Ads 468x60px

Friday, August 31, 2012

ரஜினியின் டெங்கு ராசி - Part 1


1983 நிகழ்வு : தேவர் பிலிம்ஸ் ரஜினியை வைத்து ஹிந்தி பட ரீமேக்காக தாய்வீடு என்ற படத்தை தயாரித்தது...

விளைவு : "வீடு" படத்தின் தலைப்பில் மட்டும் தான் இருந்தது.  தேவர் அவர்கள் தன் சொந்த வீட்டையே இழந்தார்.

1986 நிகழ்வு : கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் ராஜசேகரை பாதியில் இழுத்துக்கொண்டு போய் ரஜினி, மாவீரன் படத்தை தயாரித்தார்.

விளைவு :  மாவீரன் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய நடிகை ஜெயப்பிரதா, படத்தின் பெருத்த நஷ்டத்தால், சென்னையில் தன்னுடைய தியேட்டர்களை ( மிட்லண்ட & லியோ ) இழந்தார்.

1988 நிகழ்வு : மகாபலிபுரத்தை காண வந்த வெளிநாட்டவர்களை வைத்து, கூவம் ஆற்றின் கரையிலும், பல்லவாரத்தின் சந்து பொந்துகளிலும் எடுக்கப்பட்ட ரஜினியின் BLOODSTONE என்ற படத்தை ஆங்கிலப்படம் என்று நம்பி, படத்தின் விநியோகிக்கும் உரிமையை நடிகரும் இயக்குநருமான T.ராஜேந்தர் வாங்கினார்.

விளைவு :  தான் இயக்கி நடித்து சம்பாதித்த அத்தனையையும், இந்த ஒரு படத்தை வாங்கியதால் ஒரே நாளில் இழந்தார். பின்பு பத்திரிக்கையில் இப்படி பேட்டியளித்தார் "ரஜினிக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றார்கள், அவர்கள் அனைவரும் ஒரு தடவை பார்த்தாலே, இந்த படம் தப்பித்திருக்கும், ஆனால் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்பதை அவரே நிரூபித்துவிட்டார்".  

1991 நிகழ்வு :  ரஜினியின் தர்மதுரை என்ற படத்தை 100 நாள் ஓட்டிவிட்டார்கள், என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள் அவரின் ரசிகர்கள்.

விளைவு :  அது படத்தின் இயக்குநர் ராஜசேகருக்கே பொறுக்காமல் தானோ ஏனோ, அந்த 100 வது நாள் அன்றே  மாரடைப்பால் இறந்து விட்டார்.

1991 நிகழ்வு : ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற படத்தின் விநியோகிக்கும் உரிமையை தயாரிப்பாளர் வீராசாமி என்றவர் வாங்கினார். ஆனால் அது அந்த தயாரிப்பாளர் "வீட்டுக்கு ஒரு எமன்" ஆனது.

விளைவு : இந்த படம் முதல் காட்சியிலேயே WASHOUT ஆனதால் தயாரிப்பாளர் வீராசாமி மாரடைப்பால் இறந்தார். (இதை படித்தவுடன் ரஜினி ரசிகர்கள் இப்படி தான் முனங்குவார்கள், "ஆளவந்தான் படத்தால் தாணு கூட தான் நஷ்டமானார்".  இது தான் அவர்களுக்கான பதில் "அப்படி நஷ்டமடைந்திருந்தால் தாணுவால் இன்றும் எப்படி முன்னனி நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்க முடிகிறது? ".)

1992 நிகழ்வு மன்னன் திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை பண்டரிபாய், ரஜினிக்கு தாயாக, பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவராக, வலுக்கட்டாயமாக நடிக்க வைக்கப்பட்டார்.

விளைவு : பண்டரிபாய் அந்த படத்தில் நடித்ததற்கு பின், நிஜ வாழ்க்கையிலும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு இறந்தார்.

2002 நிகழ்வு : ரஜினி, தன்னுடைய குரு என்று சச்சிதானந்த மகராஜ் என்ற சாமியாரை, அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்து, ஆகஸ்ட் 14 அன்று சென்னை சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சியாக "பாபா" படத்தை திரையிட்டார்.

