Ads 468x60px

Friday, January 25, 2013

விஸ்வரூபம் காண திக் திக் திருப்பதி பயணம்

விஸ்வரூபத்தை தமிழ்நாட்டில் தடை செய்தவர்களுக்கு நன்றி... தடைகளை தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் கமல், மாநிலங்கள் தாண்டி விஸ்வரூபத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்!!!

அப்படி மாநிலம் தாண்டிய கமல் ரசிகர்கள் குழுவில் ஒன்றான எங்கள் சென்னை குழு, நேற்று இரவு பைலட் தியேட்டரில் முடிவு செய்தது திருப்பதி அல்லது நெல்லூர் சென்று விஸ்வரூபம் பார்ப்பது என்று. ஆனால் இரவு 12 மணிக்கு தான் ஆந்திராவில் விஸ்வரூபம் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது என்று உறுதியானது. இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது என்று முடிவு செய்தோம், ஆனால் நாங்கள் ஆறு பேரும் போரூரை தொடுவதற்கே 6 மணி ஆகிவிட்டது.

திருப்பதியை எங்கள் இன்னோவா தொட்டபோது, எனக்கு சென்னையிலிருந்து அழைப்பு வந்தது, ஆந்திராவிலும் படத்தை தடை செய்துவிட்டார்கள் என்று, ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கடா என்றிருந்தது, சரி வந்தது வந்து விட்டோம் தியேட்டரையாவது பார்த்து விட்டு செல்வோம் என்று பஸ்நிலையம் அருகிலிருக்கும் ஜெயசியாம் தியேட்டருக்கு சென்றோம்.


ஆனால் பகல் காட்சிக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்கள், கும்பலில் அடித்து பிடித்து டிக்கெட்டுகளை வாங்கினோம், அதற்குள் நெல்லூரில் அரை மணி நேரத்திற்கு பின் படத்தை நிறுத்தி விட்ட செய்தி கிடைத்தது. வந்ததுக்கு ஓப்பனிங் பாடலை மட்டும் காட்டுங்கடா, அதை மட்டும் பார்த்துட்டு போறோம்டான்னு என்றிருந்தது எங்களுக்கு.

தியேட்டருக்குள் நுழையும் வரை படம் போடுவாங்களா மாட்டாங்களா, படத்தை ஆரம்பித்த பிறகு ஓப்பனிங் சாங் வரையாவது போடுவாங்களா மாட்டாங்களா என்று எண்ணிகொண்டு பார்த்து கொண்டிருந்தோம், "உனை காணாத" பாடல் முடிந்த பிறகு, ங்கோத்** இது போதும்டா சென்னையிலிருந்து வந்ததுக்கு என்றிருந்தது.

அதன்பின், படம் ஜெட் வேகத்தில் சென்றதில் படத்தை நிறுத்துவார்களா என்ற கவலையே மறந்தது. இது போன்று ஆக்ஷ்ன் + திரில்லிங் இந்திய சினிமாக்களில் இதற்கு முன் யாரும் செய்ததில்லை, அதற்கு "உலக இயக்குனர்" கமலுக்கு ராயல் சல்யூட்கள்!!!



உலக தமிழ் நாயகனின் உலக சினிமாவை தமிழ்நாட்டில் காண தமிழனுக்கு தடை, எனவே நாங்கள் கேள்வி மட்டும் பட்ட தெலுங்கு கமலின் மாஸை நேரில் காணமுடிந்தது. அதற்கு தமிழக அரசிற்கு நன்றி.





Monday, January 14, 2013

கமல் வழி மற்றவர்களுக்கும் லாபம் கொடுக்கும் வழி


குமுதம் 23 ஜனவரி 2013 இதழிலிருந்து




விஸ்வரூபம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட விட்டலாச்சார்யா படமாக இருக்கமுடியாது...

இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்த படங்களை குறிப்பிடுகிறார்களா?

சும்மா பஞ்ச் டயலாக் பேசி பாவ்லா காட்டும் பாடாவதி பார்முலா மசாலாவாகவும் இருக்க போவதில்லை...

யாரை சொல்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை....

யாரையும் கஷ்டப்படுத்தாமல், ஏமாற்றாமல் - ஏன் எம்.ஜி என்று தியேட்டர்காரர்களிடம் முன் பணம் கூட வாங்காமல்...

