Ads 468x60px

Wednesday, December 26, 2012

மாஸ் = கமல்

இந்த பதிவின் தலைப்பு பரபரப்புக்காக இல்லை.. . உண்மையை இவ்வுலகம் தெரிந்து கொள்ள தான்...


முதலில் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்,இது கமல்ஹாசன் விஸ்வரூபம் புரோமோஷனுக்கு உத்திரபிரதேஷம் லக்னோவிற்கு சென்ற போது எடுக்கப்பட்டது.

இந்த கூட்டம் கமல்ஹாசனை கண்டவுடன் தங்களை மீறி அதி மகிழ்ச்சியில் அவர்கள் போடும் சத்தம் தான், கமலுக்கு இன்றும் வட இந்தியாவில் இருக்கும் மாஸ்-க்கு ஒரு சேம்பிள்...

இதற்காக கமல்,

1. மன்னிப்பு நடிகரை போல வட இந்தியா மீடியாவில் தன்னை பற்றியும் தன் படங்களை பற்றியும் தானே புகழ்ந்து கொண்டதில்லை...

2. உண்மையிலே அதிக சம்பளம் வாங்கியும்,  நான் தான் ஜாக்கி சானுக்கு அடுத்து என்று மீடியா மூலம் பரப்ப வில்லை...

3. சென்னைக்கு பிழைக்க வந்த நேபாளிகளை தன் வீட்டுக்கு அழைத்து, போட்டோ எடுத்து, தனக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உண்டு என்று பொய் சொல்லவில்லை...

கமல் செய்ததெல்லாம்,

1. மற்ற நடிகர்களை விட சிறப்பாக நடித்தது

2. சினிமாவில் புதிய முயற்சிகள் செய்ததது

3.வெற்றி தொல்விகளை பார்க்காமல் வித்தியாசமான படங்களை கொடுத்தது தான்.

எனவே தான் கமல் ஹிந்தியில் நேரடியாக நடித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியும், அவர் மீதுள்ள கிரேஸ் இன்றும் அப்படியே இருக்கிறது.

அப்படியே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை மெய்மறந்து தரிசித்த இளைஞர்கள் + இளைஞிகள் கூட்டத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்.


4 comments:

 1. வயர் பிஞ்சு போய் கன காலம் ஆயிடிச்சு
  என்னொரு விடயம் உங்க ஆழ்வார் பேட்டை அழிக்கவந்தான் பற்றி பதிவு எழுதினா என்ன இதுக்கு ரஜினிய இழுக்கிறீங்க உங்களுக்கு ஏதாவது மனநிலை பிரச்சினையா? அதுசரி ஜப்பான் பாராளுமன்றத்தில ஹர்பஜன் சிங்க் சாரி மன்மோகன் சிங்க் எதோ பேசினதா கேள்விபட்டேன். சில நேரம் ரஜினி மன்மோகன் சின்கிக்கும் காசு கொடுத்திருப்பார்

  ReplyDelete
 2. அமேரிக்காவில் மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாங்கோ, சப்பானில் சாக்கிசான் கூப்பிட்டாங்கோ ! என்னங்கடா கலர்கலரா ரீல் விடரீங்க. மக்களே பார்த்துக்குங்க இந்த பாவத்துக்கள்ளாம் நான் ஆளாகமாட்டேன். அத்தனையும் பொய். டேய் கார்த்திக் உண்ணைதெரியும்டா. எந்தஎந்த வேலைக்கு எப்படிஎப்படி முழிய டைப்டைப்பா மாத்துவன்னு. சன்டியர்கிட்ட வேண்டாம்மகனே.

  ReplyDelete
 3. karthik
  // வயர் பிஞ்சு போய் கன காலம் ஆயிடிச்சு //
  ரஜினியை நீங்களே இப்படி புகழலாமா?

  //அழிக்கவந்தான்//
  ஆம் மாயைகளை அழிக்கவந்தான்

  //மன்மோகன் சின்கிக்கும் காசு கொடுத்திருப்பார் //
  ஒப்புகொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 4. எனக்கு ரஜினி கமல் இரண்டு பேரையும் சிறு வயதிலிருந்தே மிகவும் பிடிக்கும். இரண்டு பேருமே திறமையானவர்கள் என்பதை மறுக்க முடியாது. இரண்டு பேருமே நம்மை அவர்களின் படங்கள் வாயிலாக சந்தோஷபடுத்தி இருக்கிறார்கள், சந்தோஷபடுத்துகிறார்கள், சந்தோஷபடுத்துவார்கள்.

  நீங்கள் தீவிர கமல் ரசிகர், அதற்காக ரஜினி அவர்களை பற்றி தவறாக எழுத வேண்டாம். கமலை பற்றி நாங்கள் அறியாத தகவல்களை எங்களுக்கு தாருங்கள் உங்கள் பதிவுகள் மூலமாக.

  ஒருவரை உயர்த்தி பேச இன்னொருவரை தாழ்த்த வேண்டாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்...

  நன்றி.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சண்டியரே.

  ReplyDelete