Ads 468x60px

Saturday, January 12, 2013

அடங்காதவர்களை அடக்கிய விஸ்வரூப கமல்



 ஜூனியர் விகடன் 16 ஜனவரி 2013 இதழிலிருந்து

எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின.

தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல். அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம் முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.

மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார். என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தோம்.

''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது.

சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால், 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார்.

'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.

இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.

கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.

இது போதுமா ???  இன்னும் விளக்க வேண்டுமா???

சட்டத்திற்கு புறம்பாக நடந்தவர்களை சட்டத்தினால் அடக்கிய கமல்ஹாசனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!!

இது வரை "தசாவதாரத்தின்" வசூல் முறியடிக்க படவில்லை என்பதை கோடிட்டு காட்டிய கேயார் அவர்களுக்கு நன்றி!!!

உண்மையை அரைவேக்காடுகளுக்கு உறைக்கும் படி விரிவாக எழுதிய ஜூனியர் விகடனுக்கு நன்றி!!!

14 comments:

  1. அப்படிப்போடுங்க சண்டியரே! படுகுழி.காம் நடத்துர கேணப்பய மூணு பார்ட் எழுதி பீலா உட்டிருக்கான்! அவ்ளோ பயம் போல! கோழைப்பயல் கூட்டம்!

    //அத்துமீறி மிரட்டியவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.

    இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.//

    Note this word - "பதறியடித்தபடி" உலகநாயகனை பகைச்சிக்கிட்டா ஒண்ணு பதரியடிச்சி ஓடிரணும் இல்ல கால்ல விழுந்து சரண்டர் ஆகிடணும்! ரெண்டாவதா சொன்னதைத்தான் செஞ்சிருக்காங்க! மன்னிப்புகாந்த் வரிசையில் தேட்டர் Nexus உம் சேர்ந்துடுச்சி பாத்தீங்களா?! சட்ட நடவடிக்கை எடுத்தா படுகுழி.காம் காரனும் மன்னிப்பு கேட்டுட்டு கடைய மூட வேண்டியதுதான்!

    ReplyDelete
  2. ஓ அதான் இவனுங்களா பம்மிகிட்டு ராஜ்கமல் ஆஃபீசுக்கு அலறியடிச்சிகிட்டு ஓடிவந்தானுங்களா!! நேத்து கூட தலைவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க மோதிரம் எல்லாம் போட்டானுங்களே, தலைவரின் சட்ட நடவடிக்கைக்கு பயந்து!

    ஆனாலும் நம்மாளு கில்லாடிபா! இவனுங்க வசமா மாட்டிக்கிட்டதை வச்சே இவனுங்களை டிடிஹெச்சுக்கு ஒத்துக்க வெச்சிட்டாரு போல!

    அந்த கூட்டத்துல ஒரு ஆளுகூட தலைவருக்கு 500 என்ன 1000 தியேட்டர் கூட குடுத்து மகிழ்விப்போம்ன்னு சொன்னானே! செஞ்ச பாவத்த இப்படியாச்சும் கழுவுங்கடா!

    இன்னொண்ணு கவனிச்சீங்களா?!? இவ்ளோ நாளா அறிக்கை விட்டுட்டு இருந்தானுங்க ராஜ்கமல் ஆஃபீசுக்கு வெளிய கூட இவனுங்களாவே அறிக்கை விட்டானுவ இப்ப பாருங்க தலைவர் பேட்டி குடுத்தப்புறம் ஒரு பய பேசல! அது!

    ReplyDelete
    Replies
    1. //இவ்ளோ நாளா அறிக்கை விட்டுட்டு இருந்தானுங்க ராஜ்கமல் ஆஃபீசுக்கு வெளிய கூட இவனுங்களாவே அறிக்கை விட்டானுவ இப்ப பாருங்க தலைவர் பேட்டி குடுத்தப்புறம் ஒரு பய பேசல! அது!//

      நெத்தியடி!!!

