Ads 468x60px

Friday, December 14, 2012

ரஜினி ரசிகர்களை ஏன் சந்தித்தார்?

தன் பிறந்த நாளுக்கு முன்பே இமயமலை அல்லது பெங்களூருக்கு டெலிவரி ஆகிவிடும் ரஜினி இந்த வருடம் சென்னையிலேயே இருந்தார்.

இதுவே அதிசயம் என்றால், தன் ரசிகர்களை வீட்டுக்கு வெளியே வேறு வந்து வந்து பார்த்திருக்கிறார்.

அதற்கும் மேலே, இவரது ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் வந்து மேடையேறி பேசியிருக்கிறார்.

இவையெல்லாம் 2011 வரை நடக்கவில்லை, ஏன் என்று கேட்டால் வெளியூர்களிலிருந்து இவரை காணவரும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பார்.



இந்த வருடம் மட்டும் நடந்ததற்கான காரணம் என்ன?

1. ஒருவேளை ரஜினிக்கு அவர் ஜோசியர் 2012 லிருந்து விபத்துக்கள் நடக்காது என்றிருப்பாரோ?


2. சிவாஜி 3D படத்தை அவரின் ரசிகர்களாவது பார்க்க வேண்டும் என்பதற்காகவா?

3. ஐந்து வருடங்களாக, சுல்தான் தி வாரியரை ராணாவாக்கி, ராணாவை கோச்சடையானாக்கி, தன் மகளால் கடனாளியாவுமாகி தத்தளிப்பதால், தப்பி தவறி படம் வெளியானால் ரசிகர்களாவது அந்த படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா?

4. மதுரை, கோவை & சென்னையிலே ஒரே நாளில் ஒவ்வாரு இடத்திலும் 10000க்கும் மேற்ப்பட்ட ரசிகர்களை கமல் கூட்டியாதாலா?

5. கமல் தன் விஸ்வரூபத்தை DTH-ல் ஒரு காட்சி வெளியிட போகிறேன் என்றவுடன், ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று இலவசமாக அவருக்கும் விஸ்வரூபத்துக்கும் கிடைத்த விளம்பரத்தாலா?

18 comments:

  1. காவேரி பிரச்சனையால் கன்னடர்களுக்கு சவால் எதாவது விட்டாரா?

    ReplyDelete
  2. idhula smoking drinking panaadeenganu advice panni comedy panitaru. i think he was drunk when he told that ;P

    ReplyDelete
  3. Farewell party-nu nenaikkiren.. Thaathaa field out aayittaarula..

    ReplyDelete
  4. "ஒருவேளை ரஜினிக்கு அவர் ஜோசியர் 2012 லிருந்து விபத்துக்கள் நடக்காது என்றிருப்பாரோ"

    மாயன் காலண்டர்ல வருகிற 21 உடன் உலகம் அழியப்போகுதுன்னு சொன்னதை நம்ம்ம்பி இப்படி செய்து இருப்பாரோ!!!

    "சிவாஜி 3D படத்தை அவரின் ரசிகர்களாவது பார்க்க வேண்டும் என்பதற்காகவா?"

    திரையரங்கில் போட்டா எவனும் வர மாட்டான் அதனால பேசாம DTH ல போடலாம்னு திட்டம் போட்டாங்களாம் கடைசில பார்த்தால் 3D DTH ல வராதுன்னு சொல்லி பிம்பிளிக்கி பிலாக்கினு WaterTel ல சொல்லிட்டாங்களாம்.. வட போச்சே!

    "தப்பி தவறி படம் வெளியானால் ரசிகர்களாவது அந்த படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா?"

    DTH ல வெளியிடுங்கய்யா னு கதறிக் கேட்டாலும்.. அதில் வெளியிட வழியே இல்லாம 3D ல எடுத்து என்ன பண்ணுறதுன்னு கிறுகிறுத்து போய் இருக்காங்களாம்... ரஜினி இதெல்லாம் வேலைக்காகாது நான் இமயமலைக்கே போய் அங்கே இருக்கிற ஞானி கிட்ட கேட்டாவது DTH 3D ல வெளியிட மந்திரம் வாங்கிட்டு வரப்போறேன்னு புறப்பட்டு கொண்டு இருப்பதாக தகவல்.

    "மதுரை, கோவை & சென்னையிலே ஒரே நாளில் ஒவ்வாரு இடத்திலும் 10000க்கும் மேற்ப்பட்ட ரசிகர்களை கமல் கூட்டியாதாலா?"

    ரஜினி வரவே மாட்டேன் என்று கூறிட்டு கமுக்கமா போய் இருக்காரு.. 15000 + வந்துட்டாங்களாம்..சொல்லிட்டு வந்து இருந்தால் அவனவன் தெறிச்சு ஓடி இருப்பானுக.. ரஜினி திட்டம் போட்டு தான் இப்படி செய்து இருக்கிறாருன்னு நினைக்கிறேன்.

    ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று இலவசமாக அவருக்கும் விஸ்வரூபத்துக்கும் கிடைத்த விளம்பரத்தாலா?"

    ரஜினி படமெல்லாம் சிங்கப்பூர் மலேசியா னு பயணம் போய் படத்தை பாருங்க படத்தைப் பாருங்க என்று கூறினால் கூட எவனும் வரமாட்டான். ரஜினி பிறந்த நாளுக்கு அவனவன் போட்டி போட்டு டிவில நிகழ்ச்சி நடத்துறானுக .. பேப்பர் வார இதழ்கள் ஒன்னு விடாம இவர் பற்றியே எழுதறாங்க.. இத்தனை பேருக்கு ரஜினி பணம் கொடுத்து எவ்வளவு கடனாளி ஆனாரோ! பயங்கர விளம்பர பிரியர். ச்சே!

    ஒவ்வொரு கேள்வியும் சும்மா பட்டாசா இருக்கு. நீங்க ரொம்ப மோசம் சண்டியர்... தீபாவளிக்கு முன்னாடி வந்து இருந்தால் இதை சொல்லி வெடிக்க வைத்தே தீபாவளியை முடித்து இருந்து இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ///ரஜினி பிறந்த நாளுக்கு அவனவன் போட்டி போட்டு டிவில நிகழ்ச்சி நடத்துறானுக .. பேப்பர் வார இதழ்கள் ஒன்னு விடாம இவர் பற்றியே எழுதறாங்க.. ///

      இவனுங்க எல்லாம் 2011 வரை எங்கிருந்தாங்க? ரஜினி ரசிகருங்கிட்ட மூளையை எதிர்ப்பார்ப்பது தப்பு தான்....உங்கிட்டவாது இருந்தால் யோசிங்க...

      //15000 + வந்துட்டாங்களாம்..///

      வெளியில் நடந்து போனவங்களையெல்லாம் எண்ணினீங்களா?

      //DTH ல வெளியிடுங்கய்யா னு கதறிக் கேட்டாலும்.. //

      கதறுன்னா 50 கோடி கொடுப்பாங்களா?...ஒருவேளை ரஜினி எப்படி சரவணன் காலில் விழுந்து கதறி 3D ரிலீஸ் பண்ண மாதிரி நினைச்சீங்களா? கதறுவது, காலில் விழுவது, மன்னிப்பு கேட்பது எல்லாம் ரஜினியின் கலைகள்...

      Delete
  5. He drinks alcohol and smokes heavily and what on earth he is seeking at Himalayas

    ReplyDelete
  6. பிரியாணி எப்போ போடுவீங்க தலிவா என்று ரசிகர் நச்சரித்து கொண்டு இருந்தார்கள். அதுதான் தலிவர் ரசிகர்களை கூட்டி "தனுஷு ஐஸ் தம்பதியினருக்கு பொறந்த குழந்தைக்கு திருமணம் நடக்கும் போது ஒரே தடவையில் பிரியாணி (டபிள் பிரியாணி ) செய்து போடுவதாக ரஜினி வாக்களித்துள்ளார்.

    ReplyDelete
  7. கரன், நான் ஒரு காலத்தில் தீவிர கமல் வெறியன். பின்னர் கொஞ்சம் பார்வை விரிவடைந்து, பல படங்கள் பார்க்க நேர்ந்து, முதிர்ச்சி வந்து, நல்ல படைப்புகள் அனைத்திற்கும் ரசிகனானேன். ஆனால் இன்றும் என்றும் கமல் தான் எனது ஆதர்சம். காரணம் கமல் அல்ல, அவர் படங்கள்.

    ரஜினியின் நோக்கம் வெறும் வியாபாரம் தான். அவர் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அவர் குறி, எப்பொழுதும் தான் தான் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும், படத்திற்கு படம் வருமானத்தை ஏற்றிக்கொண்டு போக வேண்டும் என்பது தான். ஆனால் ஜனரஞ்சக படத்திலும் உலக தரமான படைப்புகள் (கதையில், களத்தில், ஆக்கத்தில்) தர முடியும் என்பதை ஏனோ அவர் முயற்சிப்பதில்லை. அவர் ரசிகர்களும் அவரிடம் இருந்து அதை எதிர்பார்பதில்லை. ரிஸ்க் பயம் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அவருடைய எல்லா செய்கைக்கும் பின்னால் ஒரு calculated காரணமும் இருக்கும். (படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் ரசிகர்களை சந்திப்பது, தேவை இல்லை எனில் சந்திக்காமல் இருப்பது, நேரம் பார்த்து 'வாய்ஸ்' கொடுப்பது, போனி ஆகாது என்றால் கமுக்கமாய் இருப்பது, தனிமைக்கும்,அமைதிக்கும் இமய மலைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, போகும் போது, உடன் ஒரு போட்டோகிராபரையும் அழைத்து சென்று, எளிமை வடிவமாக போஸ் எல்லாம் கொடுத்து படம் எடுத்து அதை மீடியாவில் வெளி வர செய்வது, அவ்வப்போது அரசியல் பிரவேச குழப்ப பேச்சுக்கள்). "எளிமையாய் இருக்கிறார், எளிமையாய் இருக்கிறார்" என்று ஊரெல்லாம் அவர் ரசிகர்களும், மீடியாவும், பப்பரப்பா என காது வலிக்க தண்டோரா போடுவது நகை முரண். ரஜினி ரசிகர்களுக்கு இது புரியாது. ஏனென்றால் அவர்களுக்கு ரஜினி கடவுள். இதை எல்லாம் நாம் இன்று நேற்று பார்ப்பதல்ல.

