Ads 468x60px

Wednesday, October 3, 2012

அதிக திரையரங்குகள்... விரைவான வசூல்... வழிகாட்டிய கமல்!!!

சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழ்ப்படம், தமிழ்நாட்டில் ஒரே ஊரில் மூன்று திரையரங்குகளுக்கு மேல் வெளியிடவேண்டுமானால் அது சென்னையில் மட்டுமே சாத்தியமாயிருந்தது.

பெரிய ஹீரோக்கள் படம் என்றால் சென்னையில் நான்கிலிருந்து ஆறு திரையரங்குகளிலும், மதுரை, கோவை, சேலம் போன்ற அடுத்தகட்ட மாநகரங்களில் இரண்டிலிருந்து மூன்று திரையரங்குகளிலும், திண்டுக்கல் போன்ற சில பெரிய நகரங்களில் முதல் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் இரண்டு திரையரங்குகளிலும், தஞ்சாவூர், விருதுநகர் போன்ற இதர நகரங்களில் ஒரு திரையரங்கிலும் திரையிடப்படும்.

தாராபுரம், சிவகங்கை போன்ற பல நகரங்களில் தமிழ்ப்படங்கள் நேரடியாக முதல் நாளிலேயே வெளிவராது. சுற்றுவட்டார நகரங்களில் ஓடிய பிறகு இங்கே திரையிடப்படும். உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற சிறிய ஊர்களிலெல்லாம் ஒரு புதிய படம், மற்ற நகரங்களிலெல்லாம் ஓடி தேய்ந்து, 4 அல்லது 5 மாதங்கள் கழித்து தான் திரையிடப்படும்.

இப்படியிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகம் இன்று எப்படிப்பட்ட இமாலய மாற்றத்தை அடைந்துள்ளது தெரியுமா? உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற சிறிய ஊர்களிலெல்லாம் படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதற்கெல்லாம் வழிகாட்டியவர் கமல்ஹாசன்!!!

கமல்ஹாசன் 2001-லேயே இவ்வாறு கூறினார், "புதிய படங்களை அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்து, சினிமா டிக்கெட் என்பது திரையங்கில் மட்டுமல்லாது, சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்".

அவர் கூறிய படி செய்தால் தான், யாரேனும் இன்று இந்த படம் பார்க்கவேண்டும் என்று நினைத்தால், அன்றே பார்க்க முடியும். இல்லையேல் எந்த காட்சிக்கு டிக்கெட் இருக்குதோ அந்த காட்சியை தான் பார்க்க முடியும்.

எப்படி இந்த எண்ணம் கமல்ஹாசனுக்கு மட்டும் தோன்றியது? , ஏனெனில் கமல்ஹாசனின் படங்கள் மட்டும் தான் " திரையரங்குகளில் தொடர் ஹவுஸ்புல் சாதனைகளை" தொடர்ந்து செய்திருக்கிறது.

இவரின் படங்களுக்கு மட்டும் தான் அட்வான்ஸ் புக்கிங் கியூ 1978-லிருந்தே இருந்து வருகிறது. தேவி பாரடைஸ் தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய வந்த ரசிகர்களின் கியூ அன்றைய அலங்கார் தியேட்டரையும் தாண்டி( ஒரு கி.மீ தூரத்திற்கும் மேல்) இருந்தது என்பது சாதனை வரலாறு. மேலும் இந்த படம் எம்ஜியாரின் "உலகம் சுற்றும் வாலிபனின்" 70 நாள் தொடர் ஹவுஸ்புல் சாதனையையும் உடைத்தது. (ரஜினிக்கு இப்படி ஒரு சாதனை குறைந்த பட்சம் 3 நாட்களாவது இருந்தால், அது எந்த படம் என்பதை ஆதாரத்துடன் கமென்ட செய்யவும்.)

எனவே உலகநாயகன் தன் "ஆளவந்தான்" படத்திற்கு இருந்த மிகப்பெரிய எதிர்பார்பை கண்டு, 2001- ல் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம், அதிகமான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யச் சொன்னார். ரஜினி, தாணு, விஜய் போன்றவர்களுக்கெல்லாம், வசூல் வருதோ இல்லையோ, படத்தை 175 நாள் ஓட்டவேண்டும். அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் இன்றும் வாழும் தாணுவுக்கு எட்டவில்லை அன்றே உலகநாயகன் சொன்னது.

எப்பவுமே உலகநாயகனின் தொலைநோக்கு பார்வை இந்த திரையுலகத்தினருக்கு காலம் தாழ்ந்து தான் புரியும், இதற்கு "சின்னதிரை" மிகச் சிறந்த உதாரணம். சின்னதிரை பெரியதிரையை அழித்து விடும், அதற்கு நடிகர்கள் யாரும் பேட்டி கொடுக்க கூடாது என்றெல்லாம் "நடிகர் சங்கம்" கூறியது. அதற்கு கமல், இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி, முடிந்தால் சினிமாவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தடைகளை மீறி பேட்டி கொடுத்தார். இன்று இவர்கள் "சின்னதிரையை" தான் தங்கள் படங்களுக்கு முதல் விளம்பரம் மையமாகவும், படத்தின் சேட்டிலைட் உரிமையை கோடிகளில் விற்றும் பயன்படுத்துகிறார்கள்.

அது போல, அதிக திரையரங்குகளில் முதலில் கமலே தன் "வேட்டையாடு விளையாடு (2006) " படத்தை வெளியிட்டார்.   நடிப்பிலும் திரைப்படம் எடுப்பதிலும் வழிகாட்டுவது மட்டுமல்லாமல், வர்த்தகத்திலும்  திரையுலகத்திற்கு வழிகாட்டினார் கமல்.

சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் (அடையார், அம்பத்தூர், குரோம்பேட், விருகம்பாக்கம் சேர்த்து தானே இப்போது விளம்பரம் செய்கிறார்கள் ) வெளியிடப்பட்டது.

1. சத்யம்

2. ஆல்பட்

3. மெலோடி

4. அபிராமி

5. காசி

6. பாரத்

7. கோபிகிருஷ்ணா

8. ஸ்ரீபிருந்தா

9. ரோகிணி

10. மாயாஜால்

11. பிரார்த்தனா

12. ஆராதனா

13. கணபதிராம்

14. ராக்கி

15. வெற்றி

16. ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

சென்னையில் மவுண்ட ரோட்டை சுற்றிலும் 3 திரையரங்குகளில் ( சத்யம், ஆல்பட், மெலோடி ) வெளியிடப்பட்ட முதல் படமும் "வேட்டையாடு விளையாடு" தான்.
சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது.

இதற்கு பின் பல படங்கள் திரையிடப்பட்டாலும், அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் வரை திரையிடப்பட்டது. 2008-ல் மாயாஜாலில் 10 திரையரங்குகள் மட்டும் தான் இருந்தது, இப்போது மாயாஜாலில் 14 திரைகள் இருந்தும், இன்றும் இச்சாதனை முறியடிக்கப் படவில்லை. அதற்கு கமல்ஹாசனின் "விஸ்வரூபத்திற்கு" மட்டுமே தகுதியுள்ளது.சேலத்தில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.மதுரையில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.


2006-ல் கமல் காட்டிய வழியில் இன்று சின்ன பட்ஜெட் படங்கள் கூட சென்னையில் சாதாரணமாக 15 தியேட்டர்களுக்கு மேல் திரையிடுகிறார்கள். படம் வெளியாவதற்கு முன் எதிர்பார்ப்பும், வெளியான பின் நல்ல மௌத் டாக்கும் இருந்தால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் போட்டப் பணத்தை எடுத்து விடுகிறார்கள். அதற்கு மேல் வருவது எல்லாம் லாபம் தான்.

இதே பாணியில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும், ரஜினியின் சிவாஜி, எந்திரன் பல ஊர்களில், போட்ட பணத்தில் பாதி கூட வசூல் செய்யவில்லை என்று விநியோகிஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். விரிவாக அறிய இங்கே கிளிக் செய்க.

தசாவதாரத்தின் சாதனைகளே ( தென்னிந்தியாவின் உச்ச வசூல், திரையரங்கு உரிமையாளர்/விநியோகிஸ்தர்/தயாரிப்பாளர் என்று யாரும் குறை கூறாத மகாவெற்றி, மாயாஜாலில் தினமும் 52 காட்சிகள் ) இன்னும் முறியடிக்கப் படாமல் இருக்க,

1. உலகம் முழுவதும் 4000+ திரையரங்குகள்

2. வர்த்தகம் மட்டும் 250+ கோடிகள் ( மொத்த வசூல் 500+ கோடிகள் )

3. சென்னையில் மட்டும் 60+ திரையரங்குகள்

4. அமெரிக்காவில் மட்டும் 150+ திரையரங்குகள்

என்று உலகநாயகனின் விஸ்வரூபம் செய்யப்போகும் சாதனைகளை மற்றவர்கள் கனவாவது காண முடியுமா?

