Ads 468x60px

Wednesday, September 26, 2012

வாலில் தீ ( About FDI ) - கமல்ஹாசன்

இந்த கட்டுரையை கமல்ஹாசரின் குரலிலேயே கேட்க, கிளிக் செய்க



ஆற்றுப்  படுகையில் யாரோ முன்  தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன்,  குப்புறப் படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி  எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது. நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில்  ஒட்டிய ஈர மணலையும் முன்  சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி  விட்டு   எழுகிறேன் கனவு கலைகிறது -  அத்தனையும் கனவுதான்.

பரமக்குடிக்கார ஆள் என்  நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை. பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத்துவங்கி பல மாமாங்கள் ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி  ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப் படுகையில் கலக்க விட்டு ஓரிரு மாமாங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும் சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிபொருட்களையும் களை பொருட்களையும் நாம் நித உணவுகளாக்கிக் கொண்டு, திட உணவுகளை மெதுவாய் அப்புறப் படுத்தி வருகிறோம்.

மேற்சொன்னவற்றிற்கும்  வால் மார்ட் (Wall Mart) இந்தியாவிற்குள் நுழைவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டால் விவரம் சொல்ல நிறைய இந்தியர்கள் ஆதாரங்களோடு கடும் வாதம் புரியக் காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாகத் தமிழக முதல்வர் தாழிட்டு வைத்திருக்கிறர். அதற்கு என் போன்ற ஆட்களின் தற்காலிகமான நன்றி தமிழக முதல்வருக்கு உரித்தாகும். இந்த வைராக்கியத்தை அவர் கடைப் பிடித்தால் எங்கள் நன்றி என்றென்றும் உண்டு. எதிர்காலச் சந்ததிகளின் விவரமறிந்த நன்றியும் கூட.

என்ன செய்து விடப் போகிறது இந்த வால் மார்ட்? இப்படிப் பதறுகிறீர்கள் என்று கேட்டால்;




வால் மார்ட்  என்ற அமெரிக்க பல் பொருளங்காடி கிராமவாசிகளையும் வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டு, அவர்களே அறியாமல் அவர்கள் பிடரியில் கையை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் தம் கல்லாவில் காசு போட வைக்கும். ஊற்று நீரை பாட்டிலில் நிரப்பி விற்கும். பதனி பருக ஆசை என்று என் போன்ற பழைய ஆட்களுக்கும் பாட்டிலில் அடைத்து விற்றாலும் விற்கும் வால் மார்ட்  சொல்லமுடியாது, மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி மயக்கும் விளாங்குத்தனம் உள்ள அமெரிக்க வியாபாரக் குழுமங்கள் கிராம உத்யோக பவனின் காதி யுக்திகளையும் அனுமதியின்றி அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும். பனம்பழமும் கிழங்கும் என்னவென்றே தெரியாத இந்தியப் பிள்ளைகள் பிட்சாவே தன் பாரம்பரிய உணவு என மயங்கும். மயங்கட்டுமே, இதில் என்ன கெட்டுப் போகிறது? எனச் சிலர் கேட்கலாம்.

யோசித்துப் பார்த்தால் ஒன்றும் கெட்டுப் போகாதுதான். கம்யூனிசமோ ஜனநாயகமோ செத்தாலும் பனைமரம் உயிரோடு நிற்கும். ரோம் ராஜ்யம் துளிர்த்தெழும் பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னால் மஹாவீரரின் மூந்தய தீர்த்தங்கரர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுட்கு முன்னால் இந்நாட்டை வளமாக்கிய மண்ணும் மரமும் சரியாது சாயாது. ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில்  மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப் படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப்  படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.

நாம் அழிவோம் உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.


 - கமல்ஹாசன்

Wednesday, September 19, 2012

அடுத்த கமல் யார்?

"அடுத்த கமல் யார்?" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , ("அடுத்த MGR யார்? அடுத்த சிவாஜி யார்?")  எப்படி விடையானர் என்று முதலில் பார்ப்போம்.

கமல் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய போதே, அடுத்த ஜெமினிகணேசன் யார்? என்ற கேள்வி எழ விடாமலேயே, மன்மத லீலை, ஏக் துஜே கே லியே, மூன்றாம் பிறை என்று காதல் இளவரசனாக ஜொலித்தார்.

1977-ல், 16 வயதினிலே படத்தில் சப்பானியாக நடித்து, ராஜ பார்வையில் பார்வையில்லாதவராக மாறி, எல்லாம் இன்பமயங்களில் 11 விதமான தோற்றங்களில் தோன்றி, கடல் மீன்களில் 60 வயது முதியவராக தன் 25 வயதிலேயே நடித்து, மூன்றாம் பிறையில் சிறந்த நடிகனாக தேசிய விருது வாங்கி, சிப்பிக்குள் முத்துவில் யதார்த்த நடிப்புக்கு இலக்கணம் அமைத்து, புன்னகை மன்னனில் சார்லி சாப்ளினாகி, நாயகன் படத்தில் ஒரே ரோலில் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான நடிப்பை வெளிப்படுத்தி, நடிப்பின் உச்சத்தை தொட்டு, சிவாஜிகணேசன் வாயாலேயே "என்னையே மிஞ்சிட்டடா" என்று சொல்லவைத்து, "அடுத்த சிவாஜி யார்?" என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன்.



சினிமா வரலாற்றில் ஒரு பெரிய ஹீரோ முழு நீள காமெடிப் படத்தில் நடிப்பது மிக அரிது, அதுவும் அடுத்தடுத்து நடிப்பது அரிதிலும் அரிது. அந்த சாதனையையும் உடைத்தெறிந்து, டைமிங் காமெடியிலும் நான் தான் கிங் என்று நிரூபித்திருக்கிறார் கமல். "மைக்கேல் மதன் காமராஜன்" படத்தின் DVD இல்லாத வீடுகள் இல்லை என்பதும், இன்றும் சன் டிவி, உலகநாயகனின் பஞ்சதந்திரம் & வசூல்ராஜா படங்களை மாதம் ஒரு முறையாவது ஒளிபரப்புவதுமே இதற்கு சான்று.

அடுத்த MGR யார்? என்ற கேள்வி கொஞ்சம் சிக்கலானது. சினிமாவிலா அல்லது அரசியலிலா? என்று அந்த கேள்வியை இரண்டாக்கும் அளவுக்கு அவர் இரண்டிலும் சாதித்திருக்கிறார்.

1986-ல் கமல் தன் ரசிகர்மன்ற மாநாட்டை MGR தலைமையில் நடத்திய போது, திரண்ட இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து, எம்ஜியாரே கமலை பார்த்து "அரசியலுக்கு வருகிறாயா?" என்று கேட்டார். ஆனால் எம்ஜியாரிடமே தன் மறுப்பை தெரிவித்து, இன்றும் அரசியலில் ஈடுபடாத அரசனாக, கலையுலகை மட்டும் ஆட்சிபுரிகிறார் கமல்.


சினிமாவை பொறுத்தவரை, எம்ஜிஆர் ஜனரஞ்கமான படங்களிலேயே நடித்தாலும் அவர் கேமராவுக்கு பின் இருக்கும் அனைத்து சினிமா தொழில்நுட்பங்களும் அறிந்தவர். கமலும் குரு, சவால், கல்யாண் ராமன், சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, காக்கி சட்டை, அபூர்வ சகோதரர்கள் என்று ACTION மற்றும் கமர்சியல் படங்களிலும் தன் தனி முத்திரையை பதித்து, எம்ஜியாரை போல அனைத்து சினிமா தொழில்நுட்பங்களும் கற்றுத்தேர்ந்தவர் தான். புதிய தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு முதலில் அறிமுகப்படுத்துவதும் கமலே.

கமலின் சினிமா ஞானத்தை "ஹேராம் ஆய்வுகள்" மூலம், பதிவர் "உலகசினிமா ரசிகன்" பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஹேராமை பற்றி மிக அற்புதமாக விவரித்துள்ளார்.
லிங்க் இதோ :
1.http://worldcinemafan.blogspot.com/2012/09/hey-ram-2000-023.html
2.http://worldcinemafan.blogspot.com/2012/09/hey-ram-2000-021.html
3.http://worldcinemafan.blogspot.com/2012/09/hey-ram-2000-017.html

