Ads 468x60px

Friday, January 30, 2015

லிங்கா 50 வது நாள் மோசடி

லிங்கா 50 வது நாளாம்... ஆனா அவர்கள் குறிப்பிட்டிருக்கும் எந்த தியேட்டரிலும் ஒரு காட்சி கூட கிடையாது. ஏண்டா உங்களுக்கு வெட்கமே இல்லையா?

படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள், இரண்டாவது காட்சியிலேயே படம் படுத்து விட்டது என்ற உண்மையை, மக்களிடம் ஆதாரத்துடன் தைரியமாக மீடியா முன்னே கூறிய பின்னும், எதுக்கு இன்னும் படத்தை ஓட்டுறாங்க???


அடுத்த தலைமுறையினரிடம் லிங்கா 50 நாளுக்கு மேலே சென்னையில் 3 தியேட்டர்களில் ஓடிச்சி என்று எப்படி ஏமாற்றுவது? இப்ப ஒரு விளம்பரம் கொடுத்தா தானே அதை அடுத்த தலைமுறையினரிடம் காட்ட முடியும்.


டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் காலத்திலேயே, இரண்டாவது காட்சியிலேயே படுத்த படத்தை, 50 வது நாள் வரை, தியேட்டரில் ஒரு காட்சி இல்லாமலே, வால்போஸ்டர், பேப்பர் விள்மபரம் என்று இப்படி ஏமாற்றுகிறார்களே....டெக்னாலாஜி வளராத 1980 களில் எப்படியெல்லாம் ரஜினி படத்தை ஓட்டி ஏமாற்றியிருப்பார்களோ ???

Thursday, January 29, 2015

இந்தியன் Vs முத்து - சென்னை வசூல்

சென்னையில் ரஜினியின் முத்து (1995) மொத்தமாக ரூ 1.28 கோடி வசூல் செய்திருக்கிறது.

6 மாதங்கள் கழித்து 1996 மே மாதம் வெளியாகிய, உலகநாயகனின் இந்தியன் மொத்தமாக  சென்னையில்  ரூ 2.05 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

உலகநாயகன் கமர்சியலில் இறங்கினால் இந்தியாவில் எவனும் இவருக்கு போட்டி இல்லை என்பதை பல தடவை நிரூபித்திருக்கிறார், அதில் "இந்தியன்" சாதனை ஒன்று!!!

இரண்டு படங்களும் சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் வெளியாகியிருக்கிறது,

இந்தியன் வசூல் (உதயம்) = 42.49 லட்சம் 

முத்து வசூல் (உதயம் +சூரியன்) =  31.59 லட்சம்

அதன் வித்தியாசத்தை பார்த்தாலே பாமரனுக்கும் புரியும், யார் யாருக்கு பின்னே என்று, மீடியாக்காரர்களுக்கு மட்டும் ஏன் புரிவதில்லை?


அன்றே, மீடியாக்கள் தாங்கி பிடிக்கும் ரஜினியின் படங்களை விட, உலகநாயகன் படங்கள் பல லட்சங்கள் வித்தியாசத்தில் ஒவ்வொரு ஊரிலும் முன்னே இருந்திருக்கின்றன என்றால், மக்களின் ரசனைகள் மாறிய இந்த காலகட்டத்தில், கண்டிப்பாக பல கோடிகள் வித்தியாசத்தில் உலகநாயகனே மற்றவர்களை விட முன்னே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

முத்து படத்தின் சென்னை வசூல், உலகநாயகனின் இந்தியன் வசூலை விட எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதை இவ்வுலகிற்க்கு காட்ட உதவிய ரஜினிபேன்ஸ் வெப்சைட்டிற்கு நன்றி.

Kamal Haasan's INDIAN, released 6 months after rajinikanth's muthu, has collected 75+ Lakh more than that in CHENNAI city theaters alone. INDIAN has collected 2.05 Cr, but muthu has collected 1.28 Cr only. 

When the real collection of Kamal Haasan's film is far ahead than rajinikanth's film why the media is deliberately creating hype for rajinikanth?

