சமீபத்தில் ஒரு கமல் ரசிக பதிவர், ஓரிரு முறைகள், தான் மற்ற நடிகரின் ரசிகராக இருந்திருக்க கூடாதா என்று நினைத்திருப்பதாக அவர் எழுதிய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை படித்தவுடன் நான் அப்படி நினைத்துண்டா என்று யோசித்ததின் விளைவு தான் இப்பதிவு.
நான் பல தடவைகள் நல்ல வேளை நான் கமல் ரசிகன்டா என்று நினைத்து பெருமை தான் பட்டிருக்கிறேன்...
எப்பொழுதெல்லாம் தெரியுமா?
இதே போல உங்களுக்கும் பல நேரங்களில் தோன்றியிருக்கும், அவற்றை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
இப்படிப்பட்ட கமல்ஹாசனின் சிறப்பை பற்றி திருவள்ளுவரை குறள் ஒன்று எழுதச் சொன்னால், இப்படி தான் எழுதியிருப்பார்....
நான் பல தடவைகள் நல்ல வேளை நான் கமல் ரசிகன்டா என்று நினைத்து பெருமை தான் பட்டிருக்கிறேன்...
எப்பொழுதெல்லாம் தெரியுமா?
- சென்னையில் ஒரு நடிகரின் பல்வேறு மொழிப் படங்களும் சாதனை செய்திருக்கிறது என்றால் அது கமல்ஹாசன் படங்கள் மட்டும் தான் என்று அறிந்த போது
மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள்
ஏக் துஜே கே லியே (ஹிந்தி) -105 நாட்கள்
சத்மா (ஹிந்தி) - 119 நாட்கள்
சாகர் (ஹிந்தி) - 105 நாட்கள்
கோகிலா (கன்னடம்) - 100 நாட்கள்
ராஸலீலா (மலையாளம்) - 100 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்) - 100 நாட்கள்
இரு நிலவுகள் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சலங்கை ஒலி (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
இந்திரன் சந்திரன் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
பாசவலை (தமிழ் டப்பிங்) - 108 நாட்கள்
- ஒரே வருடத்தில் (1982) தமிழில் மட்டும் மூன்று வெள்ளி விழா படங்களை (மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், சகலகலா வல்லவன்) கொடுத்தது கமல்ஹாசன் மட்டும் தான் என்று அறிந்த போது...
- கமல்ஹாசன் என்ற நடிகன் தான், முதலில் தன் ரசிகர் மன்றங்களை கலைத்து, மக்களுக்கு உதவும் நற்பணி இயக்கங்களாக மாற்றினார் என்று அறிந்த போது....
- கமல்ஹாசன் தான் நடிகர்களிலேயே முதல் முறையாக உடல் தானம் செய்த போது....
- குளிர்பான விளம்பரத்தில் நடித்தோமா கோடிகளை பார்த்தோமா என்றில்லாமல், HIV & TAX பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களில் சம்பளம் பெறாமல் நடிக்கும் போது...
- காதல் இளவரசனாய் நான் ரசிக்க ஆரம்பித்த கமல்ஹாசன் இன்று உலக நாயகனாய் இருப்பதை பார்க்கும் போது....
- இந்திய சினிமாக்களில் நவீனங்களை முதலில் புகுத்துவது கமல்ஹாசன் தான் என்று சினிமாத்துறையினரே பாராட்டும் போது....
- அந்த காலத்து நடிகர்களின் படங்களும் இந்த காலத்து நடிகர்களின் படங்களும், இன்றைய காலகட்ட இளைஞர்களால் கேலி செய்யப்படும் போது, கமல்ஹாசனின் குணா, ஹேராம், அன்பே சிவம் அன்று வரவேற்க படவில்லை என்றாலும் இன்றைய இளசுகளால் சிலாகிக்கப் படும் போது....
- தன் சுயலாபத்திற்காக, அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று மற்ற நடிகர்களை போல பிழைப்பை ஓட்டாமல், தைரியமாக "நான் அரசியலுக்கு வர மாட்டேன்" என்று தன் ரசிகர்களிடம் கூறும் போது...
- நான் விரும்பிய ஹீரோ இன்றும் கைத்தட்டல்களையும் விருதுகளையும் ஒரு சேர வாங்கி குவித்து கொண்டே இருப்பதை பார்க்கும் போது....
இதே போல உங்களுக்கும் பல நேரங்களில் தோன்றியிருக்கும், அவற்றை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
இப்படிப்பட்ட கமல்ஹாசனின் சிறப்பை பற்றி திருவள்ளுவரை குறள் ஒன்று எழுதச் சொன்னால், இப்படி தான் எழுதியிருப்பார்....
தோன்றின் கமல்ரசிகனாக தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று...
0 comments:
Post a Comment