இது புரியாமல், சில மீடியாக்கள் ரஜினியை, எம்ஜியார் இடத்தில் வைத்து குறிப்பிடுவதுண்டு. எம்ஜியாரை போன்று இவர் சினிமா தொழில்நுட்பங்களை அறிந்தவரா? எம்ஜியார் தான் நடிக்கும் படங்களில் கூட மதுவைவோ புகையையோ தொடாதவர், ஆனால் ரஜினியோ ராம்தாஸின் மிரட்டலுக்கு பின் தான் மது, புகையை சினிமாவில் விட்டவர். எம்ஜியார், இல்லாதவர்கள் எந்தக் கட்சியானாலும், இல்லை என்று கூறாமல் உதவியவர், ரஜினியோ தன் ரசிகர்களை கூட தன் மகளின் திருமணத்துக்கு அழைக்காமல், தனியாக பிரியாணி போடுகிறேன் என்று 2 வருடங்களாக ஏமாற்றுபவர், தான் கூறும் கருத்துக்களில் கூட தெளிவில்லாதவர், அன்று ஜெ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பற்றமுடியாது என்றார், பின் ஜெ தான் தைரிய லட்சுமி என்றார், 2011 தேர்தலில் மு.க தோற்றுவிடுவார் என்றவுடன் மீடியாக்கள் முன்னிலையில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டவர் தான் ரஜினி.


ஆளவந்தான் நந்துவைப் பற்றி கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டால் "கடவுள் பாதி, மிருகம பாதி" என்பார். அது போல கமலைப் பற்றி
நடிகர் செந்தாமரையிடம் கேட்டால் இப்படி தான் குறிப்பிடுவார், "கமல் - மூன்று சிவாஜி, ஆறு எம்ஜியாருக்கு சமம்" என்று.

அதையும் தாண்டி  எம்ஜியார் (ACTION, சினிமா தொழில்நுட்பஞானம்), சிவாஜிகணேசன் (சீரியஸ் நடிப்பு), நாகேஷ் (டைமிங் காமெடி) ஜெமினிகணேசன் (காதல் உணர்வுமிக்க நடிப்பு) ஆகிய தன் முந்தையகால LEGENDS அனைவரின் கலவையாய் மட்டுமல்லாது, தனது பாணியாக யதார்த்த நடிப்பு என்ற பிரிவையும் திரையில் உருவாக்கி ஜொலித்து, பாடலாசிரியராக, பாடகராக, மேக்கப்மேனாக, கதை திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக வெற்றி பெற்று, இன்று "விஸ்வரூபம்" மூலம் ஹாலிவுட்காரர்களையும் தமிழ் சினிமா பக்கம் திருப்பிவிட்டு,  தனக்கு கொடுக்கப்பட்ட உலகநாயகன்  பட்டம் சரியானதே என்று நிரூபித்துவிட்டார் கமல்.

இது புரியாமல், நடிகர் அஜீத் குமாரை, சிட்டிசன் படத்தில் பல்வேறு கெட்டப்புக்களில் நடிக்கிறார் என்றவுடன், மீடியாக்கள் அவரை "அடுத்த கமல்" என்று வர்ணித்தன. ஆனால் படம் வந்தவுடன், "பள்ளி குழந்தைகளின் மாறுவேடப் போட்டி போல உள்ளது" என்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி, "அடுத்த கமல் என்பது எளிதானதல்ல" என்பதை அவரே புரிந்து, போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

பின் விக்ரம் என்று ஒரு நடிகர் வந்தார், ரெண்டு மூனு ஹிட் கொடுத்தவுடன், தன்னைத் தானே "அடுத்த கமல்" என்று நினைத்து கொண்டிருந்தவரிடம் நிருபர் ஒரு கேள்வி கேட்டார், " கமல் காமெடி படங்களிலும் தன் வெற்றி முத்திரையை பதித்தவர், ஆனால் நீங்கள் இன்னும் காமெடி படம் பண்ணலையே?". உடனே நானும் நடிப்பேன் என்று "மஜா" என்று ஒரு படத்தை வெளியிட்டார், அன்று சரிந்த விக்ரமின் மார்க்கெட், இன்றும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

விஜய் அவார்ட்ஸில்(2009) என்று கமலின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாரோ அன்றிலிருந்து சூர்யாவின் சினிமா மார்க்கெட் (அயன், சிங்கம்), விஜய் அஜீத்தையும் தாண்டி உச்சத்திலிருக்கிறது. அதற்காக இவரோ இவரது ரசிகர்களோ இவர் தான் அடுத்த கமல் என்று நினைத்து கொண்டிருந்தால், மீண்டும் இப்பதிவை முதலில் இருந்து படிக்கவும்.