Wednesday, January 28, 2015

இந்தியன் Vs பாட்ஷா - கோயம்புத்தூர் வசூல்

ரஜினியின் பாட்ஷா 1995-ல் கோயம்புத்தூர்  K.G.காம்ப்ளக்ஸில் முக்கி முக்கி 368 நாட்கள் ஓட்டப்பட்டு 36..62 லட்சங்களே வசூலித்திருக்கிறது.

ஆனால் அதே K.G.காம்ப்ளக்ஸில் ராகம் தியேட்டரில், 1996-ல் வெளியான உலகநாயகனின் இந்தியன் 109 நாட்களிலேயே 45.93 லட்சங்கள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது!!!


மீடியாக்களால் மறைக்கப்பட்ட மற்றுமொரு கமல்ஹாசனின் வசூல் சாதனை இது!!! வசூலிலும் என்றும் உலகநாயகனே முதலிடம் என்பதற்கு இதுவே சாட்சி!!!

மற்ற நடிகர்களுக்கு "இந்தியனின்" வெற்றி கிடைத்திருந்தால், அந்தப் படத்தை 1000 நாட்களுக்கு மேல் ஓட்டியிருப்பார்கள், ஆனால் கமல்ஹாசனோ தன் படங்கள் 99 நாட்கள் மட்டுமே ஓடினாலும் அல்லது 500 நாட்களுக்கு மேல் ஓடினாலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார் என்பதற்கு "இந்தியனே" சாட்சி!!!

பாட்ஷாவின் கோவை வசூல் நிலவரத்தை வெளியிட்ட ரஜினிபேன்ஸ் வெப்சைட்டிற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் சார்பில் எனது நன்றிகள், ஏனென்றால் உங்களால் தான் இன்று "இந்தியனின் வசூல்" எவ்வளவு வலிமையானது என்று என்னால் இந்த மீடியாக்களுக்கு காட்ட முடிகிறது.

அப்படியே பாட்ஷாவின் சென்னை வசூல் நிலவரத்தையும் போடுங்க ரஜினி ரசிகர்களே.

Kamal Haasan's INDIAN released in 1996 has collected 45.93L within 109 days of Raagam theater (K.G.Complex), Coimbatore, but rajini's biggest hit as claimed by his fans, baasha in 1996 has collected only 36.62L from 368 days in same K.G.Complex,Coimbatore.

Tuesday, January 27, 2015

"தூங்காதே தம்பி தூங்காதே" ரி-ரிலீஸ்

உலகநாயகனின் "தூங்காதே தம்பி தூங்காதே" திரைப்படம்,
சென்னை ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரில்
( 23-ஜனவரி-2015 முதல் 29-ஜனவரி-2015வரை, மதியம் 2.30 மற்றும் மாலை 6.30 காட்சிகளாக ) திரையிடப்பட்டுள்ளது.

உலகநாயகனின் பக்தர்கள் சென்னை முழுவதிலிருந்து, 25-ஜனவரி மாலை 6.30 மணி காட்சிக்கு வந்து (குறிப்பு : இந்த காட்சி ஹவுஸ்புல் அன்று!!!), உலகநாயகனின் ரிரிலீஸ் படத்தை, உலகநாயகனின் புதிய படத்தின் முதல் நாள் முதல் காட்சி போல கொண்டாடினர்.

உலகநாயகனின் பக்தர்கள் தாங்கள் என்பதை, திரையில் உலகநாயகன் வரும் போதெல்லாம் சூடத்தை கைகளில் எரிய விட்டு ஆராதித்து நிரூபித்துக் கொண்டிருந்தனர்.


ஒரு பக்கம், மீடியாக்கள் தாங்கி பிடிக்கும் ரஜினியின் புதிய படத்தை, அவரின் ரசிகர்களே பார்க்க வரவில்லை என்ற உண்மையை லிங்கா விநியோகிஸ்தர்கள் வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கின்றனர். 

