Ads 468x60px

Wednesday, February 5, 2014

கோச்சடையானும் 6000 காமெடிகளும்

நேற்றே ரஜினி சார்பு ஒந்தியா தளம், கோச்சடையான் 6000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று கட்டுரை வடிவில் விளம்பரம் செய்திருந்தது. இது வெறும் காமெடி என்பதால், இது சாத்தியமாகாது என்று விளக்கம் கொடுப்பது அவசியமற்றது.

ஆனால் இன்றைய ஹிந்து பேப்பரிலும் இந்த காமெடி செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. அதை படிக்கும் போதே இன்று நம் தளத்தில் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அது மட்டுமல்ல, ஆபிஸூக்கு வந்தவுடன் உடன் பணி புரியம் நண்பர் ஒருவர் "விஸ்வரூபம் 2" எப்போ ரிலீஸ் என்று கேட்டு விட்டு, கோச்சடையான் 6000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்றாங்களாமே... மேலும் முதல் மூன்று நாளிலேயே 300 கோடி வசூல் ஆகி விடுமாமே என்றார்.

மீடியாக்களின் சூட்சமம் புரியாமல் இவரை போல எத்தனை அப்பாவிகள் இவர்கள் போடுவதையெல்லாம் நம்பி கொண்டிருப்பார்கள். எனவே உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவது எனது கடமை என உடனே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

படம் ரிலீஸாவது, உலகம் முழுவதும் 6000 தியேட்டர்களாம், இந்தியாவில் மட்டும் 3500 தியேட்டர்களாம். முதலில் இந்தியாவில் மட்டுமாவது நடக்குமா என்று பார்ப்போம்.

இத்தனை தியேட்டர்களில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகாது, இருந்தாலும் எண்ணிக்கைகளை முடிந்த அளவு அதிகமாகவே போட்டுக் கொள்வோம்.

தமிழ்நாடு - 400 தியேட்டர்கள்
கேரளா  - 100 தியேட்டர்கள்
கர்நாடகா  - 100 தியேட்டர்கள்
ஆந்திரா  - 300 தியேட்டர்கள்
வட இந்தியா  - 200 தியேட்டர்கள் என ரிலீஸ் ஆகிறது என்று வைத்து கொள்வோம்.

அப்படி போட்டுமே 1100 தான் வருகிறது.

நாம் வாரி வழங்கிய எண்ணிக்கையே, அவர்கள் வெளியிட்ட எண்ணிக்கையில் 31% தான் வருகிறது.

படம் ரிலீஸ் செய்யப்படும் போது, உண்மையான தியேட்டர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டுமே 300 இருந்தாலே ஆச்சர்யம் தான். அப்படி 300 தியேட்டர்கள் என்றால், உண்மை நிலவரம் 8% தான்.

இந்த 300 தியேட்டர்களில் அவர்கள் கூறிய படி 400 இருக்கைகளில் 4 காட்சிகளாக 120 ரூபாய் டிக்கெட்டுகள் அரங்கம் 100% நிறைந்தால் (நடக்குமா?), ஒரு நாளைக்கு ரூ 5 கோடியே 76 லட்சங்கள்  சம்பாதிக்கும்.

மேலும் இந்த படம் தமிழ்நாட்டிலாவது அனைத்து ஊர்களிலும் முதல் காட்சி ஹவுஸ்புல் ஆனால் அதுவே இந்த படத்தின் மாபெரும் சாதனை.

அந்த சாதனையை நிகழ்த்தி FACEBOOK காலத்தின் BLOOD STONE ஆகாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்.

13 comments:

 1. சண்டியர் கரன் அவர்களே, உங்களோட புலம்பல் எப்போதுதான் முடியுமோ!

  விஸ்வரூபம் படம் ஹிட் ஆனதே இந்த முஸ்லிம் பிரச்சனைகளால் தான் என்று ஊருக்குள்ளே ஒரு மறைமுகமான பேச்சு இருந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த காமெடி தேவையா?

  ReplyDelete
 2. ஆறுமுக சாமியண்ணே...

  பேரை மாத்தி மாத்தி ஆறேழு வருஷங்களா எடுத்தும் எந்த விநியோகிஸ்தரும் சிக்காத படத்துக்கு இவ்வளவு பீலா தேவையா?

  ReplyDelete
 3. அய்யோ ராமா பொம்ம படத்திலிருந்து உலகத்த காப்பாத்து

  ReplyDelete
 4. விஜய் அஜித் படத்துடன் ரிலிஸ் செய்யாமல் தனியாக ரிலிஸ் செய்யும்போதே தெரிகிறது கோச்சடையான் படம் எப்படி இருக்கும் என்று...

  ReplyDelete
  Replies
  1. அண்ணே... இன்னும் கோச்சடையான் படத்தின் post-production வேலைகளே முடியவில்லை. அதெல்லாம் முடிந்தால்தானே படத்தை வெளியிட முடியும்!

   Delete
  2. படம் ரெடி தான்....ஆனா தியேட்டர்/விநியோகிஸ்தர்கள் ரெடி இல்லை....இந்த படத்தை வெளியிட....