மேலும், கமல் 1989-ல் தன் ரசிகர் மன்றங்களை களைத்து விட்டு, மக்களுக்கு உதவி புரியும் "நற்பணி இயக்கங்களாக" மாற்றினார். இது சினிமா வரலாற்றிலே யாருமே செய்யத் துணியாதது. அன்று இரத்த தானம் செய்வதே அரிதான செயல். இன்று உடல் உறுப்பு தானங்களே அதிகமாக தமிழகத்தில் நடைபெறுகிறது என்றால் அதற்கு கமல் செய்த விழிப்புணர்வு மட்டுமின்றி அவரே செய்த "உடல் தானத்திற்க்கும்" மிக முக்கிய பங்குண்டு.

அடுத்த கமல்ஹாசனாக வேண்டுமானால்,

திரைக்கதை
வசனம்
இயக்கம்

நடிப்பு ( யதார்த்தம், டைமிங் காமெடி, சீரியஸ், காதல்)
நடனம்
ACTION
பாடகர்

பாடல் ஆசிரியர்

என்று சினிமாவின் ஒவ்வொரு துறையிலும், பாக்ஸ் ஆபிஸிலும், பல தலைமுறைகள் கடந்து சாதிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு, அதைப் பார்த்து பயப்படாமல் அதை சினிமாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் தொலைநோக்கு பார்வை வேண்டும்   ( சின்னதிரையின் வளர்ச்சியை கண்டு பயப்படாமல், ஆரம்பத்திலிருந்தே அதை ஆதரித்தவர் கமல் ஒருவரே). அதுமட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி என்று மற்ற மொழிகளில் நேரடியாக நடித்து வெற்றியும் பெற வேண்டும். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் குறைந்தபட்சமாவது முதலீடு செய்ய வேண்டும்.

கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார், தான் ஓடிக்கொண்டிருப்பது சினிமாவுக்கான மராத்தான் ஓட்டம் என்று. அந்தந்த கால பாப்புலர் ஹீரோயின், காமெடியன்கள், மியூசிக் டைரக்டர் & டைரக்டர்களை வைத்து காலத்தை ஓட்டுபவர்களால் இந்த மராத்தான் ஓட்டத்திற்கு தகுதியே பெறமுடியாது, பின் எங்கே அடுத்த கமல் ஆவது?

விஞ்ஞானத்தின் மூலம் கருவிலிருந்தே அப்படி ஒரு கலைஞனை உருவாக்கினாலும், அவரும் அடுத்த கமல்ஹாசனாக சாத்தியமில்லை.....

Thursday, September 13, 2012

தாழ்த்தப்பட்ட சிறுமி : கமல் கவிதை

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார்.

அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, தாழ்த்தப்பட்ட சிறுமியின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது.



தமிழ் மகளுக்கு,

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்


கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !


காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்


ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே


ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !


ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !


அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !


சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !


சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !


புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண் !


                                        -கமல்ஹாசன்

Tuesday, September 11, 2012

பவர் ஸ்டாரின் குரு ரஜினி

இந்த வாரம் குமுதத்தில் (12.9.2012) வெளியான, ஜெயா டிவி விழாவில் ரஜினியின் அநாகரீகப் பேச்சைப் பற்றிய கட்டுரையில், ரஜினியை இப்படித்தான் வர்ணித்துள்ளார்கள்.

"தன் படம் ரிலீஸ் ஆகும் முன் பொறி பறக்கும் அறிக்கையை தட்டிவிட்டு பொட்டி பாம்பாய் அடங்கிவிடுவார்"

"எப்பொழுதும் மீடியாவின் கவனம் தன் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்"

"பஞ்ச் பேசி ஹீரோவாக நினைத்த ரஜினி வில்லனாகி சொதப்பினார்"

இது எல்லாம் ரஜினி 1980 களிலிருந்தே செய்து வருவது தான் என்றாலும்,
இதையே பவர் ஸ்டார் செய்தால் (பப்ளிசிட்டி) அவரை எப்படி ஓட்டுகிறார்கள்.






வெத்து பப்ளிசிட்டி செய்வதில் ரஜினி தான் பவர் ஸ்டாரின் குரு என்பதை, இப்போதாவது மீடியாக்கள் புரிந்து கொண்டு அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததிற்கு நன்றி...

Friday, September 7, 2012

தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் - கமல்

தோண்ட தோண்ட புதையல் கிடைத்தால் எப்படியிருக்குமோ, அது மாதிரி கமல்ஹாசனின் வெள்ளி விழா படங்களை பற்றி எழுதலாம் என்று புள்ளிவிவரங்களை சேகரித்த போது, எனக்கு கிடைத்த தகவல்கள் ஏராளம். அதில் ஒன்று தான் கமல் படங்களின் "தொடர் ஹவுஸ்புல் சாதனைகள்" .