இன்னொரு பக்கம், உலகநாயகனின் ரிரிலீஸ் படத்திற்கே, இன்றும் ரசிகர்கள் திருவிழாவை கொண்டாடுவதை போல கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

வீடியோ : உலகநாயகனின் பக்தர்கள் கூட்டம்


 வீடியோ : திரையில் உலகநாயகனின் தோற்றம்


 வீடியோ : உலகநாயகனின் ஸ்டைலிஷ் நடை

  
வீடியோ : உலகநாயகனின் நடனம்


Sunday, January 25, 2015

வாழ்வே மாயம் சாதனைகள்

K.பாலாஜி தயாரித்து,
4 தியேட்டர்களில் வெள்ளிவிழா கொண்டாடி,
ஒரு தியேட்டரில் 200 நாட்கள் கொண்டாடிய ஒரே படம்
நம் உலகநாயகனின் "வாழ்வே மாயம்"!!!


Friday, January 16, 2015

மாநிலங்கள் தாண்டிய கமல் ரசிகர்கள்

பக்கத்து மாநிலங்களில் வெளியாகி, 2 வாரங்கள் கழித்து தமிழகத்தில் வெளியாகி, வசூல் சாதனைகள் புரிந்த ஒரே படம்....

தமிழகத்தில் தடைசெய்யப்பட்டு, கேரளா, ஆந்திரா & கர்நாடகா என பக்கத்து மாநிலங்களில் சென்று ரசிகர்கள் பார்த்த ஒரே படம...

உலகநாயகனின் விஸ்வரூபம் மட்டுமே!!!

ஆந்திராவின் சிறிய கிராமமான சத்யவேட்டின் சீனிவாசா தியேட்டருக்கு, சென்னையை சுற்றிலும் உள்ள உலகநாயகனின் ரசிகர்கள், திருவிழாவிற்கு செல்வதை போல கார், பைக் என கிளம்பி, அந்த தியேட்டருக்கு அதன் வாழ்நாளில் காணாத வசூலை காண வைத்தனர்.


லிங்கா படத்திற்கு தமிழகத்திலேயே ரஜினி ரசிகர்கள் வரவில்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களே வெளிச்சம் போட்டு காட்டினர். ஆனால் உலகநாயகனின் விஸ்வரூபத்திற்கு மாநிலங்கள் தாண்டி       ஆந்திரா-சத்யவேட்டின் சீனிவாசா தியேட்டரில் உலகநாயகன் ரசிகர்கள் காட்டிய மாஸ் இந்த வீடியோவில்....

Thursday, January 15, 2015

அன்பே சிவம் தினம் (15-ஜனவரி)

ஒரு தலைமுறையில், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற மற்ற நடிகர்களின் படங்களை, அடுத்த தலைமுறையினர் மறந்து விடுவார்கள்.

ஆனால் கமல்ஹாசன் மேற்பார்வையில் தயாரான படங்கள், பாக்ஸ் ஆபிஸில் சில நேரங்களில் வெற்றி பெற வில்லையென்றாலும், எல்லா தலைமுறையினராலும் என்றும் போற்றப்பட கூடியதாயிருக்கும்!!!

அப்படிப்பட்ட படங்களில் முதன்மையான "அன்பே சிவம்"  வெளியான நாள் இன்று (15-ஜனவரி)!!!




Wednesday, January 14, 2015

விருமாண்டி சாதனைகள்

பல தடைகளை தாண்டி 2004 பொங்கலுக்கு வெளியான

திரையுலக நிஜ சண்டியரின் "விருமாண்டி",

விமர்சகர்களின் பாராட்டுகளை மட்டுமல்ல, பாக்ஸ்-ஆபிஸிலும் "வசூலை அள்ளி, தென் கொரியாவில் நடந்த திரைப்பட விழாவில் "சிறந்த ஆசிய படம்" என்ற விருதையும் தட்டிச் சென்றது.


Monday, January 12, 2015

பம்மல் K.சம்பந்தம் சாதனைகள்

"சந்திரமுகி' பட பூஜையின் போது.... "யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும். ஆனால் குதிரை விழுந்தால் "டக்' என்று எழுந்து ஓடும். நான் யானை அல்ல; குதிரை" என்றார் ரஜினி.

பாபாவில் விழுந்து சந்திரமுகியில் ரஜினி எழுவதற்கு 4 ஆண்டுகள்  ஆச்சு.

