன் எதிர்பார்ப்பும், வெளியான பின் நல்ல மௌத் டாக்கும் இருந்தால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் போட்டப் பணத்தை எடுத்து விடுகிறார்கள். அதற்கு மேல் வருவது எல்லாம் லாபம் தான்.

இதே பாணியில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும், ரஜினியின் சிவாஜி, எந்திரன் பல ஊர்களில், போட்ட பணத்தில் பாதி கூட வசூல் செய்யவில்லை என்று விநியோகிஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். விரிவாக அறிய இங்கே கிளிக் செய்க.

தசாவதாரத்தின் சாதனைகளே ( தென்னிந்தியாவின் உச்ச வசூல், திரையரங்கு உரிமையாளர்/விநியோகிஸ்தர்/தயாரிப்பாளர் என்று யாரும் குறை கூறாத மகாவெற்றி, மாயாஜாலில் தினமும் 52 காட்சிகள் ) இன்னும் முறியடிக்கப் படாமல் இருக்க,

1. உலகம் முழுவதும் 4000+ திரையரங்குகள்

2. வர்த்தகம் மட்டும் 250+ கோடிகள் ( மொத்த வசூல் 500+ கோடிகள் )

3. சென்னையில் மட்டும் 60+ திரையரங்குகள்

4. அமெரிக்காவில் மட்டும் 150+ திரையரங்குகள்

என்று உலகநாயகனின் விஸ்வரூபம் செய்யப்போகும் சாதனைகளை மற்றவர்கள் கனவாவது காண முடியுமா?