"தொடர் ஹவுஸ்புல் சாதனைகள்" எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், முதல் காட்சியிலிருந்து எத்தனையாவது காட்சி வரை தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சியாக ஓடியது என்பதன் எண்ணிக்கையே.


ரஜினி வழியில் இன்றும் அவரது வாரிசாக பவர் ஸ்டார் போன்றவர்கள் திரையரங்கை வாடகைக்கு எடுத்து ஓட்டிக்கொண்டிருக்கையில், கமல்ஹாசனின் திறமைகளை போன்று அவரின் இந்த "தொடர் ஹவுஸ்புல் சாதனைகளும்" மிக அபூர்வமானவையே!!!

இலங்கை - கொழும்புவில் கமல்ஹாசனின் "குரு" தொடர்ந்து 200 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.

சென்னையில் "மூன்றாம் பிறை" தொடர்ந்து 156 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.

பாண்டிச்சேரியில் "அபூர்வ சகோதரர்கள்" தொடர்ந்து 78 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.

கோவையில் "அபூர்வ சகோதரர்கள்" தொடர்ந்து 72 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது,

மொத்த சாதனை பட்டியல் கீழே,


திரைப்படம்திரையரங்குகள்ஹவுஸ்புல் காட்சிகள்
குருஸ்ரீலங்கா - கொழும்பு - கிங்ஸ்லிதொடர்ந்து 200 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்
சகலகலா வல்லவன்சென்னையில் 4 திரையரங்குகளில்தொடர்ந்து 1008 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள்)
சென்னை - அலங்கார் தொடர்ந்து 252 ஹவுஸ்புல் காட்சிகள் (84 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - அன்னை அபிராமிதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
சென்னை - மகாராணிதொடர்ந்து 216 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - AVM ராஜேஸ்வரிதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
பாண்டிச்சேரி - ருக்மணிதொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (43 நாட்கள்)
மூன்றாம் பிறைசென்னை - சுபம் தொடர்ந்து 624 ஹவுஸ்புல் காட்சிகள் (156 நாட்கள், 4 காட்சிகள்)
தூங்காதே தம்பி தூங்காதேசென்னை - சத்யம் தொடர்ந்து 128 ஹவுஸ்புல் காட்சிகள்
காக்கிசட்டை திருநெல்வேலி - சிவசக்திதொடர்ந்து 116 ஹவுஸ்புல் காட்சிகள்
அபூர்வ சகோதரர்கள்சென்னையில் 4 திரையரங்குகளில்தொடர்ந்து 1059 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள்)

சகலகலா வல்லவனின் முந்தைய சாதனைய முறியடித்தது
சென்னை - தேவிபாரடைஸ் தொடர்ந்து 300 ஹவுஸ்புல் காட்சிகள் (100 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - அபிராமிதொடர்ந்து 312 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள், 4 காட்சிகள்)

மொத்தம் 385 ஹவுஸ்புல் காட்சிகள் (101 நாட்கள், 4 காட்சிகள்)
சென்னை - அகஸ்தியா தொடர்ந்து 201 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - காசிதொடர்ந்து 400 ஹவுஸ்புல் காட்சிகள் (100 நாட்கள், 4 காட்சிகள்)
கோவை - அர்ச்சனாதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
திருப்பூர் - S.A.Pதொடர்ந்து 148 ஹவுஸ்புல் காட்சிகள் (மொத்தம் 110 நாட்கள்)
பெங்களூர் - நட்ராஜ்தொடர்ந்து 164 ஹவுஸ்புல் காட்சிகள் (மொத்தம் 112 நாட்கள்)
பாண்டிச்சேரி - ஸ்ரீபாலாஜிதொடர்ந்து 312 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
கடலூர் - கிருஷ்ணாலயாதொடர்ந்து 400 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
நாகர்கோவில் - மினிசக்கரவர்த்திதொடர்ந்து 326 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
திருநெல்வேலி - சென்ட்ரல்தொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
குறிப்பு : மற்ற கமல் படங்களின் தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் கிடைக்கும் போது இப்பட்டியல் அப்டேட் செய்யப்படும்.



உலகநாயகன் படங்களின் தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் எனக்கு இமெயில் ( sandiyar_k@yahoo.co.in ) அனுப்பவும் அல்லது இப்பதிவில் பின்னூட்டம் செய்யுங்கள்