Ads 468x60px

Tuesday, April 14, 2015

அபூர்வ சகோதரர்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்


உலகநாயகன் குள்ளமாக நடித்து, தியேட்டர்களில் வசூல் வெள்ளம் புரண்டு ஓட வைத்த படம் அபூர்வ சகோதரர்கள்.

அதுமட்டுமா? உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள், அதற்கு ஒரு மாதத்திற்கு முன் வெளிவந்த ரஜினியின் ராஜாதி ராஜாவை, மூன்று வாரம் கழித்து வெளிவந்த ரஜினியின் சிவாவை, மூன்று மாதம் கழித்து வெளிவந்த ரஜினியின் ராஜா சின்ன ரோஜாவை எப்படி வீழ்த்தியது என்பதை நாம் அறிவோம்.மீண்டும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும் :
http://www.sandiyarkaran.com/2014/08/Kamal1FilmVs3rajinifilms.html

அபூர்வ சகோதரர்கள், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனை சரித்திரங்கள் இதோ....
  • அதிக பார்வையாளர்கள் பார்த்த படம் என்று சிவாஜி நடித்த திரிசூலம் செய்த சாதனையை முறியடித்தது.
  • எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை சென்னை தேவிபாரடைஸில் 197 நாட்கள் ஓடி முறியடித்தது.
  • தமிழ், தெலுங்கு(டப்பிங்), ஹிந்தி(டப்பிங்) என்று மூன்று மொழிகளிலும் வெள்ளி விழாவை தாண்டி ஓடிய முதல் தமிழ் படம்.
  • சென்னையில் மட்டும் முதல்  78 நாட்களில் தொடர்ந்து 1000+ ஹவுஸ்புல் காட்சிகள் சாதனை படைத்த ஒரே படம்.
  • சென்னை காசி தியேட்டரில் 197 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்
  • சென்னை அபிராமி தியேட்டரில் 148 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்
  • பெங்களூரில் 5 தியேட்டர்களில் (பல்லவி, நட்ராஜ், கல்பனா, லட்சுமி,  சாந்தி) 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்.
  • சகலகலாவல்லவனுக்கு பின் 4 மாநகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூரு) வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் படம்.
  • கேரளாவில் 100 நாட்களையும், கர்நாடகாவில் 200 நாட்களையும் கொண்டாடிய முதல் தமிழ் படம்.
  • 10 தியேட்டர்களில் 20 வாரங்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் ரெகுலர் காட்சிகளில் ஓடிய ஒரே தமிழ் படம்.
    1. சென்னை - தேவி பாரடைஸ்
    2. சென்னை - அபிராமி
    3. சென்னை - அகஸ்தியா
    4. சென்னை - காசி
    5. பெங்களூரு - பல்லவி
    6. மதுரை - அபிராமி
    7. கோவை - அர்ச்சனா
    8. திருச்சி - மாரீஸ் ராக்
    9. சேலம் - கைலாஷ்
    10. நாகர்கோவில் - மினி சக்கரவர்த்தி




0 comments:

Post a Comment