Ads 468x60px

Tuesday, February 17, 2015

ஹேராம் தினம் 18-பிப்ரவரி

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் மட்டும் முதலீடு செய்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே என்பதற்கு மற்றொருமொரு உதாரணம் "ஹேராம்" என்ற துணிச்சலான படைப்பு!!!

அப்படி கமல்ஹாசன் செய்யும் முதலீடு சில சமயம் விஸ்வரூபமாக அவருக்கு லாபம் கொடுப்பதுண்டு, சில சமயம் சினிமா தொழில்நுட்பகலைஞர்களுக்கு சிறந்த புத்தகமாக அமைவதுண்டு.

அப்படி ஒரு திரை-நாவலாக, இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் இருந்த அரசியலை, படைத்திருந்தார் இயக்குநர் கமல்ஹாசன்.

இன்றும் ஹேராமை டிவியிலோ டிவிடியிலோ பார்க்கும் இன்றைய தலைமுறையினர், படத்தை பார்த்து விட்டு சமூக வலை தளங்களில் சிலாகிப்பதை பார்க்கும் போது, இயக்குநர் கமல்ஹாசன் இன்னும் பல தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படுவார் என்பது மட்டும் புரிகிறது.



அன்றிலிருந்து....

நாயகன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம்

என்று தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை அடையாளம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ரசிகர்களின் ரசனையை கமல்ஹாசன் மாற்றி விட்டதால், இன்றைய காலத்தில் "வித்தியாசமாக எதுவும் இல்லாத" சினிமா வெற்றி பெறுவதில்லை!!! உதாரணம் நான் சொல்ல தேவையில்லை... அப்படிப்பட்ட படத்தை வாங்கி வெளியிடும் விநியோகிஸ்தர்கள் நஷ்டப்பட்டு "மெகா பிச்சை" எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment