Ads 468x60px

Tuesday, November 27, 2012

கமல் ரசிகர்கள் Vs மற்ற ரசிகர்கள்

உலகில் எந்த நடிகர்களின் ரசிகர்களுக்கும் இல்லாத சிறப்பு கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு உண்டு. தென்னிந்திய சினிமாவின் பல நடிகர்களுக்கு  ஒரு படம் ஓடி விட்டாலே அரசியல் ஆசை வந்துவிடும். எம்ஜிஆர், என்டிஆர் தவிர அரசியல் ஆசையில் வீழ்ந்தவர்களே அதிகம்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர் ஒருவர் அவர்களின் ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டியே காலத்தை ஓட்டிவிட்டார், இவரின் ரசிகர்களுக்கு இப்போது வயது 50க்கும் மேல் ஆகிவிட்டது, அவர்களுக்கு அந்த நடிகரின் பேனர்களுக்கு பால் ஊற்ற தெரியும்,  பீடி குடிக்க தெரியும். அவர்களால் அவர்களின் குடும்பங்களுக்கே உபயோகம் இல்லாத போது நாட்டிற்கு என்ன உபயோகம் ஆகிவிடும்.

கமலின் படங்கள் எப்படி தனித்துவம் வாய்ந்ததோ, அதே போல அவரின் ரசிகர்களையும் மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல அல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக மாற்றியுள்ளார். எம்ஜியார், கமலை அரசியலுக்கு 1986லே அழைத்தாலும், அதை மறுத்து, தன் ரசிகர்ளுக்கும் அந்த ஆசை இல்லாமல் பார்த்துகொண்டார். கமல் ரசிகர்கள் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல, அவர்களால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒருவகையில் உபயோகமாக இருக்கும் படி இன்றும் வழி நடத்துகிறார் கமல்ஹாசன்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான், விருதுநகர் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, நவம்பர் 25 அன்று, சிவகாசி அண்ணா காலனியில், உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த தினம் நற்பணி விழாவாக கொண்டாடப்பட்டது.

நற்பணி விழாவை, விருதுநகர் மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் A.S.நாகராஜன், சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்திருந்தார். சிவகாசி செயல்வீரர் சசிபாலன் அவருக்கு உறுதுணையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பம்பரமாக சுழன்று விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்தார்.

நற்பணி விழாவை, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் R.தங்கவேலு தலைமை தாங்கினார்.நற்பணி விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பின்வருமாறு....

1. அன்னை சாரதா ஆசிரம 100+ குழந்தைகளுக்கு காலை உணவு
2. இரத்த தான முகாம் ( 150+ கமல் ரசிகர்கள்  )
3. மரக்கன்றுகள் (58) நடுதல்
4. கமல் ரசிகர்களின் சிலம்பாட்டம்

5. சிவகாசி மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்


6. CSI பள்ளி மன வளர்ச்சி குன்றிய 350+ குழந்தைகளுக்கு மதிய உணவு
7. முதியவர்களுக்கு இலவச வேட்டி/சேலை
8. சிறுவர்/சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

நற்பணி விழாவில், தேனி மாவட்ட பொறுப்பாளர் வைகை ஜெயக்குமார், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சந்துரு, தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் தர்மசரவணன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் அழகர், குமரி மாவட்ட பொறுப்பாளர் சசி,  மதுரையின் பரமக்குடியாரின் பயமறியா பாசக்காரப்பயலுக தலைவர் கொம்பமுத்துவும் அவருடைய குழுவும், சென்னையின் பாரடைஸ் யூனிட்  சேகர் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
9 comments:

 1. சூப்பர் பதிவு.. தளம் கூட அழகாக்கி விட்டீர்கள்.. ரசிகர்கள் இந்த வகையில் சண்டை தவிர்த்து நற்செயல் செய்ய இறங்கியது உண்மையிலே வரவேற்க்கதக்கது.. [இருந்தாலும் ரஜினிக்கு நேர் எதிராகவே தொடர்கிறீர்கள்.. இருந்தாலும் ஓகே]

  http://www.bloggernanban.com/2011/10/add-tamil-vote-buttons.html

  www.bloggernanban.com/2012/02/blog-post.html

  திரட்டிகள் இணைப்பு இருக்கிறது தேவையெனில் இணைத்து கொள்ளுங்க..

  ReplyDelete
 2. நன்றி ஹாரி!!! திரட்டிகளை கண்டிப்பாக உபயோகித்து கொள்கிறேன்...

  ரஜினி பற்றி ஏதேனும் பொய் தகவல்கள் இங்கே இருந்தால் கூறுங்கள், கண்டிப்பாக நீக்கி விடுகிறேன்...

  ReplyDelete
 3. பாஸ் நீங்க கமலோட போர்வாள் மட்டும்தான்னு நினைத்தேன் , அப்பப்ப விஜய்க்கும் அந்த வாள் வேலை பார்க்கும் போல ...

  ReplyDelete
  Replies
  1. அஜித்துக்கு, ரஜினி ரசிகருங்க, தூக்குற சொம்பை விடவா....

   Delete
 4. ராஜா...

  சிவகாசி விஜய் ரசிகர்கள் இந்த பேனரை கண்டிப்பாக இந்த தளத்தில் ஏற்ற சொன்னார்கள்.. அவர்கள் செலவு செய்து கமல் நற்பணி விழாவை வாழ்த்தும் போது என்னால் மறுக்க முடிய வில்லை....

  நான் என்ன "துப்பாக்கி" பேனரையா இங்கே போட்டிருக்கிறேன்???... புரளியை கெளப்பிடாதீங்க ராசாசாசாசாசாசா.......

  ReplyDelete
 5. நீங்க சொன்னது ரொம்ப சரி கரன். இப்ப கூட பாருங்க ரஜினி ரசிகருங்க, அவர் பிறந்த நாளை ஏதோ திருவிழா மாதிரி தான் பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்களே தவிர மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்வோம்னு ஒரு அறிவிப்பும் இல்லை. கேட்டா விளம்பரம் இல்லாம செய்வோம்னு சப்பை கட்டு கட்டுவாங்க. இப்ப அவங்க கவலை எல்லாம் வள்ளுவர் கோட்டத்துல நடக்குற ரஜினி பிறந்த நாள் விழாவுக்கு இன்னும் முறையான அனுமதி வரலைன்றது தான். ரஜினியே முகம் சிவந்துட்டாராம். இன்னொரு கூட்டம் ஆல்பம் விக்குது, சில புத்த வியாபாரிங்க ரஜினிய வச்சு நிர்வாகவியல் புத்தகம் எழுதி 12 ஆம் தேதி வெளியிடப் போறாங்களாம். ரஜினி பிறந்த நாள் எப்படி எல்லாம் வியாபாரம் ஆக பயன் படுது பாருங்க. இப்பவே இந்த ஆட்டம். இன்னும் அரசியல் அது இதுன்னு வந்துட்டா ரஜினி ஒரு அசல் வியாபார பொருள் ஆயிடுவாரு. (இனி சத்தியமா அவரு வரப் போறது இல்லை).

  ReplyDelete
 6. பாவம்யா அவங்க. எவ்வளவு அடிச்சாலும் தாங்கராங்க. இன்னமுமா அவர எதிர்பார்க்கிறாங்க. அவர்தான் எதாவது குட்டிகதை(அதுக்குதான் லாயக்கு) சொல்லி திருத்தனும்

  ReplyDelete