Ads 468x60px

Monday, December 10, 2012

விஸ்வரூபம் Vs அரைவேக்காடுகள்

கமல்ஹாசன் இதுவரை தன் படங்களில் தான் புதுமைகளை புகுத்திக் கொண்டிருந்தார், விஸ்வரூபத்தின் மூலமாக வியாபாரத்திலும் புதுமைகளை படைத்து கொண்டிருக்கிறார்.

1. படத்தின் ப்ரீமியர் ஷோ பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவில் ஒரு தடவை DTH-ல் ஒளிபரப்பு

2. படத்தை விநியோகிஸ்தர்களிடமோ அல்லது திரையரங்குக்கு MG அடிப்படையில் கொடுக்காமல், திரையரங்கில் வாடகை கொடுத்து திரையிடுதல் ( லாபமோ நஷ்டமோ கமலுக்கு மட்டுமே )



சென்ற வாரம் கமல்ஹாசனை சந்தித்த போது நான் அவரிடம் கூறியது :- உங்களின் தசாவதாரம் தான் தென்னிந்தியாவின் உச்சம் வசூலிலும் லாபத்திலும், ஆனால் அவை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க பட வில்லை. ஆனால் இந்த விஸ்வரூபம், நமது "ராஜ்கமல்" படம், இதன் வசூல் விபரங்கள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுமா? அதற்கு கமல்ஹாசன் கூறியது
"கண்டிப்பாக வெளிப்படையாக கூறுவேன், நான் "வெள்ளை"யில் தான் வியாபாரம் செய்கிறேன், யாருக்கும் பயப்பட தேவையில்லை"
 என்று!!!

DTH-ஐ எதிர்க்கும் சில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், உண்மையில் அதற்காக எதிர்க்கவில்லை என்றே தோன்றுகிறது, அவர்களுக்கு தெரியும் கமல்ஹாசன் படத்திற்கு மட்டுமே ஹைகிளாஸ் ஆடியன்ஸ் அதிகமாக வருவார்கள், அவர்களிடம் தான் முதல் வாரத்தில் 300ரூபாய் 500 ரூபாய் என்று வசூலிக்க முடியும், கணக்கில் காட்டாமல். ஆனால் கமலோ, விஸ்வரூபத்தை தியேட்டருக்கு வாடகை (கமல் என்றால் வெள்ளையில் தான் வாங்குவார்) கொடுத்து தான் திரையிட போகிறார். அப்படி செய்தால் வரும் வருமானம் அனைத்தும் கமலுக்கே செல்லும், இவர்களால் ஓப்பனிங் கொள்ளை அடிக்க முடியாது, இதனை போய் மக்களிடம் சொல்ல முடியுமா அல்லது முதல்வரிடம் சொல்ல முடியுமா? அதனால் தான் DTH-ஐ எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள்.

அடுத்து பாவம் ரஜினி ரசிகர்கள், ரஜினியோ 5 வருடத்திற்கு முன் ஆரம்பித்த சுல்தான் தி வாரியர் படத்தை முடிக்க முடியாமல், கேஎஸ் ரவிக்குமார் மூலமாக கமல் ஐடியாக்களை திருடி, ராணா என்று பாழடைந்த வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தார்கள், முதல் நாளிலேயே ஷூட்டிங் நிறுத்தப் பட்டது, ஒன்றரை வருட ஆஸ்பத்திரி வாழ்க்கைக்கு பின், இப்போது கோச்சடையான் என்று காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது வரை 100 கோடி வசூல் 200 கோடி வசூல் என்று வாய்க்கு வந்ததை கூறிக்கொண்டிருந்தார்கள், சாட்சிகளின்றி. நம் தலைவரோ படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பே DTH-க்கு 50 கோடிக்கு விற்றுவிட்டார். இது தான் கடந்த ஒரு வாரமாக இந்தியா முழுவதும் பேச்சு, செலவில்லாமல் படத்திற்கு விளம்பரம் வேறு.  விஸ்வரூபம் மொத்தமாக கண்டிப்பாக வெள்ளையிலே 500 கோடியை தாண்டும ( 2008-ல் தசாவதாரம் வசூலித்தது 250 கோடிக்கும் மேல் ).

எனவே பதிவுலகில் இருக்கும் சிறுபான்மை ரஜினி ரசிகர்கள், விஸ்வரூப வியாபாரம் மற்றும் அதற்கு கிடைத்த இலவச விளம்பரங்கள் (ரஜினியும் அவரது ரசிகர்களும் காசு கொடுத்து தான் செய்ய முடியும்)  மீதான வயிற்றெரிச்சல்களால் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் ஏதேனும் விஸ்வரூபத்திற்கு எதிராக ஏதேனும் பதிவிட்டால், அவர்களின் கமெண்ட் பக்கத்தில் சென்று கொஞ்சம் ஆறுதலாக பேசவும்....


17 comments:

  1. hahaha. arpudham. super stats. Thannigarilla Thalaivar Aandavar Mattume..

    ReplyDelete
  2. கிடைத்ததைச் சுருட்டுபவன் கமல் என்று கொஞ்சம் கூட மனதில் ஈரம் இல்லாமல் சொல்லும் மூடர்களுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறோம்..
    அப்படி அவர் ஓடி இருந்தால் விருமாண்டி,அன்பே சிவம், ஹேராம், தசவதாரம்,குருதி புனல்,மகாநதி குணா போன்று படங்கள் சினிமா ரசிகர்கள் கண்டிருக்க இயலாது..

    Our industry wont even scaled up if he is out of cinema industry..Still you all guyz will showing only masala movies and 3rd grade movies.

    Be proud of kamal!!!

    Our thalaivar is truly investing his own earned money in the same field not like other's.

    விஸ்வரூபம் எடுக்கும் எங்கள் தலைவருடன் மோதாதே!!!

    Anna intha naigaluku vayathu erichal na....hollywood barrie osborne thalaivar purijukuran ullur chintadripet nai ithu ethirpu therivikuthu..ivanunga urpudava mattanunga

    ReplyDelete
  3. மிஸ்டர் போர்! விஸ்வரூபம் திரையிடுவதற்கு முன்பே 50கோடி(10%) வந்திருச்சி. இன்னும் தமிழ், தெலுங்கு,இந்தி,மலையாலம்,ஹாஅலிவுட் பிரிமியர், ஹாலிவுட்,வௌிநாட்டு வியாபாரம், உலகம் முழுவதும் ஏற்பட்டுல்ல வரவேற்பு. கூட்டிகழிச்சி பாருங்க 500கோடி தான்டும். இவை அனைத்தும் கமல் எனும் தனிமனிதனால் சாதிக்கப்பட்டவை. சப்ப ஸ்டாரைப்போல் கும்பலில் கோவிந்தா கிடையாது. கமல் நாமம் வாழ்க

    ReplyDelete
  4. அள்ளி விடுங்க எஜமான் விடுங்க இந்த அறிவில்லாத ரசினி ரசிகர்களே இப்பிடித்தான் அதுசரி சண்டியர் அண்ணே தசாவதாரம் 250 கோடி வசூல் பண்ணினா ஏன் அண்ணே விபரம் அறியாத distributers 40 கோடிக்கு மேல தரமாட்டன் என்டவங்க? கமல் தான் செலவளிச்ச காச எந்த வகையிலாவது எடுக்க தான் பார்ப்பார் அத பிழை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை ஆனா நீங்க அடிச்சு விடுறீங்க பாருங்க அததான் ........, சின்ன தகவல் விஜய், சூர்யா போன்ற சின்ன பையன்களே படமே 60 கோடி மேல வியாபாரம் ஆகுதாம் எண்டு எங்கோ படிச்ச ஞாபகம்

    ReplyDelete
  5. 250 கோடின்னு ஒரு லிங்க் (ஹிந்து வெப்சைட் ) போட்டு இருந்தீங்களே அத காணோம் அண்ணே

    ReplyDelete
  6. அய்யா சண்டியரே தலைவரிடம் கேட்ட வினா சரியே ,பாருங்கள் தலைவரே ஆடியோ விற்பணை இந்தியாவில் இரண்டாம் இடம் என்று சொல்லியும் நாதாரி மீடியாக்கள் அதை கட் செய்து (தினத்தந்தி ,தினகரன் )அவரது அறிக்கைகளை போட்டுள்ளது மிகவும் கேவலமானது .இருவது வருடங்களுக்குமுன் , இந்த நாதாரி தினத்தந்திக்காக தலைவர் தினமலரை எதிர்த்து போராட்டத்தில் பங்கு பெற்றதால் இன்றுவரை தினமலர் தலைவரை மட்டபடுத்திதான் எழுதுகிறது.அனால் நன்றிகெட்ட தினத்தந்தி சன் டிவி போல உயர்த்தி நம் தலைவரையும் அவர் புகழையும் கண்டுகொள்வதில்லை. நிலை வருமா ?

    ReplyDelete
  7. அய்யா சண்டியரே தலைவரிடம் கேட்ட வினா சரியே ,பாருங்கள் தலைவரே ஆடியோ விற்பணை இந்தியாவில் இரண்டாம் இடம் என்று சொல்லியும் நாதாரி மீடியாக்கள் அதை கட் செய்து (தினத்தந்தி ,தினகரன் )அவரது அறிக்கைகளை போட்டுள்ளது மிகவும் கேவலமானது .இருவது வருடங்களுக்குமுன் , இந்த நாதாரி தினத்தந்திக்காக தலைவர் தினமலரை எதிர்த்து போராட்டத்தில் பங்கு பெற்றதால் இன்றுவரை தினமலர் தலைவரை மட்டபடுத்திதான் எழுதுகிறது.அனால் நன்றிகெட்ட தினத்தந்தி சன் டிவி போல mentlai உயர்த்தி நம் தலைவரையும் அவர் புகழையும் கண்டுகொள்வதில்லை. நிலை வருமா ?

    ReplyDelete
  8. Viswaroopam occupies top on apple iTunes!
    http://tamilcinemanews.net/?p=1513#comment-234

    ReplyDelete
  9. என்ன சண்டியர் கரன் அவர்களே, நான் போட்ட கமெண்ட்-ஐ delete பண்ணிட்டிங்களே. நான் போட்ட கமெண்ட்-க்கு பதில் சொல்ல தெரியவில்லையா?

    ReplyDelete
  10. enna than nama sir panalum tamil nattu media & publisher ekum nandri a kedayathu. nermai irrukuravar edu than kadhi.

    ReplyDelete
  11. ///// ரஜினியோ 5 வருடத்திற்கு முன் ஆரம்பித்த சுல்தான் தி வாரியர் படத்தை முடிக்க முடியாமல் /////

    கமலும், அவரது ரசிகர்களும் ரொம்ப பாவம். கமல் 15 வருடத்திற்கு முன் ஆரம்பித்த மருதநாயகம் படத்தை முடிக்க முடியாமல் இன்று வரை திணறிக்கொண்டே இருக்கிறார்.

    ReplyDelete
  12. karthik thambi...

    chk now

    http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm

    ReplyDelete
  13. Life is boring

    மருதநாயகம் நிறுத்தப் பட்ட படம்.... கமல் அதை திரும்ப திரும்ப புதிய பெயரில் எடுக்க நினைத்து திணறிக் கொண்டிருக்க வில்லை...

    ஆனால் ரஜினியோ சுலதான் வாரியரை ரிலீஸ் பண்ணமுடியாமல், ராணாவாக மாற்றி, அதுவும் முடியாமல், கோசடையானாக மாற்றி, திணறிக் கொண்டிருக்கிறார்....5 வருடங்களாக....

    ReplyDelete
    Replies
    1. அந்த மூன்று படத்தின் கதை முற்றிலும் வேறு என்று எல்லாருக்கும் தெரியும். நீங்கள் புதுசாக கதை விடுகிறீர்களே!

      நானும் என் பாணியில் கதை கட்டுவேன். மருதநாயகம் என்ற காவிய படத்தை கமல் எடுக்க முடியாமல், மர்மயோகியாக‌ எடுக்க முயற்சி செய்தார். அதுவும் நடக்காமல் போனது.

      இந்த இரண்டு படங்களையும் விரைவில் எடுத்து முடிப்பேன், என்று கமல் ஒவ்வொரு முறையும் மீடியாக்களில் சொல்லி காதில் பூ சுற்றிக் கொண்டேதான் இருக்கிறார். கடைசி வரை இந்த இரண்டு படங்களை எடுத்து முடிக்கும் அறிகுறியே தெரியவில்லை.

      Delete
    2. மூன்று கதையும் வெவ்வேறா அட பாவிகளா இருபது வருடங்களாக ரஜினிக்கு ஒரே கதை தானே. நான் சொல்லும் காட்சி இல்லாத படங்கள் எத்தனை என்று நீங்களே கணக்கு பண்ணிகோங்க. அந்த வீட்டில் ரஜினி செல்லபிள்ளையாக இருப்பார் திடிரென்று ஒரு பிரச்னையில் ரஜினியை வீட்டை விட்டு அடித்து விரட்டி விடுவார்கள் (கண்டிப்பாக இந்த ஸீன் ஏறக்குறைய எல்லா படங்களிலும் இருக்கும் அப்ப தான இந்த விவரம் அறியாதவர்களை கோபம் அடைய செய்ய முடியும்). வெளியே வந்து ஒரே பாடலில் பெரிய ஆள் ஆகிவிடுவார். யாரால் விரட்டபட்டரோ அவர்களுக்கு வில்லன் மூலமாக ஆபத்து வரும் இவரு போய் காப்பாத்துவாரு. இன்னும் எத்தனை நாட்களுக்கு நீங்க ஏமாறுவீர்கள் மனிதனுக்கு உள்ள சிறப்பு ஆறாம் அறிவு, அதை கொஞ்சமாவது உபயோகியுங்கள்.

      Delete
  14. ரஜினி ரசிகர்களுக்கு கதை கட்டவா தெரியாது... ரஜினியின் இமேஜே கதை கட்டி கட்டி தானே வளர்த்தது....

    ReplyDelete
  15. மிஸ்டர் போர்! முதல்ல உங்க தலைவர அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று தௌிவா சொல்ல சொல்லுங்க. அவரும் எத்தனை நாலுக்குதான் மேல கைய நீட்டுவாரு.ஓட்டு போட தெரியாத சப்ப எல்லாம் அரசியலுக்கு வரென்வரென் சொல்லுது. குஞ்சிகளும் அதைநம்பி ராமதாஸிடம் உதை வாங்குத

    ReplyDelete