Ads 468x60px

Showing posts with label வெள்ளிவிழா. Show all posts
Showing posts with label வெள்ளிவிழா. Show all posts

Tuesday, August 7, 2012

வெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி

உலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன.  அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின் வெள்ளிவிழா (ரெகுலர் காட்சிகள்) சாதனைகளும் உண்டு.

இன்று, மெகாஹிட் படம் என்றால், அதிக திரையரங்குகளில் திரையிட்டு, முதல் வாரத்தில் காட்சிக்கு 95% பார்வையாளர்கள் பார்த்து, இரண்டாம் வாரத்தில் காட்சிக்கு 75% பார்வையாளர்களாவது பார்த்து, மூன்று வாரங்களாவது ஓட வேண்டும்.

அன்று, மெகாஹிட் படம் என்றால், ரெகுலர் காட்சிகளாக வெள்ளிவிழா கொண்டாடவேண்டும். பல தமிழ்ப்படங்கள் 175 நாட்கள் அல்லது அதற்கும் மேலே ஓடியிருக்கும், அவை ஒரே திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாகவோ (3 / 4 காட்சிகள்), அல்லது ஒரே காம்ளக்ஸில் பெரிய திரையரங்கிலிருந்து சின்ன திரையரங்குக்கு மாற்றியோ, அல்லது மெயின் திரையரங்கிலிருந்து செகண்ட் ரிலீஸ் செய்யபடும் திரையரங்குக்கு மாற்றியோ ஓடியிருக்கும்.

இந்த சாதனைகளில் முதன்மையானது 175 நாட்களோ அல்லது அதற்கும் மேலோ,  ரெகுலர் காட்சிகளாக முதல் நாள் திரையிட்ட அதே திரையரங்குகளில் ஓடுவது தான்...


இந்த சாதனையை கமல்ஹாசன் / ரஜினி படங்கள் செய்திருக்கின்றனவா?

கிபி 2000-க்கு பின் எந்த ஒரு தமிழ் படமும் 175 நாட்கள் உண்மையாக ஓடியது கிடையாது (பகல்காட்சியாக மட்டும் கூட). சினிமா என்பது முதல் பொழுதுபோக்காக இருந்த கிபி 2000-க்கு முன், ரஜினி உண்மையிலேயே ஒரு பாக்ஸ்-ஆபிஸ் ஸ்டார் என்றால், சராசரியாக அவருடைய 10 படத்தில் 1 படமாவது 175 நாட்கள் ரெகுலர் காட்சிகளாக ஓடியிருக்க வேண்டும்.

ஆனால் ரஜினியின் ஒரு படம் கூட ரெகுலர் காட்சிகளாக 175 நாட்கள் ஓடியதில்லை. இது தான் உண்மை. ஆனால் ரஜினி ரசிகர்களிடம் கேட்டால், தியேட்டர் கேன்டீன் எடுத்தவன் சம்பாதித்தான்... தியேட்டா பார்க்கிங் கான்ட்ராக்ட் எடுத்தவன் சம்பாதித்தான் என்பார்கள். ஏனென்றால், இவர்களிடம் போய் நாம் கேள்வி கேட்க போவதில்லை, ஆனால், படத்தயாரிப்பாளர்கள்/தியேட்டர் உரிமையாளர்கள் படுகின்ற (ரஜினியால் இன்றும்) நஷ்டம் அவனுக்கு புரியாது..

ஆனால் மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்படும் கமல்ஹாசனின் 175 நாட்கள் மற்றும் அதற்கும் மேலே ரெகுலர் காட்சிகளாக ஓடிய தமிழ்ப்படங்களின் சாதனைப் பட்டியல் இதோ...




திரைப்படம் திரையரங்குகள் - ரெகுலர் காட்சிகள்நாட்கள்
16 வயதினிலேசென்னை - மிட்லண்ட் (4 காட்சிகள்)
மதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)
175 நாட்கள்
266 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறதுசென்னை - மிட்லண்ட் (4 காட்சிகள்)175 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள்சென்னை - தேவிபாரடைஸ்
(3 காட்சிகள்)

மதுரை - சக்தி (4 காட்சிகள்)
175 நாட்கள்
நீயாஇலங்கை - யாழ்ப்பாணம் - சாந்தி (3 காட்சிகள்)275 நாட்கள்
கல்யாணராமன்சென்னை - அலங்கார் (3 காட்சிகள்)175 நாட்கள்
குருஇலங்கை -
கொழும்பு - கிங்ஸ்லி (3 காட்சிகள்)

தெஹிவளை - கொன்கோட் (4 காட்சிகள்)

வாழைச்சேனை - வெலிங்டன் (3 காட்சிகள்)
பதுளை - லிபர்டி (3 காட்சிகள்)
வவூனியா - வசந்தி (3 காட்சிகள்)
1095 நாட்கள்


365 நாட்கள்



200 நாட்கள்


மீண்டும் கோகிலாசென்னை - எமரால்ட் (4 காட்சிகள்)189 நாட்கள்
மூன்றாம் பிறைசென்னை - சுபம் (4 காட்சிகள்)

ஈகா,
மகாராணி (பகல் காட்சி)
329 நாட்கள்

218 நாட்கள்
211 நாட்கள்
வாழ்வே மாயம்சென்னை - காஸினோ (4 காட்சிகள்)
கமலா
மகாராணி (3 காட்சிகள்)

மதுரை - நியூசினிமா
186 நாட்கள்
175 நாட்கள்
200 நாட்கள்

242 நாட்கள் 
சகலகலா வல்லவன்சென்னை - அலங்கார் (3 காட்சிகள்)
அன்னை அபிராமி (4 காட்சிகள்)
AVM ராஜேஸ்வரி (4 காட்சிகள்) மகாராணி (3 காட்சிகள்)

மதுரை - சென்ட்ரல் (4 காட்சிகள்)
கோவை - தானம் (4 காட்சிகள்)
சேலம் - ஓரியன்டல் (4 காட்சிகள்)
175 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதேசென்னை - சக்தி அபிராமி (4 காட்சிகள்)
மதுரை - சுகப்பிரியா (4 காட்சிகள்)
188 நாட்கள்
253 நாட்கள்
ஒரு கைதியின் டைரிமதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)175 நாட்கள்
புன்னகை மன்னன்சென்னை - ஈகா காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175 நாட்கள்
நாயகன்சென்னை - ஆனந்த் (4 காட்சிகள்)

சென்னை - சக்தி அபிராமி (140 நாட்கள் வரை 4 காட்சிகள்)

மதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)

பெங்களூர் - பல்லவி
174 நாட்கள்

175 நாட்கள்


175 நாட்கள்

224 நாட்கள் 
அபூர்வ சகோதரர்கள்சென்னை - தேவிபாரடைஸ் (148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
அபிராமி காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
காசி (4 காட்சிகள்)

மதுரை - அபிராமி (4 காட்சிகள்)
திருச்சி - மாரீஸ் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
பெங்களூர் - பல்லவி (3 காட்சிகள்)
197 நாட்கள்

232 நாட்கள்
197 நாட்கள்

175 நாட்கள்
175 நாட்கள்

175 நாட்கள்
மைக்கேல் மதன காமராஜன்சென்னை - ஆல்பட் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175 நாட்கள்
தேவர்மகன் சென்னை - அன்னை அபிராமி (4 காட்சிகள்)
மதுரை - மீனாட்சி பாரடைஸ் (4 காட்சிகள்)
175 நாட்கள்

250 நாட்கள்
மகாநதி சென்னை - ஆனந்த் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
கோவை - ராகம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
180 நாட்கள்

190 நாட்கள்
சதிலீலாவதிசென்னை - தேவிகலா (4 காட்சிகள்)
அன்னை அபிராமி (4 காட்சிகள்)
175 நாட்கள்
இந்தியன்
சென்னை - சத்யம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
சங்கம் (135 நாட்கள் வரை 4 காட்சிகள்)
175 நாட்கள்
அவ்வை சண்முகிசென்னை - அபிராமி காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
கோவை - ராகம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
175 நாட்கள்






இதுமட்டுமல்ல, ஒரே வருடத்தில் (1982), ஐந்து வெள்ளி விழா படங்கள்  கொடுத்ததும் கமல்ஹாசர் மட்டுமே...

1. வாழ்வே மாயம்
2. மூன்றாம் பிறை
3. Sanam Teri Kasam (Hindi)
4. சகலகலா வல்லவன்
5. Yeh To Kamaal Ho Gayaa (Hindi)

இந்தப் பட்டியலை பார்த்தவுடன், உங்களுக்கே புரிந்திருக்கும் யார் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று...

சாதனைகள் பல செய்பவர்கள் விளம்பரம் செய்வதில்லை, அது கலையுலகில் கமல்ஹாசர் மட்டுமே...

தொகுப்பு : சண்டியர் கரன்   
உதவி : "பாரடைஸ்" யூனிட் சேகர், கண்ணன் (ஏர்போர்ட்),
நரசிம்மன் (திருச்சி), தயாளன், துரை,  முஜாபர்