Ads 468x60px

Friday, January 25, 2013

விஸ்வரூபம் காண திக் திக் திருப்பதி பயணம்

விஸ்வரூபத்தை தமிழ்நாட்டில் தடை செய்தவர்களுக்கு நன்றி... தடைகளை தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் கமல், மாநிலங்கள் தாண்டி விஸ்வரூபத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்!!!

அப்படி மாநிலம் தாண்டிய கமல் ரசிகர்கள் குழுவில் ஒன்றான எங்கள் சென்னை குழு, நேற்று இரவு பைலட் தியேட்டரில் முடிவு செய்தது திருப்பதி அல்லது நெல்லூர் சென்று விஸ்வரூபம் பார்ப்பது என்று. ஆனால் இரவு 12 மணிக்கு தான் ஆந்திராவில் விஸ்வரூபம் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது என்று உறுதியானது. இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது என்று முடிவு செய்தோம், ஆனால் நாங்கள் ஆறு பேரும் போரூரை தொடுவதற்கே 6 மணி ஆகிவிட்டது.

திருப்பதியை எங்கள் இன்னோவா தொட்டபோது, எனக்கு சென்னையிலிருந்து அழைப்பு வந்தது, ஆந்திராவிலும் படத்தை தடை செய்துவிட்டார்கள் என்று, ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கடா என்றிருந்தது, சரி வந்தது வந்து விட்டோம் தியேட்டரையாவது பார்த்து விட்டு செல்வோம் என்று பஸ்நிலையம் அருகிலிருக்கும் ஜெயசியாம் தியேட்டருக்கு சென்றோம்.


ஆனால் பகல் காட்சிக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்கள், கும்பலில் அடித்து பிடித்து டிக்கெட்டுகளை வாங்கினோம், அதற்குள் நெல்லூரில் அரை மணி நேரத்திற்கு பின் படத்தை நிறுத்தி விட்ட செய்தி கிடைத்தது. வந்ததுக்கு ஓப்பனிங் பாடலை மட்டும் காட்டுங்கடா, அதை மட்டும் பார்த்துட்டு போறோம்டான்னு என்றிருந்தது எங்களுக்கு.

தியேட்டருக்குள் நுழையும் வரை படம் போடுவாங்களா மாட்டாங்களா, படத்தை ஆரம்பித்த பிறகு ஓப்பனிங் சாங் வரையாவது போடுவாங்களா மாட்டாங்களா என்று எண்ணிகொண்டு பார்த்து கொண்டிருந்தோம், "உனை காணாத" பாடல் முடிந்த பிறகு, ங்கோத்** இது போதும்டா சென்னையிலிருந்து வந்ததுக்கு என்றிருந்தது.

அதன்பின், படம் ஜெட் வேகத்தில் சென்றதில் படத்தை நிறுத்துவார்களா என்ற கவலையே மறந்தது. இது போன்று ஆக்ஷ்ன் + திரில்லிங் இந்திய சினிமாக்களில் இதற்கு முன் யாரும் செய்ததில்லை, அதற்கு "உலக இயக்குனர்" கமலுக்கு ராயல் சல்யூட்கள்!!!



உலக தமிழ் நாயகனின் உலக சினிமாவை தமிழ்நாட்டில் காண தமிழனுக்கு தடை, எனவே நாங்கள் கேள்வி மட்டும் பட்ட தெலுங்கு கமலின் மாஸை நேரில் காணமுடிந்தது. அதற்கு தமிழக அரசிற்கு நன்றி.





11 comments:

  1. சண்டியரே..... சாதிச்சிட்ட பா நீ ........... சந்தோஷம்.......

    தடை நீங்கிய பின் சென்னையில் சந்திப்போம். கொண்டாடுவோம்.

    ReplyDelete
  2. aiyya sandiyare... unmayana sandiyar thaan neer....! ennal thaan mumbai irunthu kondu onnum panna mudiyala....!

    ReplyDelete
  3. தடை நீங்கட்டும். இங்கே கொண்டாடி விடுவோம்

    ReplyDelete
  4. புதிய தலைமுறை சேனலில் படம் தடை செய்ய பட்ட அன்று இரவு விவாதம் நடந்தது.அதில் பேசிய ஒரு முஸ்லிம் இயக்க தலைவரிடம் கேட்ட்க்கபட்ட கேள்வி ஆப்கானில் நடப்பதை காட்டும்போது வேறு எப்படி காட்டுவது என்று கேள்வி.அதற்க்கு அவர் சொன்ன பதில் "கமலை யார் ஆப்கானில் நடப்பதை எல்லாம் எடுக்க சொன்னது ? வேறு கதையே கிடைக்கவில்லையா ? இன்னும் எடுக்க படாமல் எவ்வளவோ கதைகள் இருக்க இவர் ஏன் ஆப்கன் விஷயம் எல்லாம் எடுக்கிறார்.?

    இது எப்படி இருக்கு பாருங்க

    ReplyDelete
  5. கரன் ரொம்ப பொறாமையா இருக்கு உங்களை நினைச்சா. பெங்களூர்ல கூட இன்னும் ரிலீஸ் பண்ணலே. எப்ப தான் பார்க்க போறோமோ?

