Ads 468x60px

Saturday, November 17, 2012

சின்னத்திரை - கமல் vs ரஜினி

தூர்தர்ஷன் மட்டும் தான் டிவி என்று இருந்த காலகட்டத்தை, லோக்கல் கேபிள் டிவிக்களும் சேட்டிலைட் டிவிக்களும் உடைத்து முன்னே சென்று கொண்டிருந்த 90 களில் தான் தமிழ் சினிமாவும் தேக்கம் காண ஆரம்பித்தது. தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்து போனது. திருட்டு வீடியோ கேசட், கேபிள் டிவியில் உரிமை பெறாமல் புதிய படங்களை ஒளிபரப்புவதும் நியாமான காரணங்களாயிருந்ததால், தமிழக அரசு கடுமையான சட்டங்களினால் அவற்றை தடுத்தது.

அப்படியும் பல படங்கள் மண்ணை கவ்விக் கொண்டு தான் இருந்தன. நடிகர் சங்கம் தன் அறிவுக் கண்ணை திறந்து ஒன்றை கண்டுபிடித்தது, அது என்னவென்றால், நடிகர் நடிகைகள் சேட்டிலைட் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதால் தான் படங்கள் ஓடவில்லை என்று. அதுமட்டுமல்லாமல் பேட்டிகளுக்கு தடையும் விதித்தது.

புதிய தொழில்நுட்பங்களின் நண்பன் கமல்ஹாசன், அந்த தடையை வன்மையாக கண்டித்ததும் மட்டுமல்லாமல், தடையை மீறி சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்தார். ஆனால் ரஜினியோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார், உழைப்பாளி படத்தின் போது ஓவராய் பேசி விநியோகிஸ்தர்களிடம் மாட்டிக் கொண்டது போல் நடிகர் சங்கத்திடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க. கமல் மட்டும் தான் தவறுகளை நிஜத்தில் கண்டிப்பவரும் எதிர்த்து போராடுபவரும் கூட.

பின் சின்னத்திரையை சினிமாவிற்கு எப்படி பயன்படுத்துவது என்று வழியும் காட்டினார். இப்போது திரைப்படத்தின் உரிமையை விநியோகிஸ்தர்கள் வாங்கும் முன் சேட்டிலைட் சேனல்கள் ஒளிபரப்பும் உரிமையை வாங்கி விடுகின்றன. தயாரிப்பாளர்களும் இதில் ஒரு கனிசமான தொகையை அள்ளி விடுகிறார்கள்.

தமிழில் கமல்ஹாசனின் "தசாவதாரம்" தான் இன்று வரை அதிக விலைக்கு (5 கோடியே 10 லட்சம்) சேட்டிலைட் சேனலால் வாங்கப்பட்ட படம். எந்திரன் படத்தை தயாரித்த சன் டிவியே அந்த படத்தை 15 கோடிக்கு வாங்கினாலும், ஏன் கணக்கில் கொள்ள முடியாது என்றால், உதாரணத்திற்கு நீங்கள் இரண்டு கம்பெனிகள் வைத்திருக்கிறீர்கள், உங்களுடைய ஒரு கம்பெனியில் தயாரித்த பொருளை, உங்களுடைய இன்னொரு கம்பெனியின் மூலம் வாங்குகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு லாபமா? இரட்டை செலவு தான் அது.... தயாரிப்பு செலவு மற்றும் அதை நீங்களே வாங்கிய செலவு.

கலைஞர் டிவி தசாவதாரத்தை முதலில் ஒளிபரப்பிய போது படம் 6 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 11.10 மணிக்கு முடிவடைந்தது, 30 நிமிட செய்திகள் மற்றும் படத்தின் நீளமான 190 நிமிடங்களை கழித்தால், விளம்பரங்கள் மட்டும் ஏறக்குறைய 90 நிமிடங்கள் ஒளிபரப்ப பட்டுள்ளன.

10 நொடிகளுக்கு 2 லட்சம் என்றால், 90 நிமிடங்களுக்கு 10 கோடியே 80 லட்சம் சம்பாதித்துள்ளது. முதல் தடவை ஒளிபரப்பியதிலே இரண்டு மடங்கு லாபம் கொடுத்துள்ளது கமலின் தசாவதாரம். கலைஞர் டிவி இது வரை தசாவதாரத்தை 7 முறைகளுக்கு மேல் ஒளிபரப்பியுள்ளது.

2012 ஆயுதபூஜைக்கும் தசாவதாரம் ஒளிபரப்பப் பட்டது, 8 மெயின் ஸ்பான்சர்களுடன் ( Jos Alukkas, Gold Winner, Preethi, Coramental Cement, Dress Parade, Bharathi Cement, Cardia Olive Oil and Ramraj ). 25 நிமிடம் படத்துடன் ஒவ்வொரு ப்ரேக்கிலும் சராசரியாக 14+ விளம்பரங்களும் போடப்பட்டன, மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி 30 நிமிட செய்திகளுடன், கிட்டத்தட்ட 9 மணிக்கு முடிந்தது.அள்ளி தருவதில் தசாவதாரம், கலைஞர் டிவிக்கு அட்சயப் பாத்திரம் என்றால் மிகையாகாது.

யோசித்து பார்த்தீர்கள் என்றால், சின்னத்திரையில் கூட ரஜினி படம் சாதாரண நாட்களில் ஒளிபரப்ப மாட்டார்கள், பண்டிகை தினத்தில் மட்டும் தான், அதுவும் பல மாத கால இடைவெளியில் ( எப்படி ரஜினி 3 வருடத்திற்கு ஒரு முறை நடிப்பது போல) தான் ஒளிபரப்புவார்கள். ஏனென்றால் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பினால் தான் பார்வையாளர்கள் வேறுவழியின்றி ரஜினி படத்தை பார்த்து தொலைப்பார்கள், இதிலும் எவ்வளவு பெரிய மோசடி?

ஆனால் கமலின் படங்களோ (குறிப்பாக நாயகன், வசூல்ராஜா MBBS, பஞ்ச தந்திரம், அன்பே சிவம், குணா, ஆளவந்தான், தேவர் மகன், தெனாலி, அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ), சின்னத்திரைகளில் சாதாரண நாட்களில் கூட அதிகமான் ஸ்பான்சர்களுடன் அடிக்கடி ஒளிபரப்ப படுகிறது. எத்தனை தடவை போட்டாலும் அத்தனை தடவையும் கமல் படங்களை பார்வையாளர்கள் பார்ப்பதால் தான் டிவிக்களும் ஒளிபரப்புகிறார்கள், ஸ்பான்சர்களும் குவிகிறார்கள்.

ரஜினியின் படங்களை பெரிய திரையில் தான் ரீ-ரிலீஸ் செய்யப் விநியோகிஸ்தர்கள் தயாரில்லை என்றால், சின்னத்திரையில் கூட அடிக்கடி ஒளிபரப்ப ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை..

10 comments:

 1. anna super, you explained very well about dasavatharam collection in tv also

  ReplyDelete
 2. இந்தியன் படத்தை ராஜ் டிவி பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு தீபாவளி அன்று முதல் தடவை ஒளிபரப்பியபோது காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணி வரை ஒளிபரப்பியது ... கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் , இந்த சாதனையை வேறு எந்த படமும் இதுவரை முறியடிக்கவில்லை , இனிமேலும் முறியடிக்க போவதுமில்லை ..

  ReplyDelete
 3. unga comedy eppothanga mudiyum

  ReplyDelete
  Replies
  1. Avar proof oda potrukaru ungalala nirupika mudinja panunga ilana pesama ponga sir.........

   Delete
 4. ARAN

  உண்மை காமெடியாகவும் .... காமெடி உண்மையாகவும் உங்களுக்கு தெரிவதால் ஒரு மனநல மருத்துவரை பார்க்கவும்...

  ReplyDelete
 5. நன்பா நீ வாழ்க. கமல் நாமம் வாழ்க. விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றியடைய வாழ்த்துக்கள். நன்பா, நான் உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. நண்பா உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.....

  ReplyDelete
 7. ரஜினியின் படங்களை பெரிய திரையில் தான் ரீ-ரிலீஸ் செய்யப் விநியோகிஸ்தர்கள் தயாரில்லை என்றால், சின்னத்திரையில் கூட அடிக்கடி ஒளிபரப்ப ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை..

  ///////////

  This shows you people have still not grown. Rajini's already released film Sivaji is getting re-released again and you have given a ROFL statement. But see your new film Viswaroopam still has no buyers to release it.

  For God sake, please stop your comedy articles. Or else even some good Kamal fans will mock you.

  ReplyDelete
 8. Life is boring தம்பி...

  ரி ரிலீஸ் பண்றதுனா தயாரிப்பாளர்/விநியோகிஸ்தருக்கு புதிய செலவில்லாமல், பழைய படங்களால் வருமானம் கிடைப்பது....

  சிவாஜி-THE LOSS படத்தை சிவாஜி 3D ஆக்க 17 கோடி செலவு செய்துள்ளதாக நியூஸ் மட்டும் தான் வருகிறது...வந்தால் எத்தனை காட்சிகள் ஓடுகிறது என்று பார்ப்போம்....

  ரஜினியின் சிவாஜிக்கு முந்தின படம் வரை ரி-ரிலீஸ் மவுசு இல்லை என்பதை ஒத்து கொண்டதற்கு நன்றி....சிவாஜி 3D ரிலீஸ் ஆனால் அதற்கும் மவுசு இல்லை என்பதை ஒத்துகொள்வீர்கள்.

  காமெடி ஆர்டிக்கிளுக்கு பதில் கூறும் அளவுக்கு அவ்வளவு வெட்டியாகவா இருக்கிறீர்கள் ???

  ReplyDelete