22 comments:

 1. எல்லாத்துக்குமே கமல் தானே முன்னோடி.. ஆனா இப்போ சமீபகாலமா கமல் உலகநாயகன் என்னும் முகமூடியை போட்டுகொண்டு இருக்கிறாரோன்னு தோணுது... இது கமலின் சமீபம் தொடர்பான நம் பார்வை.. கமல் ஹாசனும் உலக நாயகனும் டைம் கெடச்சா படிங்க..

  ReplyDelete
 2. //இதற்கு பின் பல படங்கள் திரையிடப்பட்டாலும், அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் வரை திரையிடப்பட்டது. 2008-ல் மாயாஜாலில் 10 திரையரங்குகள் மட்டும் தான் இருந்தது, இப்போது மாயாஜாலில் 14 திரைகள் இருந்தும், இன்றும் இச்சாதனை முறியடிக்கப் படவில்லை. அதற்கு கமல்ஹாசனின் "விஸ்வரூபத்திற்கு" மட்டுமே தகுதியுள்ளது.

  billa 2 had 90 shows in mayajal for first three days... it was the highest till date...

  ReplyDelete
 3. ராஜா

  ஆதாரம் (mayajal paper ad) இருக்கிறதா ?

  ReplyDelete
 4. தொலை நோக்கு பார்வை எப்பவும் நமது தலைவருக்கு உண்டு.

  ReplyDelete
 5. Billa-II 82 shows in first 3 days..

  http://andhraa.com/billa-2-mayajaal-record-82-shows-in-opening-day/

  ReplyDelete
 6. மொக்கராசு மாமா...

  கமலின் பிரம்மாண்டம், பட்ஜெட்டில் மட்டுமல்ல, அதிமுக்கியமாக கதையில் தான் இருக்கும்.

  கமலின் "விக்ரம்" தான் தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் படம். இதை பார்த்து தான் ரஜினி மாவீரன் படம் எடுத்தார்,பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று.

  நீங்கள் கூறுவது போல் ரஜினியை மிஞ்ச வேண்டும் என்று கமல் படம் எடுப்பதில்லை...

  ஏனெனில் கமலின் பாதையே வேறு என்பது சாதாரண சினிமா ரசிகர்களுக்கே புரியும், ஆனால் கமலின் தீவிர ரசிகன் என்று கூறும் உங்களுக்கு புரிய வில்லை என்பது கமலின் குற்றமல்ல...

  கமல் கமர்சியலில் இறங்கினால் பல நடிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் ரஜினி உள்பட.... அப்படி இறங்காமலே வசூலில் கமல் முதன்மையாயிருப்பது பலருக்கும் வயிற்றெரிச்சல் தான்....உங்களுக்குமா????

  ReplyDelete
 7. நண்பர் சண்டியர்காரன் , மாயாஜாலில் மங்காத்தா அறுபது காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டது , அதற்க்கு முன்னாள் குசேலன் எழுபது காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டது (இதற்கும் நீங்கள் ஆதாரம் கேட்டால் இணையத்தில் தேடி பாருங்கள் ஒன்றல்ல பல ஆதாரங்கள் கிடைக்கும்... )... இப்பொழுது பில்லா 2 என்பதை(80) தாண்டி விட்டது , நாளை விஸ்வரூபம் இதை முறியடிக்கலாம் ... சாதனைகள் முறியடிக்கபடத்தான், ஆனால் இந்த வழக்கத்தை முதலில் ஆரம்பித்தவர் கமல் என்றவரையில் கமலை கண்டிப்பாக பாராட்டலாம்...

  ReplyDelete
 8. //கமல் கமர்சியலில் இறங்கினால் பல நடிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் ரஜினி உள்பட....

  இது நூறு சதவீத உண்மை ... சகலகலா வல்லவன் , அபூர்வ சகோதரர்கள் , வேட்டையாடு விளையாடு இதற்க்கு சிறந்த உதாரணங்கள்


  ReplyDelete
 9. என்ன ராஜா...

  பில்லா 2, முதலில் 90 என்றீர்கள்... இப்போது 80 என்கிறீர்கள்.... அடுத்த கமென்ட்டில் எவ்வளவு கூறுவீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்!!!

  குசேலன் 35 கூட கிடையாது... எந்திரன் வந்த போது, மாயாஜாலில் 14 ஸ்கிரீன்ஸ் வந்து விட்டது...அப்படியிருந்தும் 50 காட்சிகள் கூட தொடவில்லை...

