Ads 468x60px

Monday, October 15, 2012

ரி-ரிலீஸ் சாதனைகள் - கமலும் எம்ஜியாரும்

பழைய படங்களை மறுவெளியீடு (RE-RELEASE)  செய்வது என்பது அன்றைய காலகட்டத்தில் இருந்தே நடந்து வருவது தான். சில நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படம் ரி-ரிலீஸ் ஆகலாம், அதில் ஒரு படம் கூட (கர்ணன்) ஒரு வாரம் ஓடலாம், ஆனால் மறு வெளியீடுகளில் தொடர்ந்து சாதனை (ஓரிரு வாரங்கள் தாண்டி)  படைத்து கொண்டிருப்பது எம்ஜியார், கமல்ஹாசனின் படங்கள் மட்டும் தான்.


உலகம் சுற்றும் வாலிபன்

அன்பே வா

அடிமைப்பெண்

எங்க வீட்டு பிள்ளை

ஆயிரத்தில் ஒருவன்

வேட்டையாடு விளையாடு

தேவர் மகன்

இந்தியன்

அவ்வை சண்முகி

நாயகன்

காக்கி சட்டை

தூங்காதே தம்பி தூங்காதே

சகலகலா வல்லவன்
          புன்னகை மன்னன்
சலங்கை ஒலி

ஏக் துஜே கே லியே

வாழ்வே மாயம்

சிகப்பு ரோஜாக்கள்

குரு

சவால்
போன்ற ரி-ரிலீஸ் படங்களின் போஸ்டர்களை சென்னையில் வடசென்னையிலும், தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் அதிகமாக பார்க்கலாம்.



எந்த கருத்தையும் ஆராய்ந்து, அதன் பின் ஏற்று கொள்பவர்கள் நீங்கள் என்றால் ரஜினியை உங்களால் ஸ்டாராகவே ஏற்று கொள்ள முடியாது. மீடியா கூறுவது போல் அவர் பெரிய ஸ்டார் என்றால், கமல், எம்ஜியார் படங்களை போன்று ரஜினி படமும் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் செய்ய வேண்டுமே. அவர் படங்களின் முதல் வெளியீடுகளே விநியோகிஸ்தர்கள்/தியேட்டர் உரிமையாளர்களை புலம்ப விடுகிறது, பின் எப்படி ரஜினியின் பழைய படங்கள் வசூல் செய்யும் என்று நம்பி அவர்கள் ரி-ரிலீஸ் செய்வார்கள்?

ஆனால் கமல்ஹாசனின் படங்களோ ரி-ரிலீஸிலும் கல்லா கட்டுகின்றன்.
கமல்ஹாசனின் இச்சாதனைகளும் மீடியாக்களால் மறைக்கப்பட்ட ஒன்று தான். அச்சாதனைகள் இனி உங்கள் பார்வைக்கு....

15 ஜூன் 2007 அன்று, சென்னை அகஸ்தியா தியேட்டரில் மறுவெளியீட்டில் திரையிடப்பட்ட வேட்டையாடு விளையாடு ஹவுஸ்புல்!!!  ஆனால் எதிரே மகாராணி தியேட்டரில் ரஜினியின் நியூ ரிலீஸ் சிவாஜி திணறிக் கொண்டிருந்தது...




முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஹவுஸ்புல் - 6 மணியளவில்


திரையரங்கம் ஹவுஸ்புல் - காட்சி தொடங்கும் முன்


கமல் பக்தர்களின் பால் அபிஷேகம்



கமல்ஹாசர் என்ட்ரி - பக்தர்கள் ஆரவாரம்


உலகநாயகனின் பல படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட போது 100 நாட்களை கூட கொண்டாடியிருக்கிறது, சிகப்பு ரோஜாக்கள், புன்னகை மன்னன், காக்கி சட்டை என....

இது மட்டுமல்ல, 1997ல் கமலின் டப்பிங் படம் சிப்பிக்குள் முத்து திருப்பூரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் வார வசூல் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல், படமும் நான்கு வாரங்கள் ஓடியது.



1992ல் கமலின் டப்பிங் படம் சலங்கை ஒலி சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. திரையிட்ட ஊர்களில் எல்லாம் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது.



1993ல் கமலின் அபூர்வ சகோதரர்கள் சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. சுபம் (சத்யம் காம்ப்ளக்ஸ்) தியேட்டரில் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது.



1991ல் கமலின் வறுமையின் நிறம் சிவப்பு கோவை யமுனா தியேட்டரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது. (கீழே உள்ள விளம்பரத்தில் விநியோகிஸ்தர்களால் கமலுக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை கவனிக்கவும்...)


பெங்களூர் பல்லவியில் 1986-ல் சிகப்பு ரோஜாக்கள் 35 நாட்கள் ஓடியுள்ளது.

2012 இந்த அக்டோபர் மாதம் தூத்துகுடி சத்யா தியேட்டரில் கமலின் இந்தியன், அவ்வை சண்முகி ரிலீஸ் செய்யப்பட்டது




ரி-ரிலீஸ் என்றாலே கமலும் எம்ஜியாருமே போட்டியில் இருக்கிறார்கள் அன்றும்... இன்றும்... என்றும்!!!

18 comments:

  1. boss,rajiniku bashavum re releasela nala pochu!

    ReplyDelete
  2. ரீ-ரிலீஸ் காமெடிகள் - ரஜினி மட்டுமே!

    http://tamil.oneindia.in/movies/news/2012/10/mgr-rajini-movies-rock-chennai-theater-163190.html

    இந்த செய்தி தட்ஸ்தமிழில் இன்று தான் வந்தது! ரஜினியின் ரீ-ரிலீஸ் படங்கள் புதுப்படங்களின் வசூலை மிஞ்சிவிட்டதாம்! சரிடா ரஜினியின் என்ன படம் எந்த புதுப்படத்தை மிஞ்சிவிட்டது என நாலைந்து கமென்ட் போட்டேன் அதை பிரசுரமே செய்யவில்லை! இதிலிருந்தே தெரியுது இது ஒரு 'கவர்' செய்தி என!

    பொய்களை சொல்லி இப்படி பிழைப்பை ஓட்டுவதற்கு........

    ஹாஹாஹா!!!

    ReplyDelete
  3. பாஸ் பேப்பர் விளம்பரத்தை பெரிய ஆதாரமாக சொல்லுவீர்களே , கடந்த நான்கு நாட்களாக எங்கள் ஊர் தினசரிகளில் ஒரே திரையரங்கில் இரண்டு படங்கள் ஓடுவதை போல விளம்பரம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் (அருப்புகோட்டை இளையராணி , படங்கள் மாற்றான் மற்றும் தாண்டவம்)... இப்படிப்பட்ட விளம்பரம்களை எப்படி ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும்

    ReplyDelete
  4. ராஜா..
    நான் பேப்பரில் போடுவது எல்லாம் உண்மை என்று கூற வில்லை... நான் இங்கே கொடுத்திருக்கும் "சிப்பிக்குள் முத்து" விளம்பரத்தில் வசூல் நிலவரமும் உள்ளது. யார் படத்திற்கு இது போல் வசூல் கொடுத்திருக்கிறார்கள்? (அதுவும் ரிரிலீஸ் ) உண்மை பேசுபவர்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை....

    ReplyDelete
  5. //"ராஜா" said...

    பாஸ் பேப்பர் விளம்பரத்தை பெரிய ஆதாரமாக சொல்லுவீர்களே , கடந்த நான்கு நாட்களாக எங்கள் ஊர் தினசரிகளில் ஒரே திரையரங்கில் இரண்டு படங்கள் ஓடுவதை போல விளம்பரம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் (அருப்புகோட்டை இளையராணி , படங்கள் மாற்றான் மற்றும் தாண்டவம்)... இப்படிப்பட்ட விளம்பரம்களை எப்படி ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும்//

    அப்போது இந்த லாஜிக் மற்ற படங்களுக்கும்தான் பொருந்தும்! அப்படிப்பார்த்தால் ரஜினி பட விளம்பரங்களும் கப்சா தானே? பிறகு எந்த ஆதாரத்தை வைத்து தான் நீங்கள் அழைய படங்களை மதிப்பிடுவீர்கள்?!?

    ஆனால் அதற்கு முன்னால், முதலில் ரஜினி படங்களின் வெள்ளிவிழா விளம்பரங்களை காட்டுங்கள்! (இருக்கா?!? :))) )

    என்னைப்பொருத்தவரை இந்த கமல் விளம்பரங்கள் உன்மை என்றே கூறுவேன்!

    வாழ்வே மாயம் எல்லாம் அடிக்கடி ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடும். ஒருகாலத்தில் எங்களுக்கு எருந்த சொந்த தியேட்டரில் கூட இந்த படம் வெளியாகி சக்கைபோடு போட்டதை பார்த்திருக்கிறேன்! பின்னாளில் அதே தியேட்டரில் பாபா வந்து ஊத்தி மூடிக்கொண்டதும் நடந்தது!

    ReplyDelete
  6. karnan odavillai endru sonnathil irunthe therigirathu ungal nagaichuvai,kamal padangal first release e thathakki pithaki odugirathu ithi rerelease veru,ithull enga VAATHIYAR MGR avargalai serthu kogireergal,MGR & SHIVAJI avargal padangal eppoluthu vanthaalum maas,kamal padam eppo vanthalum loss,vr once more proof pannum

    ReplyDelete
  7. nallavelai UNNAI POL ORUVAN,HEY RAM ELLAM re rleaase la pattaya kilapuchu nu sollama viteengale,intha maathiri comedy pandrathulla kamal fans ku nigar kamal fans than

    ReplyDelete
  8. naankadavul...

    கர்ணன் ரிரிலீஸில் ஓடவில்லை என்றா போட்டிருக்கிறேன்? நல்லா பாருய்யா....

    தத்தக்கி பித்தக்கி ஓடுவது ரஜினி படம் தான்... அதனால் தான் ரிரிலீஸ் பண்ண மாட்டார்கள்...

    நான் லிஸ்டில் கொடுத்திருக்கும் கமல் படங்களை விட்டுவிட்டு மற்ற படங்களை பற்றி பேசுவதை பார்த்தால், ரஜினி படம் ஒன்று கூட ஓட வில்லையே என்று புலம்புவது போல் இருக்குது....

    ReplyDelete
  9. //அதில் ஒரு படம் கூட (கர்ணன்) ஒரு வாரம் ஓடலாம்//
    :)))))))
    சரியான காமெடி பீஸா இருப்பீங்க போல.

    ReplyDelete
  10. ஜோ..

    நீங்க முத்தின பீஸ் மட்டும் தான் என்று நினைத்திருந்தேன்... ஆனா நட்டும் கழன்டு போன பீஸ் என்றும் நிரூபித்து விட்டீர்கள்...

    கர்ணன் தவிர சிவாஜிக்கு ரிரிலீஸில் ஒரு வாரம் ஒடிய படம் இருக்கா?

    ReplyDelete
  11. //கர்ணன் தவிர சிவாஜிக்கு ரிரிலீஸில் ஒரு வாரம் ஒடிய படம் இருக்கா?//

    சூரியன் கிழக்குல தான் உதிக்குது என்பதற்கு ஆதாரம் இருக்கா-ன்னு கேட்கிற முட்டாள் கிட்ட விவாட்திக்க என்ன்ன இருக்கிறது :))))))))))))))))

    ReplyDelete
  12. //ஆனால் அதற்கு முன்னால், முதலில் ரஜினி படங்களின் வெள்ளிவிழா விளம்பரங்களை காட்டுங்கள்! (இருக்கா?!? :))) )

