Ads 468x60px

Thursday, March 27, 2014

கமல் ரசிகர்களின் அரசியல்

கமல்ஹாசன் கூறுவார் எனக்கு அரசியல் தெரியாது என்று. அது உண்மையல்ல... அவருக்கு  மற்ற நடிகர்கள் போல ஒரு கட்சி சார்பாக அரசியல் செய்ய தெரியாது என்பதே உண்மை.

தன் புகழை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முதன்மையான கலைஞன் கமல்ஹாசன் மட்டுமே.

பணத்திற்கு வாக்களிக்காதீர்கள்...சுயமரியாதையை விற்காதீர்கள்...சிந்தித்து வாக்களியுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக, இலவசமாக, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதை பார்க்க கிளிக் செய்க.

இன்று அவரது வழியில், மதுரையை சேர்ந்த புதுமை நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, கமல்ஹாசனின் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை, மதுரை அரசரடியில், சுவர் விளம்பரமாக அமைத்துள்ளனர்.






தனது ஆதர்ச நடிகர் அரசியலுக்கு வந்தால் அவரை வைத்து சம்பாதிக்கலாம் என்று அவரது ரசிகர்களும், ரசிகர்களை உசுப்பேற்றினால் நாம் நன்கு சம்பாதிக்கலாம் என்று அந்த நடிகரும் இருக்கும் காலகட்டத்தில், சமூக நலனுக்காக போராடும் கமல்ஹாசனும், அவர் காட்டும் நல்வழியில் செல்லும் கமல் ரசிகர்களும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே!!!

Thursday, March 20, 2014

சமூக அக்கறையுள்ள நாயகன் கமல்ஹாசன்

இந்தியாவில், சமூக அக்கறையுள்ள கலைஞர்களில் முதன்மையானவர் என்றும் கமல்ஹாசன் மட்டுமே, என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நம் உலகநாயகன்.

ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போது கைகளினால் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று 2004 லோக்சபா தேர்தலிலும், மீடியாக்கள் ஓட்டு போடும்போது ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்று தெரிந்தும் 2011 தமிழக சட்டசபை தேர்தலிலும் ஓட்டு போட்ட நடிகரால் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த அவப்பெயர், இந்த 2014 லோக்சபா தேர்தலில், உலகநாயகன் கமல்ஹாசனால் துடைக்கப்பட்டது.

பணத்திற்கு வாக்களிக்காதீர்கள்...சுயமரியாதையை விற்காதீர்கள்...சிந்தித்து வாக்களியுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக, இலவசமாக, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து தனது சமூக அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.



இந்த வீடியோ தமிழக தேர்தல் ஆணையத்தால் 18-மார்ச்-2014 அன்று வெளியிடப்பட்டது. அதன் புகைப்படம் கீழே.

Sunday, March 2, 2014

உத்தம வில்லன் போஸ்டர்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் 3 விதமான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.




தலைவனின் விஸ்வரூபத்திற்கு கூட இந்த அளவுக்கு கலர்புல்லாக போஸ்டர்கள் வெளியிடப்படவில்லை.

உத்தம வில்லன் கண்டிப்பாக மாஸ் என்டர்டெய்னர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் இப்படத்தில் டிஸ்கோ டான்ஸ் ஆடியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

உத்தம வில்லனின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டவுடன் கொசுவாயனின் பேனர்கள் சென்னையில் அவசர அவசரமாக ஏற்றப்பட்டு வருகின்றன.... மோதிப்பார்ப்போமா???

கமல்ஹாசனின் உத்தம வில்லன் - டீசர்

கமல்ஹாசனின் உத்தம வில்லன் படப்பிடிப்பு நாளை (3-மார்ச்) முதல் தொடங்கவிருக்கிறது. அப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் கீழே...


இதில் கமல்ஹாசன் உபயோகித்திருக்கும் கலையின் பெயர் தெய்யம். அதைப்பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Theyyam