Ads 468x60px

Friday, August 10, 2012

கமல்குறள் - Part 1

2009-ஆம் ஆண்டு ORKUT Universal Hero Kamal Haasan Community-ல் கமல் பக்தர்கள் ஆரம்பித்த கமல்குறள் TOPIC-லிருந்து உங்கள் பார்வைக்கு....



அகர முதல எழுத்தெல்லாம் உலக
 நாயகன் முதற்றே உலகு.

கற்க கசடற கமலை கற்றபின்
நிற்க அவர்க்குத் தக.

கமல் செய்த உடல்தானம் வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 

ஞானிகளுக்கெல்லாம் ஞானி கலைஞானி அஞ்ஞானி
கலைகளுக்கு எல்லாம் தலை.

குழலினிது யாழினிது என்பர் கமல்
குரல் கேளா தவர்.

எல்லா விருதும் தொலைவல்ல கமலுக்கு
அவர்பெயரில் ஓர்விருதே அழகு. 

கமல்ரசிகன் நீயெனில் உழைப்பதே திருப்பணி
நற்பணிக்கு உன்னை அர்ப்பணி.

கடவுள் நம்பிக்கை இல்லையாம் கமலுக்கு
ரசிகர்களுக்குண்டாம் அவர்பேர் கமல்.

கலை யெனப்படுவது யாதெனின் அதன்பொருள்
கமல் என்பர் அறிஞர்.

உலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல்
கனியிருப்ப காயகவர்ந் தற்று  

எழுதியவர்கள் : ஜீவா, அசோக், ஜெபா & சண்டியர் கரன்
(ORKUT Universal Hero Kamal Haasan Community)

3 comments:

  1. தோன்றின் கமல் ரசிகனாக தோன்றுக அக்திலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று...

    ReplyDelete
  2. கமலின்றி அமையாது தமிழ் திரை உலகு.

    ReplyDelete