Ads 468x60px

Monday, July 30, 2012

BATMAN-3-ல் தசாவதாரத்தின் பாதிப்புகள்

Barrie M Osborne ("Lord of the Rings" தயாரிப்பாளர் ), 2012 ஜூன் IIFA-ல், உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு ENCYCLOPEDIA என்றும், தான் கமலுடன் இணைந்து ஹாலிவுட் படம் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறினார்.


ஆளவந்தான் கார்டூன் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு 2004-ல் தான் எடுத்த KILL BILL-2 -ல், வன்முறை காட்சிகள் பார்வையாளர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்காமால் இருக்க, தானும் அதே போன்று கார்டூன் காட்சிகளை உபயோகித்ததை 2012-ஜுலையில் இப்படத்தின் இயக்குனர் Quentin Tarantino கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ஹாலிவுட் படங்களை பார்த்து காட்சி அமைக்கிறார் என்று பதிவுலகில் சிலர் கூவிக்கொண்டிருக்கும் போது, மேலே நடந்த சமீபத்திய இரு விஷயங்கள் அவ்வாறு கூறியவர்களை செருப்பால் அடிப்பதை போல் அமைந்துள்ளது...





இப்போது BATMAN-3 (The Dark Knigh Rises).

இதில் தசாவதாரத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் Christopher Nolan இதை ஒப்புகொள்ள வேண்டிய சூழல், விஸ்வரூபத்தின் வெளீயீட்டுக்கு பின் கண்டிப்பாக வரும்...

தசாவதாரத்தில், விஞ்ஞானி கமல், தான் கண்டுபிடித்த வைரஸ் கிருமியை வைத்து வில்லன்கள் இந்த உலகத்தை அழிக்க திட்டம் போடும் போது, போராடி அவர்களிடம் இருந்து இந்த உலகத்தைக் காப்பார்....

BATMAN-3 -ல், ஹீரோ தங்கள் குழு கண்டுபிடித்தை (CLEAN ENERGY PROJECT), அணுஆயுதமாக மாற்றலாம் என்றவுடன், வில்லன் கையில் மாட்டமல் இருப்பதற்காகவும், மாட்டிய பின் வில்லனிடம் இருந்தும் அவனுடைய ஊரை காப்பாற்றுகிறார்

தசாவதாரத்தில், ஆராய்ச்சிக்காக வைத்திருந்த குரங்கு, வைரஸை சாப்பிட்டவுடன், மற்றவர்களை காப்பாற்ற, ஆராய்ச்சி கூடத்தில் வெள்ளத்தை வர வைப்பார் விஞ்ஞானி கமல்.

அதேபோல் BATMAN-3-ல், தங்கள் கண்டுபிடிப்பு கட்டுப்பாட்டை இழக்கும் போது அதன் பாதிப்பை தடுக்க ஆராய்ச்சி கூடத்தில் வெள்ளத்தை வரவைக்கிறார்கள்...

தசாவதாரத்தின் கிளைமேக்ஸில் வைரஸ் கிருமிகளை FLETCHER சாப்பிட்டவுடன், கடல் பொங்கி சுனாமியாக வந்து அவற்றை அழிப்பாதாக கமல்ஹாசர் திரைக்கதை அமைத்திருப்பார்...

அதேபோல் BATMAN-3 கிளைமேக்ஸில்,  வில்லன் தங்கள் கண்டுபிடிப்பை அணுஆயுதமாக மாற்றிய பின், ஹீரோ அதை கடலுக்குள் வெடிக்கவைத்து அழிக்கிறார்.

கமல்ஹாசனின் அருமை தெரியாதவர்களுக்கு, BATMAN-3-ல் உள்ள தசாவதாரத்தின் பாதிப்புகள், மீண்டும் ஒரு செருப்படி தான்....

1 comments:

  1. தசாவதாரத்தில் FLETCHER முதன் முதலாக ஹெலிகாப்டரில் வரும் போது திரையரங்கே அதிர்ந்தது.

    கமல்ஹாசன் படங்களை இனி உலகே கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது.

    ReplyDelete