விளைவு : படத்தின் ஆரம்பத்தில் ரஜினி "ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருருரு" என்று வாயை திறந்து ஓபனிங் பாட்டு பாடும் போது, அந்த சாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது... சத்யம் தியேட்டரிலேயே உயிர் பிரிந்தது...  

2004  நிகழ்வு : தன் பாபா படத்தை பாமக ராமதாஸ் தான் UTTER FLOP ஆக்கினார் என்று நினைத்துக்கொண்டு, 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ்  தொ(ல்)லைகாட்சிகள் வாயிலாக கூவோ கூவு என்று கூவினார்.

விளைவு :  ஆனால் பாமக தான் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஒரு வேளை, ரஜினிக்கு ஆயிரக்கணக்கில் கூட ரசிகர்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு ஓட்டு போட தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு ஓட்டு போடும் வயதில்லையா?

2007 நிகழ்வு :  எப்ரல் 9 அன்று, "சிவாஜி" பட வேலைகள் முடிந்தவுடன் ECR-ல் படக்குழுவினருக்கு விருந்து கொடுக்கப்பட்டது.

விளைவு :  சிவாஜி படத்தின் ஒலியமைப்பாளர் சச்சிதானந்தம், நீச்சல் தொட்டிக்குள் மர்மமான முறையில் பிணமானார். பின் மப்பு ஓவராகியதால் தொட்டிக்குள் விழுந்து இறந்தார் என்று கேஸ் முடிக்கப்பட்டது.

2008 நிகழ்வு :  ரஜினி படங்களின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தெரியாமல், "குசேலன்" குழிக்குள் அனுப்புவான் என்று புரியாமல் , படத்தின் விநியோகிக்கும் உரிமையை 60 கோடிக்கு வாங்கியது "பிரமிடு சாய்மீரா"  என்ற நிறுவனம்.

விளைவு : "பிரமிடு சாய்மீரா"  என்ற நிறுவனத்தையே  குழிக்குள் போட்டு மூடியது "குசேலன்".

2014 நிகழ்வு :  லிங்காவை எந்த பழைய விநியோகிஸ்தர்களும் வாங்க முன் வராத நிலையில், தொழிலுக்கு புதிதாக வந்தவர்கள், மீடியாவில் வெளிவரும் ரஜினி படத்தின் வசூல் செய்திகள் ( காசு கொடுத்து போடப்படும் விளம்பரம் என புரியாமல் ) உண்மை என நம்பி, அதிக விலைக்கு வாங்கினர்.

விளைவு : ரஜினி பிறந்த நாளில் வெளியிட்ட ராசி, ரஜினி படத்தையே காவு வாங்கியது. வழக்கம் போல் கமுக்கமாக நஷ்டத்தை கொடுத்து கணக்கை முடிக்கும் ரஜினி, இந்த படத்திற்கு மட்டும் ஏன் செய்யவில்லை? கோச்சடையான் நஷ்டத்திற்கு  சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் இந்த லிங்கா என்பதாலா?

உலக சினிமா வரலாற்றில் நடைபெறாத வகையில் இந்த படத்தை வாங்கியவர்கள், நஷ்ட ஈட்டினை பெற சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்படியும் நஷ்ட ஈடு கிடைக்காததால், 14-பிப்ரவரி-2015 அன்று ரஜினி வீட்டு முன்பிருந்து "மெகா பிச்சை" எடுக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்று அறிவித்திருக்கின்றனர்.


இதையெல்லாம் படித்தபிறகு, மாப்பிள்ளை படத்தில் ரஜினி பாடும் "என்னோட ராசி நல்ல ராசி...." என்ற பாடல், உங்கள் காதுகளில் ஒலித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது...

13 comments:

  1. ரஜினி கைராசிக்காரர் என்றும் அவர் வந்தபின்புதான் தன் கடை பிரபலமானது என்றும் சொன்னார், திநகர் "புன்னகை செல்வரின் பொன்னகை கூடம்" உம்மிடி பங்காரு நகைக்கடை. கடைசியில் அந்தக்கடை மூடப்பட்டது.

    கமல்ஹாசன் வந்து வாழ்த்திய லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழு 100,500 மற்றும் 1000மாவது கச்சேரி நடந்து அவர் பெரிய அளவில் வெற்றி பெற்றனர்!

