Ads 468x60px

Thursday, January 30, 2014

கமல், ரஜினி.... இது தான் சரியான வரிசை


கமலை விட அதிகமான வெள்ளிவிழா படங்களை (ஹீரோவாக) கொடுத்தாரா? இல்லை.
கமல் - 38 படங்கள் (தமிழில் மட்டும் 21 படங்கள்)
ரஜினி - 16 படங்கள், (அதுவும் பேபி ஆல்பட் / பால அபிராமி-யில் பகல் காட்சியில்  தான், ரெகுலர் காட்சிகளில் 0 படங்கள் ).

கமல் படங்களை விட அதிகமாக இவர் படங்கள் வசூலித்ததா? இல்லை.
தசாவதாரம் - 255 கோடி (நன்றி: THE HINDU, THE ECONOMIC TIMES)
எந்திரன் - 145 கோடி (நன்றி: SUN TV Q3-2011 STOCK REPORT)

கமலை விட அதிகமான சம்பளம் வாங்குகிறரா? இல்லை.
படத்தில் நடிக்கும் முன், ரஜினி வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல், படம் ரிலீஸ் ஆனால் திருப்பி கொடுத்து விடுகிறார், எதிர்பார்த்த வெற்றி இல்லாமல்.
சிவாஜி படத்திற்காகவாவது முன்பணம் 1000 ரூபாய் வாங்கினார் என்ற செய்தி வந்தது. ஆனால் எந்திரனுக்கு அப்படி கூட ஒன்றும் கொடுக்கப்பட வில்லை.

கமலை விட இவருக்கு அதிகமான திறமைகள் இருக்கிறாதா? இல்லை.
அது அவருக்கே நன்றாக தெரியும்.

அப்படி என்றால் கமல், ரஜினி என்று அழைப்பது தானே முறையான வரிசை. பின் ஏன் மீடியாக்கள் ரஜினி, கமல் என்று தவறான வரிசையில் குறிப்பிடுகிறார்கள்?.

அப்படி என்ன தான் சாதனை செய்து விட்டார் ரஜினி?

அவர் செய்த சாதனைகள் இது தான்...

1. தமிழில் ஹீரோவாக நடித்த படங்களில் UTTER FLOP சதவிகிதம் 42%

2. ஹிந்தியில் நடித்த படங்களில் FLOP சதவிகிதம் 95 %  (தனி ஹீரோவாக நடித்திருந்தால் 100% ஆகியிருக்குமோ?)

3. இமயமலைக்குப் போனால், கூடவே பத்திரிக்கை ரிப்போர்ட்டரை அழைத்து செல்வார். கிழிந்த வேட்டி, ரப்பர் செருப்புகளுடன் முதல் பக்கத்தில் போஸ் கொடுப்பார்.

4. கன்னட வெறியர்களை உதைக்கனும் என்று கூறிவிட்டு, குசேலன் படத்தை பெங்களூரில் வெளியிட தடை வந்த போது, ஆந்திரா சென்று தெலுங்கு TV வழியாக மன்னிப்புக் கேட்டார்.

5. பாமக-வை 6 தொகுதிகளிலும் தோற்கடிக்கனும் என்று 2004-ல் மீடியாக்களைக் கூட்டி மக்களிடம் கெஞ்சினார், ஆனால் மக்களோ பாமகவை ஆறிலும் அமோக வெற்றி பெறச் செய்தனர்.

மீடியாக்கள் நினைத்தால் 
"அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்" 
என்று நம்ப வைக்க முடியும் என்பதற்கு "ரஜினி-கமல்" வரிசை தான் சரியான உதாரணம்...

Friday, January 17, 2014

தோன்றின் கமல் ரசிகனாக தோன்றுக...!!!

சமீபத்தில் ஒரு கமல் ரசிக பதிவர், ஓரிரு முறைகள், தான் மற்ற நடிகரின் ரசிகராக இருந்திருக்க கூடாதா என்று நினைத்திருப்பதாக அவர் எழுதிய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை படித்தவுடன் நான் அப்படி நினைத்துண்டா என்று யோசித்ததின் விளைவு தான் இப்பதிவு.

நான் பல தடவைகள் நல்ல வேளை நான் கமல் ரசிகன்டா என்று நினைத்து பெருமை தான் பட்டிருக்கிறேன்... 



எப்பொழுதெல்லாம் தெரியுமா?

  • சென்னையில் ஒரு நடிகரின் பல்வேறு மொழிப் படங்களும் சாதனை செய்திருக்கிறது என்றால் அது கமல்ஹாசன் படங்கள் மட்டும் தான் என்று அறிந்த போது

    மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள்
    ஏக் துஜே கே லியே (ஹிந்தி) -105 நாட்கள்
    சத்மா (ஹிந்தி) - 119 நாட்கள்
    சாகர் (ஹிந்தி) - 105 நாட்கள்