குசேலனை சாய்மீராவுக்கு அதிகவிலைக்கு ஏமாற்றி விற்றது, சுவாஜி படத்திற்கு விநியோகிஸ்தர்களின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் இருப்பது, போகோ படத்திற்கு தியேட்டர்காரர்களின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் இருப்பதை நேரடியாக சொல்லியிருக்கலாம்....

தனித்து நிற்பவர்களை தமிழ்மக்கள் என்றுமே தனிமைப்படுத்தியதில்லை என்பது தானே வரலாறு...

ஒரே வரியில் விஸ்வரூபத்தின் ரிசல்டை அரைவேக்காடுகளுக்கு புரியவைத்தற்கு நன்றி குமுதத்திற்கு....

மேலும், ஆர்குட் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சென்னையில் ஒட்டிய போஸ்டரை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சென்றதற்கு எங்கள் குழுவின் நன்றிகளும் பாராட்டுகளும் குமுதம் இதழுக்கு!!!!


Saturday, January 12, 2013

அடங்காதவர்களை அடக்கிய விஸ்வரூப கமல்



 ஜூனியர் விகடன் 16 ஜனவரி 2013 இதழிலிருந்து

எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின.

தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல். அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம் முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.

மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார். என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தோம்.

''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது.

சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால், 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார்.

'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.

இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.

கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.

இது போதுமா ???  இன்னும் விளக்க வேண்டுமா???

சட்டத்திற்கு புறம்பாக நடந்தவர்களை சட்டத்தினால் அடக்கிய கமல்ஹாசனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!!

இது வரை "தசாவதாரத்தின்" வசூல் முறியடிக்க படவில்லை என்பதை கோடிட்டு காட்டிய கேயார் அவர்களுக்கு நன்றி!!!

உண்மையை அரைவேக்காடுகளுக்கு உறைக்கும் படி விரிவாக எழுதிய ஜூனியர் விகடனுக்கு நன்றி!!!

Wednesday, January 9, 2013

விஸ்வரூபம் எப்போது?

விஸ்வரூபம் ரிலீஸை கமல்ஹாசன் தள்ளி வைத்திருக்கிறார். கமல் ரசிகர்கள் பலரின் வருத்தம், தொடர் 5 நாட்கள் விடுமுறையை தலைவர் தவறவிடுகிறாரே என்பது தான்...ஆனால் அவருக்கு அப்படி இல்லை, அவரின் படத்தின் மீதுள்ள அபார நம்பிக்கை, அவரை துணிந்து முடிவு எடுக்க வைக்கிறது. சாதாரண நாளில் வந்த தசாவதாரம் தான் இன்றும் தென்னிந்தியாவின் உச்ச வசூல், எனவே விஸ்வரூபத்தின் சாதனைகளை யாரலும் தடுக்க முடியாது.

இது பற்றி, தலைவரின் பதில்கள் இங்கே வீடியோவாக...


ஏர்டெல் தவிர மற்ற DTH-ல், புக்கிங் செய்ய போதிய கால அவகாசம் இல்லை என்பது முதல் காரணம் ( மற்றவர்கள் இந்த வாரம் தான் தொடங்கியிருக்கிறார்கள்), இந்தியா முழுவதும் ஒரே தேதியில் வெளியிட வேண்டும் என்பது இரண்டாவது காரணம். இந்த இரு காரணங்களினால் தான் படம் கமல்ஹாசனால் தள்ளி வைக்க பட்டிருக்கிறது.



கமலின் எதிரிகள் எவ்வளவு பெரிய கூட்டம் என்பது விஸ்வரூபத்தை தள்ளி வைத்த பிறகு தான் தெரிகிறது. அந்த கூட்டம் தான் கமல் அவ்வளவு நேர்மையானவர் என்பதை காட்டுகிறது.


ஒருவேளை பல்டி நடிகரின் ரசிகர்கள் அல்லது அவர்கள் நடத்தும் 1இந்யா சொல்வது போல விஸ்வரூபத்திற்கு 44 தியேட்டர்கள் தான் கிடைத்திருந்தால், கமல் தான் தியேட்டர் சங்கத்திற்கு சென்று பேச்சுவார்தை நடத்தியிருப்பார் ( பல்டி நடிகர் போகோ படத்திற்கு தயாரிப்பாளரை தேடி சென்று கெஞ்சியது போல), தியேட்டர் சங்கத்தினர்கள் கமல் அலுவலகம் வந்திருக்க மாட்டார்கள்.