    ஆனா இன்னொரு வகையில பொறாமை பிடிச்ச தனி வழி ஆளுங்க போட்டு இருக்குற விமர்சனத்தை பார்த்தீங்களா? எழுதுனவருக்கும், அதை நக்குனவங்களுக்கும் உடம்பு பூரா காண்டு பொங்கி வழியுதை பார்த்தா சிப்பு சிப்பா வருது. இவ்வளவு பில்ட்-அப் கொடுக்குற அளவுக்கு படம் ஒன்னும் இல்லையாம். சாதாரண கதை தானாம். ஒருத்தரு 'அப்போ படம் புட்டுகுச்சான்னு' வேற சொரிஞ்சுக்குராறு. உங்களை வேற ஒருத்தரு உள்ள இழுத்து இருக்காரு. திருந்தவே மாட்டனுங்களா? உலகம் எப்படி react பண்ணுது, இன்னும் வாயை தொரக்கலேன்னா தன் இமேஜ் பாதிக்கப் பட்டுடும்னு நினைச்சு மெதுவா அவங்க தலைவர் இஸ்லாமிய குழுக்களுக்கு கோபம் வராத மாதிரி ஒரு அறிக்கை விட்டு இருக்குறதுக்கே, அவரு சொக்க தங்கம், அவர் மனசு மாதிரி வருமா,ஆனா பாட்சா படப் பிரச்சினையின் போது கமல் ஆதரவு தரலே. தலைவர் மனசு தனி தான்னு ஜல்லி வேற.

    பெரிய காமெடி கூட்டங்க அது.

    உண்மையிலேயே உலக நாயகன்னு நச்சுன்னு நிரூபிச்சு இருக்காரு கமல். கொஞ்ச நாளுக்கு ஜெலுசில் வியாபாரம் சக்கை போடு போடும். படத்தை உலக மார்கெட்டுக்கு கொண்டு போக, ஷங்கர், ரகுமான், ஐஸ்வர்யா ராய் னு படா படா பேரு எதுவும் தேவை இல்ல, தன் படத்துக்கு கமல் ஒருத்தரே போதும். இன்னும் ரெண்டு படம் அடுத்தடுத்து இந்த மாதிரி வந்தா, தெரியும் உலகத்துக்கு, யாரு கிங்குன்னு.

    படம்னா வெறும் வர்த்தகம் மட்டும் இல்லை உலக்த்தரமும் தான்னு இனியாவது மக்கள் புரிஞ்சுக்கணும்.

    ReplyDelete
  6. உலக தமிழ் நாயகனின் உலக சினிமாவை தமிழ்நாட்டில் காண தமிழனுக்கு தடை, எனவே நாங்கள் கேள்வி மட்டும் பட்ட தெலுங்கு கமலின் மாஸை நேரில் காணமுடிந்தது. அதற்கு தமிழக அரசிற்கு நன்றி.///

    நல்ல முயற்சி.... தமிழக அரசுக்கு சொன்ன நன்றி தகும்....

    ReplyDelete
  7. Bangalore - Bommanahalli - Krishna - Relased Yeterday itself :)

    ReplyDelete
  8. I think this is not the time to make fun of one another, even as a Rajini fan I feel what is happening to Kamal is just not acceptable at any cost. How can a movie be stopped in TN and run in all other places, apart from Kamal as a producer there are others who are at stake and don't forget, let the movie release and people decide what is good or bad, this is shameful on those objecting the release of the film

    ReplyDelete
  9. This issue root cause is satellite rights

    ReplyDelete
  10. தலைவரின் வெற்றியை விஸ்வரூபவெற்றியாய் மாற்ற காரணமான அந்த நாலு பேருக்கு நன்றி !
    1. தலைவரின் கருத்து சிதைவிற்கு தான் காரணமாகக்கூடாது என்று ஆரம்பத்திலேயே விலகிய செல்வராகவனுக்கு நன்றி !
    2.தலைவரின் படத்திற்கு மேலும் தன்னால் நிதி உதவி செய்ய இயலாமல் கலை சிதைவிற்கு தான் காரணமாகக்கூடாது என்று இடையிலேயே விலகிய pvpக்கு நன்றி !
    3. ஒரு பு(லி)ளிகேசி படம் பார்த்துவிட்டு, மற்ற23 புளிகேசிகலும் படம் பார்க்காமல் தலைவர் மீது போருக்கு அழைத்து
    படத்தை புளிக்க வைப்பதாக நினைத்து பொங்க வைத்த 24 புளிகேசிகளுக்கும் நன்றி !
    4. குழம்பு புளிகேசிகள் பேச்சை உண்மை என்று நம்பி விஸ்வரூபத்தை தடை, தடைக்குதடை என, வெற்றியெனும்
    விஸ்வரூப சுனாமியை கொடுக்க வித்திட்ட தமிழகரசுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!! நன்றி !!!!

    ReplyDelete