1983 நிகழ்வு : தேவர் பிலிம்ஸ் ரஜினியை வைத்து ஹிந்தி பட ரீமேக்காக தாய்வீடு என்ற படத்தை தயாரித்தது...
விளைவு : "வீடு" படத்தின் தலைப்பில் மட்டும் தான் இருந்தது. தேவர் அவர்கள் தன் சொந்த வீட்டையே இழந்தார்.
1986 நிகழ்வு : கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் ராஜசேகரை பாதியில் இழுத்துக்கொண்டு போய் ரஜினி, மாவீரன் படத்தை தயாரித்தார்.
விளைவு : மாவீரன் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய நடிகை ஜெயப்பிரதா, படத்தின் பெருத்த நஷ்டத்தால், சென்னையில் தன்னுடைய தியேட்டர்களை ( மிட்லண்ட & லியோ ) இழந்தார்.
1988 நிகழ்வு : மகாபலிபுரத்தை காண வந்த வெளிநாட்டவர்களை வைத்து, கூவம் ஆற்றின் கரையிலும், பல்லவாரத்தின் சந்து பொந்துகளிலும் எடுக்கப்பட்ட ரஜினியின் BLOODSTONE என்ற படத்தை ஆங்கிலப்படம் என்று நம்பி, படத்தின் விநியோகிக்கும் உரிமையை நடிகரும் இயக்குநருமான T.ராஜேந்தர் வாங்கினார்.
விளைவு : தான் இயக்கி நடித்து சம்பாதித்த அத்தனையையும், இந்த ஒரு படத்தை வாங்கியதால் ஒரே நாளில் இழந்தார். பின்பு பத்திரிக்கையில் இப்படி பேட்டியளித்தார் "ரஜினிக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றார்கள், அவர்கள் அனைவரும் ஒரு தடவை பார்த்தாலே, இந்த படம் தப்பித்திருக்கும், ஆனால் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்பதை அவரே நிரூபித்துவிட்டார்".
1991 நிகழ்வு : ரஜினியின் தர்மதுரை என்ற படத்தை 100 நாள் ஓட்டிவிட்டார்கள், என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள் அவரின் ரசிகர்கள்.
விளைவு : அது படத்தின் இயக்குநர் ராஜசேகருக்கே பொறுக்காமல் தானோ ஏனோ, அந்த 100 வது நாள் அன்றே மாரடைப்பால் இறந்து விட்டார்.
1991 நிகழ்வு : ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற படத்தின் விநியோகிக்கும் உரிமையை தயாரிப்பாளர் வீராசாமி என்றவர் வாங்கினார். ஆனால் அது அந்த தயாரிப்பாளர் "வீட்டுக்கு ஒரு எமன்" ஆனது.
விளைவு : இந்த படம் முதல் காட்சியிலேயே WASHOUT ஆனதால் தயாரிப்பாளர் வீராசாமி மாரடைப்பால் இறந்தார். (இதை படித்தவுடன் ரஜினி ரசிகர்கள் இப்படி தான் முனங்குவார்கள், "ஆளவந்தான் படத்தால் தாணு கூட தான் நஷ்டமானார்". இது தான் அவர்களுக்கான பதில் "அப்படி நஷ்டமடைந்திருந்தால் தாணுவால் இன்றும் எப்படி முன்னனி நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்க முடிகிறது? ".)
1992 நிகழ்வு : மன்னன் திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை பண்டரிபாய், ரஜினிக்கு தாயாக, பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவராக, வலுக்கட்டாயமாக நடிக்க வைக்கப்பட்டார்.
விளைவு : பண்டரிபாய் அந்த படத்தில் நடித்ததற்கு பின், நிஜ வாழ்க்கையிலும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு இறந்தார்.
2002 நிகழ்வு : ரஜினி, தன்னுடைய குரு என்று சச்சிதானந்த மகராஜ் என்ற சாமியாரை, அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்து, ஆகஸ்ட் 14 அன்று சென்னை சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சியாக "பாபா" படத்தை திரையிட்டார்.
விளைவு : படத்தின் ஆரம்பத்தில் ரஜினி "ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருருரு" என்று வாயை திறந்து ஓபனிங் பாட்டு பாடும் போது, அந்த சாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது... சத்யம் தியேட்டரிலேயே உயிர் பிரிந்தது...
2004 நிகழ்வு : தன் பாபா படத்தை பாமக ராமதாஸ் தான் UTTER FLOP ஆக்கினார் என்று நினைத்துக்கொண்டு, 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் தொ(ல்)லைகாட்சிகள் வாயிலாக கூவோ கூவு என்று கூவினார்.
விளைவு : ஆனால் பாமக தான் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஒரு வேளை, ரஜினிக்கு ஆயிரக்கணக்கில் கூட ரசிகர்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு ஓட்டு போட தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு ஓட்டு போடும் வயதில்லையா?
2007 நிகழ்வு : எப்ரல் 9 அன்று, "சிவாஜி" பட வேலைகள் முடிந்தவுடன் ECR-ல் படக்குழுவினருக்கு விருந்து கொடுக்கப்பட்டது.
விளைவு : சிவாஜி படத்தின் ஒலியமைப்பாளர் சச்சிதானந்தம், நீச்சல் தொட்டிக்குள் மர்மமான முறையில் பிணமானார். பின் மப்பு ஓவராகியதால் தொட்டிக்குள் விழுந்து இறந்தார் என்று கேஸ் முடிக்கப்பட்டது.
2008 நிகழ்வு : ரஜினி படங்களின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தெரியாமல், "குசேலன்" குழிக்குள் அனுப்புவான் என்று புரியாமல் , படத்தின் விநியோகிக்கும் உரிமையை 60 கோடிக்கு வாங்கியது "பிரமிடு சாய்மீரா" என்ற நிறுவனம்.
விளைவு : "பிரமிடு சாய்மீரா" என்ற நிறுவனத்தையே குழிக்குள் போட்டு மூடியது "குசேலன்".
2014 நிகழ்வு : லிங்காவை எந்த பழைய விநியோகிஸ்தர்களும் வாங்க முன் வராத நிலையில், தொழிலுக்கு புதிதாக வந்தவர்கள், மீடியாவில் வெளிவரும் ரஜினி படத்தின் வசூல் செய்திகள் ( காசு கொடுத்து போடப்படும் விளம்பரம் என புரியாமல் ) உண்மை என நம்பி, அதிக விலைக்கு வாங்கினர்.
விளைவு : ரஜினி பிறந்த நாளில் வெளியிட்ட ராசி, ரஜினி படத்தையே காவு வாங்கியது. வழக்கம் போல் கமுக்கமாக நஷ்டத்தை கொடுத்து கணக்கை முடிக்கும் ரஜினி, இந்த படத்திற்கு மட்டும் ஏன் செய்யவில்லை? கோச்சடையான் நஷ்டத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் இந்த லிங்கா என்பதாலா?
உலக சினிமா வரலாற்றில் நடைபெறாத வகையில் இந்த படத்தை வாங்கியவர்கள், நஷ்ட ஈட்டினை பெற சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்படியும் நஷ்ட ஈடு கிடைக்காததால், 14-பிப்ரவரி-2015 அன்று ரஜினி வீட்டு முன்பிருந்து "மெகா பிச்சை" எடுக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இதையெல்லாம் படித்தபிறகு, மாப்பிள்ளை படத்தில் ரஜினி பாடும் "என்னோட ராசி நல்ல ராசி...." என்ற பாடல், உங்கள் காதுகளில் ஒலித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது...