Ads 468x60px

Sunday, March 29, 2015

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் - முதல் தமிழ் படம்

உலகநாயகனின் அபூர்வ சகோதரர்களே, பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்!!!

தியேட்டர்களிலிருந்து 10 நாட்களில் தூக்கப்பட்டு, 100 வது நாள் விழா கொண்டாட, படம் வெளிவந்து 100 வது நாளில் ஒரு காட்சி திரையிட்டு, விழா கொண்டாடி மக்களை ஏமாற்றும் கூட்டத்தை பார்க்கும் போது....

உலகநாயகனே...
நீ தொடாத உச்சம் உண்டோ?
சாதனைகள் மிச்சம் உண்டோ?


Tuesday, March 24, 2015

கர்நாடகாவில் 4 மொழிகளில் 200+ நாட்கள் கொண்டாடிய தமிழன்

கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில், பல முறைகள் 200+ நாட்கள் கொண்டாடிய ஒரே நாயகன் நம் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே!!!

ஆனால் ரஜினிக்கோ கர்நாடாகாவில் ஒரு வெள்ளி விழா படம் கூட இல்லை.

ஐயையோ இந்த உண்மையை சொல்லிட்டேனே....லிங்காவை சென்னையில் 100 வது நாள் மட்டும் ஒரு காட்சி திரையிட்டு "லிங்கா 100 வது நாள் விழா" கொண்டாடியது போல,  175 வது நாள் அன்று பெங்களூரில் ஒரு காட்சி திரையிட்டு, "பெங்களூரில் லிங்கா வெள்ளி விழா சாதனை" என்று கொண்டாடினாலும் கொண்டாடுவார்களே!!!



Friday, March 20, 2015

கமல் ரஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள்

கமல் ரஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள் எப்போதும் மீடியாவால் ரஜினி சார்பாகவே பார்க்கப்படும். எனவே அந்த மோதல்களை வெறும்  "குருதிப்புனல் Vs முத்து, மும்பை எக்ஸ்பிரஸ் Vs சந்திரமுகி" என முடித்து விடுவார்கள். மொத்த மோதல்களையும் அடுக்கினால், கமலிடம் மோதி ரஜினி அடைந்த பல படுதோல்விகளை பாமரனும் தெரிந்து கொள்ள நேரிடுமே.

இன்றைய சமூக வலைதள காலத்தில் பல உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கும் போது, கமல் ரஜினி படங்களின் அனைத்து மோதல்களின் உண்மை நிலவரமும் வெளிவரட்டுமே!!!

இந்த பட்டியல், இருவரும் ஹீரோவாக தமிழில் ஒரே நாள் அல்லது இரண்டு வார இடைவெளியில் வெளியாகி மோதியவை. இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட செய்யவும்.

ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ஆதாரம் இல்லாமல் இங்கே வந்து குரைக்க வேண்டாம்.


Tuesday, March 17, 2015

சத்யா மூவிஸ் ( கமல் vs ரஜினி )

சத்யா மூவிஸ் பேனரில் கமல்ஹாசன் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். உலகநாயகன் மட்டுமே அன்றிலிருந்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொண்டிருக்கிறார். வரவிருக்கும் உத்தம வில்லன் கூட இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினியோ எப்போதும் பெரிய நிறுவனங்களில் மட்டுமே நடிப்பார். ஏனென்றால் அவர்கள் தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள படங்களை 100 நாட்கள் ஓட்டுவார்கள் என்பதற்காக.

ஏவிஎம்-க்கு ஒரு சகலகலா வல்லவன் போல, சத்யா மூவிஸ்-க்கு ஒரு காக்கி சட்டை!!!

சத்யா மூவிஸ் தயாரித்த அனைத்து நடிகர்களின் படங்களிலேயே, சென்னையில் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை கடந்த படம் காக்கி சட்டை மட்டுமே!!!

சென்னை உதயம் தியேட்டரில் முதல் 100 நாட்கள் கொண்டாடிய படமும் உலகநாயகனின் காக்கி சட்டையே!!!

சென்னையில் 5 வாரங்களில் 450 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய சத்யா மூவிஸின் ஒரே படம் உலகநாயகனின் காக்கி சட்டை மட்டுமே!!!

இவ்வளவு சாதனைகள் புரிந்திருந்ததால், கமல்ஹாசனிடம் மீண்டும் பட வாய்ப்பு கேட்டது சத்யா மூவிஸ் (எம்ஜியாரின் சிபாரிசுடன்).  

அப்படி வெளிவந்த காதல் பரிசு கூட சென்னையில் 3 தியேட்டர்களிலும் (தேவி பாரடைஸ், அன்னை அபிராமி, உதயம்) 50+ நாட்கள், அகஸ்தியாவில் 7 வாரங்கள் ஓடியது மட்டுமல்லாமல், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹைதராபாத்தில் 100 நாட்கள் ஓடிய படம் ( தகவல் : பெங்களூரு ராமு )


ஆனால் சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினியின் எந்த படமும் சென்னையில் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாட்கள் ரெகுலரில் ஓடியது இல்லை. 1995ல் வந்த பாட்ஷா கூட ஆல்பட் தியேட்டரிலேயே பகல்காட்சியில் தான் 100 நாட்கள் தொட்டது. (இவர்கள் முதல்காட்சியிலேயே படுதோல்வி அடைந்த லிங்காவையே 100 வது நாளை நோக்கி தேய்க்கிறவங்க என்பதை ஞாபகம் வச்சிக்கோங்க....)

சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினியின் 6 படங்களில் 5 படங்களின் நிலைமை இது தான்....

1. உலகநாயகனின்  டிக் டிக் டிக்கிடம் மோதி தோல்வியடைந்த ராணுவ வீரன்,

2. உலகநாயகனின் சகலகலாவல்லவன் வந்து வசூல் புரட்சி படைத்துக்கொண்டிருந்த சமயத்தில் (ஒரு மாதம் கழித்து) வந்த மூன்று முகத்தின் நிலைமை நான் சொல்ல வேண்டியதில்லை,
 
3. உலகநாயகனின் தூங்காதே தம்பி தூங்காதேயிடம் மோதி தோல்வியடைந்த தங்க மகன், 

4. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாமலேயே தோல்வியடைந்த ஊர்காவலன்,

5. விஜயகாந்தின் புலன் விசாரணையிடம்  மோதி தோல்வியடைந்த பணக்காரன்,

6 வது படமான பாட்ஷா, ரஜினி ரசிகர்களின் பேராசைப்படி, சத்யா மூவிஸ்க்கு லாபத்தை அள்ளித்தந்திருந்தால் ரஜினியை வைத்து அவர்கள் ஏன் 7 வது படம் எடுக்க வில்லை????