Ads 468x60px

Thursday, October 25, 2012

கர்நாடகத்தில் காஸ்ட்லி கமல் கட்-அவுட்

தமிழ் சினிமாவில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் ஒரு நடிகர், தனது ஒவ்வொரு படமும் ரிலீஸூக்கு தயாராகும் போது அவரது ரசிகர்களை "அரசியல் ஆசை" காட்டி உசுப்பி விடுவார், மும்பையில் படம் ரிலீஸ் ஆக வேண்டுமானால், அந்த மாநில அரசியல்வாதியை தன் கடவுள் என்பார், காவேரி பிரச்சனையில் கர்நாடக அரசியல்வாதிகளை உதைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தனது படத்தை ரிலீஸ் செய்ய தடை போட்ட போது, தெலுங்கு டிவி வழியாக மன்னிப்பு கேட்பார், இவரின் உண்மை முகம் தெரிந்தும், இவர் கொடுக்கும் "கவருக்கு" மயங்கி, இவரின் படங்கள் எல்லாம் ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலும் 175 நாட்கள் ஓடுகிறது என்று புளுகும் பல மீடியாக்கள்...

அப்படிப்பட்ட மீடியாக்களுக்கு, சாதனை கலைஞன் கமல்ஹாசன் செய்யும் சாதனைகளை மறைப்பதே எளிது என்றால், அவரது ரசிகர்கள் செய்யும் புதிய பட ஆரம்ப நாள் கொண்டாட்டத்தை மறைப்பது எவ்வளவு எளிது?

எந்த நடிகருக்கும் கிடைக்காத ரசிகர்கள் கமலுக்கு உண்டு என்பதை கமலின் பெங்களூர் ரசிகர்கள் செய்யும் கொண்டாட்டத்தை பார்த்தால் புரியும். அவர்கள் செய்யும் நற்பணிகளும் பிரம்மாண்டவைகள் தான், அதைப் பற்றி மற்றொரு பதிவில் பின்பு காண்போம்.

அப்படி என்ன தான் பெங்களூர் கமல் ரசிகர்கள் செய்து விட்டார்கள்? 40 அடி கமல் கட் அவுட்டுக்கு தலையிலிருந்து கால் வரை ஒரிஜினல் பூ மாலைகளால் அலங்காரம் செய்வார்கள். இதற்கு 2001-லேயே 2.5 லட்சம் செலவு செய்துள்ளார்கள் "ஆளவந்தான்" கட் அவுட்டுக்கு.

பெங்களூர் கமல் ரசிகர்கள் பூ மாலைகளால் அலங்கரித்த சில கமல் கட் அவுட்கள் கீழே...

ஆளவந்தான்

அன்பே சிவம்

விருமாண்டி


வசூல்ராஜா MBBS


மன்மதன் அம்பு


விஸ்வரூப கமல் கட்-அவுட்டின் பூ மாலைகளுக்கு மட்டும் பெங்களூர் கமல் பக்தர்களின் பட்ஜெட் ரூ 15 லட்சத்தை தாண்டுகிறதாம்.

6 comments:

 1. Thanks for the photos saga!

  I was there in Blr during Virumadi release! There was a huge traffic jam in ulsoor area because of the crowd in front of the theater.

  Blr is Kamal's fort. No other tamil acotr has such a fan following. Even non tamilian's go to Kamal's movie.

  ReplyDelete
 2. இந்தப் பணத்தையெல்லாம் ஏதாவது அநாதை ஆஸ்ரமம் ஏழை எளியோருக்கு நால்லது என்று செலவளித்திருந்தால் மெச்சலாம், யாரோ செய்தாங்க போட்டியா நாங்களும் செய்யுறோம்........... ம்ஹும்..........சரியில்லை.

  ReplyDelete
 3. //
  இந்தக் கோவிலைப் பொறுத்தவரையில், தங்களது சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு தங்களை கோவிலுக்காக அர்ப்பணித்துக் கொண்ட பக்தர்கள், மக்களிடம் சென்று தங்களது நோக்கத்தை தெரிவித்து நன்கொடை வாங்கி கட்டியிருக்கிறார்கள். எனவே, உங்களுக்கு கழிவறை வேண்டுமானால் நீங்களும் அதே மாதிரி முயற்சி செய்து உங்களை அர்ப்பணித்து முயற்சி செய்ய வேண்டும், செய்வீர்களா? தமிழக மக்கள் ரொம்ப கஷ்டப் படுறாங்க எனவே நான் சினிமா பார்க்க மாட்டேன், எங்கும் சுற்றுலா செல்ல மாட்டேன், இணையத்தைப் பார்க்க மாட்டேன், ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிடுவேன் பைக்/கார் போன்ற சொகுசான சொந்த வாகனங்களில் செல்ல மாட்டேன் மாறாக பஸ்ஸில் செல்வேன், இதிலெல்லாம் மிச்சமாகும் பணத்தோடு, எனது சொந்தப் பணமும் கொஞ்சம் போட்டு கழிப்பறை கட்ட நன்கொடையாகக் கொடுப்பேன். இந்த நிலையை தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் கழிவறை வசதி வரும் வரை தொடருவேன். இந்த மாதிரி நம்மில் யாராவது சபதம் எடுத்து நிறைவேத்தியிருப்போமா? வெறுமனே பச்சாதாபப் பட்டு எதற்குப் பிரயோஜனம்?