  மங்காத்தா 45 தான் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 10. //பில்லா 2, முதலில் 90 என்றீர்கள்... இப்போது 80 என்கிறீர்கள்.... அடுத்த கமென்ட்டில் எவ்வளவு கூறுவீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்!!!

  சந்டியர்கரன் அவர்களே எனக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே ... பில்லா படம் வந்த பொழுது ஒரு தல ரசிகனாக அதை பற்றிய செய்திகளை இணையத்தில் ஆர்வமாக தேடி பார்த்த பொழுது மாயாஜால் விசயமும் கண்ணில் பட்டது ... ஆனால் அதை எத்தனை காட்சிகள் என்று மனபாடம் செய்யும் அளவுக்கு நான் ஆழ்ந்து கவனிக்கவில்லை , ஆனால் என்பதை தாண்டி விட்டது என்பது நன்றாக ஞாபகம் இருந்தது அதான் தொண்ணூறு என்று முதலில் சொன்னேன் , இப்பொழுது நண்பர் ஆதாரத்துடன் காட்டியபின்னரே அது எண்பத்து இரண்டு என்பதை கூர்ந்து கவனித்து ஆழ்ந்து தியானித்து (ஷ்ஷ்ஷ்ஷப்ப்பாடா) தெரிந்து கொண்டேன் ... அப்பறம் மன்காத்தாவுக்கு இரவு பத்து மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்த பொழுது மேலே56 சிவப்பு வண்ணம் பூசப்பட்ட நேரத்தை நானே கூட்டி கழித்து பெருக்கி கணக்கிட்டு தெரிந்து கொண்டேன்(www.ticketnew.com)...நீங்கள் இப்படியெல்லாம் ஆதாரம் கேட்பீர்கள் என்று அப்பொழுதே தெரிந்திருந்தால் அதை screenshotஎடுத்து வைத்திருக்கலாம் .. என்ன செய்ய எனக்கு அந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லையே

  ReplyDelete
 11. ராஜா...
  ஆதாரம் இல்லை என்பதை தெளிவாக கூறியதற்கு நன்றி.

  ReplyDelete
 12. அரவிந்த குமார்...

  மாயாஜால் தியேட்டர் தனியாக பேப்பரில் விளம்பரம் செய்திருப்பார்கள்...அது இருக்கா உங்களிடம்...

  நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ளது போன்று T.ராஜேந்தர் படத்துக்கு கூட 100 காட்சிகள் என்று டிசைன் செய்யலாம்....

  ReplyDelete
 13. இவரின் படங்களுக்கு மட்டும் தான் அட்வான்ஸ் புக்கிங் கியூ 1978-லிருந்தே இருந்து வருகிறது. தேவி பாரடைஸ் தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய வந்த ரசிகர்களின் கியூ அன்றைய அலங்கார் தியேட்டரையும் தாண்டி( ஒரு கி.மீ தூரத்திற்கும் மேல்) இருந்தது என்பது சாதனை வரலாறு. மேலும் இந்த படம் எம்ஜியாரின் "உலகம் சுற்றும் வாலிபனின்" 70 நாள் தொடர் ஹவுஸ்புல் சாதனையையும் உடைத்தது. /// ஆஹா அபாரம் சண்டியரே !!!
  மற்ற ரசிகர் பெருமக்கள் இச்சாதனைகளை கனவில் மட்டும் தான் காண முடியும்..


  சண்டியரே.. விஸ்வரூபம் ஆடியோ நவம்பர் என்றும் திரையிடப்படுவது டிசம்பர் என்றும் கேள்வி பட்டேன்.. இது உண்மையா?

  ReplyDelete
 14. Billa-2 had 90 shows..

  they have 15 screens of which 1 is unoffical..
  and since the movielenth is for 2 hrs it had almost 6 shows perday per screen.

  The first show started at 6.45 am.

  when I booked the ticket I saw only 78 shows which had shows starting from 6 45 am.
  I booked the FDFS tickets.
  then next time logged in the evening i see almost 20 already booked early morning shows have been removed from the list and it still had 82 shows..

  this 82 is wat some one pointed out earlier..

  Billa had 90+ shows for first 3 days..
  and the next day only it came down to 15 shows.


  From all big hero movies will release in the same manner..
  u can chk for the comming movies like thupakki Viswaroopam kochadayaan etc..

  ReplyDelete
 15. I have screen shot of 80+ shows i will attach tomorrow

  ReplyDelete
 16. //மாயாஜால் தியேட்டர் தனியாக பேப்பரில் விளம்பரம் செய்திருப்பார்கள்...அது இருக்கா உங்களிடம்...

  நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ளது போன்று T.ராஜேந்தர் படத்துக்கு கூட 100 காட்சிகள் என்று டிசைன் செய்யலாம்....

  பேப்பர் விளம்பரத்தில் லத்திகாவுக்கு கூட இருநூறாவது நாளும் குருவிக்கு இருநூற்று ஐம்பதாவது நாளும் வந்தது ... இதற்கும் ஆதாரம் கேட்டு விடாதீர்கள் ... கூகிள் சென்று தேடினால் நேரடியாக நீங்களே பார்த்து விடலாம் ...

  ReplyDelete
 17. //மதுரையில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.


  நண்பரே மேலூரை மதுரையோடு சேர்த்து ஐந்து திரையரங்குகள் என்றால் பாட்சா மேலூரை சேர்க்காமலே ஐந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டது ...

  ReplyDelete
 18. மொக்கராசு,

  இந்த வீடியோ பாருங்க, இது மேட்டர் சாங், இதில் 2.55 இல் கமல் ஸ்கேடிங் செய்வதுபோல் வந்து ரூபிணியை அணைப்பார். இது கூட ஸ்டைல் தான்.

  http://www.youtube.com/watch?v=LFhQ3cEIMBI

  உடனே ரஜினியை காப்பி அடிக்கிறார் என்று சொல்வீர்களா??!

  இதுபோன்ற ஸ்டைல்களை கமல் பல வருடங்களாக செய்துவருகிறார். புன்னகை மன்னனில் சாப்ளின் செல்லப்பா செய்யாத ஸ்டைலா?!?

  இதெல்லாம் ரஜினியை கவுண்டர் கொடுக்க அல்ல! மக்கள் இதை கவனித்தார்களா இல்லையா தெரியாது ஆனால் கமலும் ஒரு ஸ்டைல் மன்னன் தான்! அட்லீஸ்ட் அவருக்கும் ஸ்டைல் வரும் என்றாவது தயங்காமல் சொல்லலாம். இதெல்லாம் ரஜினி ஸ்டைல் என்று பேசப்படும் முன்னரே கமல் செய்துகொண்டு இருக்கிறார். இப்படி சின்ன சின்ன ஸ்டைல் செய்து ரஜினியை வீழ்த்த முயலுவாரா கமல்?!? கமலின் யுக்திகள் எல்லாம் மாபெரும் ஆயுதங்கள். எனவே மன்மதன் அம்புவில் குப்பை தொட்டியை காலால் உதைத்து சரிபண்ணுவது, மொபைலை தூக்கி போட்டு பாக்கெட்டில் பிடிப்பது எல்லாம் புதுசாக கமல் செய்பவை அல்ல. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லை கவரவில்லை என்று சொல்லுங்கள் அது உங்க இஷ்டம் ஆனால் இதை எல்லாம் வைத்து ரஜினியின் ஸ்டைலை இமிடேட் செய்கிறார் என சொல்லாதீர்கள். அது கமலின் கிரியேட்டிவிடியையே அசிங்கப்படுத்துவது போல் ஆகும்!

  நீர் தான் ட்விட்டரில் மொக்கராசுவா?!?

  ReplyDelete
 19. ராஜா

  தியேட்டர் லிஸ்ட் எங்கே ? சும்மா அடிச்சிவிடக் கூடாது....

  ReplyDelete
 20. ராஜா..

  //பேப்பர் விளம்பரத்தில் லத்திகாவுக்கு கூட இருநூறாவது நாளும் குருவிக்கு இருநூற்று ஐம்பதாவது நாளும் வந்தது ... //


  நான் கேட்டது காட்சிகள் நேரத்துடன் வெளியான மாயாஜாலின் விளம்பரம் தான்... இருந்தால் கொடுக்க வேண்டியது தானே.... ரஜினி ரசிகர்கள் மாதிரி ஏன் ஆதாரம் தர இவ்வளவு பயம்?

  ReplyDelete
 21. //நான் கேட்டது காட்சிகள் நேரத்துடன் வெளியான மாயாஜாலின் விளம்பரம் தான்... இருந்தால் கொடுக்க வேண்டியது தானே....

  கொடுத்தால் இது மாதிரி T.Rபடத்துக்குகூட டிசைன் பண்ணலாம்னு சொல்லுவீங்களே பாஸ் ...

  ReplyDelete
 22. ராஜா...
  ஆதாரம் இல்லையென்பதை நல்லா சமாளிக்கிறீங்க....

  ReplyDelete