Ads 468x60px

Wednesday, October 1, 2008

கிணற்று தவளைகளாம் ரஜினி ரசிகர்களுக்கு....

தியேட்டரை பகல்காட்சிக்கு வாடகைக்கு எடுத்து, படத்தை 100 நாட்கள் தேய்ப்பவர்களுக்கு....

ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களிடம் குறை கண்டுபிடிப்பது உலகநாயகன் கமல்ஹாசர் ரசிகர்களின் நோக்கமல்ல. கமல்ஹாசர் பற்றிய உண்மைகளை திரித்தும், ரஜினி பற்றிய உண்மைகளை மறைத்தும் கூறும் அவர்களை தெளிவடைய செய்யும் ஒரு சிறிய முயற்சி...

ரஜினி ரசிகர்கள் சொல்கிறார்கள், 100 நாள் கொண்டாட்டங்கள் அவர்களுக்கு அடிக்கடி வருபவையாம். ரஜினி படமே 3 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. அப்படி வந்த சிவாஜி-தி லாஸ், 3 வினியோகிஸ்தர்களின் கைகளை கடித்தது ( இவர்கள் ஆரம்பித்த வழக்கு இன்றும் நிலுவையில் இருப்பது கிணற்று தவளைகளாம் ரஜினி ரசிகர்களுக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ), கடைசியாக வந்த குசேலனோ மொத்த வினியோகிஸ்தர்களையும் கடித்து கொதறியது மட்டுமல்லாமல் தியேட்டர் அதிபர்களையும் விட்டு வைக்கவில்லை.

தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தன் படம் பெங்களூரில் ஓட வேண்டும் என்பதற்காக, ஆந்திரா சென்று கர்நாடக மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக மன்னிப்பு கேட்டவர் அல்ல எங்கள் உலகநாயகன்...

தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக, படம் வெளிவரும் ஒரு வாரம் முன்பாக தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்து கொள்பவர் அல்ல எங்கள் உலகநாயகன்...

தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக, அரசியலுக்கு வருவேன் ( அப்படி சொன்னால் தானே பேனர்கள் மற்றும் போஸ்டர்களுடன் ரசிகர்கள் ஓடி வருவார்கள் ) என்று பூச்சாண்டி காட்டுபவர் அல்ல எங்கள் உலகநாயகன்...

இப்படியெல்லாம் செய்தும் உங்கள் படம் ஓடுமா? பால அபிராமியில் பகல் காட்சியாக 100 நாட்கள் தேய்ப்பீர்கள்.

தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்காமல் இமயமலைக்கு போய் ( கேட்டால், ஆன்மீக தேடுதல் என்பார், ஆனால் குமுதம் நிருபரும் கூட செல்வார், அதே வாரத்தில் கவர் ஸ்டோரியாக வெளியிடுவதற்கு ) ஒளிந்து கொள்பவர் அல்ல எங்கள் உலகநாயகன்...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவர்களின் ஏமாற்று வித்தைகளை...சுருங்க சொல்லவேண்டும் என்பதற்காக விஷயத்திற்கு வருகிறேன்.

வெற்றிப்படம் என்றால் 175 நாட்கள் ஒடவேண்டும் எனும் கற்காலத்திலேயே இருக்கும் கிணற்று தவளைகளே ரஜினி ரசிகர்கள். தசாவதாரம், முதல் 10 நாட்களிலேயே 100 கோடிகளை வசூலித்துவிட்டது என்று தயாரிப்பாளரே THE ECONOMIC TIMES பத்திரிக்கையில் பேட்டி அளித்துவிட்டார் ( சிவாஜி-தி லாஸ் தயாரிப்பாளரோ, குறைந்தபட்சம் 50 கோடிகள் மொத்தமாக வசூலித்தது என்று கூட இன்று வரை வாய் திறக்கவில்லை ), தசாவதாரத்தின் பட்ஜெட்டோ 60 கோடிகள் தான். 50 நாட்களிலேயே 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது தசாவதாரம் என்கிறது கோலிவுட் வட்டாரம். செலவு செய்ததை விட, தசாவதாரம் பன்மடங்கு வசூலித்த பிறகு, படம் 100 நாட்கள் ஓடினால் என்ன அல்லது ஓடவிட்டால்தான் என்ன?

அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம், வேட்டையாடு விளையாடு ( சென்னை சிட்டியில் மட்டும் 13 திரையரங்குகள் ) என்பது ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவர்கள் தான் கிணற்று தவளைகள் ஆயிற்றே!!!


வெளிநாட்டு வியாபாரத்தை (USA, கனடா, வளைகுடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, & ரஷ்யா ) இவர்களுக்கு அறிமுகம் செய்ததே கமல்ஹாசரின் நாயகன்,அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் & தேவர்மகன் தான். சிங்கப்பூர், மலேசியா & இலங்கையில், MGR & கணேசன் படங்களில் இருந்தே ஆரம்பித்து விட்டன.(பாவம் ரஜினி ரசிகர்கள், உள்ளூரில் நடப்பதை பற்றியே அவர்களுக்கு தெளிவாகத் தெரியாது, வெளிநாடுகளில் நடப்பதை எப்படி தெரிந்து வைத்திருப்பார்கள்? )


இரண்டு மாதங்களில், வெளிநாடுகளில் மட்டும் சிவாஜி-தி லாஸ் வசூலித்தது $5,871,620 ( Rs. 24,66,08,040), ஆனால் தசாவதாரம் வசூலித்ததோ $16,227,750 ( Rs. 68,15,65,500). தசாவதாரம், சிவாஜி-தி லாஸை விட, ரூபாய் 43 கோடிகள் வெளிநாடுகளில் மட்டும் அதிகமாக வசூலித்துள்ளது. ( Source : www.boxofficemojo.com ). கணக்கு மட்டுமாவது ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்திருந்தால், மேலே சொன்ன புள்ளிவிவரப்படி, தசாவதாரத்தின் இமாலய வெற்றியை மர்மயோகி தான் முறியடிக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.


இந்த கட்டுரையை படித்த பிறகும், 175 நாட்களுக்கு மேல் ஓடினால் தான் என்றால், உலகநாயகனின் சில சாதனைகள் இதோ...

* உலகிலேயே 35-க்கும் மேற்ப்பட்ட வெள்ளிவிழா திரைப்படங்களை ( 6 மொழிகளில் ) கொடுத்தவர் எங்கள் உலகநாயகன் ஒருவரே!!!

* ஒரே வருடத்தில் (1982) 5 வெள்ளிவிழா திரைப்படங்களை வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன் , Sanam Teri Kasam (Hindi), Yeh To Kamaal Ho Gaya (Hindi) ) கொடுத்தவர் எங்கள் உலகநாயகன் ஒருவரே!!!

* உலகநாயகனின் மரோசரித்ரா (தெலுங்கு), பெங்களூரூ கவிதா திரையரங்கில் 1000 நாடகளுக்கு மேல் ஒடியது, மைசூர் காயத்ரி திரையரங்கில் 75 வாரங்களுக்கு மேல் ஒடியது, சென்னை சபையர் திரையரங்கில் 600 நாடகளுக்கு மேல் ஒடியது

உண்மையாக அதிக நாட்கள் ஓடிய படங்கள், உண்மையாக அதிக வசூல் செய்த படங்கள், இரண்டிலும் உண்மையாக முதன்மையாக இருப்பது உலகநாயகன் ஒருவரே!!!!!

- சண்டியர் கரன்

1 comments: