Ads 468x60px

Thursday, November 14, 2013

கமல்ஹாசரின் 59வது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ


நீங்கள் சாப்ட்வேர் இன் ஜினியர் என்றால் நீங்களோ உங்கள் நண்பர்களோ இப்படி கண்டிப்பாக புலம்பியிருப்பீர்கள்..

ஒரு மாதத்திற்கு முன்னால் நான் அடித்த  CODE தான்.... ஆனா ஏன் அடித்தேன் என்று புரியவில்லை என்று...

ஆனால் கமல்ஹாசர், தான் 40 வருடத்திற்கு முன் கற்ற கலையை, இன்று என்ன அழகாக வாசிக்கிறார்.....இந்த வீடியோவை பாருங்கள்!!!

Monday, November 11, 2013

நினைத்தாலே இனிக்கும் - ரி ரிலீஸ்

ரி ரிலீஸ் கொண்டாட்டம் என்னவென்று அறியாத ரஜினி ரசிகர்களுக்கு, உலகநாயகன் தயவால் "நினைத்தாலே இனிக்கும்" மூலமாக அது கிடைத்தது.

ஆனால் அவர்கள், கமல் பக்தர்கள் (6-அக்- 2013 அன்று) கொண்டாடிய உட்லண்டஸ் திரையரங்கிற்கு வந்து அவர்களின் மாஸை காட்டாமல் ஆல்பட் தியேட்டருக்குள் சுருங்கி கொண்டனர்.கமல் பக்தர்களின் அபிஷேகங்கள் :


பக்தர்களின் ஆரவாரம் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை காணும் போது :Saturday, November 9, 2013

கமல்ஹாசரால் திக்கு முக்காடிய திருச்சி

Kamal and Me (Nag Ravi) during a local travel - How Kamal handled a TOUGH SITUATION - 

உலக நாயகனும், நானும் - பூங்கொடி கிராமத்தில்......

உலக நாயகனின் பல அவதாரங்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் அதில் ஒரு சிறு நினைவலை தான் இது. மும்பாய் எக்ஸ்பிரஸ் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு ஒரு சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஏறபாடு செய்யபட்டிருந்தது. இதில் ஒவ்வொரு ஊரின் கமல் ரசிகர்களும் அவர் அவர் ஊர் பெட்டியில் ஏறி சென்னை வரை வந்து சென்னையில் இரண்டு நாட்கள் ஒரு தொலைக்காட்சியின் தயவில் தங்கியிருந்து பின்பு 3வது நாளாய் திரும்பவும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல்லும்படி பிளான் அமைக்கபட்டிருந்தது.
இதில் கமலும் சென்னையில் ரசிகர்கள் சந்திப்பதை விட ரயிலிலே அவர்களுடன் பயணம் செய்தால் நன்றாய் இருக்கும் என எண்ணீ கமலை ரசிகர்களுடன் ரயிலில் பயணிக்க வைப்பது என முடிவு எடுத்து ஐடியாவே கொடுத்தவுடன் கமல் ஒகே என்றார். பின்பு அவரை எப்படி இந்த சிறப்பு ரெயில் கொண்ட வர முடியும் என்ற போது அவரை திருச்சியில் இருந்து ஜாய்ன் செய்து கொல்ள செய்யலாம் என எண்ணி அவரை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. நான் அப்போது பணி நிமித்தமாக மலேஷியா சென்றிருந்தால் கமலை சென்னை விமான நிலையம் வரை அழைத்து வர அவரின் காரியதர்ஸி நிகிலிடமும் பின்பு நான் சென்னைக்கு காலை 10:30 மணிக்கு அவருடன் டமஸ்டிக் விமான நிலையத்தில் லவுன்ஞில் ஜாயின் செய்து பின்பு 11:45 இந்தியன் ஏர்லைன்ஸில் திருச்சி செல்ல காத்திருந்தோம். 


அவர் காலை என்ன சாப்பிட்டார் என எனக்கு தெரியலை நான் ஒன்னும் சாப்பிடலை. லவிஞ்சில் சான்ட்விச் என்ற பெயரில் ஒரு பிரட் துன்டை நாலாய் நருக்கி அதில் கொஞ்சம் பட்டரின் வாசத்தை காணிபித்து வைத்திருருந்த தம்மாதுன்டு சான்ட்விச்சை பார்த்த வுடன் தட்டை அப்படியே ஸ்பெஷல் எஃபக்ட்டில் காலி செய்து விட ஆசை ஆனா பக்கத்துல பேசிக்கொண்டே நம்ம கமல் அதனால் வெரும் 6 கிளாஸ் ஜூசுடன் என் அப்பிட்டீட்டை அமுக்கி வைத்துக்கொண்டேன். விமானத்தில் சாப்பிடலாம் பிஸினஸ் கிளாஸ் தானே என்று அமர்ந்திருந்தேன். விமான போர்டிங் அழைப்பு வரவே எழுந்து போனோம். 1ஏ - ஆ ராசா (2ஜி) அவர் தான். 1 பி காலி 1சியில் நானும் / 1டியில் தலைவரும் அமர விமானம் கிளம்பியது. வழக்கம் போல ஒருகாலத்து சிம்ரன் 30 வருஷம் கழிச்சி வந்தா எப்படியோ அப்படி ஒரு அம்மா கேன் ஐ செர்வ் லன்ச்னு கேட்டாக. நானும் யெஸ் வெஜிட்டேரியன் என்று கூற தலைவனோ நோ ஐ அம் ஃபைன் என்று சொல்லி தூங்க எத்தனித்தார்.

சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கும் பறிமாறபட்டது. நான் சுவைக்க தலைவருக்கு மூக்கில் வியர்க்க கேட்டார் ஹவ் இஸ் த ஃபுட் என? உடனே நான் வெரி நைஸ் என சொல்ல தலைவன் அழைப்பு பொத்தானாய் அமுக்க உடனே அந்த பழைய சிம்ரன் வந்து யெஸ் ப்ளீஸ் என கேட்க தலைவன் ஐ வுட் லைக் டூ ஹேவ் ஒன் மோர் சாம்பார் ரைஸ் என சொல்ல ஐயோ சாரி சார் வி ஹேவ் ஒன்லி சான்ட்விச் அன்ட் ஆம்ளட்னு பதில தலைவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே நான் சார் ப்ளீஸ் ஷேர் வித் மீனு ஒரு தைரியத்துடன் சொல்ல ஒகேன்னு டக்குனு அந்த அம்மாவிடம் ஒரு ஸ்பூனை வாங்கி ஒன் பை டூ கல்ச்சருக்கு மாறினோம். கொஞ்சமும் எந்த வித தலைக்கனமும் இல்லாமல் சாம்பாரும் / உருளைக்கிழங்கும் இருவரும் சாப்பிட்டோம். திருச்சி வந்தது. வந்த உடன் ராசாவுக்காக நாலு பேர் வந்திருந்தார்கள் ஆனால் தலைவரின் அண்ணனை தவிர வேறு யாரும் இல்லை. எனக்கு அதிர்ச்சி என்னடா இது தலைவனுக்காக ஒருத்தன் கூட வரலையான்னு - சரின்னு அவருடம் கிளம்பினோம்.

திருச்சி வெளியே ஹோட்டல் காவேரின்னு நினைக்கேன் (சரியா தெரியலை - இங்க ஃபேஸ்புக் நண்பர்கள் நிறையபேர் அதுல கலந்திகிட்டதால - நீங்களே கன்ஃபார்ம் பன்னுங்க). அந்த ஹோட்டலின் தெருவில் வண்டி திரும்பின உடனே ஒரே சத்தம் என்னடன்னு பார்த்தாஒரு 8000 - 10 ஆயிரம் பேர் தெருவை அடைச்சிகிட்டு நிக்கிறாங்க கமல் சொன்னார் டிரைவர் வண்டியை நேரா விடுங்க, ரவி சைட் லாக் பன்னுங்கன்னு கொஞ்சம் நேரம் எனக்கு என்னவோ பாஸ்போர்ட் இல்லாம பார்டர் தான்டற பயம் அப்பா அப்படி ஒரு கிரேஸி / வெறி என்னவேனும்னாலும் சொல்லாம் தலைவா தலைவான்னு குரல் அடுத்த ரென்டு நாளுக்கு காதுல ஒலித்து கொண்டே இருந்தது. ஹோட்டலுக்கு போய் இறங்கின உடனே வெடி மற்றூம் விண்ணை பிளக்கும் சத்தம் நான் வண்டிக்குளே டர்ராகி கிடந்தேன். அவர் இறங்கி போன பிறகு வண்டியை சுற்றி கூட்டம் சுத்தமா இல்லை தெம்பா இறங்கி ரூமுக்கு போயாச்சு. கமல் லன்சுக்கு அவர் அண்ணன் வீட்ல இருந்து சாப்பாடு வந்திருந்தது. சாப்பிட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க கரெக்டா 4:30க்கு கிளம்புவோம்னு சொன்னாரு. நானும் ரயில்ல வர்ரவங்கட்ட சொல்லிட்டேன். ரயில் 5 மணிக்கு திருச்சி ஜங்க்ஷனு வரும் தலைவர் ஏறி அதுல செங்கல்பட்டு வரை பயணம்னு பிளான். நானும் தூக்காச்சி போடு பிர்ஷா கிளம்பி ரெடியாய் 4 மணிக்கு வந்தா ஒரு ரசிகரும் இல்லை. போலீஸ் பட்டாளம் நின்னுகிட்டு இருந்தது. கிளம்பலாம்னு சொல்லும் போதே சிறப்பு ரயில் சிக்னல் பிரச்சினைனால 1 மணி நேரம் தாமதமாம். சரின்னு ஒரு வழியா 5:15 கிளம்பலாம்னு வண்டியிலே ஏறும் போது திருச்சி டி எஸ் பி ஆபிஸ்ல இருந்து போன் சார் திருச்சி ஜங்கஷ்னுக்கு போற அத்தனை ரோடும் ஜாம் நீங்க ஜங்கஷனுக்கு வரப்போவது தெரிஞ்சி போச்சு அதனால் பிளான மாத்துங்க இல்லைனா கென்சல் பன்னுங்கன்னு சொன்ன வுடனே எல்லோருக்கும் குழப்பம்.