    ஆக, ராசி என்பது கடின உழைப்பில்தான் உள்ளது என நிரூபணம் ஆனது!

    ReplyDelete
  2. "புன்னகை செல்வரின் பொன்னகை கூடம்"

    ஆஹா நான் MISS பண்ணிட்டேனே....

    ReplyDelete
  3. சொல்ல மரந்துட்டேன், ரஜினி திறந்த அந்த நகைக்கடை மூடப்பட்டு விட்டது. கமல் துவக்கி வைத்த லக்ஷ்மண் ஷ்ருதி இன்றும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது!

    எல்லா ரஜினி படங்களும்(அட்டர் ஃப்ளாப் உள்பட) ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் நல்லநாள் நல்லநேரம் குறித்து பூஜைபோட்டுத்தான் துவங்குகிறது.

    உலகநாயகன் எந்த சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாமல் பூஜையே போடாமல் துவங்கிய படங்கள் சரித்திர வசூல் சாதனை புரிந்திருக்கிறது

    உழைப்பே வெல்லும்!!

    ReplyDelete
  4. ரஜினிக்கு என்னமோ அரசியல் செல்வாக்கு இருப்பதுபோல கமனாட்டி துக்ளக் சோ நினைச்சிக்கிட்டு பிஜேபி ல சொல்ல அவிங்க மெண்டலுக்கு ஒரு பெரிய மரியாதையை கொடுத்து மெண்டலுக்கு தமிழ் மக்களை சிகிரெட் பிடிக்க வைத்ததற்காக பத்மவிபூஷன் (வேற என்ன என்னத்துக்கு கொடுகிறது) (நம் தலைவனுக்கு வெறும் பத்மஸ்ரீ மட்டும் தான் ) கொடுத்தானுங்க , அதுக்கு கைமாறா மென்டலு 2009 பார்லிமென்ட் election ல கண்டிப்பா பிஜேபி நல்ல செல்வாக்கா இருக்கு ஆட்சியை பிடிக்கும் நு சொன்னனாறு அனால் கடந்த பத்தாண்டுகளா பூட்ட கேச ஆயிட்டு. விருதை கழுதைக்கு சூட்டி மகிழ்ந்து தங்கள் பதவியை இழந்தார்கள்

    ReplyDelete
  5. கமலஹாசனுக்கும் இந்த மாதிரி ராசி உண்டு. வேட்டையாடு விளையாடு படமெடுத்த ஹாஜாமொய்தீன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். கலைப்புலி தாணு ஆளவந்தான் எடுத்து அழ வந்தான் ஆனார். ஜி.என்.ரங்கராஜன் - மவராசன் எடுத்து நொந்து திரை உலகை விட்டே ஓடிப்போனார். ரஜினிக்கு ஒரு பா.ம.கட்சின்னா கமலுக்கு ஒரு விடுதலை சிறுத்தைகள். துண்டை காணோம், துணிய காணோம்னு மும்பை Xபிரஸ்ஸை ஓட ஓட விரட்டலயா? சண்டியரை விருமாண்டியா வெளுத்துக் கட்டின பெருமை புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமியை சேரும். தமிழ்நாட்டில் கௌதமியோடு சேர்ந்து லிவிங் டூகெதர் கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கு தானே உண்டு. "உன் குழந்தையும், என் குழந்தையும், நம் குழந்தையும் விளையாடுகினறன" என்கிற மேல்நாட்டு கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் கமலுக்கு தானே உண்டு.

    ReplyDelete
  6. ரஜினி படங்களின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தெரியாமல், "குசேலன்" குழிக்குள் அனுப்புவான் என்று புரியாமல் , படத்தின் விநியோகிக்கும் உரிமையை 60 கோடிக்கு வாங்கியது "பிரமிடு சாய்மீரா" என்ற நிறுவனம்.//

    pavam pyramid...Rajiniyala azhinjavanga pala per...

    ReplyDelete
  7. நிஜந்தன்

    மகராசன் படம் G.N.ரங்கராஜனுக்கு கமல் இலவசமாக நடித்து கொடுத்தது.. விவரம் தெரியாமல் பேசக்கூடாது.

    கமலால் பாதிக்கப்பட்டதாக நீங்கள் கூறுபவர்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால் ரஜினியால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை... ரஜினியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் யாவும் உயிர்கொல்லிகள்....

