Ads 468x60px

Friday, November 9, 2012

"உயர்ந்த" நாயகன் Vs "தாழ்ந்த" மனிதன்

கமல்ஹாசன் "ஹிந்து"-வில் "நாயகன்" பற்றிய உண்மையை வெளியிட்ட கட்டுரையையும், பதிலளிக்கிறேன் என்று முக்தா வெளியிட்ட வயிற்றெரிச்சலையும் பற்றி பதிவு போட்டு, கிடைத்த "கேப்"-பில் மனிதன் என்ற படத்தை எல்லாரும் 24 வருடத்திற்கு முன்பே மறந்து விட்ட நிலையில், அப்படத்தை "வெற்றி" என்று டெங்குவை விட கொடிய கருத்தை பரப்பும் பதிவருக்கும், அதை நம்புவர்களுக்கும் மற்றும் முக்தாவுக்குமான பதில் இது.

முக்தா கூறியது போல் கதையை மாற்றி விட்டார்கள் என்றால் படத்தை ஆரம்ப கட்டத்திலேயே "ட்ராப்" செய்திருக்க வேண்டியது தானே அவர் ?

சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுக்க பிரச்சினை செய்த போது கமல் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் என்பவர் லாபம் சம்பாதிக்க மட்டும் தானா? கமலே தன் கட்டுரையில் ஒரு கட்டத்தில் தானே சோர்ந்து விட்டதாக கூறியிருக்கிறார், இந்த வேலையையாவது அவர் செய்யட்டும் என்று தான் விட்டிருப்பார்.

படத்தை எடுத்தவுடன் "GV" க்கு விற்றும் விட்டார் (நெகட்டிவ் உரிமை உட்பட). அந்த நேரத்தில் வந்த வரைக்கும் லாபம் என்று தானே விற்றிருக்கிறார். நாயகன் மிகப் பெரிய வெற்றியடையும் என்று புரியாமல் தானே விற்றார். அதை தானே கமலும் "OLD SCHOOL" என்று சொன்னார்.

நாயகனை காட்பாதருடன் ஒப்பிட்டு தமிழ் கலைஞர்களின் ஒப்பற்ற படைப்பை சிறுமை படுத்த முயற்சிக்கும் கூட்டத்திற்கு "விஸ்பரூப" பதிலடியை ஏற்கனவே உலக சினிமா ரசிகன் கொடுத்துவிட்டார், அதை படிக்க இங்கே க்ளிக் செய்க.

அடுத்து கிடைத்த கேப்பில் ஒரு பதிவர் நாயகனை விட மனிதன் வெற்றிபடம் என்றும், முக்தா தயாரித்து ரஜினி நடித்த தோல்வி படங்களான பொல்லாதவனும் சிவப்பு சூரியனும் ஓரளவுக்கு வெற்றிபடங்கள் என்று புளுகி ரஜினி ரசிகன் என்பதை நிருபித்து விட்டார்.

ரஜினிக்கு ரெகுலர் காட்சிகளில் ஒரு வெள்ளிவிழா படம் கூட கிடையாது, சில படங்கள் பகல்காட்சியில் ஓடினாலும் பல படங்கள் பகல்காட்சியில் தியேட்டரில் வாடகை கொடுத்து தேய்க்கப்பட்டவை. உண்மையில் மனிதன் ஓடியிருந்தால் எத்தனை தியேட்டரில் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்கள் ஓடியுள்ளது?

நாயகன் மொத்தமாக 11 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல்  ஓடியுள்ளது,
சென்னையில் திரையிட்ட 4 தியேட்டரிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களுக்கு மேலும்,  ஆனந்த காம்ளக்ஸில் ரெகுலர் காட்சிகளில் 175 நாட்களுக்கு மேலும் ஓடியுள்ளது.



நாயகன் பெங்களூர் பல்லவியில் 3 காட்சிகளாக 50 நாட்களும், பகல் காட்சியில் 225 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.



பல தடைகளை தாண்டி புதிய பாணியில் எடுக்கப்பட்ட நாயகன் பாக்ஸ் ஆபிஸிலும் மனிதனை துரத்தி துரத்தி அடித்து வீழ்த்தியதற்கு இதற்கு மேல் சான்றுகள் தேவையில்லை.

11 comments:

  1. semma badhil adi !!! yar yarayo tsunami thookitu podhu andha muktha va thookitu pogalaye!!! i would be glad if this article makes its way in the newspapers...

    ReplyDelete
  2. Thousif : I have great regards for Kamal as a good actor. But was greatly disappointed when he came out with such an article on Muktha... Nayagan, has been branded as a Kamal film or a Maniratnam film and the majority of the present generation wudnt know who the producer is...! With that being the case, a person of Kamal's caliber shudnt have stooped to write such an article. :(

    ReplyDelete
  3. kalakal article karan....muktha ke muthi poche....

    ReplyDelete
  4. //அப்படத்தை "வெற்றி" என்று டெங்குவை விட கொடிய கருத்தை பரப்பும் பதிவருக்கும்

    குசெலனையே சூப்பர் ஹிட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் கூட்டம் இணையத்தில் நிறைய உண்டு ... இந்த படங்கள் பல வருடங்களுக்கு முன்னாள் வந்ததால் யாருக்கும் தெரியாது என்று இஸ்டத்துக்கு அடுத்தி விடுகிறார்கள் போலும் ..

    ReplyDelete
  5. Kamal naaman vazhaga

    ReplyDelete
  6. Manithan. Apadinu oru padam vanthutha!

    ReplyDelete
  7. ராவணன் மற்றும் ரஜினி பதிவர்கள் ஊரில் நாய் புடீக்கிற வண்டீ வருவதில்லை பொல;

    ReplyDelete
  8. 25 years kku appuram original producer of Nayagan is saying it is a flop, avara nambuvatha, neenga potta records a nambuvatha, producer a vida ungalukku nerya theyuma

    ReplyDelete
  9. Saurav...

    தயாரிப்பாளர் அன்றே NEGATIVE உரிமை உட்பட GVயிடம் விற்றுவிட்டார்...

    அப்ப லாபம் யாருக்கு போகும்.. தயாரிப்பாளருக்கா????

    ReplyDelete
  10. intha rajn...sori patti...who...?

    ReplyDelete
  11. oru poramai piditha group..sollaratha kekkaha bosss....NAN THOTTA UYARATHAI KAMAL THOTTAR ...AVAR THOTTATHAI NAN THODAVILLAI....RAJINI..

    ReplyDelete