    கோகிலா (கன்னடம்) - 100 நாட்கள்

    ராஸலீலா (மலையாளம்) - 100 நாட்கள்
    சாணக்யன் (மலையாளம்) - 100 நாட்கள்

    இரு நிலவுகள் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
    சலங்கை ஒலி (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
    சிப்பிக்குள் முத்து (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
    இந்திரன் சந்திரன் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
    பாசவலை (தமிழ் டப்பிங்) - 108 நாட்கள்
  • கமல்ஹாசன் என்ற நடிகன் தான், முதலில் தன் ரசிகர் மன்றங்களை கலைத்து, மக்களுக்கு உதவும் நற்பணி இயக்கங்களாக மாற்றினார் என்று அறிந்த போது....
  • கமல்ஹாசன் தான் நடிகர்களிலேயே முதல் முறையாக உடல் தானம் செய்த போது....
  • குளிர்பான விளம்பரத்தில் நடித்தோமா கோடிகளை பார்த்தோமா என்றில்லாமல், HIV & TAX பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களில் சம்பளம் பெறாமல் நடிக்கும் போது...
  • காதல் இளவரசனாய் நான் ரசிக்க ஆரம்பித்த கமல்ஹாசன் இன்று உலக நாயகனாய் இருப்பதை பார்க்கும் போது....
  • இந்திய சினிமாக்களில் நவீனங்களை முதலில் புகுத்துவது கமல்ஹாசன் தான் என்று சினிமாத்துறையினரே பாராட்டும் போது....
  • அந்த காலத்து நடிகர்களின் படங்களும் இந்த காலத்து நடிகர்களின்  படங்களும், இன்றைய காலகட்ட இளைஞர்களால் கேலி செய்யப்படும் போது, கமல்ஹாசனின் குணா, ஹேராம், அன்பே சிவம் அன்று வரவேற்க படவில்லை என்றாலும் இன்றைய இளசுகளால் சிலாகிக்கப் படும் போது....
  • தன் சுயலாபத்திற்காக, அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று மற்ற நடிகர்களை போல பிழைப்பை ஓட்டாமல், தைரியமாக "நான் அரசியலுக்கு வர மாட்டேன்" என்று தன் ரசிகர்களிடம் கூறும் போது...
  • நான் விரும்பிய ஹீரோ இன்றும் கைத்தட்டல்களையும் விருதுகளையும் ஒரு சேர வாங்கி குவித்து கொண்டே இருப்பதை பார்க்கும் போது....

இதே போல உங்களுக்கும் பல நேரங்களில் தோன்றியிருக்கும், அவற்றை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இப்படிப்பட்ட கமல்ஹாசனின் சிறப்பை பற்றி திருவள்ளுவரை குறள் ஒன்று எழுதச் சொன்னால், இப்படி தான் எழுதியிருப்பார்....

தோன்றின் கமல்ரசிகனாக தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று...


Thursday, January 2, 2014

சத்யராஜுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்

இந்தவாரம் (8-ஜனவரி-2014) ஆனந்த விகடனில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவங்கள் பற்றிய கேள்விக்கு சத்யராஜின் பதில் :


என் சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டமும் கமல் சார் முன்னாலதான் நடந்திருக்கு. அவர்கூட என் முதல் படமான 'சட்டம் என் கையில்’ ஷூட்டிங் ஏ.வி.எம்-ல நடக்குது. ஒரு சண்டைக் காட்சியில பல்டி அடிக்கும்போது, கைல கட்டியிருந்த 650 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் உடைஞ்சிடுச்சு. அப்ப 650 ரூபாய் பெரிய தொகை. அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு சம்பளமே 500 ரூபாய்தான். முதல் படத்துலயே 150 ரூபாய் நஷ்டம். இதை கமல் சார்கிட்ட சொன்னேன். 'சத்யராஜ்... சினிமாவுல ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஜட்டியைத் தவிர நாம எதுவும் சொந்தமா யூஸ் பண்ணக் கூடாது’னு டிப்ஸ் கொடுக்கிற மாதிரி கலாய்ச்சார்.

எனக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த 'காக்கிச்சட்டை’ பட 'தகிடு தகிடு’ வசனத்தின் முதல் ரசிகர் கமல் சார்தான். அந்தக் காட்சியின் படப்பிடிப்பு, ராத்திரி 12 மணிக்கு நடந்தது. ஸ்க்ரிப்ட்ல இல்லாம நடிக்கும்போது 'தகிடு தகிடு’னு நான் சொன்ன வசனம் தூரத்துல நின்னவங்களுக்குக் கேக்கலை. ஆனா, பக்கத்துல நின்ன கமல் சார் கேட்டுட்டு பெருசா சத்தம்போட்டுச் சிரிச்சிட்டார். 'இது சிரிக்கிற சீனே கிடையாதே’னு டைரக்டருக்கு அதிர்ச்சி. 'சத்யராஜ் சொன்ன மாடுலேஷனைக் கேட்டுச் சிரிச்சிட்டேன். இன்னொரு தடவை சொல்லிக்காட்டுங்க’னு கமல் சார் சொல்ல, நான் சொல்ல, யூனிட்டே சிரிச்சது.

நான் லொள்ளு, ஜொள்ளா நடிச்சிட்டு இருந்தப்ப, என்னை வேற கலர்ல காமிச்ச 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார் கமல் சார். அதோட 150-வது நாள் விழாவில் சிவாஜி சார் தலைமையில் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் ரெண்டு பேரையும் கௌரவிச்சார். 'இது என்ன கூட்டணி’னு கேட்டதுக்கு, 'என்னை இனம் கண்டு கொண்டவர் ஆர்.சி.சக்தி, உங்களை இனம் கண்டுகொண்டவர் மணிவண்ணன்’னு சொன்னார். அந்த மனசு... அதான் கமல் சார்!''