    முதலில் ஒன்றை சொல்லிகொள்கிறேன் ...பாஸ் நான் ரஜினி ரசிகன் கிடையாது ... கமலின் அதிதீவிரமான ரசிகன் ... எனக்கு ரஜினியை பிடிக்காமல் போனதுக்கு முதல் காரணமே அவரின் ரசிகர்கள் அளவுக்கு மீறி செய்த அளப்பரைகள்தான் ... இப்பொழுது சந்டியர்காரனும் அதே போல செய்வதை பார்த்தால்தான் பயமாக இருக்கிறது ... கமலின் புகழ் யார் நினைத்தாலும் மறைக்க முடியாதது ... குணா தளபதி வந்த பொழுது அன்றைய தலைமுறை தளபதியை தூக்கி வைத்து கொண்டாடியது , ஆனால் இன்று நிலைமையே வேறு ... தளபதியை மறந்து விட்டார்கள் ,,, குணா இன்னும் நான்கு தலைமுறை கடந்து நிற்கும் ... கமலே ஒரு பெட்டியில் சொல்லிவிட்டாரே நான் ஓடுவது நூறு மீட்டர் ஓட்டபந்தயம் இல்லை , மாரத்தான் ஓட்டம் என்று , அவர் இலக்கை நோக்கி சரியாகத்தான் ஓடிகொண்டிருக்கிறார் அனால் உங்களை போன்ற சில ரசிகர்கள்தான் தடுமாறி கொண்டிருக்கிறீர்கள் .. கமலுக்குள் MGRரை தேடுவது கமல் ரசிகனுக்கு பெருமையா ? அசிங்கமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  13. //சூரியன் கிழக்குல தான் உதிக்குது என்பதற்கு ஆதாரம் இருக்கா-ன்னு கேட்கிற முட்டாள் கிட்ட விவாட்திக்க என்ன்ன இருக்கிறது//

    சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டிருப்பதால் தான் அதை எல்லாரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்....

    ஆதாரம் இல்லையென்றால் கேள்வி கேட்பவர்களை முட்டாள் என்று கூறிவிட்டால் தான் நாம் எஸ்கேப் ஆக முடியும்.....

    ReplyDelete
  14. ராஜா...

    கமலிடம் இல்லாத திறமையை நான் புகழ்ந்திருந்தால் நீங்கள் கூறுவது போல நான் வெறும் அளப்பரை தான் செய்கிறேன் என்றாகும்....

    பல கமல் ரசிகர்களுக்கே தெரியாத கமலின் அரிய சாதனைகளின் ( அதிக நாட்கள், அதிக வசூல் ) பட்டியல் என்னிடம் இருக்கிறது... அதை ஒவ்வொன்றாக வெளியிட்டு கொண்டிருக்கிறேன்...இதை தொகுப்பத்றகு நாங்கள் (பாரடைஸ் யூனிட் கமல் ரசிகர்கள் ) எவ்வளவு மெனக்கட்டிருப்போம் என்று எங்களுக்கு தான் தெரியும்....

    கமலை பிடித்தவர்களுக்கு மற்ற நடிகர்கள் யாரையும் பிடிக்காது...( நான், நீங்கள் உட்பட).. அதற்காக அவரின் மறைக்கப்பட்ட பல சாதனைகளை இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டாமா?

    ReplyDelete
  15. //அவரின் மறைக்கப்பட்ட பல சாதனைகளை இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டாமா?

    கமலுக்கு அதில் அரவம் இல்லை என்பதால்தான் மறைக்கபட்டிருக்கும் என்று நினைக்கிறேன் ...

    சரி நண்பரே ... உங்கள் கமல் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ஜோ & சண்டியர் கரண்,
    சண்டை வேண்டாம் நண்பர்களே!

    -----------------------------------

    சண்டியரே, ஏதோ ஜோ நம் தலைவரின் அப்பா போன்ற நடிகர்திலகத்தின் ரசிகர் என்ற காரணத்தால் இதை சொல்லவில்லை! எப்படி கமல் பட வெற்றிகளை இந்த தலைமுறையில் ரஜினி ஜால்ரா மீடியாக்கள் மறைக்கின்றனவோ அதைவிட பலமடங்கு அநியாய இருட்டடிப்பு, சிவாஜி படங்களுக்கு எம்ஜிஆர் ஆதரவு கூட்டத்தால் செய்யப்பட்டது!