      Delete
  3. இப்போது பிரச்சனை தீர்ந்துவிட்டது ஆனால் தலைவரை மிரட்டும் திரையரங்கு அதிபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கையை Competition Commission of India க்கு தலைவர் அனுப்பினார். அதற்கு அவர்கள் சொன்ன கருத்துதான் கீழா உள்ளது. இதெல்லாம் சட்டப்படி சரியாக செய்ய தைரியம் மட்டுமல்ல நிறைய நேர்மையும் சாமர்த்தியமும் தேவை. அதெல்லாம் தலைவருக்கே உரிய சொத்து! இந்தப்பிரச்சனை தீர இந்த சட்ட நடவடிக்கை முயற்சியும் ஒரு முக்கிய காரணம்

    According to CCI officials, the competition watchdog feels theatre associations do not have the right to restrict trade in such a manner. “Theatre owners should individually be able to decide whether they want to showcase the film or not. They should not form a cartel under the association and restrict or decline release of any such film,” the official said. CCI might issue an interim order shortly in favour of Haasan

    http://business-standard.com/india/news/after-ajay-devgn-kamal-haasan-approaches-cci/498603/

    ReplyDelete
  4. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இருதியி ல் தர்மமே வெல்லும். கமல் நாமம் வாழ்க.

    ReplyDelete
  5. தர்மத்தின்(கமல்) வாழ்வுதனை சூதுகவ்வும் இருதியில் தர்மமே(கமல்) வெல்லும். கமல் நாமம் வாழ்க.

    ReplyDelete
  6. எனக்கு ஒரு சந்தேகம் சண்டியர் கரன் அவர்களே,
    "அடங்காதவர்களை அடக்கிய விஸ்வரூப கமல்"
    தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது....ஆனால்......அதில் உண்மை இல்லையே?
    திரையரங்க உரிமையாளர்களின் கண்டிஷனே முதலில் தியேட்டரில்தான் படத்தை வெளியிட வேண்டும் என்பதே...
    25ந்தேதி தியேட்டரிலும் 24ந்தேதி டி.டி.ஹெச் லும் வெளியிட்டிருந்தால் உங்கள் தலைப்பு ஓகே.
    ஆனால் ரிலீஸ் அன்று கூட இல்லாமல் 10 நாட்கள் கழித்து டி.டி.ஹெச்ல் வந்தால் அதற்கு பெயர்
    "அடங்காதவர்களை அடக்கிய விஸ்வரூப கமல்" என்பதை விட "அடங்காதவர்களிடம் அடங்கிய விஸ்வரூப கமல்"
    என்பதே பொறுத்தமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
    (எதிரான கருத்துகளை நீக்கி விடுவீர்கள் என்று நினைக்கிறேன்)

    ReplyDelete
  7. ramya aathi

    // 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ///

    இந்த வரியை படிக்கலையா???

    DTH என்பதே கூடாது என்றவர்களே கமல் அலுவலகம் வந்து ஏற்று கொள்ளவில்லையா?? அவர்கள் சரணடைந்ததால் கமல் அவர்களுக்கு சலுகை கொடுத்திருக்கிறார்...

    //எதிரான கருத்துகளை நீக்கி விடுவீர்கள் என்று நினைக்கிறேன்//

    அதற்கு இது ஒன்றும் மனநலம் குன்றிய நடிகரின் ரசிகர்கள் நடத்தும் BLOG அல்ல...

    ReplyDelete
  8. ///அதற்கு இது ஒன்றும் மனநலம் குன்றிய நடிகரின் ரசிகர்கள் நடத்தும் பிளாக் அல்ல...///

    உங்களுடைய பதிலில் கோவமும் , ரஜினியின் மேலுள்ள வெறுப்பும் தான் தெரிகிறது கரன்...

    அவர்கள் DTH வேண்டாம் என்று சொல்லவில்லை....
    தியேட்டரில்தான் படத்தை முதலில் வெளியிட வேண்டும் என்றுதான் சொன்னார்கள்.

    நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோ பதில் சொல்லுகிறீர்கள் கரன்.


    ReplyDelete
  9. //அவர்கள் DTH வேண்டாம் என்று சொல்லவில்லை....
    தியேட்டரில்தான் படத்தை முதலில் வெளியிட வேண்டும் என்றுதான் சொன்னார்கள்//

    தியேட்டரில் வெளியிட்ட அடுத்த 6 வாரங்களுக்குள் DTHக்கு அவர்கள் தயாராக இல்லை... ஆனால் அதை ஒரு வாரம் ஆக்கியது கமலின் சாதனை தானே... இந்த ஒரு வாரம் கூட ஹிந்தி ரிலீஸ் தாமதமாவதால் தான்...

    மேலும் வேறு நடிகர்களுக்கு DTH என்ற ஆப்ஷனே கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்

    //எதிரான கருத்துகளை நீக்கி விடுவீர்கள் என்று நினைக்கிறேன்//

    இதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்???