    மேல்நாட்டு கலாச்சாரம் கமல் கற்று கொடுக்காட்டி உங்கள மாதிரி ஆளுகளுக்கு ஒன்றுமே தெரியாது...

    ReplyDelete
  8. விடுதலைப்புலி எஸ் தாணு எடுத்த அனைத்து படங்களும் படுதோல்விப்படங்கள், மெண்டல் ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்து காசு பார்த்துவிடலாம் என்று அலைந்த தாணுவை ரஜினி தொரத்தி அடிக்க, மகளிர் மட்டும் படத்தில் விடுதலைப்புலி எஸ் தாணுவை கமல் நடிக்கவைத்தார். ரஜினி கால்ஷீட் கிடைக்காமல் இருந்த தாணு கமலை கெஞ்ச ஆளவந்தான் படம் தொடங்கப்பட்டது..
    விஜயகாந்த் நடித்த விடுதலைப்புலி தாணுவின் கூலிக்காரன் படத்துக்கு ராஜேந்தர் இசையமைத்தார்..அவருடன் விடுதலைப்புலி தாணு சண்டை..
    அடுத்த சிம்பு நடித்த -தொட்டி ஜெயா - சிம்புவுடனும் சண்டை
    விளம்பரப்படத்திருக்கு மட்டுமே லாயக்கான கேமெராமேன் ராஜீவ் மேனனின் படுமட்டமனான "கண்டுகொண்டேன் கண்டுட்கொண்டேன்" படத்திற்கு பிறகு ராஜீவ் மேனனிடம் சண்டை...
    ஆளவந்தான் எடுத்த பிறகு கமலஹாசனுடன் சண்டை..(ஆதாரம் :தினத்தந்தியில் வந்த வரலாற்று சுவடுகள்)
    இப்படி எல்லாருடனும் சண்டை போடும் தரித்திர படைப்புகள் விடுதலைப்புலி தாணு தான் சண்டைக்காரன்..
    இவ்வளவு தரித்திரம் பிடித்து தோல்விப்படங்கள் கொடுத்ததும் விடுதலைப்புலி தாணு இன்னும் படங்கள் எடுத்துக்கொண்டிருப்பதர்க்கு காரணம் விடுதலைப்புலிகளின் தமிழக பினாமியாக இருப்பதுதான் காரணம்..கடைசியில் இந்த பினாமி பணப்பிரச்சினையில் விடுதலைப்புலி தாணுவுக்கும், விடுதலைப்புலி வைக்கோலுக்கும் தகராறு வந்து பிரிந்தது ஒரு கதை..
    வர்றவன் எல்லாரிடமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாலேயே மெண்டல் ரஜினியால் விரட்டப்பட்ட தாணுதான் சண்டைக்காரனே ஒழிய....வேறு யார்..

    ReplyDelete
  9. பெரும்பாலும் தனக்கென செட்டகும் ஹிந்தி,தெலுங்குரீமேக் படங்களில் நடித்தே ரஜினி 1980-1990 வருடங்களை கடந்தார்.ரஜினி ரசிகர்கள் இரண்டு வகை .ஒன்று அந்த காலம் முதல் உள்ளவர்கள்.அடுத்தது சிறுசுகள்.அவர்கள் பாட்ஷா பார்த்துவிட்டு தலைவர் என்று சொல்லுகிறவர்கள்.மொத்தமாக ஒரு இருபது ,முப்பது ரஜினி படம் பார்த்திருப்பார்கள் அவ்வளவுதான்

    ReplyDelete
  10. மகராசன் படம் முன்பு ரங்கராஜன் கடன் நெருக்கடியில் இருந்தார். அந்த படத்தில் கமல் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். படம் குறுகிய காலத்திலே தயாரனது. நல்ல விலைக்கு விற்றது. ரங்கராஜனின் கடன்கள் தீர்ந்தன. அவரது வீட்டை அடமானதிலிருந்து மீட்கவும் தனியாக உதவினார்.

    //ரஜினியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் யாவும் உயிர்கொல்லிகள்....//
    புல், பூண்டு கூட முளைக்க முடியாத அளவிற்கான உயிர்கொல்லிகள்.

    ReplyDelete
  11. You can add the film "3" and upcoming "kochadaiyaan"

    ReplyDelete