Ads 468x60px

Friday, February 6, 2015

விஸ்வரூப தினம் (பிப்ரவரி-7)


எப்படி கமல்ஹாசனை புகழ்ந்தாலும், அதற்கும் மேல் சாதனைகளை செய்து, தன்னை புகழ்ந்தது சரியே என்று நிரூபித்து விடுவார் உலகநாயகன்!!!

விஸ்வரூபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் ஒரு வரி வரும்....

"தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா?...." என்று

விஸ்வரூபம் வெளியாகும் முன் இந்த பாடலை கேட்டவர்கள், கமல்ஹாசன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஹீரோவை புகழும் பாடலா? என்றார்கள்.

ஆனால் அவர்களே, "இந்த வரி கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு மட்டுமே பொருந்தும்" என்றார்கள்!!! விஸ்வரூபம் வெளியாவதற்கு போடப்பட்ட பல தடைகளை உலகநாயகன் தகர்த்தெறிந்த பின்...

விஸ்வரூபத்தால் உலகநாயகன் செய்த சாதனைகள் :

  1. ஹீரோவே இயக்கி தயாரித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் இந்தியப் படம்
  2. அண்டை மாநிலங்களில் வெளியாகி, ரண்டு வாரங்கள் கழித்து தமிழகத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ஒரே படம்
  3. தமிழர்கள் பல மாநிலங்கள் (கேரளா,கர்நாடகா,ஆந்திரா) சென்று பார்த்த ஒரே படம்
  4. சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் 4 தியேட்டர்களில் வெளியான முதல் படம், மேலும் அந்த 4 தியேட்டர்களிலும் 3 வாரங்கள் ஓடி, 1 தியேட்டரில் 100 நாள் கொண்டாடிய படம்
  5. இந்தியா முழுவதும் 3 மொழிகளில் மெகா ஹிட்டான கடைசிப்படம்      ( 2013ல் வெளியாகி இன்று 2015 பிப்ரவரி வரை )

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 2013ல் கொண்டாடப்பட்ட "விஸ்வரூப" திருவிழா!!!



உலகநாயகன் ரசிகர்களின் மற்ற சில "விஸ்வரூப" கொண்டாட்டங்கள்...

சென்னை உலகநாயகன் ரசிகர்களின் "விஸ்வரூப" பேனர்கள்...


சென்னை உலகநாயகன் ரசிகர்களின் "விஸ்வரூப" போஸ்டர்கள்...


0 comments:

Post a Comment