    ReplyDelete
  10. //ramya aathi
    January 17, 2013 at 5:46 PM
    "அதற்கு இது ஒன்றும் மனநலம் குன்றிய நடிகரின் ரசிகர்கள் நடத்தும் பிளாக் அல்ல..."

    உங்களுடைய பதிலில் கோவமும் , ரஜினியின் மேலுள்ள வெறுப்பும் தான் தெரிகிறது கரன்...//

    Ramya Aathi,
    ரஜினி எப்படியோ ஆனால் அவரின் சில ரசிகர்கள் மனநலம் குன்றியவர்கள் போல்தான் நடந்துகொள்கிறார்கள்! ஒரு ரஜினி ரசிகர் நடத்தும் ப்ளாகில் நான் போட்ட கமெண்டை வெளியிடாமலேயே என் கமெண்டுக்கு தரக்குறைவாக பதில் தன்தார். அதையும் வெளியிடவில்லை! ஆக, இப்படி ரகசியமாகவே நாங்கள் உரையாடினோம்! அவர் தரக்குறைவாக பேசியதால் நானும் அப்படி பேச வேண்டி இருந்தது. அனைத்தையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளேன்!

    இப்போது சொல்லுங்கள் தைரியம் இருந்தால் அதை பப்லிஷ் செய்யவேண்டியது தானே?!

    ReplyDelete
  11. Rightly said sorry blasted - Karan.

    ReplyDelete
  12. Silicon Sillu சரியான பேரு வச்சீங்க படுகுழி.காம். எதையாவது உளறி கமலை குதறணும்னு மாய்ஞ்சு மாய்ஞ்சு ஒருத்தரு 'ஏனோ தானோ' ன்னு எழுதுறாரு. அவ்வளவும் கமல் மேல உள்ள பயம் தான். ஒரு கமல் படம் வெற்றி அடைஞ்சுடுமோன்னு அவங்க ரொம்பவே பதட்டப் படறாங்க. வெற்றி அடைஞ்சுடக் கூடாதுன்னு ராகவேந்திரர், பாபா எல்லார் கிட்டேயும் வேண்டி யாகம் கூட செய்வாங்க. சும்மா உதாருங்க. தன்னம்பிக்கையும், தைரியமும் அவங்க அகராதியிலேயே கிடையாது. வாழ்க்கை பூரா பில்ட்-அப் தான். எதையும் யோசிக்காம பேச மாட்டாராம், பேசிட்டு யோசிக்க மாட்டாராம். ஆமாம் பேசிட்டு யோசிக்கவே மாட்டாரு, அங்க இருந்து 'டாய்னு' ஒரு குரல் வந்ததும், உடனே டர் ஆயி மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆயிடுவாரு. அப்புறம் இங்க வந்து 'மன்னிப்பு இல்ல, வருத்தம் தான் தெரிவிச்சேன்ன்னு', தலிவர் தைரியத்தை நினைச்சு புளங்காகிதம் அடைஞ்சு தன் சூ.... ஐ சொரிஞ்சு சொரிஞ்சு சிறங்கு வந்த ரசிகனுக்கு சைபால் தடவிக்கிட்டு இருப்பாரு. அரசியலுக்கு, மத்தவங்க மாதிரி வர மாட்டேன், கொல்லைபுற வழியா வருவேன், ஓட்டை பிரிச்சிக்கிட்டு வருவேன்னு அப்பப்போ அவருடைய அல்லக்கைங்களுக்கு அவரு பாயசம் ஊத்துறதும், அதுங்க அதை நக்கிட்டு காமெடி டயலாக் எல்லாம் போட்டு போஸ்டர் அடிச்சிட்டு பேட்டாவுக்கு தலைய சொரிஞ்சிக்க்ட்டு நிக்கறதும், தமிழ் நாட்டு மக்களுக்கு நிரந்தர காமெடி. நடுநடுவுல 'சாப்பாடு போடறேன், உங்களுக்கு என்னாத்த செய்ய போறேன்னு' அப்பப்போ லிமிட்டட் மீல்ஸ் வேற. எனக்கு தெரிஞ்சு அவங்க தலைவரோட நிஜ வாழ்க்கை காமெடி கிட்ட கவுண்டமணி, வடிவேலு காமெடி எல்லாம் பிச்சை வாங்கணும். இதுங்க எல்லாம் கமலை பத்தி பேசிக்கிட்டு தான் இருக்க முடியும், செய்ய முடியாது.

    ReplyDelete