    உன்மையில் சிவாஜி ஒரு வசூல் மன்னன் என்பது மையத்தில் சிவாஜி திரியில் போடப்படும் போஸ்டர் கட்டிங்கை பார்த்தால் தெரியும். ஏன் போஸ்டரை பார்க்கச்சொல்கிறேன் என்றால், சிவாஜியின் பலப்பல படங்கள் வெற்றிகரமாக ஓடி ரீ-ரிலீஸிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தபோது நான் நீங்க எல்லாம் பால் குடிச்சிட்டு இருந்திருப்போம்!

    எனவே சிவாஜியின் கணக்கில்லா ரீ-ரிலீஸ் வெற்றியை மறுப்பது, கிட்டதட்ட கமலின் வர்த்தக வெற்றியை இடுட்டடிப்பது போன்ற விஷயம் தான். கமலின் ரசிகர்களான நானும் நீங்களும் அதை செய்யலாமா?!?

    நான் உங்களிடம் ஏற்கனவே சொன்னதுபோல், நீங்களும் உங்கள் சக நண்ப கமல் ரசிகர்களும் எவ்வளவு பேப்பர் கட்டிங் வைத்திருப்பீர்களோ அதைவிட மூன்று மடங்கு சிவாஜி பட போஸ்டர்களை ஏற்கனவே மையத்தில் திரு.பம்மலார் போஸ்ட் செய்திருக்கிறார்! சிவாஜிபடங்களின் வெற்றிக்கு ஆதாரமாக அவை படு ஸ்ட்ராங்காக இருக்கின்றன!

    ReplyDelete
  17. //கமலுக்குள் MGRரை தேடுவது கமல் ரசிகனுக்கு பெருமையா ? அசிங்கமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்//

    ராஜா அவர்களே, எம்.ஜி.ஆர் என்றால் அவ்வளவு கேவலம் எல்லாம் இல்லை! எம்ஜிஆர், பட தொழில்நுட்பம் உள்பட பல டிபார்ட்மென்ட்களில் ஆர்வம் காட்டுவார்.

    ஆனால் இங்கு சண்டியர் கமலை எம்ஜிஆருடன் தொடர்புபடுத்துவது வசூல் மற்றும் பாப்புலாரிட்டியில்.

    நீங்கள் ரஜினிரசிகரா என தெரியவில்லை. ஆனால் ரஜினி தொடர்பான ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறான். இஷ்டமிருந்தால் பதில் சொல்லுங்கள்!

    கிட்டதட்ட முத்து படையப்பா காலத்திலேயே ரஜினி, ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்குபவர் என்ற கப்சா மீடியாவில் பரவலாக பரப்பப்பட்டது. ஜாக்கிசானுக்கு அடுத்தபடியான சம்பளம் என்றால் இவர் படங்களுக்கான பட்ஜெட் ஜாக்கிசான் பட பட்ஜெட்டுக்கு அடுத்து அதிகமான ஒன்றாக இருக்கவேண்டும். ஜாக்கிசானுக்கு அடுத்து இவர் படங்கள்தான் ஆசியாவிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகி இருக்கவேண்டும்! எல்லாவற்றையும் விட, இவர் படம் ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடியான வசூலை பெற்றிருக்கவேண்டும்.

    மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றே ஒன்றாவது நடந்திருக்கிறதா!? அதற்கு ஆதாரம் இருக்கிறதா?!?

    ரஜினி ரசிகர்களும் அவர் ஆதரவு மீடியாவும் சரியான ஒரு கப்சா கூட்டம். இதுபோன்ற கேள்விகள் இருக்கிறது ஆனால் அவற்றில் ஒரே ஒரு கேள்விகேட்டாலே போதும், ஓடி விடுவார்கள்!!!

    ReplyDelete
  18. hi,
    FYI:
    in Coimbatore (KG cine complex)they used to celebrate "Kamal film festival" for 1 week . they choose 05 to 07 movies and show in all 03 theaters in the complex. we can buy the ticket for the day and can watch any movie & any show.
    i was in CBE 1997 - 1999. i am not sure still they are doing it?

    ReplyDelete