Ads 468x60px

Tuesday, July 1, 2014

தேவர்மகன் - சாதனைகள்

உலகநாயகனின் தேவர்மகன் தான் தமிழில் 75 க்கும் அதிகமான திரையரங்குகளில் 50 நாட்களையும்  16 திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்த முதல் படம்.

மேலும், சென்னையில் ரிலீஸ் ஆன 7 திரையரங்குகளிலும் 50 நாள் கொண்டாடிய முதல் படமும் தேவர்மகன் (1992) தான்!!!

1.தேவி
2.உதயம்
3.அன்னை அபிராமி
4.சக்தி அபிராமி
5.அகஸ்தியா
6.பிரார்த்தனா (டிரைவ்-இன்)
7.பிருந்தா





மேலும் இப்படம் சென்னையிலும் மதுரையிலும் வெள்ளிவிழா கொண்டாடியது மட்டுமல்லாமல், முந்தைய வசூல் சாதனைகளை தன் காலடியில் போட்டு மிதித்து புதிய சரித்திரம் படைத்தது.

அதுமட்டுமல்ல, போட்டிக்கு வந்த ரஜினியின் பாண்டியனை, உலகநாயகன் "சாந்து பொட்டு சந்தன பொட்டு எடுத்து" உடம்பு முழுவதும் வைத்து வீழ்த்தினார். இது தான் ரஜினியின் நிலைமை, கமல்ஹாசன் MASS / MASS+CLASS படம் எடுத்தால்.

திருச்சி மாரீஸ் தியேட்டரில் 100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகள் சாதனை புரிந்த முதல் திரைப்படம் உலகநாயகனின் தேவர்மகன்!!!!



மதுரை மீனாட்சி தியேட்டரில், முதல் 4 வாரத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1,66,891. இன்று ஒரு டிக்கெட் விலை 100 ரூபாய் என்றால், அன்றைய வசூலின் இன்றைய மதிப்பு 1.6 கோடி (அதுவும் 1 திரையரங்கில் முதல் 4 வாரத்தில்)....


எத்தனை காட்சிகள் திரையடுகிறார்கள் என்பதை மட்டும் வைத்து வசூல் கணக்கு போடக்கூடாது என்பது ரஜினி ரசிகர்களுக்கு புரிந்திருக்கும், எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது தான் வசூல் கணக்கை சரியாக கணிக்கும்.


தமிழகத்தில் தடைகள் தாண்டி ரிலீஸ் ஆனதால். விஸ்வரூபம் படத்திற்கு எந்திரனை விட சில காட்சிகள் சென்னையில்  குறைவு என்றாலும், வசூலில் விஸ்வரூபம் எந்திரனை விட மிக மிக அதிகம் என்பதற்கு, அதிக எண்ணிக்கையில் மக்கள் படத்தை பார்த்ததே காரணம்.

0 comments:

Post a Comment