கமல்ஹாசன் எதை செய்தாலும் தானும் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை செய்து ஆப்பு வாங்குவது ரஜினிக்கு பழக்கமாகி விட்டது.
அன்று,
கமல்ஹாசனின் தேவர்மகன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு காரணம் "வேட்டி" கெட்டப் தான் என்று நினைத்து, ரஜினி 'எஜமான்' என்று ஒரு மகா தோல்விப்படம் வெளியிட்டார்.
நேற்று,
தசாவதாரத்தில் உலகநாயகன் பத்து வேடங்களில் நடித்துவிட்டாரே என்று பொறுக்க முடியாமல், குசேலனில் ஒரு பாடலில் பல விக்குகளை போட்டு தானும் நடித்து விட்டேன் என்று விளம்பரம் செய்து ஆப்பு வாங்கி கொண்டார்.
இன்று,
கமல்ஹாசன் கலர்புல்லாக உத்தமவில்லனில் கலக்குறாரே என்று பொறாமை கொண்டு, அவர் கர்நாடாகாவில் தான் படத்தை தொடங்கினார் என்பதற்காக, ரஜினி தன் புதிய படத்தையும் கர்நாடாகாவில் பூஜை போட்டார்.
ஆனால் கமல்ஹாசனை வரவேற்ற கர்நாடாகா, ரஜினியின் உருவ பொம்மையை எரித்து அவரை விரட்டுகிறது.
இந்த தளம் http://www.ta.newstig.com/?p=21559 உருவ எரிப்பு ரஜினியே நடத்தும் நாடகம் என்கிறது.
இது கூட, கமலின் விஸ்வரூபத்திற்கு கிடைத்த விஸ்வரூப வெற்றிக்கு காரணம் ரிலீஸ் சமயத்தில் நடந்த எதிர்ப்பு என்று நினைத்து, ரஜினி தன் புதிய படத்திற்கு தானே எதிர்ப்பை கிளப்பி அசிங்கப்பட்டு நிற்கிறார்.
0 comments:
Post a Comment