    நான் சொல்ல வருவது என்னவென்றால், இது எல்லாம் தெரிந்து இருந்தும் நாம் என் வீணாக அவரை பற்றி விமர்சிக்க வேண்டும்? நமக்கு ரஜினி தேவை இல்லை. அதனால் அவரை தாக்கி எந்த பதிவும் வேண்டாமே. யாரிடமும் நமக்கு பகை தேவை இல்லை. ரஜினி ரசிகர்களை போல் அல்லாமல் கமல் ரசிகர்கள் நிதானமுடையவர்கள், சிந்திப்பவர்கள்.

    இது என் தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பதிவில் எதை போட வேண்டும், கூடாது என்பது உங்கள் உரிமை.

    ReplyDelete
    Replies
    1. GOPI...

      உங்கள் கருத்தில் என்க்கு முழு உடன்பாடு உண்டு....

      ஆனால் கமல் செய்கிறார் என்பதற்காக அவர் விழா நடைபெற்ற இடத்திலே கூட்டம் கூட்டி ரஜினி தன் வயிற்றெரிச்சலை வெளிபடுத்தியதை, உலகுக்கு தெரியப்படுத்த தான் இந்த பதிவு....

      Delete
  8. Giri,Yes Who went to Singapore and Malaysia to promote the film, Kamal doesn't care about business he only wants art and science, so don't blame him, he is just charging cheap price of Rs 1000 to release in DTH, he is not interested in business. Another joke, Padam odanum nu Rajini fans a meet panraram, appo kala kalama fans a meet panra Kamal, Vijaykanth, Sarathkumar, Power star ivanga padam ellam yean oda mattenguthu, what a logic, Sandiar publish this if you want fair comments as you have already not published many of my comments fearing backlash from Kamal fans

    ReplyDelete
    Replies
    1. Saurav...

      Kamal regularly meets his fans (ateast one time per month)..but will not be published in media... so tht u people r not knowing his true face....

      But rajini & others will meet their fans during film release...

      Delete
  9. Rajini fans a vara vendam nu solrar, Kamal nan vandhu promote panrean ellarum vango nu solrar, yaru businessman

    ReplyDelete
  10. டேய் ரஜினி குஞ்சிகளா! ரஜினி தன் ரசிகர்களை எங்கு வரவேண்டும், எங்கு வரக்கூடாது என்று பிரித்துவைத்துள்ளார். ரஜினி25 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வரவேண்டும் பணம் பிடுங்க. தன் படம் ரிலிசாகும் போது ரசிகர்களுக்கு அரசியல் ஆசை ஊட்டி தியேட்டர் பக்கம் வரவைக்கவேண்டும். ராமதாசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவைத்து ராமதாசிடம் அடிவாங்க ரசிகர்கள் வேண்டும். எனது ஓட்டு பிஜேபி க்கு என்றும் நான் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என்றுகூறி தனது அரசியல் வீரத்தைக்காட்ட ரசிகர்கள் வேண்டும். தனது பிறந்தநாளுக்கும், தனது மகள்கள் திருமணத்திற்கும் ரசிகர்கள் வரக்கூடாது.

    ReplyDelete
  11. Kamal and Rajini are the best friends you will ever see in Tamil Cinema for past 4 decades and they will continue to remain the same. Sandiyare,What is the necessity of always dragging Rajini and his films??? What joy you are getting by degrading Rajini??Both Kamal and Rajini are the top most stars in Tamil Cinema are we are blessed to have both of them in our era. My request is please use blogs for promoting Ulaganayagan,his achievements, Kamal fans service to TN instead of degrading Rajini. As a lover of Tamil Cinema, your most of the blogs are hurting. This is my wish. Its your decision to continue writing always against Rajini. Bye!!

    ReplyDelete
  12. hello mr.sandiyar karan rajni has said that ''kamal is a better actor than me''.then u fan of mr.kamal hating rajni.ur ''ulaga nayakan''kissed rajni in 50th kamal function for his honest speech and his friend ship .i am rajni fan but i have great respect to kamal sir.we rajni fans expect the same from u.rajni and kamal r friends let us 2 actors fans be frnds.please dont post wrong things about rajni........by......kamal meeedhu mariyathai ulla rajni rasigan

    ReplyDelete