   Delete
 5. கமல் மிக தந்திரமான முறையில் விஸ்வரூபம் படத்தை நாடு முழுவதும் விளம்பரப்படுத்த யோசித்தார். இதன் விளைவாக கமலே இந்த‌ முஸ்லீம் பிரச்சனைகளை கிளப்பிவிட்டு விஸ்வரூபம் படத்தை இதில் சிக்க‌ வைத்து விளம்பரப்படுத்தினார். பிறகு எல்லாம் மீடியா channelலிலும் வந்து "நான் என் சொத்துக்களை அடமானம் வைத்து படத்தை எடுத்திருக்கிறேன்", "நான் நாட்டை விட்டு வெளியேறுவேன்" என்றெல்லாம் build-up குடுத்து மிக தந்திரமான முறையில் மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை கமல் தேடிக்கொண்டார். இதை காரணமாக கொண்டு மக்களை திரையரங்கத்துக்கு வரவழைத்து விஸ்வரூபம் படத்தை ஓட்ட வைத்தார்.

  இப்படி கூட‌ நீங்கள் உங்களோட blogஇல் எழுதலாமே, சண்டியர் கரன் அவர்களே ...

  ReplyDelete
  Replies
  1. இதே தந்திரத்தை ரஜினியையும் கோச்சசடையான் படத்திற்கு செய்ய சொல்லுங்க.... படம் கண்டிப்பா ஓடாது.... ஏன்னா படத்தில எதாவது விஷயம் இருக்கணும்யா வசூல் செய்ய....

   Delete
  2. விஸ்வரூபம் படத்துல Entertainment-னு சொல்லிக் கொள்கிற‌ அளவுக்கு என்ன இருந்தது (அந்த சண்டைக்காட்சியை தவிர‌)?

   Delete
  3. டேய்......மெண்டல் ரசிகனே.... ENTERTAINMENT இல்லை என்று சொல்லிட்டு சண்டைக்காட்சி இருக்கிறது என்று சொல்கிறாய்... மெண்டல் குரூப் என்பதை நிரூபித்து கொண்டே இருக்காதிங்கடா...

   Delete
 6. //டேய்......மெண்டல் ரசிகனே.... ENTERTAINMENT இல்லை என்று சொல்லிட்டு சண்டைக்காட்சி இருக்கிறது என்று சொல்கிறாய்... மெண்டல் குரூப் என்பதை நிரூபித்து கொண்டே இருக்காதிங்கடா...

  சரி உங்ககிட்ட இருந்து வேறு என்ன நாகரிகத்தை எதிர்பார்க்க முடியும்? அந்த சண்டைக்காட்சி படத்தில் வெறும் இரண்டு நிமிடங்கள்தான். அதைத்தானே அவரும் கேட்கிறார். அது புரியவில்லையா? இல்லை புரிந்து கொள்ள விரும்பவில்லையா?

  இது நாங்களே எங்களுக்கும் சொறிந்து கொள்ளும் தளம். வேறு யாருக்கும் சும்மா கேள்வி கேட்கும் உரிமை கூட இல்லை என்பதை சொல்லிவிட்டால் இந்த பிரச்சனையே இல்லை. அதுசரி, எந்திரனை, விஸ்வரூபம் வசூலில் வீழ்த்தியது எப்படி என்று ஒரு பதிவு எழுதுகிறேன் என்று சொன்னீர்கள். உங்க ஆடிட்டர் ரொம்ப பிசியா?
  (என்னையும் மெண்டல் ரசிகன் என்று அர்ச்சனையை ஆரம்பிக்கவும் வயத்து வலிக்காரன் புலம்புவது போல )

  ReplyDelete
 7. நான் நினைகிறேன் Arumuga Saamy மற்றும் Sandiyar Karan ரெண்டு பேரும் ஒன்னெதான்.........

  ReplyDelete
 8. ரஜினி மாயை முடிந்து விட்டது ..
  அவர் தான் பாவம் மகளுக்காக பொம்மை படத்தில் மாட்டிக்கொண்டு வருந்துகிறாள்..
  நீங்களும் ஏன் கலாய்க்கிரீர்..?
  விஸ்வரூபம் பற்றி அரை வேக்காட்டுத்தனமான கருத்தை கூறி காமெடி செய்கிறார் ஒரு நண்பர் ...
  கமல் படம் வெறும் பொழுதுபோக்கு படம் அல்ல.. எப்பவுமே!!!
  பேத்தி வயது ஹீரோயின் , கிக்கிரி பிக்கிரி காமெடி , ரசிகனை வெரியேற்றும் பன்ச் டயலாக் , இவை தானே உங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் ?
  எந்த காலத்தில் கமல் படங்களில் இவை இருந்த்து ?
  நாங்கள் தெளிவாக இருக்கிறோம் ..
  கமல் ரசிகனாக இருப்பதன் அடையாளம் இதுவே..
  எங்களுக்கு கமல் தன் மகள் திருமணத்திற்கு பிரியாணி விருந்தும் போடமாட்டார் , எங்கள் கோமனத்தை உருவி அதிலும் காசு பார்க்க
  மாட்டார் ..

  ReplyDelete