தலைவரோ இல்லை ரசிகரய் ஏமாற்ற முடியாது அதனால் லெட்ஸ் பிளான் சம்திங்னு சொல்லி ஒரு ஏசிகிட்ட கொஞ்சம் நேரம் பேசிட்டு வாங்க போலாம்னு கிளம்பினோம். ஆனா பின் கேட் வழியா நேரா வன்டி ஒற்றையடி பாதை வழியா என்னாடான்னு கேட்க தயக்கம் ஆனா வரே என் ஒரு டாலர் மூஞ்சி பத்து காசு மூஞ்சியாய் ஆனதை கவனித்து சொன்னாரு - ரவி போலீஸ் நம்மை திருச்சி ஸ்டேஷ்னுக்கு போக முடியாததால் அதற்க்கு முன் உள்ள ஒரு ஷ்டேஷனுக்கு போறோம்னு. சரினு கரடுமுரடு சாலையில் ஒரு மணி நேர பயணம். அப்புறம் ஒரு சினிமாவுல அடிக்கடி பூங்கொடி பூங்கொடின்னு ஒரு கிராமம்னு பிளாஷ்பேக் சொல்லும் அந்த கிராமத்தை உண்மையில் கண்டேன். ரென்டு எருமைமாடு நாலு ஆடு பிளஸ் அதன் வாரிசுகள் கண் லைட்டா தெரியிர ஒரு மேய்ப்பாளர் அவ்வள்வுதான். ஸ்டேஷன் மாஸ்டர் ஒடி வந்தார் கமலிடம் வாங்க சார் வாங்க சார்னு படபடத்தார்.

நான் சார் ஆல் ஒகேதான்னு கேட்ட போது ஸ்டேஷ்ன் மாஸ்டர் சார் ஒரு சின்ன பிரச்சினை அது என்னான்னா இது சிறப்பு ரயில் அதனால் இங்கிட்டு நிக்க வைக்க முடியாது பெர்மிஷன் இல்லை அதனால் இந்த பிளான் பனால்னு சொன்னார். எனக்கு தலை சுற்றியது. ஆனால் கமலோ அந்த ஸ்டேஷன் மாஸ்டர் வாக்கி டாக்கியை வாங்கி சார் வண்டியின் டிரைவருக்கு கனெக்ட் பன்னுங்கன்னு சொன்னாரு. அவரும் அதை செய்ய க்மல் அந்த டிரைன் டிரைவரிடம் சார் நான் கமல் ஹாசன் பேசுறேன் ஓவர்னு சொன்ன உடனே டிரைவர் சார் சொல்லுங்க் சார் எனக்கு தெரியும் சார் பிரச்சினை ஆனா நான் நிறுத்தினா என் வேலை போயிடும்னு சொல்ல கமலோ நீங்க நிறுத்த வேன்டாம் ஜஸ்ய் ஸ்லோ ப்ன்னுங்க நான் ரன்னிங்கிளே எறிக்கிறென்னு சொல்ல ஸ்டேஷன் மாடரும் சார் இது லோ பிளாட்ஃபார்ம் இதுல எப்படி நீங்கன்னு கேட்க கமல் கூறிய ஒரே வார்த்தை " என் ரசிகனை நான் ஏமாற்ற விரும்ப்வில்லை என்பதே" ரயில் 20 நிமடத்தில் வர கமல் அதுவரை கேஷுவலாய் ஒடிந்து போன சிமின்ட் பென்ச்சில் உட்கார்ந்து என்னுடன் பேச எனக்கு டரியல்தான். ரயில் மெதுவாக ஊர கமல் ரன்னிங்கில் ஏரினால் ஏ 1 கோச்சில் பின்னாடியே புட்ஃபொர்ட் அடித்து ஏறி ஒர் வழியாய் உள்ளே போனால் ஒரே ஆர்பரிப்பு ரயிலில் இருந்த ரசிகர்களிடம் எல்லோரிடமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.30 நிமடத்தில் திருச்சி வர விண்ணை பிளந்தது கரகோஷம் மற்றூம் தலைவனின் ரசிகர்களின் கதறல் அப்பா தமிழ் நாட்டில் மட்டுமே இது சாத்தியம் ஒரு நடிகனுக்காக மொத்த ரயில்வே ஷ்டேஷனும் அதை சுற்றி 5 கிலோமீட்டருக்கு ரசிகர்களின் கூட்டத்தால் உறைந்து போனது திருச்சி. பின்பு அவர் ஒவ்வொரு ஸ்டேஷன் வரும்போது கொஞ்சமும் அசராமல் வாசல் வரை வந்து வாசற்ப்படியில் நின்று அந்த ஒரு நிமட கையசைப்புக்காக என்ன ஒரு ஃபாலோவர்ஸ் என்பதை கன்டேன். அதுமட்டுமல்ல அவர் தின்டிவனம் வரை தான் வர முடிந்தது அதற்க்குள்ளே இரவு 11:45ஆக அவர் அந்த 5 மணி நேர ரயில் பிரயானத்தின் ஒவ்வொரு கடைசி ரசிகரையும் ரசிக்கும் வண்னம் பேசியது மற்றும் இடைவிடா நகைச்சுவை எனக்கு உணர்த்தியது இவர் தான் உண்மையான மனிதன் கமலின் வடிவில் என்று. வளர்ந்து வரும் அனைத்து நடிகர்களும் கற்றூ கொள்ல வேண்டிய சிம்பிலிசிட்டி. இன்னும் நிறைய பயனங்கள் கமலுடன் 1:1 அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன் - கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கடவுள் அவரை எப்போதும் போல ஆசிர்வதிக்கட்டும்.


