சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழ்ப்படம், தமிழ்நாட்டில் ஒரே ஊரில் மூன்று திரையரங்குகளுக்கு மேல் வெளியிடவேண்டுமானால் அது சென்னையில் மட்டுமே சாத்தியமாயிருந்தது.
பெரிய ஹீரோக்கள் படம் என்றால்
சென்னையில் நான்கிலிருந்து ஆறு திரையரங்குகளிலும்,
மதுரை, கோவை, சேலம் போன்ற அடுத்தகட்ட மாநகரங்களில் இரண்டிலிருந்து மூன்று திரையரங்குகளிலும்,
திண்டுக்கல் போன்ற சில பெரிய நகரங்களில் முதல் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் இரண்டு திரையரங்குகளிலும்,
தஞ்சாவூர், விருதுநகர் போன்ற இதர நகரங்களில் ஒரு திரையரங்கிலும் திரையிடப்படும்.
தாராபுரம், சிவகங்கை போன்ற பல நகரங்களில் தமிழ்ப்படங்கள் நேரடியாக முதல் நாளிலேயே வெளிவராது. சுற்றுவட்டார நகரங்களில் ஓடிய பிறகு இங்கே திரையிடப்படும்.
உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற சிறிய ஊர்களிலெல்லாம் ஒரு புதிய படம், மற்ற நகரங்களிலெல்லாம் ஓடி தேய்ந்து, 4 அல்லது 5 மாதங்கள் கழித்து தான் திரையிடப்படும்.
இப்படியிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகம் இன்று எப்படிப்பட்ட இமாலய மாற்றத்தை அடைந்துள்ளது தெரியுமா? உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற சிறிய ஊர்களிலெல்லாம் படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதற்கெல்லாம் வழிகாட்டியவர் கமல்ஹாசன்!!!
கமல்ஹாசன் 2001-லேயே இவ்வாறு கூறினார், "புதிய படங்களை அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்து, சினிமா டிக்கெட் என்பது திரையங்கில் மட்டுமல்லாது, சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்".
அவர் கூறிய படி செய்தால் தான், யாரேனும் இன்று இந்த படம் பார்க்கவேண்டும் என்று நினைத்தால், அன்றே பார்க்க முடியும். இல்லையேல் எந்த காட்சிக்கு டிக்கெட் இருக்குதோ அந்த காட்சியை தான் பார்க்க முடியும்.
எப்படி இந்த எண்ணம் கமல்ஹாசனுக்கு மட்டும் தோன்றியது? , ஏனெனில் கமல்ஹாசனின் படங்கள் மட்டும் தான் "
திரையரங்குகளில் தொடர் ஹவுஸ்புல் சாதனைகளை" தொடர்ந்து செய்திருக்கிறது.
இவரின் படங்களுக்கு மட்டும் தான் அட்வான்ஸ் புக்கிங் கியூ 1978-லிருந்தே இருந்து வருகிறது. தேவி பாரடைஸ் தியேட்டரில்
அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு
அட்வான்ஸ் புக்கிங் செய்ய வந்த ரசிகர்களின் கியூ அன்றைய அலங்கார் தியேட்டரையும் தாண்டி(
ஒரு கி.மீ தூரத்திற்கும் மேல்) இருந்தது என்பது சாதனை வரலாறு. மேலும் இந்த படம் எம்ஜியாரின் "உலகம் சுற்றும் வாலிபனின்" 70 நாள் தொடர் ஹவுஸ்புல் சாதனையையும் உடைத்தது. (
ரஜினிக்கு இப்படி ஒரு சாதனை குறைந்த பட்சம் 3 நாட்களாவது இருந்தால், அது எந்த படம் என்பதை ஆதாரத்துடன் கமென்ட செய்யவும்.)
எனவே உலகநாயகன் தன் "ஆளவந்தான்" படத்திற்கு இருந்த மிகப்பெரிய எதிர்பார்பை கண்டு, 2001- ல் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம், அதிகமான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யச் சொன்னார்.
ரஜினி, தாணு, விஜய் போன்றவர்களுக்கெல்லாம், வசூல் வருதோ இல்லையோ, படத்தை 175 நாள் ஓட்டவேண்டும். அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் இன்றும் வாழும் தாணுவுக்கு எட்டவில்லை அன்றே உலகநாயகன் சொன்னது.