  மக்கள் எல்லோருக்கும் கழிப்பறை வரவேண்டும், வாஸ்தவம்தான், அதற்க்கு முன்னால் அவர்களுக்கு உண்ணுவதற்கும் ஏதாவது வேண்டும் அதுவே பலருக்கு கஷ்டமான நிலைதான். ஒப்புக் கொள்கிறேன், மக்கள் என்னதான் கஷ்டப் பட்டாலும் நாம் நமது சொகுசு வாழ்க்கையை இம்மியளவேனும் குறைக்க முயற்சியாவது செய்திருப்போமா? அதுசரி, இது போன்ற வசதிகளைச் செய்து கொடுப்பது யாரோட கடமை? நாட்டை ஆளும் அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? மக்கள் வரிப் பணமெல்லாம் எங்கேதான் போகிறது? கருப்பாக அந்நிய வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் இந்திய மக்கள் பணத்தை கொண்டு வந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று எத்தனையோ பேர் இணையத்தில் எடுத்துச் சொல்லிவிட்டார்கள், தேடித் பிடித்து பாருங்கள். இந்தியா பணக்கார நாடுதான் இந்தியர்கள் மட்டுமே ஏழைகள்.

  மக்கள் கழிவறை வசதி இல்லாமல் தவிப்பதால் கோவில் கட்டுவது தவறு என்றால், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளையும் கட்டக் கூடாது எல்லாவற்றையும் மூடிவிட்டு கழிவறை வசதி வரும் வரை காத்திருந்து, எல்லோருக்கும் வந்த பின்னர் தான் அவற்றைத் திறக்க வேண்டும்!!

  நண்பர்களே மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் தான், அதே சமயத்தில் அவர்களுக்கு இறைவனின் சேதியையும் கொண்டு சேர்க்க வேண்டும், பிரச்சினைகள் தீரும்வரை பொறுத்திருக்க முடியாது, அது ஒரு பக்கம் போகட்டும், இது இன்னொரு பக்கம் போகட்டும்.
  //
  என்ன ஜெயதேவ் அவர்களே, எங்கோ கேட்டது போல இருக்கிறதா?

  தங்களது சென்னை கோல்டன் பீச் அருகே பிரம்மாண்டமான அழகிய கோவில்!! என்கிற பதிவில் (சுட்டி: http://jayadevdas.blogspot.com/2012/10/blog-post_18.html) "இருக்கின்ற கோயில்கள் பத்தாதா? இவ்வளவு செலவு செய்து இறைவனை வணங்க வேண்டுமா?" என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் சொன்ன விடை தான் இது. இதையே மீண்டும் ஒரு முறை உங்கள் கேள்விக்கு பதிலாக நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 4. Jayadev das...

  அரைகுறையாக படித்து விட்டு மேதாவியாக கருத்து போடாதீங்க.... நான் தெளிவாக கூறியிருக்கிறேன் "நற்பணி" பற்றி வேறு பதிவில் சொல்கிறேன் என்று... கமலுக்கும் சரி கமல் ரசிகர்களுக்கும் சரி யாரும் போட்டி கிடையாது....

  ஏதோ நீங்க நன்கொடை கொடுத்து அதில் அவர்கள் கட்-அவுட் வைத்த மாதிரி அறிவுரை வேறு....

  ReplyDelete
 5. முதலில் ரஜினி படங்களுக்கு கட்டவுட்டு தமிழ்நாட்டில் வைப்பதை போட்டுத் தாக்கியிருக்காரு, அடுத்து நாங்க [தமிழனாம்] சளைத்தவர்களா கமலஹாசனுக்கு பெங்களூர்ல வைக்கிறாங்க பாரு கட்டவுட்டு என்று சொல்லியிருக்கீங்க. ஆக இந்தப் பதிவில் சொல்லவருவது போட்டிக்குப் போட்டி என்பது தான். அரசியல்வாதிங்க மாதிரி வாயில் பொதுவில் சொன்னதை, அதை தொலைக்காட்சியில் காண்பித்த பின்னர் கூட நான் சொல்லவே இல்லை என்பதை போல பல்டி அடிக்கிறீர்கள். கமல் ரசிகர்கள் யாருக்கும் போட்டியில்லை என்பது உண்மையாகவும் இருக்கலாம், அல்லது உங்கள் சொந்தக் கருத்தாகவும் இருக்கலாம், ஆனால் பதிவில் உள்ள விஷயம் என்னவோ அதற்குத்தான் என்னுடைய கருத்தைச் சொல்ல முடியும்.

  \\ஏதோ நீங்க நன்கொடை கொடுத்து அதில் அவர்கள் கட்-அவுட் வைத்த மாதிரி அறிவுரை வேறு.... \\ அடேங்கப்பா அறிவுரையா? உங்களுக்கா?? அதெல்லாம் பெரிய வார்த்தைங்க............. நீங்கள் செலவு செய்த சில லட்சம் ரூபாய்களை இன்னும் நாலு ஆம்புலன்ஸ் வாங்க பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து.

  தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே எங்களைப் போன்ற சிறந்த நண்பர்கள் இருக்கவே முடியாதுன்னு உங்கள் நாயகனே தனது 50 விழாவில் பேசியிருக்கார். அதில் ரஜினி அவரை எப்படியெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கார், இப்படியெல்லாம் இருக்கும் இருவர் ரசிகர்களிடையே எதற்காக தூபம் போட்டு காழ்ப்புணர்ச்சியை வளர்க்கிறீர்கள் அன்பர்களே?

  ReplyDelete
 6. jayadev das...

  ரஜினியை விட எப்போதெல்லாம் கமல் விஞ்சி நிற்பதை பதிவிட்டாலும், உடனே வந்துடுறீங்கய்யா... கமல் ரஜினியும் நண்பர்கள்....ரசிகர்களுக்குள் சண்டை எதற்கு என்று....

  ஆனால் கமலை விட ரஜினி முந்தும் போது (பொய்யாக தான்) ரஜினியை ஆஹா ஓஹோ என்று புகழ்றீங்க.... அப்ப கமல் ரஜினியும் நண்பர்கள் இல்லையா?

  ReplyDelete