பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள் ஆம் அவர்கள் இப்போது நம்
மக்கள் நீதி மய்யத்தின் கண்கள் கூட. அதன் குறியீடாகத் தான்
இரு பெண்களை மய்யத்தின் உயர் மட்ட குழுவில் நம்மவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்
என கருதுகிறேன்.
நேற்று வரை அங்கொன்று இங்கொன்றுமாக அரங்கேறிய அரசியல் பெண் அதிசயங்கள்
இனி காட்டுத்தீ போல பரவ நம்மவரின் தொலைநோக்கு பார்வை கொண்ட
மக்கள் நீதி மய்யம் வழி செய்யும்.
அதன் அடையாளமாக தான் அரசியல் கட்சியாக "உலக மகளிர் தினத்தை"
நம் மக்கள் நீதி மய்யம், சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் மார்ச்
8 மாலை 5 மணிக்கு கொண்டாடுகிறது.
குடும்பமாக கோவில் செல்வார்கள் ஆனால் குடும்பம் குடும்பமாக மக்கள்
நீதி மய்ய கட்சியில் இணைகிறார்கள் ( நேற்று அதுவும் ஞாயிற்றுகிழமை
அன்று ஆழ்வார்பேட்டை உறுப்பினர் சேர்க்கை மையத்தில் நான் கண்டது
), அதன் மூல காரணம் பெண்களே! தமிழகத்தில் அடுத்த அரசியல் புரட்சியை
ஏற்படுத்து போவது இந்த பெண்களே!!! அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள்
நம்மவரை மக்கள் தலைவன் ஆக்கியே தீருவது என்று. கள யதார்த்தத்தை
நேரில் கண்டதால் தான் இதை சொல்கிறேன் வெறும் புகழ்ச்சிக்காக இல்லை.
உங்களை போன்ற அரசியல் மாற்றம் வேண்டும் என்ற மற்ற பெண்களை
நம்மவர் கமல்ஹாசன் முன்னிலையில் சந்திக்க வேண்டுமா? பெண்களின் முன்னேற்றத்திற்கு
நம்மவரின் திட்டங்கள் என்னவென்று நேரடியாக அறியவேண்டுமா??? வாருங்கள் சென்னை
ராயப்பேட்டை YMCA மைதானம் மார்ச் 8 மாலை 5 மணிக்கு...