Ads 468x60px

Thursday, December 26, 2013

தெனாலி - விநியோகிஸ்தர்களுக்கு கோடிகளை அள்ளி தந்த முதல் தமிழ் படம்

விநியோகிஸ்தர்களுக்கு மாவட்ட அளவில் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று தந்த முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் தெனாலி என்பதற்கு இவைகளே சான்றுகள்.






மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சொல்லலாம், அவர் படமும் இத்தனை கோடி அத்தனை கோடி என்று...

ஆதாரங்கள்  கேட்டால் 1இந்யா, பிகைன்ட்கட்டை அல்லது விக்கிபீடியாவை தான் கொடுப்பார்கள், ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகிஸ்தர்களோ, தியேட்டர் உரிமையாளர்களோ சொல்லியிருக்க மாட்டார்கள்.

கமல்ஹாசனின் இந்தியன் புரிந்த வசூல் சாதனைகளை காண இங்கே கிளிக் செய்க

Saturday, December 14, 2013

கமல் கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் ரஜினி

கமல்ஹாசன் எங்கு சென்றாலும் அவரிடம் தவறாமல் கேட்க படும் கேள்வி இது தான்....

நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பீர்களா???
அதுவும் இந்த கேள்விக்கு கமல்ஹாசன் தனது பதிலை பலதடவை கூறிய பின்பும் மீடியா கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆனால் இந்த கேள்வியை ரஜினியிடம் கேட்டதே இல்லை மீடியா.

இப்பொழுது புரிந்திருக்குமே உங்களுக்கு... இந்த கேள்வியை யார் கமல்ஹாசனிடம் கேட்க சொல்வதென்று?

ரஜினியின் டெக்னிக் இது தான்.... அவரின் படங்களில் எப்போதுமே அன்றைய பாப்புலர் டைரக்டர், ஹீரோயின், காமெடியன், மியூசிக் டைரக்டர் தான் இருப்பார்கள்.

என்ன இப்போது அவருக்கு எவர்கிரீன் பாப்புலர் ஹீரோவே தேவையாக இருக்கிறது. எனவே இவரின் தூண்டுதலில் மீடியாக்கள் கமலிடம் கால்ஷீட் கேட்டுகொண்டிக்கிறது ரஜினிக்காக.

ரஜினியின் நேரடி படம் வந்தும் 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சென்ற வருடம் சிவாஜி-தி லாஸ் படத்தை 3Dயில் விட்டார்கள், அதுவும் சிவாஜி 3D-தி லாஸ் ஆனது தான் மிச்சம்.

ரஜினியின் மகள், ஒரே கார்டூன் படத்தை கடந்த 7 வருடத்திற்கும் மேலாக பெயரை மாற்றி மாற்றி இன்னும் எடுத்து கொண்டிடுக்கிறார். அதன் பெயர் இன்னொரு முறை வேண்டுமானாலும் மாறும் ஆனால் படம் வெளியாகாது போலிருக்கிறது.

கொசடையான் படத்திற்கு விநியோகிஸ்தர் யாரும் சிக்காது தான் காரணம் என்பது விவரம் புரிந்தவர்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.

ரஜினி உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்றால் கொசடையானை ஏன் சன் பிக்சர்ஸ் வாங்கவில்லை? எந்திரனை அவர்களால் மறக்கமுடியவில்லையோ?

முன்பு ஒரு முறை சினிமாவை விட்டு இமயமலைக்கு ஓட இருந்த தன்னை கமல் தான் சினிமாவிற்கு கூட்டி வந்தார். அது போல இன்று, சினிமாவே ஒதுக்கிய தன்னை கமல்ஹாசன் தான் கால்ஷீட் கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று மீடியாக்கள் மூலம் தூது விட்டு கொண்டிருக்கிறார் ரஜினி.

இது கமலால் மட்டுமே முடியும் என்பதும் ரஜினிக்கு தெரியும்.

Monday, December 2, 2013

விருதுநகர் மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்க விழா 2013

விருதுநகர் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, டிசம்பர் 1 அன்று, சிவகாசி அண்ணா காலனியில், உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த தினம் மற்றும் நற்பணி இயக்கத்தின் 22ஆம் ஆண்டு தொடக்க விழா  கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கான அழைப்பிதழ் வந்தவுடன் நான் மற்ற கமல் பக்தர்களுடன் பேசி இந்த விழாவிற்கு இந்த வருடமும் செல்வதென்று முடிவு செய்தேன். திருச்சியிலிருந்தும் பக்தர்கள் வருகிறோம் என்று என்னிடம் கூறியவுடன், நான் மட்டும் சென்னையிலிருந்து வெள்ளி இரவு புறப்பட்டு சனி (30-நவம்பர்) அதிகாலை திருச்சியை அடைந்தேன். அங்கு வேர்ல்டு கிங் A.பாபு, திருவானைகோயில் டெம்பிள் இன் என்ற ஹோட்டலில் தங்க வசதி செய்திருந்தார்.


அன்று திருச்சியில் கனகராஜ், 007 சுரேஷ், மெய்யப்பன், அபுபக்கர் போன்ற கமல் பக்தர்களை சந்திக்கவும் பாபு ஏற்பாடு செய்திருந்தார். அதுமட்டுமல்ல, எனக்கு பிரியாணி மிகவும் பிடிக்கும் என்று தெரிந்திருந்ததால், ஜங்ஷன் அருகே "திண்டுக்கல் பிரியாணி ஹோட்டலுக்கு"(நின்று கொண்டு தான் சாப்பிடனும்...) அழைத்து சென்றார். ஆஹா என்ன அருமையான மட்டன் பிரியாணி!!!


இரவில் சென்னையிலிருந்து எங்கள் வழிகாட்டி "மயிலை சேகர்", வடசென்னை சரவணனுடன் திருச்சி வந்தவுடன் நாங்கள் ஏற்பாடு செய்த டவேராவில் சிவகாசி புறப்படத் தயாரானோம். புறப்படும் முன், ஆச்சாரமாக ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் ஸ்டிக்கர் காரின் முன் கண்ணடியிலும் போஸ்டர் பின் கண்ணாடியிலும் ஒட்டினோம்.


தசாவதாரத்திலிந்து "உலகநாயகனே" என்ற பாடலை ஒலிக்கவிட்டு காரில் ஏறினோம். பக்தர்களுடன் இணைந்து ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் பாடல்களை கேட்டுக்கொண்டே செய்த திருச்சி - சிவகாசி - திருச்சி கார் பயணம் மிகவும் இனிமையாயிருந்த்தது.

சினிமாவில் முன்னோடி கமல்ஹாசன்!
நற்பணியில் முன்னோடி கமல்ஹாசன் நற்பணி இயக்கம்!!
நற்பணி இயக்கங்களில் முன்னோடி விருதுநகர் மாவட்ட தலைமை இயக்கம்!!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் A.S.நாகராஜன் , விருதுநகர் மாவட்ட செயலாளர் சசிபாலன் மற்றும் அம்மாவட்ட செயல்வீரர்கள் இணைந்து இந்த மாபெரும் விழாவை, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் R.தங்கவேலு தலைமையில் மிக பிரம்மாண்டமாக  நடத்தினர் என்பதை விட நற்பணியில் விஸ்வரூபம் எடுத்தனர் என்றே கூறலாம்.

1. அன்னை சாரதா ஆசிரம  குழந்தைகளுக்கு காலை உணவு


2. மரக்கன்றுகள்  நடுதல்


3. இரண்டாம் ஆம்புலன்ஸ்



4. இரத்த தான முகாம்


5. CSI பள்ளி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு


6. மாணவர்களுக்கு இலவச நோட்டுகள்





7. இலவச தையற்பள்ளி

                                        சென்னைக்கு புறப்பட நேரம் ஆகிவிட்டதால் இந்நிகழ்ச்சியின் புகைப்படத்தை என்னால் எடுக்க முடியவில்லை. இந்த புகைப்படத்தை அவர்கள் எனக்கு அனுப்பியவுடன் இங்கே அப்டேட் செய்கிறேன்.






2012 ஆம் வருட விருதுநகர் மாவட்டத்தின் நற்பணி விழாவை காண கிளிக் செய்க...