ஆனால் உலகநாயகனுக்கோ, "ஆளவந்தானுக்கு" பின் "பம்மல் K.சம்பந்தம்" வெளிவர 3 மாதங்கள் மட்டுமே ஆனது.

விரைவாக எழுவதில் யார் குதிரை என்பதை இனி நான் சொல்ல வேண்டியதில்லை!!!

அப்படி எழுந்த உலகநாயகனின் "பம்மல் K.சம்பந்தம்" சாதனைகள் இதோ!!!


Sunday, January 11, 2015

மகாநதி சாதனைகள்

1994-லேயே "சீட்டு மோசடி" & "பெண் குழந்தைகள் கடத்தல்" பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கிய திரைக்காவியம்
நம் உலகநாயகனின் மகாநதி!!!!

ஆனால் மக்களோ இன்றும் "சீட்டு மோசடி முதல் சமீபத்திய 'பினிஷிங் குமாரின் கிளைமேக்ஸ் பாராசூட் பைட்' திரைப்பட விநியோக மோசடி வரை" தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இழந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

மகாநதியின் பாக்ஸ்-ஆபிஸ் சாதனைகள் இதோ...


Ulaga Nayagan's MAHANADHI had created awareness on "CHIT FUND SCAM" & "Child Trafficking" on 1994 itself, but people failed to grab it and lost their hard-earned money in "CHIT FUND SCAM" after 1994 many times through out India.

Saturday, January 10, 2015

"தீ"யை திருஷ்டி கழித்த "மீண்டும் கோகிலா"

1981 ஜனவரியில் ரஜினியின் "தீ"யை (26-ஜனவரி) 

திருஷ்டி கழித்தது

உலகநாயகனின் "மீண்டும் கோகிலா" (14-ஜனவரி)!!!

Ulaga Nayagan's "Meendum Kokila" defeated rajinikanth's "thee" on 1981 January.



Friday, January 9, 2015

உலகநாயகனின் முதல் இரட்டை வேடம்

14-ஜனவரி-1962  பொங்கலுக்கு வெளியானது,
உலகநாயகன் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த
"பார்த்தால் பசி தீரும்".

Ulaga Nayagan Kamal Haasan's First Dual Role film "Paarthaal Pasi Theerum" released on 1962 Pongal!!!

குப்பத்து ராஜாவை கும்மிய "நீயா"

1979 பொங்கல் போட்டிக்கு வந்த
ரஜினியின் குப்பத்து ராஜாவை (12-ஜனவரி) குனிய வைத்து கும்மியது உலகநாயகனின் "நீயா?" (13-ஜனவரி)!!!

Ulaga Nayagan's NEEYA (13-Jan-1979) thrashed rajinikanth's kuppathu raja (12-jan-1979) during 1979 PONGAL.

Wednesday, January 7, 2015

"கலைஞானி + இசைஞானி" கூட்டணியின் சாதனை

படம் வெளியாவதற்கு முன்,

ஒரு லட்சத்திற்கும் மேலாக ஆடியோ கேசட் விற்பனையானால், அந்த ஆல்பத்திற்கு "தங்கத் தட்டு சான்றிதழ்" அளிக்கப்படும்,

இரண்டு லட்சத்திற்கும் மேலாக ஆடியோ கேசட் விற்பனையானால், அந்த ஆல்பத்திற்கு "ப்ளாட்டினத் தட்டு சான்றிதழ்" அளிக்கப்படும் அன்று!!!

அந்தச் சாதனை அதிகம் புரிந்தது,

தமிழில் "கலைஞானி + இசைஞானி" கூட்டணியே!!!

1. 16 வயதினிலே
2.சகலகலா வல்லவன்
3. காக்கி சட்டை
4. புன்னகை மன்னன்

5. விக்ரம்
6. நாயகன்
7. அபூர்வ சகோதரர்கள் (ப்ளாட்டினம்)
8. வெற்றி விழா (ப்ளாட்டினம்)

மேலும் இந்த கூட்டணியே, புன்னகை மன்னன் படத்தின் மூலமாக, இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியது.