Ads 468x60px

Friday, September 7, 2012

தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் - கமல்

தோண்ட தோண்ட புதையல் கிடைத்தால் எப்படியிருக்குமோ, அது மாதிரி கமல்ஹாசனின் வெள்ளி விழா படங்களை பற்றி எழுதலாம் என்று புள்ளிவிவரங்களை சேகரித்த போது, எனக்கு கிடைத்த தகவல்கள் ஏராளம். அதில் ஒன்று தான் கமல் படங்களின் "தொடர் ஹவுஸ்புல் சாதனைகள்" .

"தொடர் ஹவுஸ்புல் சாதனைகள்" எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், முதல் காட்சியிலிருந்து எத்தனையாவது காட்சி வரை தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சியாக ஓடியது என்பதன் எண்ணிக்கையே.


ரஜினி வழியில் இன்றும் அவரது வாரிசாக பவர் ஸ்டார் போன்றவர்கள் திரையரங்கை வாடகைக்கு எடுத்து ஓட்டிக்கொண்டிருக்கையில், கமல்ஹாசனின் திறமைகளை போன்று அவரின் இந்த "தொடர் ஹவுஸ்புல் சாதனைகளும்" மிக அபூர்வமானவையே!!!

இலங்கை - கொழும்புவில் கமல்ஹாசனின் "குரு" தொடர்ந்து 200 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.

சென்னையில் "மூன்றாம் பிறை" தொடர்ந்து 156 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.

பாண்டிச்சேரியில் "அபூர்வ சகோதரர்கள்" தொடர்ந்து 78 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.

கோவையில் "அபூர்வ சகோதரர்கள்" தொடர்ந்து 72 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது,

மொத்த சாதனை பட்டியல் கீழே,


திரைப்படம்திரையரங்குகள்ஹவுஸ்புல் காட்சிகள்
குருஸ்ரீலங்கா - கொழும்பு - கிங்ஸ்லிதொடர்ந்து 200 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்
சகலகலா வல்லவன்சென்னையில் 4 திரையரங்குகளில்தொடர்ந்து 1008 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள்)
சென்னை - அலங்கார் தொடர்ந்து 252 ஹவுஸ்புல் காட்சிகள் (84 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - அன்னை அபிராமிதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
சென்னை - மகாராணிதொடர்ந்து 216 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - AVM ராஜேஸ்வரிதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
பாண்டிச்சேரி - ருக்மணிதொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (43 நாட்கள்)
மூன்றாம் பிறைசென்னை - சுபம் தொடர்ந்து 624 ஹவுஸ்புல் காட்சிகள் (156 நாட்கள், 4 காட்சிகள்)
தூங்காதே தம்பி தூங்காதேசென்னை - சத்யம் தொடர்ந்து 128 ஹவுஸ்புல் காட்சிகள்
காக்கிசட்டை திருநெல்வேலி - சிவசக்திதொடர்ந்து 116 ஹவுஸ்புல் காட்சிகள்
அபூர்வ சகோதரர்கள்சென்னையில் 4 திரையரங்குகளில்தொடர்ந்து 1059 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள்)

சகலகலா வல்லவனின் முந்தைய சாதனைய முறியடித்தது
சென்னை - தேவிபாரடைஸ் தொடர்ந்து 300 ஹவுஸ்புல் காட்சிகள் (100 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - அபிராமிதொடர்ந்து 312 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள், 4 காட்சிகள்)

மொத்தம் 385 ஹவுஸ்புல் காட்சிகள் (101 நாட்கள், 4 காட்சிகள்)
சென்னை - அகஸ்தியா தொடர்ந்து 201 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - காசிதொடர்ந்து 400 ஹவுஸ்புல் காட்சிகள் (100 நாட்கள், 4 காட்சிகள்)
கோவை - அர்ச்சனாதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
திருப்பூர் - S.A.Pதொடர்ந்து 148 ஹவுஸ்புல் காட்சிகள் (மொத்தம் 110 நாட்கள்)
பெங்களூர் - நட்ராஜ்தொடர்ந்து 164 ஹவுஸ்புல் காட்சிகள் (மொத்தம் 112 நாட்கள்)
பாண்டிச்சேரி - ஸ்ரீபாலாஜிதொடர்ந்து 312 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
கடலூர் - கிருஷ்ணாலயாதொடர்ந்து 400 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
நாகர்கோவில் - மினிசக்கரவர்த்திதொடர்ந்து 326 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
திருநெல்வேலி - சென்ட்ரல்தொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)
குறிப்பு : மற்ற கமல் படங்களின் தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் கிடைக்கும் போது இப்பட்டியல் அப்டேட் செய்யப்படும்.



உலகநாயகன் படங்களின் தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் எனக்கு இமெயில் ( sandiyar_k@yahoo.co.in ) அனுப்பவும் அல்லது இப்பதிவில் பின்னூட்டம் செய்யுங்கள்

3 comments:

  1. சகா கொழும்பில் 200 நாள் ஹவுஸ்புல்லாக ஓடி கொன்கோர்ட் தியேட்டரில் 365 நாட்கள் ( ஒரு வருடம்) ஓடிய ஒரே ஒரு படம் குரு தான். இந்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.

    ReplyDelete
  2. வந்தியத்தேவரே....

    குரு இலங்கையில் 1095 நாட்கள் ஓடியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். உங்களிடம் அப்படி ஏதேனும் தகவல் இருக்கிறதா?

    ReplyDelete
  3. 365 நாட்கள் ஓடிய சாதனை ஒருமுறை உலகநாயகன் ஆர்குட் தளத்தில் படத்துடன் பதிந்திருந்தேன் மீண்டும் தேடிப்பார்க்கின்றேன். இங்கே 365 நாட்களும் 4 வேளைக் காட்சிகள் ஓடின. சிலவேளை ஒருவேளைக் காட்சியாக 1000 நாட்களைக் கடந்து ஓடியிருக்கலாம். ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றேன் சகா.

    ReplyDelete