விஸ்வரூபத்தை தமிழ்நாட்டில் தடை செய்தவர்களுக்கு நன்றி... தடைகளை தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் கமல், மாநிலங்கள் தாண்டி விஸ்வரூபத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்!!!
அப்படி மாநிலம் தாண்டிய கமல் ரசிகர்கள் குழுவில் ஒன்றான எங்கள் சென்னை குழு, நேற்று இரவு பைலட் தியேட்டரில் முடிவு செய்தது திருப்பதி அல்லது நெல்லூர் சென்று விஸ்வரூபம் பார்ப்பது என்று. ஆனால் இரவு 12 மணிக்கு தான் ஆந்திராவில் விஸ்வரூபம் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது என்று உறுதியானது. இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது என்று முடிவு செய்தோம், ஆனால் நாங்கள் ஆறு பேரும் போரூரை தொடுவதற்கே 6 மணி ஆகிவிட்டது.
திருப்பதியை எங்கள் இன்னோவா தொட்டபோது, எனக்கு சென்னையிலிருந்து அழைப்பு வந்தது, ஆந்திராவிலும் படத்தை தடை செய்துவிட்டார்கள் என்று, ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கடா என்றிருந்தது, சரி வந்தது வந்து விட்டோம் தியேட்டரையாவது பார்த்து விட்டு செல்வோம் என்று பஸ்நிலையம் அருகிலிருக்கும் ஜெயசியாம் தியேட்டருக்கு சென்றோம்.
ஆனால் பகல் காட்சிக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்கள், கும்பலில் அடித்து பிடித்து டிக்கெட்டுகளை வாங்கினோம், அதற்குள் நெல்லூரில் அரை மணி நேரத்திற்கு பின் படத்தை நிறுத்தி விட்ட செய்தி கிடைத்தது. வந்ததுக்கு ஓப்பனிங் பாடலை மட்டும் காட்டுங்கடா, அதை மட்டும் பார்த்துட்டு போறோம்டான்னு என்றிருந்தது எங்களுக்கு.
தியேட்டருக்குள் நுழையும் வரை படம் போடுவாங்களா மாட்டாங்களா, படத்தை ஆரம்பித்த பிறகு ஓப்பனிங் சாங் வரையாவது போடுவாங்களா மாட்டாங்களா என்று எண்ணிகொண்டு பார்த்து கொண்டிருந்தோம், "உனை காணாத" பாடல் முடிந்த பிறகு, ங்கோத்** இது போதும்டா சென்னையிலிருந்து வந்ததுக்கு என்றிருந்தது.
அதன்பின், படம் ஜெட் வேகத்தில் சென்றதில் படத்தை நிறுத்துவார்களா என்ற கவலையே மறந்தது. இது போன்று ஆக்ஷ்ன் + திரில்லிங் இந்திய சினிமாக்களில் இதற்கு முன் யாரும் செய்ததில்லை, அதற்கு "உலக இயக்குனர்" கமலுக்கு ராயல் சல்யூட்கள்!!!
உலக தமிழ் நாயகனின் உலக சினிமாவை தமிழ்நாட்டில் காண தமிழனுக்கு தடை, எனவே நாங்கள் கேள்வி மட்டும் பட்ட தெலுங்கு கமலின் மாஸை நேரில் காணமுடிந்தது. அதற்கு தமிழக அரசிற்கு நன்றி.