எழுத்து - நாக் ரவி

Friday, November 8, 2013

கமல் பக்தன் - பகுதி 1 - மதுரை கொம்பமுத்து

முரட்டு ரசிகர்கள் எம்ஜியாருக்கு பிறகு உலகநாயகனுக்கே அதிகமுண்டு இன்றும்.

இந்திய மீடியாக்கள் மறைத்து வைத்திருக்கும் அப்படிப்பட்ட கமல் பக்தர்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பகுதியை நான் ஆரம்பித்திருக்கிறேன்.

அவர்களில் முன்னோடி தான் இந்த மதுரை கொம்பமுத்து.அவரைப் பற்றி நான் ஏன் முதலாவது எழுதுகிறேன் என்பதற்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்...


அவரைப் பற்றி அடுத்த பதிவில்...

Thursday, November 7, 2013

கமல்ஹாசர் பிறந்த நாள் விழா 2013

உலக சினிமா வரலாற்றில் ரசிகர்களிடமிருந்து தன் சுயலாபத்திற்காக எதையும் எதிர்பார்க்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.தனக்காக இரத்தம் சிந்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், என் ரசிகன் என்றால் இரத்த தானம் செய் என்று கூறுபவர் கமல்ஹாசன். சொன்னது மட்டுமல்ல அதை 1980 களிலேயே நடிகர்ளிலேயே முன்னோடியாக செய்தும் காட்டினார்.


அவர் காட்டிய வழியில், இன்று வரை பல லட்ச லிட்டர் இரத்ததை தானம் செய்திருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.

மற்ற நடிகர்களும் இவர் வழியில் அவர்களின் ரசிகர்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்த ஆரம்பித்த போது, கமல்ஹாசன் "கண் தானம்" , "உடல் தானம்" என்று அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

தன் பின்னால் கூடிய கூட்டத்தை நல்வழி படுத்திய ஒரே நடிகர் உலக நாயகன் மட்டுமே. அப்படிப்பட்டவரின் பிறந்த நாள் நவம்பர் 7-ஐ உலக நற்பணி தினமாக அவர் ரசிகர்கள் கொண்டாடுவதில் வியப்பொன்றுமில்லை.

இன்று நடைபெற்ற நற்பணி விழாவின்  புகைப்படங்கள் உங்களுக்காக அடுத்த பதிவில்....மற்றவை இங்கே...

இன்றைய விழாவில் நாங்கள் வழங்கிய ஊன்றுகோல்  :


கமல் பக்தன் ரோபோ சங்கரின் சுவரொட்டி  :கமல்ஹாசரை காண கூடியிருந்த ரசிகர்கள் :


நற்பணி விழா மேடைக்கு வரும் கமல்ஹாசர் :


ரசிகர்களை காணும் உலகநாயகன் :மேலே உள்ள வீடியோவில், தன் ரசிகர்களால் சாலையில் டிராபிக் தடைபட்டு விட கூடாதென்று அவர்களிடம் கூறுவதை பார்த்தீர்களா? இவர் தான் நிஜ தலைவன்!!!!