இந்த கருப்பு முதலைகள் அணியின் எண்ணம் என்னவென்றால், கமல் பல நூறு கோடிகள் சம்பாதித்து சரியாக வரி கட்டி விட்டு சென்று விடுவார், தன் அடுத்த படங்களை கமலின் விஸ்வரூபத்தை முறியடித்து விட்டது என்று மீடியாவில் பரப்பி விட்டால், அதை பார்த்து விட்டு, அரசாங்கம் கமல் கட்டியதை விட அதிக வரியை கேட்கும் (வரியை குறைக்கவில்லை என்றால் கருப்பு பணம் அதிகரிக்கும் என்ற மிரட்டல் வேறு) , அதற்காக தான் பல புரளிகள், மிரட்டல்கள் என்று விஸ்வரூபத்திற்கே படம் காட்டுகிறார்கள்.

அவற்றையெல்லாம் முறியடித்து இன்னும் ஓரிரு வாரங்களில் உலகநாயகன் விஸ்வரூபமாய் கலக்க வருகிறார்.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், விஸ்வரூபத்தின் வசூல் சாதனைகள் இந்திய படங்களின் உச்சமாக (நேர்மையாக) இருக்கும், அதன் விபரங்களை கமலே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்.

Sunday, January 6, 2013

கமலும்.....ஹாசனும்.....

கமலும் சர்ச்சைகளும் கூடவே பிறந்தது. கமல் பார்க்காத சர்ச்சைகள் கிடையாது. அதில் ஒன்று கமல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று. முதலாவதாக கமலின் பாதி பெயர் முஸ்லிம் பெயர். கமல் ஒரு முறை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் ஹாசன் என்ற பெயர் காரணமாக தடுத்து நிறுத்தப் பட்டார். அவர் நினைத்திருந்தால் தன் பெயரை கடவு புத்தகத்திலாவது மாற்றி இருக்கலாம். இல்லை இன்றும் அவர் கமல் ஹாசன் தான்.

கமலின் முஸ்லிம் ஆதரவு அவரின் படங்களில் இருந்து இங்கே.



1. குருதி புனல்

இதில் வரும் ஆதி (கமல்) அப்பாஸ் (அர்ஜுன்) கதாபாத்திரங்களில் அப்பாஸ் என்ற முஸ்லிம் கதாபாத்திரம் தான் கடைசிவரை நல்லவனாகவே இருந்து இறப்பார். கதையின் நாயகன் ஆதி கூட குடும்பத்திற்காக தீவிரவாதிக்கு உதவ சம்மதித்து பின் திருந்துவது போல் காட்டியிருப்பார்.

2. அவ்வை சண்முகி

இதில் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக பாட்ஷா (நாசர் ) என்ற முஸ்லிம் தான் வருவார். அவனாவது வயித்து பொழப்புக்கு மாடு வெட்டுறான் ஆனா நிங்க அதோட தோல எடுத்து ஏற்றுமதி பண்ணுரிங்க. அவன் வெட்டுற மாட்ட விட நிங்க வெட்டுற மாடுதான் அதிகம் என்று ஒரு அய்யர் கதாபாத்திரத்தை பார்த்து பாண்டி (கமல்) பேசுவது போல் அமைத்து அந்த அய்யர்(ஜெமினி) திருந்துவது போல் காட்சி அமைத்திருப்பார்.

3. ஹே ராம்

இதில் இரு முக்கிய முஸ்லிம் கதாபாத்திரங்கள் (காவல் துறை அதிகாரி - நாசர் , மருத்துவர் - அப்பாஸ் ) கலவரத்தில் சாகேத் ராம் (கமல்) காப்பாற்றுவது போல் காட்டியிருப்பார். பிரிவினை வாத கலவரத்தில் மனைவியை இழந்த ராம் தீவிரா வாதியாக மாறுவார் பின் திருந்துவார். ஆனால் அஜ்மத் (ஷாருஹான்) என்ற முஸ்லிம் கடைசி வரை நல்லவனாகவே இருப்பார் மற்றும் ராம் திருந்துவதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.