எப்பவுமே உலகநாயகனின் தொலைநோக்கு பார்வை இந்த திரையுலகத்தினருக்கு காலம் தாழ்ந்து தான் புரியும், இதற்கு "
சின்னதிரை" மிகச் சிறந்த உதாரணம். சின்னதிரை பெரியதிரையை அழித்து விடும், அதற்கு நடிகர்கள் யாரும் பேட்டி கொடுக்க கூடாது என்றெல்லாம் "நடிகர் சங்கம்" கூறியது. அதற்கு கமல், இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி, முடிந்தால் சினிமாவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தடைகளை மீறி பேட்டி கொடுத்தார். இன்று இவர்கள் "சின்னதிரையை" தான் தங்கள் படங்களுக்கு முதல் விளம்பரம் மையமாகவும், படத்தின் சேட்டிலைட் உரிமையை கோடிகளில் விற்றும் பயன்படுத்துகிறார்கள்.
அது போல, அதிக திரையரங்குகளில் முதலில் கமலே தன் "வேட்டையாடு விளையாடு (2006) " படத்தை வெளியிட்டார். நடிப்பிலும் திரைப்படம் எடுப்பதிலும் வழிகாட்டுவது மட்டுமல்லாமல், வர்த்தகத்திலும் திரையுலகத்திற்கு வழிகாட்டினார் கமல்.
சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் (அடையார், அம்பத்தூர், குரோம்பேட், விருகம்பாக்கம் சேர்த்து தானே இப்போது விளம்பரம் செய்கிறார்கள் ) வெளியிடப்பட்டது.
1. சத்யம்
2. ஆல்பட்
3. மெலோடி
4. அபிராமி
5. காசி
6. பாரத்
7. கோபிகிருஷ்ணா
8. ஸ்ரீபிருந்தா
9. ரோகிணி
10. மாயாஜால்
11. பிரார்த்தனா
12. ஆராதனா
13. கணபதிராம்
14. ராக்கி
15. வெற்றி
16. ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்
சென்னையில்
மவுண்ட ரோட்டை சுற்றிலும் 3 திரையரங்குகளில் ( சத்யம், ஆல்பட், மெலோடி ) வெளியிடப்பட்ட முதல் படமும்
"வேட்டையாடு விளையாடு" தான்.
சென்னை
மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது.
இதற்கு பின் பல படங்கள் திரையிடப்பட்டாலும், அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் வரை திரையிடப்பட்டது. 2008-ல் மாயாஜாலில் 10 திரையரங்குகள் மட்டும் தான் இருந்தது, இப்போது மாயாஜாலில் 14 திரைகள் இருந்தும், இன்றும் இச்சாதனை முறியடிக்கப் படவில்லை. அதற்கு கமல்ஹாசனின் "விஸ்வரூபத்திற்கு" மட்டுமே தகுதியுள்ளது.
சேலத்தில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
மதுரையில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
2006-ல் கமல் காட்டிய வழியில் இன்று சின்ன பட்ஜெட் படங்கள் கூட சென்னையில் சாதாரணமாக 15 தியேட்டர்களுக்கு மேல் திரையிடுகிறார்கள். படம் வெளியாவதற்கு முன் எதிர்பார்ப்பும், வெளியான பின் நல்ல மௌத் டாக்கும் இருந்தால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் போட்டப் பணத்தை எடுத்து விடுகிறார்கள். அதற்கு மேல் வருவது எல்லாம் லாபம் தான்.
இதே பாணியில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும்,
ரஜினியின் சிவாஜி, எந்திரன் பல ஊர்களில், போட்ட பணத்தில் பாதி கூட வசூல் செய்யவில்லை என்று விநியோகிஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
விரிவாக அறிய இங்கே கிளிக் செய்க.
தசாவதாரத்தின் சாதனைகளே (
தென்னிந்தியாவின் உச்ச வசூல், திரையரங்கு உரிமையாளர்/விநியோகிஸ்தர்/தயாரிப்பாளர் என்று யாரும் குறை கூறாத மகாவெற்றி, மாயாஜாலில் தினமும் 52 காட்சிகள் ) இன்னும் முறியடிக்கப் படாமல் இருக்க,
1. உலகம் முழுவதும் 4000+ திரையரங்குகள்
2. வர்த்தகம் மட்டும் 250+ கோடிகள் ( மொத்த வசூல் 500+ கோடிகள் )
3. சென்னையில் மட்டும் 60+ திரையரங்குகள்
4. அமெரிக்காவில் மட்டும் 150+ திரையரங்குகள்
என்று
உலகநாயகனின் விஸ்வரூபம் செய்யப்போகும் சாதனைகளை மற்றவர்கள் கனவாவது காண முடியுமா?