Ads 468x60px

Thursday, April 2, 2015

உலகநாயகனின் விக்ரம் சாதனைகள்

உலகநாயகனின் விக்ரம் படத்திற்கு ஒரு கோடி செலவில் தயாரன முதல் தென்னிந்திய சினிமா என்ற பெருமையும் உண்டு, மீடியாவால் தோல்வி என்று முத்திரை குத்தப்பட்ட சிறுமையும் உண்டு.

ஆனால் விக்ரம் படமோ, 16 தியேட்டர்களில் (கேரளா உட்பட) 50 நாட்களை கொண்டாடிய திரைப்படம், அதுமட்டுல்ல 10 தியேட்டர்களில் 75 நாட்களையும், கோயம்புத்தூரில் 100 நாட்களையும் கொண்டாடிய திரைப்படம்!!!

இவ்வளவு சாதனை செய்தும், மீடியா ஏன் விக்ரம் படத்தை ஹிட் என ஏற்று கொள்ள வில்லை? ஏனென்றால் அதே வருடம் ரஜினி தயாரித்த மாவீரன் படு தோல்வி அடைந்ததால், கமல் தயாரித்த விக்ரம் படத்திற்கும் தோல்வி முத்திரை குத்தி விட்டனர்.

விக்ரமும் மாவீரனும் சென்னையில் சத்யம், சங்கம், காசி என அதே 3 தியேட்டர்களில் வெளியாயிருக்கிறது. விக்ரம் சத்யம், சங்கம், காசி என அந்த 3 தியேட்டர்களிலும் 50 நாட்களை தாண்டி ஓடியது, ஆனால் மாவீரன் சத்யம் தியேட்டரில் மட்டும் 50 நாள் தேய்க்கப்பட்டது.

திரையுலகில் கமல்ஹாசன் ஒருவரே, தன் தோல்வி படங்களையும் சரி வெற்றி படங்களையும் சரி, என்றும் ஓட்டியது கிடையாது.  அப்படி ஓட்டியிருந்தால் அவர் தன் சங்கர்லாலை 100 நாட்களுக்கும் மேல், அபூர்வ சகோதரர்களை 1000 நாட்களுக்கும் மேல் ஓட்டியிருப்பார்.

எனவே விக்ரம் படத்தின் உண்மையான சாதனைகள், அப்படத்தின் வெற்றியை இன்றைய தலைமுறையினருக்கும் புரியவைக்கும்!!!


1 comments:

  1. Yes it is true. Vikram was an hit all over South India. It is the first movie to merchandise at Central Railway Station with its Trailer running in all Televisions. Those days people use to see it like a 8th wonder.

    ReplyDelete