4. தசாவதாரம்

இதில் வரும் பத்து பாத்திரத்தில் கலிபுல்லா என்ற முஸ்லிம் மிக நல்லவராக எல்லாருக்கும் உதவுவராக காட்டியிருப்பார்.

5. உன்னை போல் ஒருவன்

இதில் வரும் காவல் துறை அதிகாரியாக ஆரிப்கான் நல்லவராகவே வருவார். இன்னும் சொன்னால் comman-man ஒரு முஸ்லிம் போல் தான் சித்தரித்திருப்பார்.

கடைசியாக விஸ்வரூபத்திற்கு வருவோம்

முன்னோட்ட காட்சியில் இருந்து

1. சமாதான புறா மசூதியின் மேல் இருப்பது போல் வருகிறது. முஸ்லிம் சமாதானத்தை உயர்த்தி பிடிப்பது போல் வருகிறது.
2. அதே சமாதான புறா wall street - ன் எருதின் காலடியில் (stock exchange) இருப்பது போல் வருகிறது. அமெரிக்கா உலக சமாதானத்தை அதன் பொருளாதரத்தின் காலடியில் தான் வைத்திருகிறது என்பதுபோல் வருகிறது.
3. பாடலில் டாலர் உலகில் சமதர்மம் கிடையாது என்று வருகிறது.

so, கமல் ஒருவர் சார்ந்து எடுத்திருக்க மாட்டார். நிச்சயம் முஸ்லிம்களை சாடி எடுத்திருக்க மாட்டார் !!! 

-Muniyandi Perumal

Thursday, January 3, 2013

கமல்: பெங்களூர் திரையரங்க சாதனைகள்

எத்தனையோ தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டிருந்தாலும், சுதந்திர வரலாற்றில் அவர்களின் வீரம் மறைக்கப்பட்டதைப் போல, கமல்ஹாசன் என்ற தமிழன் கலையுலகில் சாதனைகள் பல செய்திருந்தாலும், "கவர்" கொடுக்காததால்,  மீடியாக்கள் அவரின் புகழை மறைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

கமல்ஹாசனின் படங்கள் தமிழ்நாட்டில் செய்த சாதனைகளையே நம்மிடமிருந்து மறைத்த இந்த மீடியாக்களால், அவர் படங்கள் மற்ற மாநிலங்களில் செய்த சாதனைகளை மறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமா?

அவனவன் நடிக்கும் ஒரே மொழிப்படங்கள் கூட அந்தந்த மொழி பேசும் மாநிலங்களிலேயே ஓடுவதில்லை. ஆனால், கமல்ஹாசனின் கன்னடப் படங்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளப் படங்கள் என இவர் நடித்த அத்தனை மொழிப் படங்களும் கர்நாடகத்தின் பல ஊர்களில் சக்கை போடு போட்டிருக்கின்றன.

இந்தப் பதிவில் கமல்ஹாசனின் படங்கள் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் செய்த சாதனைகளைப் பார்ப்போம், மற்றவை அடுத்தப் பதிவில்.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களிலிருந்து தயார் செய்யப்பட்டது. இன்னும் பல கமல் படங்கள் அங்கே சாதனைகள் செய்திருந்தாலும் அவற்றின் ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் அவற்றை பட்டியலிடவில்லை.

தெலுங்கு :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
மரோசரித்ரா (1978)கல்பனா693 நாட்கள்
350 நாட்கள் (3 காட்சிகள்)
சவிதா105 நாட்கள்
சொம்மகடிதி சோக்கடிதி (1979)மெஜெஸ்டிக்105 நாட்கள்
திரிவேணி70 நாட்கள்
சாகர சங்கமம் (1983)பல்லவி511 நாட்கள் (பகல் காட்சி) 233 நாட்கள் (3 காட்சிகள்)
நடராஜ் 217 நாட்கள்
அபிநய்84 நாட்கள்
நந்தா70 நாட்கள்
ஆதர்ஷா63 நாட்கள்
சன்சயா56 நாட்கள்
சுவாதி முத்யம் (1986)மேனகா261 நாட்கள்
கபாலி165 நாட்கள்
சாந்தி70 நாட்கள்

தமிழ் :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
16 வயதினிலே (1977)அபர்ணா105 நாட்கள்
கினோ50 நாட்கள்
லட்சுமி50 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது (1978)சங்கீத்105 நாட்கள்
நடராஜ்50 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள் (1978)திருபுவன்217 நாட்கள்
கல்யாண ராமன் (1979)ஸ்வாகத்75 நாட்கள்
நடராஜ்50 நாட்கள்
சங்கீத்50 நாட்கள்
குரு (1980)நடராஜ்50 நாட்கள்
மீண்டும் கோகிலா (1981)சுவஸ்திக்50 நாட்கள்
ராஜபார்வை (1981)சுவஸ்திக்70 நாட்கள்
சவால் (1981)கினோ56 நாட்கள்
மூன்றாம் பிறை (1982)லாவண்யா105 நாட்கள்
சவீதா56 நாட்கள்
நடராஜ்49 நாட்கள்
பல்லவி49 நாட்கள்
சகலகலா வல்லவன் (1982)லாவண்யா49 நாட்கள்
பல்லவி42 நாட்கள்
சட்டம் (1983)சுவஸ்திக்49 நாட்கள்
லாவண்யா35 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதே (1983) லாவண்யா49 நாட்கள்
பல்லவி49 நாட்கள்
சுவஸ்திக்42 நாட்கள்
ஒரு கைதியின் டைரி (1984)சாகர்105 நாட்கள்
நடராஜ்56 நாட்கள்
லாவண்யா40 நாட்கள்
நாயகன் (1987)பல்லவி224 நாட்கள் (பகல் காட்சி)
50 நாட்கள் (4 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள் (1989)பல்லவி196 நாட்கள் (பகல் காட்சி) 175 நாட்கள் (4 காட்சிகள்)
நட்ராஜ்112 நாட்கள்
லட்சுமி112 நாட்கள்
கல்பனா112 நாட்கள்
சாந்தி105 நாட்கள்
பாலாஜி77 நாட்கள்
தேவர் மகன் (1992)நட்ராஜ் 65 நாட்கள் (3 காட்சிகள்)
நாகா65 நாட்கள் (3 காட்சிகள்)
ஸ்வாகத்50 நாட்கள்
பல்லவி50 நாட்கள்
வெங்கடேஸ்வரா50 நாட்கள்
அருணா50 நாட்கள்
கேல்க்ஸி50 நாட்கள்
ஆனந்த்50 நாட்கள்
அப்சரா50 நாட்கள் (3 காட்சிகள்)
ஊர்வசி50 நாட்கள் (3 காட்சிகள்)
இந்தியன் (1996)ஊர்வசி100 நாட்கள்
காவேரி100 நாட்கள்
சம்தகி100 நாட்கள்
அஞ்சன்100 நாட்கள்
அபிநய்75 நாட்கள்
லிடோ60 நாட்கள்





ஹிந்தி :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
ஏக் துஜே கே லியே (1981)கல்பனா154 நாட்கள்
அஜந்தா49 நாட்கள்
அப்சரா49 நாட்கள்
சனம் தேரி கசம் (1982)ப்ரதீப்175 நாட்கள்
திரிவேணி84 நாட்கள்
ஸ்ரீபாலாஜி 49 நாட்கள்
ஏக் தோ கமால் கோ கயா (1982)கல்பனா56 நாட்கள் 
சாகர்  (1985)அபிநய்126 நாட்கள் (3 காட்சிகள்)
87 நாட்கள் (4 காட்சிகள்)
கிராப்தார் (1985)சந்தோஷ்175 நாட்கள்
நர்த்தகி77 நாட்கள்
தேகா ப்யார் துமாரா (1985)கைலாஷ்56 நாட்கள்


கன்னடம் :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
கோகிலா (1977)அபிநய்100 நாட்கள்
புஷ்பக விமானா (1987)சப்னா512 நாட்கள் (பகல் காட்சி)
273 நாட்கள் (4 காட்சிகள்)
ஸ்வாகத்56 நாட்கள்
கபாலி49 நாட்கள்
உமா49 நாட்கள்
ராமா ஷாமா பாமா (2005)மெஜெஸ்டிக்100 நாட்கள்
PVR100 நாட்கள்

பெங்களூர் பேப்பர் விளம்பரங்கள் உதவி : திரு. ராமு