Ads 468x60px

Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Friday, October 19, 2012

விஸ்வரூபம் முழுப்பாடல்



துப்பாக்கி எங்கள் தோளிலே
துர்ப்பாக்கியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள்
தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எம்மைத்
தேர்ந்தெடுத்துக்கொண்டது

எங்களின் கையில்
ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில்
எங்கள் உடல் உள்ளது

ஊரைக்காக்கும் போருக்கு
ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று
சத்தியம் செய்கின்றோம்

ஒட்டக முதுகின் மேல்
ஒரு சமவெளி கிடையாது

டாலர் உலகத்தில்
சமதர்மம் கிடையாது

ஓகோ நீதி காணாமல்
ஓகோ போர்கள் ஓயாது

பூமியைத் தாங்க – புஜ
வீரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க – நுரை
ஈரல் கேட்கிறோம்

எஃகுத் தசைகளால் – ஓர்
இதயம் கேட்கிறோம்
இருநூறாண்டு
இளமை கேட்கிறோம்

துப்பாக்கி எம் தலையணையாய்த்
தூங்கித் திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தைத்
தூக்கித் திரிகின்றோம்

ஒட்டக முதுகின் மேல்
ஒரு சமவெளி கிடையாது

டாலர் உலகத்தில்
சமதர்மம் கிடையாது

ஓகோ நீதி காணாமல்
ஓகோ போர்கள் ஓயாது

நன்றி - வைரமுத்து TwitLonger